விக்கிப்பீடியா பேச்சு:நடைக் கையேடு/பரண் 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயன்ற அளவு சொற் புணர்ச்சிகளைத் தவிர்க்க அல்லது எளிமைப்படுத்த முயலலாம் என நினைக்கிறேன். For example, the word நூல்களிலொன்றாகும்( found this word in the first line of article வையாபாடல் ) can be written as நூல்களில் ஒன்றாகும் which is easy to read for an average reader / secondary school going kid / new learner of tamil. In the long run, I think the success of wikipedia lies in becoming reference source for these kind of people. So lets try to keep the style of writing simple unless it may be required in technical articles.I am aware using புணர்ச்சி makes it easy to type using eklappai but we should also keep in mind the ease of reading of the article.--ரவி (பேச்சு) 10:43, 13 மே 2005 (UTC)[பதிலளி]

Yeah. In fact, the book "Tamil nataik kaiyedu" details when to merge and when to split. Basically for monosyllables and bisyllables, it is better to merge and for longer words, it is better to split. I'll add more when I return from vacation on 23rd May. -- Sundar 11:57, 13 மே 2005 (UTC)[பதிலளி]

எழுதப்பட வேண்டியவை[தொகு]

வெவ்வேறு பேச்சுப் பக்கங்களில் நடைக் கையேடு பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை குறித்த ஒரு நினைவுக் குறிப்பாக பின்வருவனற்றைக் கருதலாம். அவ்வாலோசனைகளைப் பின்பற்றி இங்கு நடைக் கையேட்டில் வழிகாட்டல்களை எழுதிய பின், இந்த நினைவுக் குறிப்புகளை கோடிட்டு அடித்து விடலாம்.

எழுதப்பட வேண்டியவை:

  • சொற் புணர்ச்சி குறித்த வழிகாட்டல்
  • நாட்டுப் பெயர்களின் சரியான தமிழ் ஒலிபெயர்ப்புப் பட்டியல்
  • ஆங்கில மாதங்களின் சரியான தமிழ் ஒலிபெயர்ப்புப் பட்டியல்
  • சாதிப் பெயர்கள், இனப் பெயர்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டல்
  • உள் இணைப்பு தருவது குறித்த வழிகாட்டல்

short form for எடுத்துக்காட்டு[தொகு]

Sundar, I find u using as (எ-டு) as abbreviation for எடுத்துக்காட்டு. However, I think (எ.கா) is the most popularly used abbreviation??--ரவி (பேச்சு) 10:12, 27 ஜூலை 2005 (UTC)

Thanks for telling me. Feel free to change them. I'll use this notation from now on. -- Sundar \பேச்சு 10:19, 27 ஜூலை 2005 (UTC)

use of colors in wikipedia pages[தொகு]

I have generally seen minimal use of colors in info boxes, tables found in EWpedia. Is there any policy decision there regarding use of color in such places ? I found usage of colors in some recent sports related articles here. If we decide to go ahead with use of color then we also need to decide which colors to be used and where because after some time we may end up having unprofessional or not so user friendly web colors in wikipedia pages--ரவி (பேச்சு) 14:31, 7 ஆகஸ்ட் 2005 (UTC)

Each infobox in E'pedia has its own guidelines for colour. For example, infoboxes on language articles should have light green, ethnicity related infoboxes have brown etc See en:Tamil language, en:Tamil people and en:Chennai for examples. -- Sundar \பேச்சு 06:09, 8 ஆகஸ்ட் 2005 (UTC)


சுந்தரின் முந்தைய சில குறிப்புகள்[தொகு]

அதே நேரம் உங்களிடம் விக்கிபீடியாவைப் பற்றிய சில தகவல்கலைக் கூற வேண்டியதுள்ளது. வலைப்பதிவிற்கும் விக்கிபீடியாவிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. அவை,

  1. விக்கிபீடியா ஒரு கலைக்களஞ்சியம் ஆகும்.
  2. இதற்கென ஒரு குறிப்பிட்ட எழுத்து நடை உண்டு. எடுத்துக்காட்டாக, இங்கு தன்னிலையிலோ (நான், எனது), முன்னிலையிலோ (நீ, நீங்கள், உங்கள்) எழுதக் கூடாது. படர்க்கையில் தான் எழுத வேண்டும். உணர்வுப் பூர்வமாக அல்லாமல் தகவல்களை நடுநிலையோடும் மிகைப்படுத்தாமலும் தெரிவிக்க வேண்டும். மேலும் இது போன்ற நெறிமுறைகளுக்கு நடைக் கையேட்டை ஒருமுறை கண்டிப்பாக வாசிக்கவும். ஏதேனும் ஐயம் இருந்தால் ஆலமரத்தடியில் கேளுங்கள்.
  3. மொத்த கட்டுரையும் ஒரே பக்கத்தில் வரும் வகையில் சுருக்கமாகவும் பொது அறிமுக நடையிலும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக இந்தியா கட்டுரையைப் பாருங்கள். அங்கு இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய பத்தியில் ஒரு சுருக்கம் மட்டுமே தரப்பட்டுள்ளது. விரிவான விளக்கம் இந்தியாவின் பொருளாதாரம் என்ற துணைக் கட்டுரையில் தரப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்.

