சகப் பிணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐதரசன் மூலக்கூறில் H - H இடையிலான சகப்பிணைப்பு

சகப் பிணைப்பு என்பது வேதிப்பிணைப்புகளுள் ஒன்று. இரண்டு அணுக்கள் எதிரெதிர் சுழலெண் (spin) கொண்ட இணையான எதிர்மின்னிகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதால் பகிர்வுப்பிணைப்பு அல்லது பகிர்பிணைப்பு அல்லது சகப்பிணைப்பு என்னும் வகையான வேதியியல் பிணைப்பு உண்டாகிறது. இப் பிணைப்பில் பங்கு கொள்ளும் இரு அணுக்களுமே எதிர்மின்னிகளை தங்கள் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளில் விசையால் கவர முயலும். இதனால் உருவாகும் நிகர விசை சகப் பிணைப்பை உண்டாக்குகிறது.

ஐதரசன் மூலக்கூறில் உள்ள இரண்டு ஐதரசன் அணுக்களுமே ஒரே மாதிரியான எதிர்மின்னிக் கவர்மை கொண்டவை. எனவே எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) உண்மையிலேயே இரு அணுக்களுக்கும் பொதுவாக இருக்கின்றன (இயங்குகின்றன). ஆனால் ஐதரோகுளோரிக் காடி (அமில) மூலக்கூறில் உள்ள குளோரைடு ஐதரசனைக் காட்டிலும் அதிக எதிர்மின்னிக் கவர்மை (கவரும் தன்மை) கொண்டது. அது இணை எதிர்மின்னிகளைத் தன் பக்கம் இழுக்கக் கூடியது. எனவே குளோரைடின் பக்கம் எதிர்மின் சுமை உண்டாகிறது.

ஓர் அணு எதிர்மின்னியை முழுமையாகத் தன்பக்கம் இழுத்துக் கொள்ளுமாயின், அது அயனிப் பிணைப்பு எனப்படும். எடுத்துக்காட்டு: சோடியம் குளோரைடு

"http://ta.wikipedia.org/w/index.php?title=சகப்_பிணைப்பு&oldid=1112491" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்