விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு48

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் கவனிப்பு பட்டியல்[தொகு]

என் கவனிப்பு பட்டியலை சொடுக்கினால் எனக்கு வெற்று பக்கம் தான் வருகிறது. என் விருப்பத் தேர்வுகள், என் பங்களிப்பகள் எல்லாம் ஒழுங்காக உள்ளது. யாராவது இம்மாதிரியாக சிக்கல்களை எதிர் கொண்டுள்ளீர்களா? --குறும்பன் 01:16, 18 பெப்ரவரி 2011 (UTC)

என் கவனிப்பு பட்டியல் என்பது நீங்கள் தேர்தெடுத்து கவனித்து வரும் கட்டுரைகளில் பட்டியலே. ஒரு கட்டுரையை தொகுக்கும் போது இக்கட்டுரையைக் கவனிக்கவும் என்றா பெட்டியை செடுக்கினால் மட்டுமே உங்கள் பட்டியலில் சேர்க்கப்படும். நீங்கள் எந்த ஒரு கட்டுரைக்கும் இவ்வாறு செய்யவில்லை என்று நினைக்கிறன். அதலாலேயே வெற்றாக உள்ளது. --Natkeeran 01:25, 18 பெப்ரவரி 2011 (UTC)
இல்லையில்லை, என் கவனிப்பு பட்டியல் இதுநாள் வரை ஒழுங்காகதான் வேலை செய்தது. இப்போது தான் வேலை செய்யவில்லை. நான் தொகுக்கும் எல்லா கட்டுரைகளுமே தானாக என் கவனிப்ப பட்டியலில் வந்துவிடும். இக்கட்டுரையைக் கவனிக்கவும் என்பது தானாக தெரிவாகவில்லையெனில் நான் அதை தெரிவுசெய்துவிடுவேன்.--குறும்பன் 01:32, 18 பெப்ரவரி 2011 (UTC)
இப்பொழுது தான் எனது க.பட்டியலை பார்த்தேன். ஒரு சில நொடிகள் மட்டுமே தெரிகிறது. பிறகு, எதுவும் தெரியாமல் கணினித்திரை வெள்ளையாகிவிடுகிறது.--தகவலுழவன் 01:42, 18 பெப்ரவரி 2011 (UTC)
ஆமாம், இது ஒரு வழுத்தான். --Natkeeran 01:47, 18 பெப்ரவரி 2011 (UTC)
எனக்கும் இந்தக் குறை உள்ளது. திரையில் சில நொடிகள் பார்வைக்கு வந்தவுடன் மறைந்து விடுகிறது. இது குறித்த முழு விபரமறிந்தவர்கள் சரி செய்ய முயற்சிக்கலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:57, 18 பெப்ரவரி 2011 (UTC)

சரி செய்து விட்டேன். கேஷைக் காலியாக்கிவிட்டு மீண்டும் கவனிப்புப்பட்டியலை லோட் செய்யுங்கள் சரியாகிவிடும். மீடியாவிக்கி புதுப் பதிப்பு (1.17) வெளியீட்டால் வந்த சிக்கல் இது. ஜாவாநிரலில் document.write பயன்படுத்தாமல் importscript பயன்படுத்தச் சொல்கிறார்கள்.

நிரலாக்குனர்களுக்கான மேலதிகத் தகவல்கள் - இது குறித்த ஆங்கில விக்கி நிரலாக்குனர்களின் உரையாடல், எனது கேள்விக்கு ஆங்கில விக்கியரின் உதவி--சோடாபாட்டில்உரையாடுக 05:53, 18 பெப்ரவரி 2011 (UTC)

பக்கம் பார்க்கப்பட்ட புள்ளிவிபரம்[தொகு]

ஒவ்வொரு கட்டுரையிலும் காணப்படும் பக்கம் பார்க்கப்பட்ட புள்ளிவிபரம், கட்டுரையை எத்தனை தடவை பார்க்கப்பட்டன என்பதை மட்டும் காட்டுகின்றனவா? அல்லது கட்டுரை தொகுக்கப்படும் எண்ணிக்கையையும் சேர்த்தே கணக்கிட்டு காட்டப்படுகின்றனவா? --HK Arun 07:57, 18 பெப்ரவரி 2011 (UTC)

இரண்டும் சேர்த்து தான் (முன்தோற்றம் பார்க்கவும் ஒரு பேஜ்வியூவாக கணக்கிடப்படும்). ஆர்கானிக்/இனார்கானிக் (விக்கியின் உள்ளிருந்தே/மற்றும் வெளியிருந்து பக்கத்தைப் பார்வையிடுவோர்) பக்கப் பார்வைகளைப் பிரித்துப் பார்க்க டூல்செர்வரில் வேறு கருவிகள் உள்ளன என்று நினைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:07, 18 பெப்ரவரி 2011 (UTC)
பதிலுக்கு நன்றி சோடாபாட்டில், //டூல்செர்வரில் வேறு கருவிகள் உள்ளன என்று நினைக்கிறேன்.// கிடைத்தால் இணைப்பு தாருங்கள். --HK Arun 08:32, 18 பெப்ரவரி 2011 (UTC)

இலங்கை ரூபாய் நோட்டு[தொகு]

இலங்கையின் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை இணையத்தில் காணக்கிடைத்து. அந்த நூறு ரூபாய் நோட்டில் தமிழரின் பாரப்பரிய பரதநாட்டிய நடனம் ஆடும் பெண்ணினதும், மேளம் அடிக்கும் ஆணினதும் உருவங்கள் பொதிக்கப்பட்டுள்ளன. இந்த நோட்டுகள் நான் இலங்கையில் இருக்கும் போது காணவில்லை. இது ஒரு ஆச்சரியமான விடயமாகும். இது குறித்த விபரங்கள் அறிய ஆவல். --HK Arun 08:42, 18 பெப்ரவரி 2011 (UTC)

இது புதிதாக வெளியிடப்பட்ட நூறு ரூபாய். சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டது.--வினோத் 11:48, 18 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி வினோத் --HK Arun 12:05, 18 பெப்ரவரி 2011 (UTC)

மேலதிக விவரங்களுக்கு: http://notes.lakdiva.org/2010/2010_dplkd_100r.html --சி. செந்தி 09:03, 20 பெப்ரவரி 2011 (UTC)

இணைப்புக்கு மிக்க நன்றி சி. செந்தி. இதனை ஒரு கட்டுரையாகவே எழுதலாம். --HK Arun 16:11, 20 பெப்ரவரி 2011 (UTC)

வெளியிடப்பட்ட இலங்கை ரூபாய் நோட்டுக்கள் மீது சிங்கள மக்கள் அதிருப்தி கொண்டிருப்பதாகத் தெரிகிறது, பாரம்பரியமாக அச்சிடப்பட்ட சிங்கத்தின் இலச்சினை உள்ளடக்கப்பட்வில்லையாம்.--சமீர்

இன்னொரு கருவிப்பட்டை[தொகு]

ஆங்கில விக்கியில் இருப்பது போல பயனர் பங்களிப்புகள் பக்கத்தின் அடிப்பகுதியில் ஒரு கருவிப்பட்டையை இணைத்துள்ளேன். ஒரு குறிப்பிட்ட பயனரின் பயனர்வெளி பக்கங்கள், பயனர் அனுமதி, தொகுப்பு எண்ணிக்கை, தொடங்கிய கட்டுரைகள், பதிவேற்றிய கோப்புகள், அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் போன்றவற்றை இதன்மூலம் காணலாம். கேச்சினை நீக்கிவிட்டு (ctrl+f5 for ie and shift+reload for firefox) பார்த்தால் பட்டை தெரியவரும்--சோடாபாட்டில்உரையாடுக 18:44, 18 பெப்ரவரி 2011 (UTC)