--Natkeeran 13:59, 19 டிசம்பர் 2005 (UTC)

நாட்காட்டிகள்[தொகு]

தமிழ்நாட்காட்டி பயன்படுத்தவில்லை[தொகு]

ரவி, இலங்கையில் (தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி) என்று மாதங்களுக்கு பெயரிடுவதுதான் வழக்கம். அது தமிழ் நாட்காட்டி முறையை குறித்து நிற்காது. எப்படி திங்கள் மண்டேயில்லையோ அதேபோலதான் தை சனவரியில்லை. மற்றப்படி நான் ஆங்கில நாட்காட்டி முறையைதான் பயன்படுத்துகின்றேன். இது பெரிய குழப்பம் என்றால் வழமைபோல ஆங்கில ஒலியமைந்த சொற்களை பயன்படுத்துவதில் ஆட்சோபனை இல்லை. சுந்தருக்கும் மேற்கூறிய கருத்து பொருந்தும். மேலும் நாட்காட்டியை தமிழ்படுத்தியதற்கு நன்றிகள். --Natkeeran 15:54, 21 டிசம்பர் 2005 (UTC)

நற்கீரன், எவோ மொரல்ஸ் கட்டுரையில் அவர் ஐப்பசி 26, 1959 பிறந்ததாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது 1959ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் என்ன திகதியில் வருகிறது என்பது தெளிவில்லை. இந்தக் குழப்பத்தை தவிர்க்கவே ஆங்கில நாட்காட்டித் தகவலும் தரப்பட வேண்டும் என்று பேச்சு:எவோ மொரல்ஸ் பக்கத்தில் தெரிவித்தேன். திங்கட் கிழமையும் Mondayயும் ஒரே நாள் தான் :) ஆனால், தை 10அம் நாளும் january 10ஆம் நாளும் வெவ்வேறு. தமிழ்நாட்டிலும் மரபு சார் நற்காரியங்களுக்கு தமிழ் நாட்காட்டிகளைத் தான் பயன்படுத்துகிறார்கள். மற்றபடி அன்றாடத் திகதிகளுக்கு ஆங்கில நாட்காட்டியைக் குறிப்பிடும் வழக்கம் தான் நகர்ப்புறத்தாரிடமும் படித்தவர்களிடமும் பெருகி வருகிறது. தமிழ் நாட்காட்டி முறையை பிரபலப்படுத்தும் முகமாகவும் இலங்கையில் இதன் தற்பொழுதைய பிரபலப் பயன்பாட்டை கருத்தில் கொண்டும் தமிழ் நாட்காட்டியை விக்கிபீடியாவில் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடே. எனினும், தகவல்கள் தமிழ் நாட்காட்டியில் மட்டுமே அறிய இயலும் தருணங்கள் (எ.கா-பழந்தமிழறிஞர் பிறந்த தினம், தமிழர் வரலாற்றுத் தகவல்கள்) தவிர்த்து அனைத்து தருணங்களிலும் ஆங்கில நாட்காட்டித் தகவல்களையும் தருவது தான் குழப்பம் தவிர்க்கும். கூடுதலாக தமிழ் நாட்காட்டித் தகவல் தருவது எத்தருணத்திலும் வரவேற்கத்தக்க optionஆக இருக்கட்டும் --ரவி 17:01, 21 டிசம்பர் 2005 (UTC)


ரவி, நீங்கள் மாதங்களை பெயரிடும் முறைக்கும் நாட்காட்டி கணிக்கும் முறைக்கும் இருக்கும் வேறுபாட்டை உணரவில்லையோ என்று கருதுகின்றேன். நீங்கள் குறிப்பிட்டபடி தமிழ் மரபு நாட்காட்டி கணிக்கும் முறை பொது நடைமுறையில் இலங்க்கையிலோ அல்லது தமிழ் நாட்டிலோ இல்லை. அதை பொதுவாக பாவிப்பது விரும்பத்தக்கதும் இல்லை. என் கூற்று பெயரிடுவது பற்றிதான். அங்கு ஆங்கில கணிப்பு - பொது நாட்காட்டி மாதங்களை தமிழ் பெயரிட்டு அழைப்பதுதான் வழக்கம். தமிழ் கணிப்பு முறை என்றால் அதை பிறம்பாக குறிப்பிட்டு காட்டலாம். இதை புரிவது அவ்வளவு கடினம் என்று எனக்கு தோன்றவில்லை (உ+ம்: தை=ஜனவரி, ஐப்பசி = ஒக்ரோபர்). தமிழ் கணிப்பு முறைப்படி திகதியை பயன்படுத்துபவர்கள்தான், அது தமிழ் கணிப்பு என்று குறித்து கூறவேண்டும். தமிழ் நாட்டில் தமிங்கிலம் காரணமாக நான் கூறுவது சற்று தீவரமாக தெரியலாம் :-(, ஆனால் ஈழத்தில் வழக்கத்தில் இச்சொற் பயன்பாடு இருந்தது, தொடர்ந்தும் இருக்கின்றது என கருதுகின்றேன். இதைப்பற்றி நான் இறுக்க போக்கு ஒன்றும் கொண்டிருக்கவில்லை; ஒரு கருத்து, அவ்வளவுதான். --Natkeeran 17:38, 21 டிசம்பர் 2005 (UTC)

