பொன்னாங்காணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Alternanthera sessilis | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Alternanthera sessilis (L.) R.Br. ex DC. |
||||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||||
|
Alternanthera glabra |
பொன்னாங்கண்ணி அல்லது பொன்னாங்காணி (தாவரவியல் பெயர்:Alternanthera sessilis) ஒரு ஈரலிப்பான இடங்களில் வாழும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு. இது உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது [1] இதன் இளம் தளிர்ப் பாகங்கள் உணவுக்குப் பயன்படும். உணவு மற்றும் மருத்துவத் ர்தேவைகளுக்காகப் பயிரிடவும் படுகிறது.
பயன்கள் [தொகு]
- இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் முதுமையிலும் கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது.
- கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி, கண்ணில் நீர்வடிதல், பீளை தள்ளுதல் போன்ற கண் நோய்கள் குணமாகும்.
- வாய் நாற்றம், வாய்ப்புண் ஆகியவையும் நீங்கும்.
- கரிசலாங்கண்ணி போலவே பொன்னாங்கண்ணிச் சாற்றையும் தேங்காய் எண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தைலமாக பயன்படுத்தலாம்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Grubben, G.J.H. & Denton, O.A. (2004) Plant Resources of Tropical Africa 2. Vegetables. PROTA Foundation, Wageningen; Backhuys, Leiden; CTA, Wageningen.