இப்போது இணைப்பு உருவாக்க தொகுத்தல் கட்டத்திலுள்ள சங்கிலியை சொடுக்கினால் திரை 1 நிமிடத்திற்கு உறைந்து பின் திரை முழுதும் கருப்பு மென் பூச்சு தோன்றுகிறது. refresh/reload பண்ணுனாதான் மீண்டும் பழைய ஒழுங்கான திரை வருகிறது. இந்த வழுவை கவனிக்கவும். --குறும்பன் 03:58, 19 பெப்ரவரி 2011 (UTC)
”இணைப்பு உருவாக்க தொகுத்தல் கட்டத்திலுள்ள” எந்த ஏரியா என்று புரியவில்லை. விவரம் தொடுப்பு கொடுத்து விளக்குங்களேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:03, 19 பெப்ரவரி 2011 (UTC)
தொகுத்தல் பக்கத்திற்கு வந்து அதிலுள்ள ஏதாவது ஒரு சொல்லுக்கு (எகா - இந்தியா என்று கொள்வோம்) உள் இணைப்பு கொடுக்க இந்தியாவிற்கு இருபுறமும் நாம் [[...[] என்று தட்டச்சுவதற்கு பதிலாக தொகுத்தல் பக்கத்திலுள்ள சங்கலி வடிவ இணைப்பை சொடுக்கி இணைப்பு கொடுப்போம் அல்லவா (கையொப்பம்(பேனா வடிவம்) மற்றும் மேற்கோள்\முன்மாதிரிக்கும்(புத்தக வடிவம்) நடுவில் உள்ளது) அப்படி சொடுக்கினால் சிக்கல் ஏற்படுகிறது \ வேலை செய்யமாட்டிக்குது, இதே நிலை தான் மேற்கோள்\முன்மாதிரிக்கும் (புத்தகம் வடிவில் உள்ளது). இப்ப தான் அதை முயற்சித்து பார்த்தேன். --குறும்பன் 04:39, 20 பெப்ரவரி 2011 (UTC)
குறும்பன், சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, விக்கி புதிய பதிப்பில் jquery-ui நிரல் சேர்க்கப்பட்டுள்ளதால் வந்த வழு. சரி செய்துள்ளேன். -- மாஹிர் 04:51, 20 பெப்ரவரி 2011 (UTC)

ஆட்சிமொழிக் கருத்தரங்கம்[தொகு]

25-02-2011, வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு தேனி மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அரசு அலுவலர்களுக்கான தமிழ் ஆட்சி மொழிக் கருத்தரங்கம்-2011 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பூ.முத்துவீரன். இ.ஆ.ப தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கருத்தரங்கில் இணையத்தில் தமிழ் எனும் தலைப்பில் நான் பேச உள்ளேன். இதில் தமிழ் விக்கிப்பீடியா குறித்தும் பேச உள்ளதால் இக்கருத்தரங்கில் தமிழ் விக்கிப்பீடியாவில் அரசு அலுவலர்கள் எவ்வகையில் தங்கள் பங்களிப்புகளைச் செய்யமுடியும்? என்பதைக் குறிப்பிட உள்ளேன். இதில் எந்தமாதிரியான பங்களிப்புகளை அரசு அலுவலர்களிடம் எதிர்பார்க்கலாம் என்கிற பொதுவான கருத்தைத் தெரிவிக்க விக்கிப்பீடியாவின் பயனர்கள் அனைவரது கருத்தையும் அறிய விரும்புகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:49, 19 பெப்ரவரி 2011 (UTC)

எ.கா பின்வரும் பட்டியல்களில் உள்ள தலைப்புகளில் கட்டுரைகளை புதிதாக அல்லது விரித்து எழுதலாம்.

--Natkeeran 16:21, 20 பெப்ரவரி 2011 (UTC)

அரசு விழாக்களின் படங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை அத்துறைகளின் இணையதளங்களில் வெளியிடும் போது பதிப்புரிமை இல்லை, எவர் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம் என்று பொது வெளிக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளுங்கள். தற்போது உரிம அறிவிப்பு இன்றி வெளியாவதால் படங்களை அப்படியே பயன்படுத்த இயல்வதில்லை, (இந்திய பதிப்புரிமச் சட்டப்படி, அரசின் படைப்புகள் அனைத்துக்கும் அரசே உரிமையாளர் என்பதால்). அரசு விழாக்களுக்கு வருகை தரும் அமைச்சர்கள், நிருவாகிகள், ஆகியோரின் படங்கள் பொது வெளிக்கு கொடுத்தால் நமக்கு நல்ல உபயோகமாக இருக்கும் (இதற்கு துறைகளின் இணையதளங்களில் இவை அனைத்தும் பொதுவெளிக்கு அளிக்கிறோம் என்று ஒரு சிறு அறிவிப்பினை சேர்ப்பதன் மூலம் செய்து விடலாம்)--சோடாபாட்டில்உரையாடுக 13:46, 21 பெப்ரவரி 2011 (UTC)
  • இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் இணையத்தில் ஆட்சிமொழித் தமிழ்எனும் தலைப்பில் எனது கருத்துக்களை எடுத்துரைத்தேன். இறுதியாக தமிழ் விக்கிப்பீடியா குறித்தும், அரசு அலுவலகப் பயன்பாட்டுக்கு உதவும் பல கலைச்சொற்கள் தமிழ் விக்சனரியில் இருப்பது குறித்தும் தெரிவித்தேன். இதில் அரசு அலுவலர்கள் அவர்களது துறையின் அமைப்பு, செயல்பாடுகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை கட்டுரைகளாக்கி உள்ளீடு செய்ய முடியும் என்று தெரிவித்தேன். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க விரும்பும் அரசு அலுவலர்களுக்கு தேனி மட்டுமின்றி எந்த மாவட்டத்திலும் தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் பயிற்சி அளிக்கத் தயாராக இருப்பதையும் தெரிவித்தேன். (ஆனால் அரசு அலுவலர்களுக்கு இதிலெல்லாம் ஆர்வமிருப்பதாகத் தெரியவில்லை.)--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:27, 25 பெப்ரவரி 2011 (UTC)

தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறை[தொகு]

தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறை என்று ஏற்கனவே ஒரு பக்கத்தை நான் தொடங்கியுள்ளேன். எனவே இந்தத்தலைப்பு பயன் உள்ளதா என்பதைக் கவனிக்கவும். --Eldiaar 05:39, 25 பெப்ரவரி 2011 (UTC)

மிகவும் பயனுள்ளதே. :-)--சோடாபாட்டில்உரையாடுக 06:05, 25 பெப்ரவரி 2011 (UTC)

விக்சனரி தினம் ஒரு சொல்[தொகு]

விக்சனரியில் தினம் ஒரு சொல் கடந்த ஒரிரு மாதங்களாக செயல்பட்டு வருகிறது. அதற்கு குறைந்தது ஒரு வருடத்திற்குரிய சொற்கள் தேதிவாரியாக பொருளுடன் கொடுக்கப்படவேண்டும். ஆளுக்கு நல்ல பத்துச்சொற்கள் வீதம் உள்ளிட்டு உதவவும். ஏற்கெனவே சேர்க்கப்படாத்தாய் இருக்கவேண்டும். காட்டாக இதனையும் பார்க்கலாம். விக்சனரி:தினம்_ஒரு_சொல்/பரண்/2011/பெப்ரவரி -- மாஹிர் 08:24, 20 பெப்ரவரி 2011 (UTC)

காமிக்சு, ராப், குறும்படம், உறுமி, தமிழ் விக்கிப்பீடியா[தொகு]

திருச்சி பட்டறை[தொகு]

விக்கிப்பீடியா:பெப்ரவரி_20,_2011_பிரக்யான்_பட்டறை_திருச்சி#நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது ஸ்ரீகாந்த் 00:54, 21 பெப்ரவரி 2011 (UTC)