மன்னிக்கவும் நற்கீரன். இலங்கையில் டிசம்பர் 21 ஆகிய இன்றைய நாளை மார்கழி 21 என்று என்று குறிப்பிடுகிறார்கள் என்றால், அம்முறையை தமிழ் விக்கிபீடியாவில் மேற்கொள்வதை முற்றிலும் எதிர்க்கிறேன். இலங்கையில் இப்படி பயன்படுத்துகிறார்கள் என்று தமிழ்நாட்டில் ஒருவருக்கும் தெரியாத நிலையில் அது மிகப்பெரும் குழப்பத்திற்கும் தவறான புரிதலுக்கும் வழிவகுக்கும். தமிழ்நாட்டில் மார்கழி 21 என்றால் அது அடுத்த ஆண்டு வரும் சனவரி 5ஆம் நாளை குறிக்கும். இன்றைய நாளை குறிக்காது. இது வரை இலங்கை விக்கிபீடியர்கள் பலரும் தமிழ் மாதங்களை பல இடங்களில் விக்கிபீடியாவில் பயன்படுத்தியுள்ளனர். அவை யாவும் நீங்கள் மேலே விளக்கியுள்ள முறை தான் என்றால் அவை யாவற்றையும் ஆங்கில மாதங்களில் திருத்தி எழுத வேண்டியது மிக அவசியமும் உடனடித் தேவையும் ஆகும். தெளிவுபடுத்தலுக்காக இன்னொரு முறை சொல்கிறேன். இதில் ஆங்கில ஆதரவு, தமிழ் எதிர்ப்பு எதுவும் இல்லை. சனவரியை தை என்று தமிழ்ப்படுத்தலாம் என்பது தமிழ்நாட்டில் ஒருவருக்கும் தெரியாது. தனியாகத் தமிழ் நாட்காட்டி, கணிப்பு முறை தமிழ்நாட்டில் வழக்கில் இருக்கும் போது (திருமணம், சாதகம், இறப்பு, பெண் பூப்படைதல், கோயில் திருவிழாக்கள், அறுவடை ஆகிய பலக் குறிப்பிடத்தக்க தினங்கள் தமிழ் கணிப்பு முறையின் படியே தான் இன்னமும் செய்யப்படுகின்றன. தை 1ஆம் தேதி திருமணம் என்றால் தமிழ்நாட்டில் எல்லோரும் சனவரி 14 என்று தான் புரிந்து கொள்வார்கள். இலங்கையில் நீங்கள் சொல்லும் வழக்கு எப்படி வந்தது எனத் தெரியவில்லை. அது சரியா தவறா என்ற விவாதத்திற்கும் வரவில்லை.) அதே பெயரை ஆங்கில மாதத்திற்கு மொழிபெயர்ப்பாக பயன்படுத்துவது பெரும் குழப்பம் உண்டாக்கும். எனவே குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு ஆங்கில நாட்காட்டியை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். பண்டைத் தமிழர் குறித்த தமிழ்நாட்டு வரலாற்றுத் தகவல்களில் தமிழ் மாதங்கள் குறிப்பிடப்பட்டால் அவை தமிழ் காலக் கணிப்பு முறையைத் தான் பின்பற்றி உள்ளன என்றும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்--ரவி 18:15, 21 டிசம்பர் 2005 (UTC)


ரவி, நீங்கள் சொல்வது புரிகின்றது. வழக்கத்தையே இவ்விடயத்தில் பின்பற்றி கொள்ளலாம். எனக்கு எவ்வித தீவர கருத்தும் இவ்விடயம் நோக்கி கிடையாது. இலங்கை தமிழர்கள் தமிழ் நாட்டு வழக்கத்தை அறியாமல் இருக்க சந்தர்ப்பம் இருக்கின்றது. ----Natkeeran 18:50, 21 டிசம்பர் 2005 (UTC)

நக்கீரன், இந்தக் குழப்பம் தீர்ந்துள்ளது நன்று. ரவியின் கூற்றுக்களை நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். தை மாதம் என்பது ஜனவரி மாதம் 15-ம் தேதி துவங்கி பிப்ரவரி மாதம் 15 வரை நீளும் என்பதால் ஜனவரியைத் தை என்பதா பிப்ரவரியைத் தை என்பதாஎன்பது குழப்பம் தருவிக்கிறது. எனது தாத்தா-பாட்டி இன்னமும் பல விடயங்களுக்கு தமிழ்த் தேதிகளையே பயன்படுத்துகின்றனர். ஆனால், அவர்கள் கணக்கில் தை 1 என்பது ஜனவரி 15 ஆகும், ஜனவரி 1 ஆகாது. இந்த சிக்கலை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கலாம். இந்த ஒரு காரணத்தினால் மட்டுமே, நாம் இந்த முறையைப் பயன்படுத்தலாம் என்று கருதுகிறோம். -- Sundar \பேச்சு 08:15, 22 டிசம்பர் 2005 (UTC)

யாழ்.காம் தளத்தின் மன்றம் உபயோகிக்கும் மாதங்கள் பெயரிடும் வழமையை பார்த்தால், நான் கூற முனைந்த கூற்று சற்று மேலும் தெளியலாம். இலங்கை பயனர்களுக்கு தமிழ் விக்கிபீடியாவின் வழமையை குறித்து வைப்பது நன்று. --Natkeeran 15:24, 23 டிசம்பர் 2005 (UTC)

ஓ. இப்பொழுது புரிகிறது. கண்டிப்பாக இலங்கை வழக்கு நீங்கள் குறிப்பிட்டது போல்தான் உள்ளது. இலங்கைப் பயனர்களுக்குக் குழப்பம் ஏற்படாதவாறு நாம் நமது வழமையை விளக்க வேண்டும். -- Sundar \பேச்சு 05:41, 24 டிசம்பர் 2005 (UTC)

