வேதியியற் பிணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Electron dot.svg

அணுக்கள், மூலக்கூறுகள் என்பவற்றுக்கு இடையிலான ஈர்ப்பினால் உண்டாகும் தொடர்புகளுக்குக் காரணமான இயற்பியற் செயற்பாடே வேதியியற் பிணைப்பு எனப்படுகின்றது. இது, ஈரணு அல்லது பல்லணு வேதியியற் சேர்மங்களுக்கு (இலங்கை: இரசாயனச் சேர்வை), உறுதிப்பாட்டை வழங்குகிறது. சக்திச்சொட்டு மின்னியங்கியல் (quantum electrodynamics) விதிகளால் கையாளப்படும் இத்தகைய ஈர்ப்பு விசை தொடர்பான விளக்கங்கள் சிக்கலானவை. நடைமுறையில், வேதியியலாளர்கள், குறைவான சிக்கல்தன்மை கொண்ட சக்திச்சொட்டுக் கோட்பாடு அல்லது பண்பியல் விளக்கங்களின் மூலம் இதனைப் புரியவைக்க முற்படுகிறார்கள். பொதுவாகப் பிணைப்பில் சம்பந்தப்பட்டுள்ள அணுக்களுக்கிடையே இலத்திரன்கள் மாற்றப்படுவதன் மூலம் அல்லது பங்கு கொள்ளப்படுவதன் மூலமாகவே வலுவான வேதியியற் பிணைப்புக்கள் ஏற்படுகின்றன. மூலக்கூறுகள், பளிங்குகள், ஈரணு வளிமங்கள் போன்ற, சூழலில் காணப்படும் பெரும்பாலானவை வேதியியற் பிணைப்புக்களையே கொண்டுள்ளன.

பிணைப்புக்களின் வலுக்கள் பரந்த அளவில் வேறுபடுகின்றன. பொதுவாக covalent மற்றும் அயன் பிணைப்புக்கள் வலுவானவை. ஐதரசன் பிணைப்புக்களும், வாண்டெர்வால் பிணைப்புக்களும் வலுக் குறைந்தவை. எனினும், வலுக் குறைந்தவற்றுள் கூடிய வலுக் கொண்ட பிணைப்புக்கள், வலுக் கூடியவற்றுள் குறைந்த வலுவுள்ள பிணைப்புக்களிலும் கூடிய வலுவுள்ளவையாக அமையக் கூடும் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

வேதியியற் பிணைப்பின் வகைகள் [தொகு]

அறிவியாள்ர்களின் கருத்துப்படி, மூன்று வகையான வேதிப்பிணைப்புகள் உள்ளன. அவை,

  • அயனிப்பிணைப்பு
  • சகப்பிணைப்பு
  • ஈதல் சகப்பிணைப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=வேதியியற்_பிணைப்பு&oldid=1373718" இருந்து மீள்விக்கப்பட்டது