வாழ்த்துக்கள் சிறீகாந்த்.--Kanags \உரையாடுக 08:35, 21 பெப்ரவரி 2011 (UTC)
இப்போது படங்கள் இணைக்கப்பட்டுள்ளன--சோடாபாட்டில்உரையாடுக 13:51, 21 பெப்ரவரி 2011 (UTC)

அவ்வாறே புதுச்சேரியிலும் :) நிகழ்வு முடிந்து இப்பொழுது வரை பயணத்திலேயே இருந்ததால் இற்றைப்படுத்த தாமதமாகி விட்டது--இரவி 12:42, 21 பெப்ரவரி 2011 (UTC)

வார்ப்புரு உதவி தேவை[தொகு]

உலகக் கிண்ண போட்டி வீரர்களின் விபரங்களை பதிவாக்க எண்ணினேன். ஏற்கனவேயுள்ள வார்ப்புருவில் சில மாற்றங்களுடன் அவற்றை இற்றைப்படுத்தினேன். பிழையாகிவிட்டது. தயவு செய்து இந்த வார்ப்புருவை சரி செய்து தருவீர்களா? அப்படியாயின் பல வீரர்களின் விபரங்களை இற்றைப்படுத்த முடியுமாக இருக்கும்.

--P.M.Puniyameen 06:55, 21 பெப்ரவரி 2011 (UTC)

என்ன செய்யலாம்?[தொகு]

Kanags உமர் குல், யூனிஸ் கான் ஆகியோரின் பக்கங்களை ஆங்கில விக்கியில் திறக்க முடியவில்லை. நீங்கள் தந்த ஆலோசனை வழிகாட்டல் படி பாக்கிஸ்தான் அணியை பூரணப்படுத்தியுள்ளேன். இது சரியா? சில பிழைகள் ஏற்பட்டன அவற்றைத் திருத்த என்னால் முடியவில்லை. இது சரியெனக் கருதுமிடத்து மற்றுமொரு ஆசிய நாடான வங்காளதேசத்தையும் நிறைவு செய்யலாம். என்ன செய்யலாம்?--P.M.Puniyameen 08:36, 22 பெப்ரவரி 2011 (UTC)

ஆங்கில விக்கியில் இந்தப் பக்கங்களை காப்பிட்டிருக்கிறார்கள். ஆனாலும் அதன் பிரதிகளை எடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. உமர் குல் கட்டுரையில் தகவல்சட்டத்தை இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:01, 22 பெப்ரவரி 2011 (UTC)

2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்[தொகு]

தற்போது நாள்தோறும் இற்றைப்படுத்தப்பட்டுவரும் பரவலான ஊடக வெளிச்சத்தில் உள்ள இந்தப் போட்டியின் 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் பக்கத்தை Sitenoticeஇல் இடலாமா ? இது விக்கியின் நடுநிலையை பாதிக்குமா ? தமிழ் விக்கிப்பீடியாவின் புலமான இந்தியா/இலங்கை ஏற்று நடத்துவதும் வருனர் ஈர்ப்பும் இதன் சிறப்புக் குறிப்பிடலுக்கு காரணமாக அமையும்.--மணியன் 09:49, 23 பெப்ரவரி 2011 (UTC)

sitenotice இல் தேவையில்லை என நினைக்கிறேன். ஆனாலும் 1975 ஆம் ஆண்டு முதல் உலகக்கிண்ணப் போட்டிக் கட்டுரைகளை வாரம் இரண்டாக முதற்பக்கக் கட்டுரையாக அடுத்த வாரத்தில் இருந்து சேர்ப்பதற்கு எண்ணியுள்ளேன். அப்போது 2011 கட்டுரைக்கு முதற்பக்கத்திலேயே இணைப்புக் கொடுக்கலாம். இது குறித்து உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்.--Kanags \உரையாடுக 09:55, 23 பெப்ரவரி 2011 (UTC)
sitenotice இல் சேர்த்திருக்கிறேன். தவறென்றால் எடுத்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 22:39, 23 பெப்ரவரி 2011 (UTC)

கனகு,நீங்கள் முதலில் கூறியதைப்போல முதற்பக்கத்தில் செய்திகளிலே பெட்டியில் நிரந்தரமாக முதலில் அமையுமாறு வார்ப்புருவை வடிவமைத்தல் சிறப்பாக இருக்கும். வரைவு வார்ப்புருவைக் காண்க:வரைவு ஒவ்வொரு பக்கத்தின் தலைப்பிலும் வரும் sitenoticeயில் விக்கிப்பீடியா செய்திகள் வருவதே பொருத்தம். --மணியன் 00:04, 24 பெப்ரவரி 2011 (UTC)

மணியன், உங்கள் வார்ப்புரு வடிவமைப்பு நன்றாக உள்ளது. முதற்பக்கத்தில் சேர்த்துள்ளேன்.--Kanags \உரையாடுக 00:52, 24 பெப்ரவரி 2011 (UTC)
sitenotice சேர்ப்பது பொருத்தம் இல்லை. பொழு போக்கு ஊடகங்கள் போல கிறிக்கட்டை முன்னிலைப் படுத்துவது சரியல்ல. அடுத்த முறை பெரிய தமிழ்ப் படம் வெளிவந்தால், அதுவும் ஊடகங்களில் அதிகம் வருகிறது என்று முன்னிலைப் படுத்தலாமா??--Natkeeran 01:17, 24 பெப்ரவரி 2011 (UTC)
  • நானும் நற்கீரன் கருத்துடன் இணைகிறேன். துடுப்பாட்டம் குறித்த செய்திகளை விக்கி செய்திகளில் பயன்படுத்துவது சரிதான். ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில், விக்கி செய்திகள் பகுதியில் துடுப்பாட்டத்திற்கான வார்ப்புரு சேர்க்கப்பட்டிருப்பது கூட சரியாகத் தோன்றவில்லை.இந்த வார்ப்புருவிற்குப் பதிலாக இக்கட்டுரையை முதற்பக்கக் கட்டுரையாக்கிச் சிறப்பிக்கலாம். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:04, 24 பெப்ரவரி 2011 (UTC)


Why Speaking More than One Language May Delay Alzheimer's[தொகு]

விக்கிப்பீடியா இலச்சினை தொடர்பான உரையாடல்[தொகு]

இங்கு நடைபெற்ற விக்கிப்பீடியா இலச்சினை தொடர்பான உரையாடல் இங்கு நகர்த்தப்பட்டுள்ளது. --சூர்ய பிரகாசு.ச.அ. 13:21, 2 மார்ச் 2011 (UTC)

English has colonised our language[தொகு]

"The colonisers may have left, but they certainly colonised our tongues. At least back when the colonisers had guns, we resisted them. We fought. People died. This time we participate in the colonisation of the tongue. We encourage it."

