பேச்சு:சகப் பிணைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சகப் பிணைப்பு என்பது பாடநூல் கலைச்சொல்லா? எதிர்மின்னிகள் இரண்டு அணுக்குகளுக்கு இடையே பிணைப்பில் பகிர்ந்து பங்களிப்பதால் பகிர்வுப் பிணைப்பு அல்லது பகிர்பிணைப்பு (co-valent bond) என்பது பொருத்தமாக இருக்கும். --செல்வா (பேச்சு) 17:52, 19 மே 2012 (UTC)👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 19:56, 19 மே 2012 (UTC)[பதிலளி]

இணைவலுப் பிணைப்பு என்று அருளியின் அகரமுதலி கூறுகிறது. --இரா. செல்வராசு (பேச்சு) 03:46, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
சகப்பிணைப்பு, ஈதல் சகப்பிணைப்பு என்பவை பாடநூற் கலைச்சொற்களே. விக்சனரியும் covalent bond என்பதற்கு சகப்பிணைப்பு என்றே பொருள் தருகிறது. இணைவலுப் பிணைப்பு எனும் அழகிய தமிழ்ச்சொல் இருக்க சகப்பிணைப்பையே பிடித்துக் கொண்டிருப்பது கனியிருப்பக் காய் கவர்வது போலாம். யாருக்கும் மறுப்பு இல்லையெனில் இரண்டு நாட்களில் இணைவலுப் பிணைப்பு எனும் தலைப்பிற்கு கட்டுரையை நகர்த்தி விடலாம். நன்றி. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 04:40, 29 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
பங்கீட்டு வலுப்பிணைப்பு எனவே இலங்கையில் கற்பிக்கப்படுகின்றது. இலங்கை அரசாங்காத்தால் வெளியிடப்படும் இலவசப் பாடநூல்கள் உட்பட வேறு பல நூல்களும், கலைச்சொல் அகராதிகளும் இச்சொல்லையே குறிக்கின்றன. தரம் 10,11 விஞ்ஞானப் பாடநூல்கள், உயர்தர ஆசிரியர் அறிவுரை வழிகாட்டி நூல்கள் ஆகியவற்றில் இச்சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.--G.Kiruthikan (பேச்சு) 07:19, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]

கூகுள் தேடல் முடிவுகள் - சகப்பிணைப்பு (65), இணைவலுப்பிணைப்பு (4), பங்கீட்டு வலுப்பிணைப்பு (16). பங்கீட்டு வலுப்பிணைப்பு என்ற சொல் தமிழ்ச்சொல்லாகவும் இலங்கை வழக்கில் இருப்பதாலும் முதன்மைத் தலைப்பாக்கலாம் என எண்ணுகிறேன். கிருத்திகன், பிற பயனர்களின் கருத்தறிந்து செய்யலாம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:21, 16 சனவரி 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சகப்_பிணைப்பு&oldid=1600740" இலிருந்து மீள்விக்கப்பட்டது