விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/தினேஷ்குமார் பொன்னுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தினேஷ்குமார் பொன்னுசாமி தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருளாளர். புனே நகரில் பணியாற்றி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் விக்கிமூலத்திலும் நவம்பர், 2011 முதல் பங்களித்து வருகிறார். நிக் வோய்ச்சிச், செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, பண்பலை, 100 (எண்), ஆள்கூற்று முறைமை, படிமப் பதிவு முறை, இரங்கநாதன் தெரு, நுபீடியா, அமலா பால், மீன் பிடித்தல் முதலியன இவர் பங்களித்த நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் சில. விக்கி பராமரிப்புப் பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார்.