--Natkeeran 23:37, 26 பெப்ரவரி 2011 (UTC)

  • நற்கீரன், நீங்கள் காட்டியுள்ள மேற்கோள் தமிழைப் பொறுத்தமட்டில் எவ்வளவு உண்மை என்பது கேள்விக்குறியே. தமிழ் மொழி தனித்து இயங்க வல்லது. அதைப் பிற மொழிகளுக்கு அடிமைப்படுத்துவதும் அடிமைப்படுத்தாமல் இருப்பதும் தமிழர் கைகளில் இருக்கிறது என்பது என் கருத்து. மேனாட்டு ஆதிக்கம் நம் மண்ணில் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் நம்மவர் நடுவே நிலவிய உட்பூசல்களும் பகைமைகளும் என்பதே உண்மை. பாரதி பாடியதுபோல, அன்னியம் என்று அனைத்தையும் ஒதுக்காமல், பிறரிடமிருந்து நல்லதை ஏற்று நாம் தமிழை வளப்படுத்த வேண்டும். சுதந்திர உணர்வோடு இச்செயலில் ஈடுபட வேண்டும். இது தமிழர் பொறுப்பு. --பவுல்-Paul 01:23, 28 பெப்ரவரி 2011 (UTC)
  • ஆப்பிரிக்க மொழிகள் ஒன்றுகூட பலம் பெறவில்லை. இந்திய மொழிகள் ஓரளவு தாக்குப் பிடித்தாலும், தாய்மொழி வழிக் கல்வி இல்லாமல் நாம் நிண்டு பிடிக்க முடியாது. எபிரேய மொழியில் அறிவியல் ஆய்வேடுகள் வரக் கூடியதாக இருந்தால், தமிழில் வராதது எமது இயலாமையே. தமிழைப் பொருத்த வரையில் காலனித்துவத்தைக் காட்டிலும் எமது குறைகளே மிகுதி என்பது உண்மை. மொழிக்கு உரிமை கொடுத்து, வாய்ப்புத் தந்து, ஆற்றல் கொடுத்து வளர்க்காமல் விட்டது எமது குறையே. --Natkeeran 01:41, 28 பெப்ரவரி 2011 (UTC)
  • தமிழில் புதிய சிந்தனைகளை உருவாகுதல், புதிய முயற்சிகளை மேற்கொள்ளல் என்பன ஒரு தேக்க நிலையில் தான் உள்ளன. வளர்ந்த நாடுகளில், சாதாரண ஒரு பணிப்புரிவோரும், தனது ஓய்வு நாட்களில் அந்நிய நாடுகளுக்குப் பயணித்து, அந்தந்த நாட்டின் வளம், வளர்ச்சி, மொழி, பண்பாடு, உணவுவகை என அறிந்து, ஆய்வுசெய்து அதனூடாக தமது மொழியின் வளர்ச்சிக்கு வித்திடுகின்றனர். குறைந்தப் பட்சம் சுய அறிவையேனும் வளர்த்துக்கொள்கின்றனர். ஆனால் எம்மவரிடமோ சிறந்த அறிவாற்றல் உள்ளவர்களாக இருந்தும், ஒரு கட்டத்திற்கு மேற்பட்ட பரந்த நோக்கம் அற்றவர்களாகவே இருப்பது இன்னொரு வகையில் வீழ்ச்சிக்கான காரணங்களாகும். உலகில் பலப்பாகங்களையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த கீரேக்கர், உரோமர், முதல் ஆங்கிலேயர் வரை அனைத்து நாடுகளின் அறிவையும் திரட்டியே தமது மொழிக்கு வளம் சேர்த்துள்ளனர். அது அம்மொழியினரின் ஒரு திறந்தப்போக்காகவே பார்க்கலாம்.
  • தமிழ் ஒரு தொன்மையான மொழித்தான். ஆனால் அறிவியலுக்கு பொருத்தமே இல்லாத கற்பனை வரிகள் வழியேயான கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்தக் குடி எங்கள் தமிழ்க் குடி என பெருமிதப்படல் போன்ற சிந்தனைப்போக்கு எம்மவரிடம் வேறூன்றி, பழமையில் பெருமைகாணும் இனமாக வாழ எம்மினம் பழக்கப்பட்டுவிட்டதே ஒரு சாபக்கேடுதான். அதுவே புதிய சிந்தனைகளின் தோற்றத்திற்கு தடைக்கல்லாகவும் உள்ளது. --HK Arun 03:03, 28 பெப்ரவரி 2011 (UTC)
  • தமிழுக்கு பங்களிக்க புகலிட முதல் தலைமுறையினருக்கு ஒரு பெரும் வாய்ப்பும் கடமையும் உள்ளது. அந்த அந்த நாடுகள் பற்றி, அவர்கள் பண்பாடுகள், சட்ட அரசியல் முறைமைகள் பற்றி, வெவ்வேறு மொழிகள் பற்றி, அறிவியல் பற்றி பகிர இந்த தலைமுறையாலேயே முடியும். அடுத்த தலைமுறைக்குப் பெரும்பாலும் தமிழ் வாசிக்க, எழுத, ஏன் பேசக் கூடத் தெரியாது. உலக நாகரிங்களை நாம் பார்த்தாமேனால் அவை யானவை: மேற்குலகம், சீனா, இந்தியா, அரபு/இசுலாமிய/பாரசீக, ஆப்பிரிக்க, முதற்குடிமக்கள். இவற்றுள் தமிழர்கள் மேற்குலகையும், இந்தியாவையும், அரபு உலகையும் ஓரளவாவது அறிந்து கொள்ள முடியும். ஆப்பிரிக்காவிலும் கூடத் தமிழர்கள் சென்று வசிக்கிறார்கள், பணி நிமித்தம் செல்கிறார்கள். ஆனால் இன்று பெரும் ஆதிக்கமாகய் வளரும் சீனாவைப் பற்றிய எமது அறிவு மிகச் சிறிது. இவர்கள் எம்மைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதில் (எ.கா வானொலிகள்) ஒரு சிறு பகுதி கூடம் நாம் மற்றத் திசையில் செய்வதில்லை.
  • பழம் பெருமை பேசி எம்மை நசுக்குகிறார்கள் என்பதில் உண்மை உண்டு. செம்மொழி செம்மொழி என்று அதற்குள் கொட்டும் வளங்களில் ஒரு பின்னத்தை அறிவியல் தமிழுக்கு, தமிழில் கல்விக்கு செலவழித்தாலேயே தமிழின் இன்றைய வளர்ச்சிக்கு உதவலாம். இவர்கள் செம்மொழி பேசி, தமிழனை உணர்ச்சி பூர்வமாக்கி, மழுங்கடிக்கிறார்கள். கணினியில் கட்டாயத் தமிழ், சட்டத்தில் தமிழ், வணிகத்தில் தமிழ் போன்ற சற்றுக் கடினமான பணிகளை நிறைவேற்றாமல் நழுவி விடுகிறார்கள். --Natkeeran 03:55, 28 பெப்ரவரி 2011 (UTC)
  • உண்மை நாம் அறிவியல் தமிழை வளர்க்காவிட்டால் தமிழில் ஆங்கிலம் கலப்பதை தவர்க்க இயலாது. என்று நாம் அறிவியல் தமிழ், கணிணி தமிழ், சட்ட தமிழ், கனித தமிழ், பொருளாதார தமிழ், போன்றவற்றை வளர்கிறோமோ அன்று நாம் ஆங்கில பயன் பட்டை முற்றிலும் அகற்ற முடியம். ஆனால் ஆங்கிலத்தை தமிழர்களிடமிருந்து தவர்பது தற்கொலைக்கு சமம் என்றே கருதுகிறேன். ஏனென்றால் பெரும்பாலான அறிவியல் மற்றும் மற்ற கண்டுபிடிப்புக்கள் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுவிடுகின்றன. நாம் ஆங்கிலத்தை கற்பதால் அந்த புதையல்களை நாம் தமிழிற்கு கொண்டு வரலாம் :வின்சு 04:46, 28 பெப்ரவரி 2011 (UTC)
  • ஆங்கில அறிவை, பன்மொழி அறிவை வரவேற்றோம். தமிழில் கல்வியை, தமிழ் மொழிக் கல்வியை பேணக் கேக்கிறோம். அவ்வளவே. பன்மொழி ஆற்றலின் பயன்கள் --Natkeeran 05:06, 28 பெப்ரவரி 2011 (UTC)
  • ஆங்கில மொழியில் இருந்து மட்டுமல்ல வின்சு, உலகின் அனைத்து மொழிகளில் இருந்தும் வளங்களை எமது மொழியில் பெருக்க வேண்டும். முதலில் அவ்வாறான எண்ணங்களே இன்று வளர்ந்து வரும் எமது இளம் சமுதாயத்திடம் தோன்றவேண்டும். அவ்வாறான எண்ணங்கள் வளர்வதன் ஊடாக, அதற்கேற்ப ஒரு அரசியல் தலமையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அரசியல் என்பதனை அரசியல் சாக்கடையென ஒதுக்கித்தள்ளாமல், நாளைய எமது இனத்தின் தலையெழுத்தை, எமது மொழியின் வளர்ச்சியை முன்னோக்குப் பாதைகளில் கொண்டுசெல்லும் ஒரு அரசியல் பலத்தை வளரும் இளம் தமிழ் சமுதாயம் உருவாக்கிக்கொள்ளவேண்டும். அரசியல் ஊடாக, அரச சட்டங்கள் ஊடாகவே பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அதனை இன்றையச் சூழ்நிலையில் தமிழ்நாட்டு தமிழ் இளைஞர்கள் சிந்திப்பது நல்லது. --HK Arun 05:02, 28 பெப்ரவரி 2011 (UTC)
  • நன்று. விக்கிப்பீடியா அதற்கு ஒரு நல்ல தளமாக அமையும் என்று நம்பலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் நல்ல தமிழ் கட்டுரைகள் பதிவேற்றுவதன் மூலமும், கல்லூரி மாணவர்களிடத்தில் விக்கிப்பீடியாவை கொண்டு செல்வதன் மூலமும் ஓரளவிற்கு தமிழை வளர்க்கலாம். என்னுடைய கருத்து என்னவென்றால் நாம் தமிழ்நாட்டில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு ஆய்வுக்கட்டுரைகளை தமிழாக்கம் செய்து விக்கிப்பீடியாவில் பதிவேற்றுவதன் மூலம் ஓரவிற்கு அறிவியல் கட்டுரைகளை பெருக்க முடியும். கல்லூரிகள் இதற்கென தனி மதிப்பெண்களையும் கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மேலும் கல்லூரி அல்லது மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் 99 தட்டச்சு முறையை பாடமாக அல்லது செய்முறை தேர்வாக வைத்தால் தமிழில் பங்களிப்போர் எண்ணிக்கையை கூட்ட முடியும். என் பல நன்பர்களுக்கு விக்கிப்பீடியாவில் பங்கேற்க ஆர்வம் இருந்தாலும் தமிழில் தட்டச்சு செய்ய தெரியாததால் தயக்கம் காட்டி வருகின்றனர். கல்லூரிகளில் அல்லது பள்ளிகளில் விக்கிப்பீடியாவில் தொகுப்பதைப்பற்றி பாடங்கள் வகுக்கலாம். அப்போது இன்னும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை இம் மாபெரும் பணியில் ஈடுபட வைக்கலாம். இவ்வாறு செய்வதால் தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளில் முதன்மையாகவும், வெகு விரைவில் லட்சங்களை எட்டும் என்றும் எதிர்பார்க்கலாம் :வின்சு 08:59, 28 பெப்ரவரி 2011 (UTC)

