சேர்மம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வேதியியற் சேர்மம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சேர்மங்கள் (Chemical Compound) அல்லது கூட்டுப்பொருள் என்பன ஒன்றுக்கும் மேற்பட்ட தனிமங்களின் இணக்கத்தினால் உருவாகும் மாசற்ற கூட்டமைப்பு ஆகும். அணுக்களின் இடையே உருவாகும் பிணைப்பின் தன்மையைப் பொறுத்து சேர்மங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டு ஐதரசன் அணுக்களையும் ஒரு ஆக்ஸிஜன் அணுவினையும் கொண்ட நீர் (H2O) ஒரு சேர்மம் ஆகும். எனினும் தனியே ஒரு தனிமம் கொண்ட மூலக்கூறுகளாலான பொருட்களெ சேர்மமாக கருதப்படுவதில்லை. உதாரணமாக ஐதரசன் வாயு (H2) ஒரு சேர்மம் அல்ல.