மைக்ரோசாப்ட்
| வகை | Public Dow Jones Industrial Average Component S&P 500 Component |
|---|---|
| நிறுவுகை | அல்புகுயற்கு,நியு மெக்சிகோ ஏப்ரல் 4, 1975 |
| நிறுவனர்(கள்) | பில் கேட்ஸ் பால் அல்லென் |
| தலைமையகம் | ஒன் மைக்ரோசாப்ட் வே ரெட்மொன்ட், வாஷிங்டன், யு.எஸ். |
| சேவை வழங்கும் பகுதி | உலகமெங்கும் |
| முக்கிய நபர்கள் | ஸ்டீவ் பால்மர் (CEO) ப்ரைன் கெவின் டேர்னர் (COO) போப் ஹெர்போல்டு (COO) பில் கேட்ஸ் (Chairman) ரே ஒசி (CSA) கிரைக் முண்டி (CRSO) |
| தொழில்துறை | கணினி மென்பொருள் நுகர்வோர் மின்னணுவியல் Digital distribution கணினி வன்பொருள் Video games IT consulting இணையதள விளம்பரங்கள் Retail stores Automotive software |
| உற்பத்திகள் | See products listing |
| சேவைகள் | See services listing |
| வருமானம் | |
| இயக்க வருமானம் | |
| இலாபம் | |
| மொத்தச் சொத்துகள் | |
| மொத்த பங்குத்தொகை | |
| பணியாளர் | 89,000 (2010) |
| துணை நிறுவனங்கள் | List of acquisitions |
| இணையத்தளம் | Microsoft.com |
மைக்ரோசாப்ட்(English: Microsoft) அமெரிக்காவை மையமாக கொண்டு செயல் படும் ஓர் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஆகும். கணினிக்குத் தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்ப்படுதுவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்றவற்றை செய்கிற நிறுவனம். வாஷிங்டனில் உள்ள ரெட்மன்ட் நகரத்தில் தலைமை இடம் உடையது. விண்டோஸ் , மைக்ரோசாப்ட் ஆபிஸ் ஆகியவை இதன் முக்கிய உற்பத்தி பொருட்கள் ஆகும்.
மைக்ரோசாப்ட் அல்டைர் 8000திற்கு பெசிக் இன்டெர்பிரிடர் என்னும் மென்பொருளை தயாரித்து விற்கும் நிறுவனமாக முதலில் துவங்கப்பட்டது. பின் எம்.எஸ்.டாஸ் எனும் இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியது முதல்விடுகளில் உபயோகிக்கும் கணினியின் இயங்குதளம் தயாரிப்பில் முன்னணி வகித்துவருகிறது. பின் விண்டோஸ் எனும் வரைகலைச் சூழல் இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் மைக்ரோசாப்ட்டை, "ஒவ்வொரு விட்டிலும் ஒவ்வொரு மேசையிலும் மைக்ரோசாப்ட்டின் மென்பொருள்" என விமர்சிக்கப் படுகிறது. இது தவிர மைக்ரோசாப்ட் நிறுவனம் மேலும் சில துறைகளில் தனது கால்தலத்தை பதித்துள்ளது. ஏக்ஸ்பாக்ஸ், ஏக்ஸ்பாக்ஸ் 360, சயுன் எம்.எஸ்.என்.டி.வி. ஆகியவை மைக்ரோசாப்ட்ன் பொழுதுபோக்கு தயாரிப்புகள். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் பொது வழங்குதல்(IPO) 1986 ல் துவக்கப்பட்டது. நிறுவனத்தின் பங்குகள் வளர்த்துக்கொண்டே இருந்ததால், இதன் உழியர்களில் 4 பில்லியனர்களையும், 12,000 மில்லியனர்களையும் உருவாகியுள்ளது. இவர்களுள் பில் கேட்ஸ், குறிப்பிடத்தக்கவர்.