விக்கிபாசா சோதனைத் திட்டம்[தொகு]

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விக்கிபாசா கருவியில் தமிழ் மொழியை சேர்க்கும் ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன. விக்கிபாசா திட்ட ஆய்வாளர்கள் சுந்தா, நான் போன்ற தமிழ் விக்கியர்களைத் தொடர்பு கொண்டு தமிழ் விக்கிப்பீடியர்கள் விக்கிபாசா கருவியினை பயன்படுத்தி தங்கள் கருத்துகளையும் எண்ணங்களையும் தெரியப்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தனர்.

தனிப்பட்ட முறையில் தமிழ் விக்கி பயனர்களிடம் தொடர்பு கொள்ளாமல் இம்முயற்சி முழுவதும் பொதுவெளியில் அனைவரும் காணும் வகையில் ஆவணப்படுத்தப்பட வேண்டுமென்றும், இது சோதனை முயற்சியே, இதனால் தமிழ் விக்கிப்பீடியா எந்த விதத்திலும் விக்கிபாசாவை அங்கீகரிப்பதாகக் கொள்ளக்கூடாது, வெளியிலும் அத்தகு பிம்பத்தை உருவாக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளேன். மெலும் உருவாக்க கட்டத்தில் உள்ள எக்கருவியினையும் விக்கியில் நேரடியாக கட்டுரையாக்க சோதித்து பார்க்கவியலாது, அன்பவம் வாய்ந்த பயனர்கள் இதனைத் விரும்பினால் சோதித்துப் பார்க்கலாம், கருத்துகளை விக்கிபாசா குழுவிடம் தெரிவிப்பர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளேன்.

இந்த சோதனைத் திட்டத்தினை ஒருங்கிணைக்கவும், விக்கிப்பாசா குறித்தான விக்கி சமூக உரையாடல்கள் அனைத்தையும் ஒரு திறந்த வெளியில் ஆவணப்படுத்தவும் ஒரு திட்ட பக்கத்தை உருவாக்கியுள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:43, 27 பெப்ரவரி 2011 (UTC)

பன்மொழி விக்கிப்பீடியா தகவல்களை மேம்படுத்தும் நோக்காக விக்கிபாசா என்ற கருவியை மைக்ரோசாஃப்ட் இந்திய ஆய்வகம் (Microsoft Research India) 2010 அக்டோபரில் வெளியிட்டோம். விக்கிபாசா அளவில் பெரிதான ஆங்கில விக்கிப்பீடியாவை அடிப்படையாகக் கொண்டு, மைக்ரோசாஃப்ட் மொழிபெயற்பி ஆதரிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்படுகிறது.
இக்கருவியை விக்கி சமூக ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உருவாக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். மைக்ரோசாஃப்ட் இந்திய ஆய்வகம் (Microsoft Research India), பல்வேறு விக்கி சமூக ஆர்வலர்களிடமிருந்து விக்கிப்பாசா குறித்தான பயன்பாடுகள், குறைபாடுகள், கருத்துகள், எண்ணங்கள் மற்றும் காண விரும்பும் முன்னேற்றங்கள் ஆகியவற்றை புரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது. இதுகுறித்து பல மொழி விக்கிப்பீடியாக்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம்.
நல்ல மொழிபெயர்ப்பி ஏதுமில்லாத சூழ்நிலையில் இக்கருவியை எப்படி மிகவும் பயனுள்ளதாகச் செய்யமுடியும் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறோம். இதுபோன்ற கருவியை விக்கி சமூக ஆர்வலர்கள் பயன்படுத்த அதிலிருக்கவேண்டிய குறைந்தபட்ச அம்சங்கள் எவை என்பதை புரிந்துகொள்வதற்காக, தமிழில் தற்போது விக்கிபாசா ஒரு சோதனை திட்டமாக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ் விக்கிப்பீடியர்கள் விக்கிபாசா கருவியினை பயனர்வெளியில் பயன்படுத்தி தங்கள் கருத்துகளையும் எண்ணங்களையும் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், விக்கிபாசா மீடியாவிக்கி திறந்த வெளியில் இருப்பதால், விக்கிப்பீடியர்களும் இக்கருவியை நேரடியாகவே மேம்படச்செய்ய அழைக்கிறோம்.
WikiBhasha.MSR 09:23, 28 பெப்ரவரி 2011 (UTC)
நன்றி. பரிசோதித்து பின்னூட்டு தந்து விக்கி பயனர்கள் உதவினால் நன்று. --Natkeeran 18:14, 1 மார்ச் 2011 (UTC)
மிக்க நன்றி. --WikiBhasha.MSR 11:27, 2 மார்ச் 2011 (UTC)

விக்கிபாசாவை விக்கி சமூக ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்த நாங்கள் online பட்டறைகளும் ஏற்படுத்தியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இங்கே சென்று பார்க்கவும்.--WikiBhasha.MSR 11:27, 2 மார்ச் 2011 (UTC)

விக்கிப்பீடியாவை மாணவர்களிடம் கொண்டு செல்ல[தொகு]