மாதங்களின் பெயர் குறிக்கும் விடயத்தில் நாங்கள் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன். இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நற்கீரன் குறிப்பிட்டதுபோல் ஆங்கில மாதங்களையும் தமிழ் மாதப் பெயர்களால் அழைக்கும் வழக்கம் உண்டென்றாலும், சாதாரண பேச்சு வழக்கிலும், குழப்பம் விளையாது என்ற நிலையிருக்கும் போதும்தான் இவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது. முக்கியமான மற்றும் குழப்பம் விளையக் கூடும் எனக்கருதப்படும் இடங்களில் ஜனவரி, பெப்ரவரி என்று ஆங்கில மாதப் பெயர்களைக் குறிக்கும் வழக்கம் இலங்கையிலும் உண்டு. நாட்கட்டிகள், பஞ்சாங்கங்கள் முதலியவற்றிலும் ஆங்கில மாதங்கள் ஜனவரி, பெப்ரவரி என்றே குறிக்கப்படுகின்றன. இங்கே பாருங்கள். இங்கு தரப்பட்டுள்ள யாழ்ப்பாணத்துப் பஞ்சாங்கம் ஒன்றின் பக்கமொன்றில் ஆங்கில மாதப் பெயர் ஜூன் என்று அச்சிடப்பட்டிருக்கிறது. எனவே இலங்கைத் தமிழருக்கு ஜனவரி, பெப்ரவரி என்ற சொற்கள் எவ்வித குழப்பத்தையும் விளைவிக்காது. கலைக்களஞ்சியக் கட்டுரைகள் போன்ற குழப்பத்தை விளைவிக்காத, தெளிவான தகவல்கள் தேவைப்படும் இடங்களில் ஆங்கில மாதங்களுக்குத் தமிழ் மாதப் பெயர்களைப் பயன்படுத்தாது ஆங்கிலப் பெயர்களையே பயன்படுத்துவதுதான் நல்லது என்பது எனது கருத்து. ஏனெனில் தையும், ஜனவரியும் ஒன்றல்ல. Mayooranathan 19:41, 6 ஜனவரி 2006 (UTC)

SI அலகுகள், முன்னொட்டுக்கள்[தொகு]

SI அலகுகள், முன்னொட்டுகளை பொறுத்த வரை(எ.கா-கிலோ, மெகா, மில்லி), ஆங்கிலப் பெயர்களை தமிழ்ப்படுத்தாமல், எல்லா தருணங்களிலும் அப்படியே பயன்படுத்த வேண்டும் என்பது என் பரிந்துரை. அளவுச் சொற்கள் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் தமிழ்ப்பதங்களை பயன்படுத்துவது, பிரபலப்படுத்துவது வரவேற்கப்படும் அதே வேளை அவை ஒரு விரும்பத்தக்க கூடுதலாக (option) மட்டும் தொடக்கத்தில் இருக்கலாம் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன்.முதலில் அவற்றை அடைப்புக் குறிக்குள் இட்டு எழுதலாம். பொதுப் பயன்பாட்டிலும் அவை பிரபலமாகும் போது இணையான ஆங்கில முன்னொட்டுக்களை விட்டு விடலாம். எடுத்த எடுப்பில் தமிழ் அலகுகள், முன்னொட்டுக்களை முழுவதும் பயன்படுத்துவது பெரும் குழப்பம் உண்டாக்குவதுடன், வாசகர்கள் கட்டுரையை புரிந்து கொள்ளும் வேகத்தையும் குறைக்கும்--ரவி 15:23, 22 டிசம்பர் 2005 (UTC)

தனிமப் பெயர்கள்[தொகு]

பொதுவாகத் தமிழர்கள் பன்னெடுங்காலம் அறிந்துள்ள தனிமப் பெயர்கள் தவிர்த்து (எ.கா-தாமிரம்) பிற தனிமப் பெயர்கள் அனைத்தையும் Periodic tableல் உள்ள பெயர்களை தமிழில் மொழிபெயர்க்காமல், ஒலி பெயர்ப்பு மட்டும் செய்வது அவசியமும் போதுமானதுமாகும் என்று பரிந்துரைக்கிறேன். எடுத்துக்காட்டாக, ஆக்சிஜனை உயிர் வாயு என்று அழைக்காமல் ஆக்சிஜன் என்றே அழைக்க வேண்டும். தர்க்கப் படிப் பார்த்தால், ஆக்சிஜன் இல்லாமலும் உயிர் வாழும் உயிரினங்கள் இருப்பதால், அதை உயிர் வாயு என்று அழைப்பது முற்றிலும் சரியன்று. இவ்வாறான மொழிபெயர்ப்பு குறைபாடுகளை தவிர்க்கும் பொருட்டு தனிமங்களின் அனைத்துலகப் பெயர்களையே பின்பற்றலாம் --ரவி 15:28, 22 டிசம்பர் 2005 (UTC)

எனக்கும் இதுவே சரியென்று படுகிறது.--சிவகுமார் 16:29, 22 டிசம்பர் 2005 (UTC)

தீர்க்கமான பரிந்துரைகள் தற்சமயம் தேவையா?[தொகு]

ரவி, நாட்காட்டி விடயத்தில் ஒரு வழக்கத்தை வேண்டி நிற்பது தேவை. ஆனால், மேற்கூறிய விடயங்களில் தேவையில்லை. அதை எழுதுபவர் விருப்பத்திற்கே விட்டுவிடலாம். மேலும் நுல்லி, நூக, நூண போன்ற சொற்கள் பெரிய குழப்பத்தை விளைவிக்கும் என்று சொல்ல முடியாது. அனைத்து சர்வதேச அலகுகளையும் அப்படியே பயன்படுத்துவதென்பது தேவையற்றது. எடுத்துக்காட்டாக ஒரு உயிரினத்தை விஞ்ஞான அடிப்படையில் கிங்டம் என்று தொடங்கி சிபீசீய்ஸ் என்று முடிப்பார்கள், அவற்றை அவ்வாறே பயன்படுத்துவது தேவையற்றது. ஆனால் விஞ்ஞான பெயர்களை ஒலிபெயர்பதே பொருத்தம் என்பது என் தனி கருத்து. ஆங்கிலதிலும் ஒரு பொது பெயரும், ஒரு விஞ்ஞான பெயரும் பல உயிரினங்களுக்கு உண்டு.

