வெந்தயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வெந்தயம் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Trigonella foenum-graecum L. |
வெந்தயம் (ஆங்கிலம்: Fenugreek; இந்தி: மேதி) (தாவர இயல்:Trigonella foenum-graecum) என்பது Fabaceae குடும்ப ஒரு மூலிகையும், சுவைப்பொருளும் ஆகும். இது தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இந்தச் செடி கீரையாகவும் இதன் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.