விக்கிப்பீடியவைப் பற்றி தமிழில் ஏதேனும் Power Point Prestentaion கிடைக்குமா? அவ்வாறு கிடைக்குமென்றால் அதை எங்கிருந்து தரவிறக்கம் செய்யலாம். ஒரு கல்லூரி பேராசிரியர் இதைப் பற்றி என்னிடம் கேட்டு வருகின்றார்.:வின்சு 06:03, 27 பெப்ரவரி 2011 (UTC)

வின்சு, ஆங்கிலத்தில் presentation கள் பிற ஆவணங்கள் இப்பக்கத்தில் தரப்பட்டுள்ளன. தமிழில் ரவியிடம் உள்ளது என நினைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 06:18, 27 பெப்ரவரி 2011 (UTC)

தமிழில் உள்ள விக்கிப்பீடியா Presentation களை பொதுவில் போட்டால் எல்லா பயனர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமே. நாம் இதை தொழிற்நுட்ப கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சென்றால் தமிழ் கட்டுரைகள் பலமடங்கு பெருகும். மேலும் தெழில் நுட்ப கட்டுரைகளும் அதிகமாக பழக்கத்திற்கு வரும். மேலும் கல்லூரி மானவர்களின் ஆய்வு கட்டுரைகளின் விக்கிப்பீடியா நடை திருத்திய பதிப்பை பதிக்கவும் ஊக்கமாக இருக்கும். :வின்சு 06:30, 27 பெப்ரவரி 2011 (UTC)

நற்கீரனிடம் தமிழில் உள்ளது. வின்சுவின் கோரிக்கையையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 06:33, 27 பெப்ரவரி 2011 (UTC)
எனக்கும் இது தேவைப்படுகின்றது. சில இடங்களில் விக்கிப்பீடியா அறிமுகம் செய்ய இது உதவும். --சிவகோசரன் 08:08, 27 பெப்ரவரி 2011 (UTC)
இலங்கை கிழக்குப்பல்கலைக் கழகத்தில் விக்கி பட்டறையில் பயன்படுத்திய ppt உள்ளது. பயனர்:கலை, நக்கீரனிடம் பெற்று இதனை இற்றைப்படுத்தியிருந்தார். இதனை மின்னஞ்சல் செய்கிறேன்.விக்கி ஊடான மின்னஞ்சலில் இணைப்பு செய்ய முடியவில்லை.ppt ஆக பொதுவில் போட முடியுமாயின் நல்லது.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 10:09, 27 பெப்ரவரி 2011 (UTC)

நான் நக்கீரனிடம் மின்னஞ்சல் செய்து கேட்டிருக்கிறேன். இருந்தாலும் பொதுவில் போடுவது அல்லது முதல் பக்கத்தில் தகுந்த இடத்தில் பதிவிறக்கம் செய்வதற்கு ஏற்ற வகையில் செய்வது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். கல்லூரி மாணவர்களும் அதை பதிவிறக்கி கற்று விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஏதுவாக இருக்கும். :வின்சு 10:35, 27 பெப்ரவரி 2011 (UTC)

வின்சுக்கு அனுப்பி உள்ளேன். பிபிடி வடிவில் உள்ளதால் பொதுமத்தில் ஏற்ற முடியவில்லை. என்னிடம் தமிழ்க் கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, நூலகத் திட்டம், தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய பிபிடி மற்றும் துண்டறிக்கைகள் உள்ளன. இவற்றை ஒரு இடத்தில் சேர்த்தால் பரவலாகப் பயன்படுத்த முடியும். நன்றி. --Natkeeran 15:23, 27 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி நக்கீரன். தாங்கள் அனுப்பிய தகவல்கள் கிடைத்தது. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. :வின்சு 17:09, 27 பெப்ரவரி 2011 (UTC)

மயூரநாதனின் இரு விக்கிமேனியாப் (2010) பேச்சு நிகழ்படங்கள்[தொகு]

மயூரநாதனின் இரு விக்கிமேனியாப் பேச்சு நிகழ்படங்கள் எனக்கு அவசியமாகத் தேவைப்படுகின்றன. அவற்றின் இணைப்பைத் தந்து உதவவும். நன்றி. --Natkeeran 15:38, 27 பெப்ரவரி 2011 (UTC)

இந்திய விக்கிகள் 2010 வளர்ச்சி அறிக்கை[தொகு]

இந்திய விக்கிகள் 2010 வளர்ச்சி அறிக்கை--இரவி 09:49, 28 பெப்ரவரி 2011 (UTC)

விக்கியாக்கம் செய்ததால் கேட்ட வார்த்தை அர்ச்சனை[தொகு]

இதனையும் இதனையும் படிக்க. புதிய கட்டுரைகளை விக்கியாக்கம் செய்ததனால் எனக்கு தமிழ் வலைப்பதிவர்களும் நவீன இலக்கியவாதிகளும் கொடுத்த பட்டங்கள் :-). ஒரு வழியாக விக்கி கொள்கைகளையும் விக்கி நடையினையும் எடுத்துக் கூறி புரிய வைத்துள்ளேன். மாமல்லனைத் தவிர மற்றவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரிகிறது. பிற விக்கி அன்பர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில் இங்கே இடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 10:18, 28 பெப்ரவரி 2011 (UTC)

  • சோடாபாட்டில் உங்களைக் கதையின் கதாபாத்திரங்களுள் ஒருவராக ஆக்கிய நண்பருக்கு நன்றி சொல்லுங்கள்... அவருக்குப் புரியும் போது புரியட்டும்... கவலை வேண்டாம்... தொடரட்டும் உங்கள் துப்புரவுப் பணி... --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:04, 28 பெப்ரவரி 2011 (UTC)
  • இதற்காக மனம் தளர வேண்டாம் சோடாபாட்டில். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்று எடுத்துகொள்ளுங்கள்.காய்த்த மரம் தான் கல்லடிப்படும். உங்கள் பணி தொடரட்டும். :வின்சு 15:03, 28 பெப்ரவரி 2011 (UTC)
  • சோடாபாட்டில் மனத்துணிவுடன் தொடரும் உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்."கேடும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணித்தலும் இவ்வாறன்ன" --சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 16:32, 28 பெப்ரவரி 2011 (UTC)
  • மாமல்லன்னுக்கு விக்கியைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று இதிலிருந்து தெரிகிறது. ஆனா விக்கி செயல்முறைகள் பற்றி தெரியாமலாயே அதைப்பற்றி தப்பாக கதை பண்ண தெரிஞ்சிருக்கு. சோடாபாட்டிலை (கதை மாந்தரில் ஒருவராக) கதைக்குள் கொண்டுவந்ததிற்கு அவருக்கு பாராட்டு. --குறும்பன் 20:09, 28 பெப்ரவரி 2011 (UTC)
  • மிக விரைவில் தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் தரப்படும் உயரிய விருதான "தமிழ் தாலிபான்" பட்டம் பெற வாழ்த்துகள் ;)--இரவி 20:59, 1 மார்ச் 2011 (UTC)
கனிவான வார்த்தைகளுக்கு நன்றி நண்பர்களே :-). இதில் சமந்தப்பட்டவர்கள் வேறு சிலரையும் மின்னஞ்சலில் பிடித்து விக்கி பற்றி விளக்கி புரிய வைத்துள்ளேன். அவர்களுக்கும் புரிந்தது போல இருக்கிறது. வசவு விழுந்ததை பரப்புரைக்கு சற்றே மாற்ற முடிந்துள்ளது :-)--சோடாபாட்டில்உரையாடுக 04:01, 1 மார்ச் 2011 (UTC)
உங்களின் பொறுமைக்கு நன்றி. அவர்களின் உரையாடல் பண்பில் அவர்கள் வெளிப்படுகிறார்கள். --Natkeeran 23:27, 1 மார்ச் 2011 (UTC)

கூட்டுக் கட்டுரையாக்கம்[தொகு]