மேலும், பல பழக்கத்தில் உள்ள தனிமங்களின் தமிழ் பெயர்களை தமிழிலேயே பயன்படுத்துவதேதான் நன்று. இலங்கையில் பல காலம் தொட்டு பல பொது தனிமங்களுக்கு தமிழ் பெயர்கள் வழக்கத்தில் உண்டு. எனவே, ஒலியமைந்த சொற்களை விக்கிபீடியாவில் வழமைப்படுத்துவது தேவையற்றது, மற்றும் சிக்கலுக்குரியது.

அனைத்து சொற்களும் தர்க்க ரீதியில் அமைவதில்லை. பல வழக்கம், வரலாறு காரணமாக பயன்பாட்டில் இருக்கின்றன; உயிர் வாயுவையும் அப்படி கொள்ளலாம்.

மேற் கூறிய விடயங்கள் பற்றி எந்த வித தீர்க்கமான பரிந்துரைகளையும் பொதுவாக செய்யாமல் இருப்பதே இப்போதைக்கு நன்று என்று எனக்கு படுகின்றது. --Natkeeran 16:16, 22 டிசம்பர் 2005 (UTC)


Natkeeran, one day or another we have to mention these things in Manual of style (MOS). I just started the discussion now. After all, expanding MOS is one of our targets for next year, right? All my view are my personal recommendations only and they are always subject to change/modification based on other users' opinions. I had few doubts like whether to write Nitrogen as நைட்ரஜன் or நைதரசன் or in some equivalent tamil word. Thats why, I started this topic. At the end of the discussion, I hope to see some list of standard element names that are recommended to be used in TWpedia. perhaps, this task could take even a year or longer. It is important that we use a consistant way of naming things which is important in the context of this being a encyclopedia. The authors shall never be forced to follow a strict naming code but may be the administrators can edit them.--ரவி 16:45, 22 டிசம்பர் 2005 (UTC)


ரவி, உங்களின் பதில்கருத்துகளுடன் உடன்படுகின்றேன். இவ்விடயம் நோக்கி கலந்துரையாடல் தேவைதான். அவசரப்பட வேண்டாம் என்றுதான் கூற முனைந்தேன், தற்சமயம் உங்களின் நோக்கையும் சற்று புரிய கூடியதாக இருக்கின்றது. நீங்கள் கூறியபடி பல பயனர்களின் கருத்தையும் உள்வாங்கியே ஒரு இணக்கத்துக்கு வரவேண்டும். --Natkeeran 17:01, 22 டிசம்பர் 2005 (UTC)

மொழிநடை இராம.கி[தொகு]

text underline[தொகு]

should we allow it as a policy of manual of style to underline text as found in the article சி. வி. இராமன்? I propose not, as it would confuse that with hyperlinks. Also, then we cannot set the limit to the maximum of number of words that can be underlined and the frequency between two underlined text. I prefer to follow a simple style of formatting as followed in sister wikipedias. --ரவி 09:02, 30 மே 2006 (UTC)[பதிலளி]

text formatting[தொகு]

There are some minor things about text formatting which need to be defined in the style guide. Some were user:natkeeran's long time doubts :). I propose the format and if there is no second opinion then we can make it official and add it in the guide page.

1. While creating unnumbered lists using the star symbol, one (1) blank space should be left after the star symbol. Or, in general one space after any non alphabetic character and punctuation marks

2. Two line spaces be given when a new paragraph is started

3. No colored fonts

4. No underlining of text

The above suggestions are made with an intention to have a clear look both on the article page and on the edit pages.--ரவி 15:37, 1 ஜூன் 2006 (UTC)

  • 1,2,3,4 ஆதரவு.
  • 1 - பொதுவாக இரண்டு வெளிகள் முற்றுபுள்ளிக்கு பின்னர் விடப்படும்.
  • 2 - ஒரு புது section தொடங்க முதலோ அல்லது முதல் பந்தியிலோ ஒரு வரி விட்டால் போதும். விக்கி கோடு போட்டு பிரிவுகளை துல்லியமாக புரிய வைக்கின்றது. --Natkeeran 11:52, 15 ஜூன் 2006 (UTC)

Use of colors[தொகு]

I propose to have minimal or no use of colors while presenting tables as I don see them contributing much in enhancing the readability of the facts presented in the tables. Also, this would avoid unnecessary load of color ink while people print the pages. In general, I propose to keep the pages simple and clear. However use of color in images, informative graphics, graphs can be liberal.--ரவி 15:37, 1 ஜூன் 2006 (UTC)


standard section names[தொகு]

I propose to standard terminology of subsections in all articles to have a consistent wiki format. Some recommendations are:

  • external links - வெளியிணைப்புகள்
  • references - ஆதாரம்
  • Further reading - இன்னும் அறிய? / மேலதிகத் தகவல்களுக்கு? / மேலதிகத் தகவலுக்கு?
  • See also - இவற்றையும் பார்க்கவும்

Note:Refernces are sources based on which the information in article is written and should be instance of reference (the paragraph or line) properly cited within the article. Further reading sources are good sources of further information about the article but not based on which the article is written--ரவி 15:37, 1 ஜூன் 2006 (UTC)

  • Main Article - முதன்மைக் கட்டுரை
  • Mathematical Description - கனித விபரிப்பு (அறிவியல்/நுட்பியல் கட்டுரைகளுக்கு)
  • Technical Words - கலைச்சொற்கள் (அறிவியல்/நுட்பியல் கட்டுரைகளுக்கு)
  • External Links - வெளி இணைப்புகள் (இது வரைக்கு பரவலாக அப்படித்தான் உபயோகிக்கப்பட்டிருக்கின்றது, மேலும் ஆங்கில இரு சொற்களோடு ஒத்து போகின்றது.)
  • Specific References - மேற்கோள்கள்
  • General References - ஆதாரங்கள் (Including Further reading!) (example below MLA style!)
  • மு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம்.
  • See also - இவற்றையும் பார்க்கவும், இவற்றையும் பார்க்க !
  • Notes - குறிப்புகள் (not always used)
  • Further reading - மேலதிகத் தகவல்களுக்கு? / மேலதிக வாசிப்புக்கு? / மேலதிக தகவல்கள் (not always used)