செல்பேசிப் பதிப்புக்கு உதவி தேவை[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா செல்பேசிப் பதிப்பை அமைத்திட நுட்ப உதவி தேவை. நிருவாகிகள் மட்டுமே செயற்படுத்தக்கூடும் என நினைக்கிறேன்--இரவி 20:56, 1 மார்ச் 2011 (UTC)

என்ன உதவி தேவை. மொழி பெயர்ப்பு வேலை எதுவும் இல்லை என்று நினைக்கிறன்: [1]--Natkeeran 01:17, 3 மார்ச் 2011 (UTC)

2011 இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

எனக்கு கிரிக்கெட் பிடிக்காது. அதனால் என்ன என்று இந்தக் கட்டுரையை உருவாக்கிப் பார்க்கலாம் என்று இந்த நிரலின் உதவி கொண்டு முயற்சித்தேன். உங்களது கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன். பட்டியல் தொடர்பான, அதிக இணைப்புகள் கொண்ட கட்டுரைகளுக்கு அதிகம் நேரம் செலவழிக்காமல் இந்த நிரலை பயன்படுத்திப் பார்க்கலாம்.. (ஆங்கில சிகப்பு இணைப்புகளைக் கண்டால் அவை ஆவிக்கியில் தமிழ் தலைப்பு இணைப்பு இல்லை என்று அர்த்தம்). -- மாஹிர் 16:45, 2 மார்ச் 2011 (UTC)

2010 இந்தியன் பிரீமியர் லீக்‎ - இந்தக் கட்டுரையையும் திருத்தம் செய்ய உதவவும். -- மாகிர் 06:04, 5 மார்ச் 2011 (UTC)

குறும் பக்கங்கள், வழிமாற்றுப் பக்கங்கள்[தொகு]

வழிமாற்றுப் பக்கங்கள் குறும் பக்கங்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனவா? அப்படியானால் கட்டுரைகளின் உண்மையான எண்ணைக்கை குறைவாக இருக்கும். இதை தவிர்க்க முடியுமா ? --Natkeeran 02:48, 3 மார்ச் 2011 (UTC)

வழிமாற்றுகள் அனைத்தும் கட்டுரைககளாகக் கொள்ளப்படுவதில்லை. பக்கவழி நெறிப்படுத்தல் (disambig) பக்கங்கள் மட்டுமே கட்டுரைகளாகக் கொள்ளப்படுகின்றன. (காண்க - [2]) பொதுவாக ஆங்கில விக்கியில்ல் பக்கவழி நெறிப்படுத்தும் பக்கங்கள் பெரிதாக இருக்குமென்பதால் அவற்றை முழுக் கட்டுரைகளாகக் கருதும் பழக்கம் உண்டாகியிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் redirect என்ற நிரலுள்ள எவையும் கட்டுரைகளாகக் கருதப்படுவதிலை. --சோடாபாட்டில்உரையாடுக 03:51, 3 மார்ச் 2011 (UTC)
ஒரே பெயரில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுரைகள் இருந்தால் மட்டுமே பக்கவழிமாற்றுகள் ஏற்படுத்துதல் நல்லது. இரண்டு கட்டுரைகளுக்குத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 21:37, 4 மார்ச் 2011 (UTC)

ஐபி பயனர் கருவிப்பட்டை[தொகு]

ஆங்கில விக்கியில் ஐபி முகவரி பயனர்களின் பங்களிப்புப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் கருவிப் பட்டையை இப்போது த.விக்கியில் இணைத்துள்ளேன். இதனை பங்களிப்புப் பட்டியலின் கீழ் பக்கத்தின் அடிப்புறத்தில் காணலாம் எ.கா ([3]). --சோடாபாட்டில்உரையாடுக 04:37, 3 மார்ச் 2011 (UTC)

தமிழ் மொழி மாற்றம் - சிலருக்கு வருத்தம்[தொகு]

நான் கடந்த 25-02-2011 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆட்சி மொழிக் கருத்தரங்கில் ஆற்றிய உரையிலிருந்து ஒரு செய்தி “அரசு இணையதளத்தை தமிழில் மாற்ற வேண்டும்: கருத்தரங்கில் வலியுறுத்தல்” எனும் தலைப்பில் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அது இணையப் பதிப்பிலும் இருப்பதை இன்றுதான் பார்த்தேன். இதற்கு மாற்றுக் கருத்துக்களும் சிலரால் விமர்சனம் செய்யப்பட்டதால் அதுவும் அந்தச் செய்தியின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.பார்க்க தினமலர் செய்தி மற்றும் அதற்கான விமர்சனங்களும். இது குறித்து தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:17, 4 மார்ச் 2011 (UTC)

பார்க்க, தமிழ்நாடு அரசு வலைத்தளம், பேச்சு. --Natkeeran 21:43, 4 மார்ச் 2011 (UTC)

சுப்பிரமணி,
தினமலர் பின்னூட்டங்களில் நாம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. தமிழைப் பற்றிய அவர்களது அக்கறையை ஏதோ நனைய ஏதோ அழுவுதாம் என்று விட்டுச் செல்ல வேண்டியது தான். மேலும் ஒரு இரட்டை மொழித் தளம் உருவாக்குவது அப்ப்டி ஒன்றும் கடினமல்ல. தமிழைத் தளத்தின் இயல்புத் தேர்வு (default choice) மொழியாக்கிவிட்டு தமிழ் படிக்கத் தெரியாத தமிழ்நாட்டவருக்கு (ஒரு 5-10% தேரும் என நினைக்கிறேன்) ஆங்கிலத்தில் ஒரு இடைமுகம் உருவாக்குவது எளிது. தமிழ்நாட்டில் மின் ஆளுமை பரவலாக வேண்டுமெனில் தமிழில் தளம் வைப்பது மிக அவசியம்.--சோடாபாட்டில்உரையாடுக 23:14, 4 மார்ச் 2011 (UTC)

தகவல்களை சரியாகப் பெறுதல் மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. தமிழ் மட்டுமே தெரிந்திருப்பதால் அரசின் தகவல்களைப் படிக்கமுடியாத நிலைமையை தமிழர்களே தமிழர்களுக்கு உருவாக்க வேண்டுமா? தமிழனைத் தமிழன் போற்றின் தாரணி தமிழைப் போற்றும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 00:05, 5 மார்ச் 2011 (UTC)

தமிழ்நாடு அரசின் வலைத்தளங்களே தமிழில் இல்லை என்பது வேதனைக்குரியதே. மக்களாட்சி நடைபெற்றும், திராவிட ஆட்சி ஐம்பதாண்டுகளாக இருந்தும், சட்டங்கள் இயற்றவேண்டிய தேவை இல்லாதிருந்தும் இதனைக்கூட நடைமுறைப்படுத்த இயலாவிடின் தமிழ் ஆட்சிமொழி சட்டத்திற்கு மதிப்பே இல்லை. தினமலர் வாசகர்கள் கருத்துக்கள் அரசியல் சார்புடையவை. அவை புறம் தள்ளப்படவேண்டியவை. தமிழில் தளம் அமைத்து ஆங்கிலம் மட்டுமென்ன இந்திய மொழிகள் அனைத்திலுமே மொழிமாற்ற வசதி கொடுக்கலாம்.--மணியன் 02:43, 5 மார்ச் 2011 (UTC)

உங்களுக்குத் தெரியுமா - இடைமுகத் திருத்த வேண்டுகோள்[தொகு]

ஒவ்வொரு வாரமும் அரிய செய்திகளை முதற்பக்கத்தில் கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களுக்குத் தெரியுமா? பகுதியின் இடைமுகப்பை ஆங்கில விக்கியில் உள்ளது போன்றே (பார்க்கவும்: http://en.wikipedia.org) தமிழிலும் அதே இடைமுகப்பைக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். பின்வரும் இணைப்பைச் சொடுக்கி அதில் உள்ள மாதிரியைப் பார்க்கவும். அது அனைவருக்கும் சரி என்றால் அதனை வார்ப்புருவில் மாற்றி விடலாம். இணைப்பு: http://ta.wikipedia.org/wiki/WP:SBOX#Current_hooks

தயவுசெய்து கருத்துகள் கூறவும். தன்னிச்சையாக எதையும் செய்ய நான் விரும்பவில்லை.

கருத்துகள்[தொகு]

  1. ஆதரவு. --சூர்ய பிரகாசு.ச.அ. 13:37, 5 மார்ச் 2011 (UTC)
  1. ஆங்கில விக்கி உங்களுக்குத் தெரியுமாவுக்கும் தமிழ் விக்கி உங்களுக்குத் தெரியுமாவுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. நாம் முழு வசனங்களை இடுகிறோம். அவை ஒரு முழுமையான செய்தியைக் கூற வேண்டும். இங்கு ஈர்ப்பு மிக்க, முக்கிய தகவல்களை காட்சிப்படுத்துவதே எமது நோக்கம். எனவே வடிவம் மாற்றுவது பொருந்தாது. காப்பகத்தை சிறப்பாக ஒழுங்கு படுத்தி உள்ளீர்கள். --Natkeeran 16:26, 5 மார்ச் 2011 (UTC)
  2. நற்கீரனுடன் உடன்படுகிறேன். இப்போதுள்ளதே உகந்தது. உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.--Kanags \உரையாடுக 22:27, 5 மார்ச் 2011 (UTC)
  3. இந்த மாற்றம் தேவையற்றதென்றே கருதுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:04, 5 மார்ச் 2011 (UTC)

முடிவு[தொகு]

பலரது கருத்துகளையும் தொடர்ந்து (மின்னஞ்சல் கருத்துகள் உட்பட) இத்திட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. எனது வேண்டுகோளை ஏற்று கருத்தளித்த அனைவருக்கும் நன்றி. --சூர்ய பிரகாசு.ச.அ. 14:33, 6 மார்ச் 2011 (UTC)

SAfrican govt asked to include Indian languages in curriculum[தொகு]

References என்பதற்குரிய தமிழ்ப்பதம்[தொகு]

இங்கே ஒவ்வொரு கட்டுரைகளிலும் உசாத்துணைகள், மேற்கோள்கள், குறிப்புதவிகள் என்று வெவ்வேறு விதமாக References எனும் சொல் கையாளப்பட்டுள்ளது. இவற்றுள் பொதுவான ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து அனைத்துக் கட்டுரைகளிலும் அதனையே பயன்படுத்துவது நன்று எனப் பரிந்துரைக்கின்றேன், தங்களின் கருத்துக்கள் என்ன? --சி. செந்தி 22:39, 5 மார்ச் 2011 (UTC)

மேற்கோள்கள் என்பதே References என்பதற்கு ஈடாகப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அது நன்றாக உள்ளதாகக் எனக்குப் படுகிறது. --Natkeeran 23:07, 5 மார்ச் 2011 (UTC)

தரப்பட்டுள்ள மூன்று சொற்களும் வெவ்வேறு பொருளில் இங்கு பயன்படுத்தப்படுகின்றன என நினைக்கிறேன். பொதுவாக எந்த மேற்கோள்களும் காட்டப்படாமல் ஒரு கட்டுரை ஓரிரண்டு நூல்களை அடியொட்டி எழுதப்பட்டிருந்தால் உசாத்துணை பயன்படுத்தப்படுகிறது. கட்டுரையினுள்ளே சில இடங்களில் ref என சேர்க்கப்பட்டு இருந்தால் மேற்கோள்கள் எனத தரப்படுகிறது. மேலும் இணைப்பு இல்லாமல் சில குறிப்புகள் மட்டும் தரப்பட்டிருந்தால் குறிப்புகள் அல்லது குறிப்புதவிகள் தரப்படுகிறது. ஆங்கில விக்கியிலும் சில கட்டுரைகளில் இவை வெவ்வேறாகத் தரப்படுகின்றன. எனவே மூன்றும் தேவையே எனக் கருதுகிறேன்.--Kanags \உரையாடுக 00:36, 6 மார்ச் 2011 (UTC)
நன்றி, எனக்குள் ஏற்பட்ட குழப்பம் ஒன்றுக்கான தீர்வு சொல்லி உள்ளீர்கள்.--சி. செந்தி 11:29, 6 மார்ச் 2011 (UTC)
நல்ல விளக்கம் கனகு, எனக்கும் நிறைய குழப்பம் இருந்தது. --மாகிர் 13:57, 10 மார்ச் 2011 (UTC)

படிமங்கள் குறித்த கருவிகள்[தொகு]

விக்கிமீடியா காமன்சில் படிமங்களைச் சிறப்பாக பார்ப்பதற்குரிய Slideshow, Gallery Preview, Zoom Viewer கருவிகள் விருப்பத்தேர்வுகளில் உள்ளன. இதைப் போல தமிழ் விக்கித்திட்டங்களிலும் செய்ய முடியுமா?--இரவி 16:19, 6 மார்ச் 2011 (UTC)

காமன்சில் படங்களே அதிகமாக இருப்பதால் இந்தக் கருவிகள் பயன்படும். இங்கு தேவையிராது என்பது என் கருத்து. எல்லா Gadget/கருவிகளையும் இணைப்பது போன்றே இதனையும் செய்ய இயலும். என்ன அந்தக் கருவிகளில் js path தெரிந்து கொண்டால் இணைப்பது எளிது. அதற்கு அதனை check செய்து சேமித்து பின்னர் பயர்பக்கில் பார்த்தால் முகவரி தெரிந்துவிடும். அதனை மீடியாவிக்கி நேம்ஸ்பேசில் சேர்க்கவேண்டும். -- மாகிர் 18:04, 6 மார்ச் 2011 (UTC)

தானியங்கியாகப் படிமங்கள் சேர்ப்பு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்கள் இல்லாத கட்டுரைகளை மட்டும் வடிகட்டி, அவற்றுக்கான ஆங்கில விக்கிப்பக்கங்களில் விக்கிமீடியா காமன்சு படிமங்கள் ஏதும் இருந்தால், அதில் முதல் படிமத்தை மட்டும் இங்கே தானாகவே இணைக்குமாறு ஒரு தானியங்கிப் பணி செய்வது சாத்தியமா? --இரவி 16:22, 6 மார்ச் 2011 (UTC)

ரவி சாத்தியமே. http://jira.toolserver.org ல் Query service மூலமாக படங்கள் இல்லாத முதல் 1000 கட்டுரைகளையோ அல்லது எல்லாவற்றையுமோ கோரலாம். அதில் ஆங்கில தலைப்பு(with commons title)+தமிழ் தலைப்பு என வரிசையாக பெற்று excel கோப்பாக்கி அதனை தானியங்கியில் ஓட்டலாம் என்று நினைக்கிறேன். -- மாகிர் 17:58, 6 மார்ச் 2011 (UTC)

Any contributors from Jaffna, Sri Lanka?[தொகு]

Hi, I am Ulf Larsen from Oslo, Norway and I am looking for contributors to the Tamil language Wikipedia from Jaffna, Sri Lanka. If there is anyone that lives in or around Jaffna and edit here I would be very interested in having contact, as I have previously served with the Sri Lanka Monitoring Mission and know the place. Please leave a message at my discussion page or mail me at ulflarsen at gmail dot com - thanks! Ulflarsen 20:37, 6 மார்ச் 2011 (UTC)

Hi, I am an active contributor to the Tamil Wikipedia, living in Jaffna. --Sivakosaran 09:34, 7 மார்ச் 2011 (UTC)
Great, I have responded to your email! Best regards - Ulflarsen 18:50, 7 மார்ச் 2011 (UTC)