--Natkeeran 11:17, 15 ஜூன் 2006 (UTC)

Numbered/un numbered lists[தொகு]

I am not sure which should be used when. Someone could propose the criteria--ரவி 15:37, 1 ஜூன் 2006 (UTC)

வெளி இணைப்புகள், ஆதாரங்கள், மேலதிக வாசிப்பு, இவற்றையும் பார்க்க ஆகியவற்றுக்கு இலக்கங்கள் தேவையில்லை. மேற்கோள்களுக்கும், குறிப்புகளுக்கும் தானாகவே இலக்கங்கள் வரும். --Natkeeran 12:16, 15 ஜூன் 2006 (UTC)

Language of communication/தமிழ் விக்கிபீடியா பேச்சு பக்கங்களில் தமிழை ஊடக மொழியாக பரிந்துரைத்தல்[தொகு]

Without doubt, Tamil will be the prime language of communication in all namespaces and the only language in the article namespace. I would like to invite comments in enforcing the severity of enforcing tamil as the only language in other namespaces too. Right now, some users (including me) leave comments in english in discussion pages and wikipedia namespace pages. The common excuses cited are:

1. Lack of time to write in tamil as the tamil typing speed is not good 2. Lack of skill, software access to type in tamil 3. Lack of fluency in explaining thoughts in tamil either in specific or all areas of studies

Though no currently active user complains about using english as a secondary language of communication, the extent to which this tendency/trend should be allowed is questionable because it may alienate not so fluent speakers of english from the conversations and consequently from contributing to wikipedia. also, it gives an unfair disadvantage to tamil people settled in non english speaking countries like germany. Also, going with the motive of enabling tamil as language sufficient enough to understand everything in world, it would be ridiculous if someone in future could not even understand the history and evolution of tamil wikipedia just because a good percentage of conversations here used to be in english. Also, a contributor who is fluent only in tamil (or ignorant of english but fluent in languages like german) or a serious tamil activist might feel intimidated, left out or insulted if the conversations in the discussion pages. No one at any point of time either in the present or future should be left clueless as to what happens, happened in Tamil wikipedia. At the same time, strictly enforcing tamil as the only language of communication might hinder the level of participation and contribution.

I propose that

1. The language of communication in the user talk pages need not be bound by wikipedia policy and its left to the choice of user and his visitor to converse in a language they are both comfortabe at.

2. Tamil be highly recommended in all namespaces except user pages as the as the only language. If a user repeatedly disobeys this rule, we might find out the real reason for this behaviour and may be leave repeated kind reminders to follow the 'only tamil' policy.

and what should be done if the user knowingly and purposefully disobeys this policy? should he be blocked?

3. Non native speakers of tamil (example:interwiki users) be allowed to register their comments in english or any other popular language which is spoken by considerable number of tamils.

and the question is whether such messages should be duly translated into tamil by other users?

4. Should the already existing english conversations be translated into tamil? Is this needed?

5. If a user is partially fluent, he may be allowed to express thoughts in english or another language but only as a better translation and repetion of his thougts in tamil so as to make himself clear.

Initiation of this discussion may seem farfetched, unnecessary at this moment, but I consdier it important to have some consciousness of the implications of a scenario where we have articles in tamil and discussions in english, Well, then i would say we realy would not have achibed our purpose of making tamil as the language of everything!!!!--ரவி 16:02, 1 ஜூன் 2006 (UTC)


ரவி இந்த முரண்பாட்டை நானும் அவதானித்தே வந்துள்ளேன். இதை நோக்கி என்னிடம் பல கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றை பின்னர் பகிர்கின்றேன். எனினும் தமிழில் கலந்துரையாடல் என்ற பரிந்துரையை நான் பொதுவாக வரவேற்கின்றேன். இப்படிப்பட்ட பரிந்துரையை முன்வைப்பது உங்களைப்போன்ற (நானும்தான்) (:-)) பயனர்களின் சுதந்திரத்தை ஆக்கிரமிப்பது போன்று தோன்ற கூடும் என்றுபடியால்தான் இதைப்பற்றி பெரிதாக எதையும் கூறவில்லை.
எனினும் சில விடயங்களை இங்கே குறித்து வைக்கின்றேன்.
  • ஆங்கிலத்தில் விடயங்களை அலச என ஒரு பக்கத்தை ஆக்கலாம்.
  • பயனர்களின் பேச்சு பக்கத்தில் இந்த நடைமுறையை உடனடியாக பரிந்துரைக்காமல் (நீங்கள் சுட்டியபடி), கட்டுரை பேச்சு பக்கங்களிலும், திட்ட பக்களிலும் முதலில் செயல்படுத்தலாம்.
  • இரு மொழிகளிலும் ஒரே விடயத்தை பகிர்வதை ஏற்கலாம்.
  • இதுவரை மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களை மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் இல்லை (சில முக்கிய பகுதிகளை தவிர), இப் பரிந்துரையை நடைமுறைப்படுத்தினால் விரைவில் தமிழ் விக்கிபீடியா தமிழ் மயப்படும். --Natkeeran 16:31, 1 ஜூன் 2006 (UTC)

(ரவி உங்கள் பரிந்துரைகளை எப்பொழுது தமிழ் படுத்துவதாக உத்தேசம்.:-))--Natkeeran 16:37, 1 ஜூன் 2006 (UTC)

தமிழிலேயே கலந்துரையாடல்களை நடத்துவது என்பது நிச்சயமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய ஒன்று. தமிழில் எல்லா அறிவுத்துறைகளையும் கொண்டுவர முயலும் தமிழ் விக்கிபீடியா போன்ற திட்டத்திலேயே தமிழில் கலந்துரையாடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், அல்லது சரளமாகச் சொல்லவிரும்புவதைச் சொல்ல முடியவில்லை என்ற நிலை இருக்குமானால் அது அடிப்படை நோக்கத்துக்கே விரோதமானது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

ஆனாலும், கட்டுப்பாடுகள் விதிப்பதன்மூலம் இதை அடைய முயல்வது தற்போதைக்கு ஏற்றதல்ல என்பது எனது கருத்து. மாறாக, தமிழில் கலந்துரையாடல்களை நடத்துவதற்குச் சாதகமான நிலைமையைத் தோற்றுவித்து எல்லோரையும் ஊக்குவிக்க முடியும்.

ஒருவர் தமிழில் ஒரு கலந்துரையாடலைத் தொடங்கினால் மற்றவர்களும் கூடிய அளவுக்குத் தமிழிலேயே எழுதுவார்கள். ஆங்கிலத்தில் எழுதினால், அது தொடர்பில் கருத்துக்களை எழுதுபவர்களும், ஆங்கிலத்திலேயே எழுத எண்ணுவார்கள். இப்பொழுது விக்கிபீடியாவில் கலந்துரையாடலில் ஈடுபடுபவர்கள் ஏறத்தாழ எல்லோருமே தமிழ் விக்கிபீடியாவோடு போதிய அளவு காலம் நெருக்கமாக இருப்பவர்கள் தான். அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டியதில்லை. நாங்கள் எல்லோரும் தமிழிலேயே எழுதி வந்தால் புதிதாக வருபவர்களும் அதையே பின்பற்றுவார்கள். பெரும்பாலும் தமிழிலும், ஆங்காங்கே ஆங்கிலமும் இருந்தால் பெரிய தீங்கு எதுவும் விளையப்போவது இல்லை. அதனால் தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர் எவரும் அதிகம் பாதிக்கப்பட மாட்டார்கள்.
கட்டுப்பாடுகளாக இல்லாமல், ஒரு வேண்டுகோளாக இதை விடுக்கலாம். இந்த வேண்டுகோளுடன், நாங்களும் தமிழில் கூடிய அளவுக்கு எழுதிவந்தால் தமிழில் எழுதுவதற்கு எல்லோரையும் அது ஊக்குவிக்கும்.
நாங்கள் இதை சிறிது காலம் பரீட்சார்த்தமாகச் செய்து பார்க்கலாம். Mayooranathan 19:42, 1 ஜூன் 2006 (UTC)
பல நேரங்களில், நான் தமிழில் கலந்துரையாடாமல் போவதற்கு முக்கிய காரணம் எழுத்துப்பெயர்ப்பு செய்து வெட்டி-ஒட்ட வேண்டிய சிக்கலே. (பெரும்பாலும் நான் லினக்ஸ் இயங்கு தளத்திலிருந்தே பங்களிக்கிறேன்.) தற்போது அதற்கும் ஒரு விடிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மற்றபடி, திட்டப்பேச்சுப் பக்கங்களிலாவது தமிழையே பெருவாரியாகப் பயன்படுத்துவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். -- Sundar \பேச்சு 07:22, 2 ஜூன் 2006 (UTC)

வெளியிணைப்புகளின் மொழி[தொகு]

வெளியிணைப்புகளைத் தரும் பொழுது, அவ்விணையைப் பக்கங்களின் மொழியையும் அடைப்புகுறிக்குள் தரப் பரிந்துரைக்கிறேன். இணைப்புச் சொற்றொடர்களும் தமிழிலேயே இருக்கப் பரிந்துரைக்கிறேன்--ரவி 09:17, 6 ஜூன் 2006 (UTC)

இதற்கென வார்ப்புருக்களைப் பயன்படுத்தலாம் - {{}}, {{}}. -- Sundar \பேச்சு 11:45, 6 ஜூன் 2006 (UTC)


எது நன்றாக உள்ளது?[தொகு]

* சுட்டி1 - (ஆங்கிலம்)
* சுட்டி1 - (தமிழ்)

நன்றாக உள்ளது--ரவி 12:59, 2 ஜூலை 2006 (UTC)

வணிகப் பெயர்[தொகு]

வணிகப் பெயர்களை அதிகாரப்பூர்வமற்ற முறையில் மொழிபெயர்க்க வேண்டாம்! கட்டுரையில் வேண்டுமானால் அடைப்புக்குறிகளுக்குள் தமிழில் பொருளை தரலாம். --ரவி 12:57, 2 ஜூலை 2006 (UTC)

ச, ஸ பயன்பாடு[தொகு]

பயன்படுத்தக்கூடிய இடங்களில் பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என்பதை நடைக் கையேட்டில் பரிந்துரைக்க கோருகிறேன்.

எடுத்துக்காட்டு:

  • சோவியத் - பரிந்துரைக்கத்தக்க எழுத்தக்கூட்டல், ஸோவியத் - பரிந்துரைக்கத்தகாத எழுத்தக்கூட்டல்

--ரவி 14:52, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

  • என் பரிந்துரையும் ரவியினுடையதே.((ச்)சோவியத் என பலுக்க வேண்டும் ஆனால்!! (ச்)சோழன் என கூற வேண்டும், ஆனால் பலரும் ஸோழன் என்கின்றனர், ஸோவியத் என்கின்றனர். முதல் எழுத்து வல்லினமாக இருப்பின் வலித்துத்தான் ஒலிக்க வேண்டும். இதில் விதி விலக்குகள் ஏதும் இல்லை. பிறவெல்லாம் பிழைபட்ட திருந்தா ஒலிப்புகள்தான். சகரம் மிகவும் குழப்பம் தரும் வல்லினம். அதாவது முதலொலி மெலிந்து வருவது வழக்கமாகி வருகின்றது. மெல்லொலியும் இரண்டு வடிவங்கள் பெற்று வருகின்றது) --C.R.Selvakumar 15:05, 8 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

எண் பெயர்கள்[தொகு]

  • 1982 ஆம் ஆண்டு, 1982ஆம் ஆண்டு, 1982ம் ஆண்டு
  • 1982 இல், 1982இல், 1982 ல், 1982ல்
  • 70வது, 70 வது, 70 ஆவது, 70ஆவது
  • 70களில், 70 களில்

இவற்றில் எது சரி? எவற்றை நடைக்கையேட்டில் பரிந்துரைக்கலாம்?

1982ஆம் ஆண்டு, 1982இல், 70ஆவது, 70களில் என்பவை என் பரிந்துரைகள். எனினும், என் பரிந்துரைகள் இலக்கணப்படி சரியானதா என அறியேன்.--ரவி 14:52, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

தமிழில் இதற்கு இலக்கணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. 70வது, 1970ல் 1970ம் ஆண்டு 70களில் என்பன என் பரிந்துரைகள். வேறு பரிந்துரைகளும் எனக்கு ஏற்பே.--C.R.Selvakumar 14:56, 8 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

தமிழில் படிமப் பெயர்கள்[தொகு]

தமிழ் விக்கிபீடியாவில் படிமங்களை பதிவேற்றும்போது படிமக் கோப்புப் பெயர்களை தமிழிலேயே வைக்கலாமா என்பது குறித்து உங்கள் கருத்துக்களை வேண்டுகிறேன். அண்மையில், நிரோ இது போல் செயல்பட்டு வருகிறார். இதில் சாதகமும் உண்டு. பாதகமும் இருக்கலாம். சாதகம் யாதெனின், கூகுள் images போன்ற தேடுபொறிகளில் தமிழில் தேடினால் இப்படிமப் பெயர்களும் சிக்கும். இது தமிழ் விக்கிபீடியாவுக்கு மட்டும் உள்ள சிறப்பு அம்சமாக அமையும். பிற தளங்கள் யாவும் பக்கப் பெயர்களைக் கூட ஆங்கிலத்தில் இடுவது கவனிக்கத்தக்கது. பக்கப் பெயர்களை தமிழில் இடுவது தமிழ் விக்கிபீடியாவுக்கு அதிகப்படியான pagerank பெற்றுத் தரும் விதயங்களில் ஒன்றாக இருக்கக்கூடும். பாதகம் யாதெனின், இப்படிமங்களை அதே பெயரில் சேமிப்பது சில இயங்கு தளங்களில் சிக்கலாக இருக்கலாம். சேமிக்கும்போது படிமப் பெயர்களை மாற்றிக் கொள்ளலாம் என்றாலும், சில பயனர்கள் இதை கவனிக்காமலும் இருக்கலாம்; தொல்லையாகவும் கருதலாம். அடுத்து நாம் விக்கிமீடியா காமன்சில் இருந்து படிமங்களை பயன்படுத்துவதை ஆதரிக்கிறோம். இவ்வாறு செய்வதால் அங்குள்ள ஆங்கிலப் படிமங்களை தமிழில் இங்கு மீண்டும் மீள்ப்பதிவேற்ற வேண்டும். நாம் உருவாக்கும் கட்டற்ற படிமங்களையும் அங்கு மீள்ப்பதிவேற்ற வேண்டும். வழங்கிச் சுமை அதிகமாக இருக்காது என்னும் பட்சத்தில் நாம் படிமப் பெயர்களை தமிழில் இடுவதை ஆதரிக்கலாம். ஆங்கிலப் பெயருடைய படிமங்கள் எப்படியும் பிற விக்கிபீடியா தளங்கள் மூலம் கூகுளில் சிக்கும். தமிழில் பெயர் இடுவதன் படிமத் தேடலிலும் தமிழ் விக்கிப்பீடியா முன்னிலை வகிக்கலாம்--ரவி 03:27, 17 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

பயனர் பெயர்களுக்கு உள்ளிணைப்புகள்[தொகு]

பெருகி வரும் பயனர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இனி வருங்காலங்களில் பயனர் பெயர்களை குறிப்பிடும்போது அவர்களது பயனர் பக்கங்களுக்கு உள்ளிணைபுகள் தருவதையும் பரிந்துரைக்கலாம். ஒரே பெயரில் பல பயனர்கள் இருக்கும்போதும், புதிய பயனர்களுக்கும் இது குழப்பத்தை தவிர்க்கும். --ரவி 03:28, 17 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் மட்டும் இதைக் கட்டாயமாகப் பின்பற்றலாம். ஆங்கில விக்கியில் ஆயிரக்கணக்கான பங்களிப்பாளர்கள் இருந்தும் ஒரு பேச்சுப் பக்கத்தில் முன்னர் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கையில் அதே பெயரில் வேறு எவரும் கருத்து தெரிவிக்காத நிலையில் வெறும் பெயரைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், பேச்சுப் பக்கக் கலந்துரையாடலில் அதுவரை பங்கேற்றிராத ஒருவரைக் குறிப்பிடும்போது கண்டிப்பாக இணைப்புத் தந்துவிடுகின்றனர். -- Sundar \பேச்சு 07:13, 18 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]