விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு24

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சில கருத்துகள்[தொகு]

கடந்த வார இறுதி கூட்டம், பட்டறை மூலம் புரிந்து கொண்ட சில கருத்துகள்:

1. தமிழ் விக்கிப்பீடியாவின் உதவிப் பக்கங்களை மேம்படுத்த வேண்டியது மிக முக்கியம். ஒலி, ஒளிக் கோப்புகள்,படங்கள், வரை படங்கள் மூலம் இதைச் செய்ய வேண்டும். பங்களிக்க விரும்புவோரும் இயலாதவாறு தமிழ் விக்கி கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது. ஒரு பட்டறையில் அருகில் இருந்து சொல்லித் தரும் போது எளிமையாகப் புரிந்து கொள்வோரால் ஏன் தளத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ள இயலாமல் இருக்கிறது?

2. புதியவர்கள் தரும் பங்களிப்புகளில் கடுமையான திருத்தங்கள் செய்வது, தொடர் கருத்துகள் தெரிவிப்பது, நீக்குவதைத் தவிர்க்கலாம். மனதளவில் இது அவர்கள் பங்களிப்பு தொடர்வதைத் தவிர்க்கிறது. தாங்கள் விக்கிப்பீடியாவுக்கு எழுதும் அளவு தகுதி இல்லாதவர்களோ என்று எண்ண வைக்கிறது. ஒரு ஆறு மாத காலமாவது அவர்கள் சேவையில் சிறக்க நாம் துணைபுரிய வேண்டும். அதற்குள் விக்கிப்பீடியா முறைகளை அறிந்து கொள்ள, மற்ற பயனர்கள் மேல் நன்னம்பிக்கை வளர உதவும். தமிழ் விக்கியின் எழுத்து நடை, கொள்கைகள், கூட்டாக்கச் செயல் முறை தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் புதிது. அவர்கள் இதற்குப் பழகுவதற்கான வாய்ப்பை நாம் நல்க வேண்டும். புதியவர்களின் கட்டுரைகளில் நாம் கூடுதல் தகவல் சேர்ப்பது, நல்ல மாற்றங்களைச் செய்வது நம் மதிப்பைப் பெரிதும் உயரச் செய்கின்றது. நாம் நம் ஆர்வப் புலங்களில் மட்டும் எழுதாமல் புதியவர்களின் கட்டுரைகளில் பெரும் பங்கு செலுத்த வேண்டும்.

3. சிலர் ஒரு கட்டுரை எழுதுகிறார்கள். நாம் ஏதாவது காரணத்தால் நீக்கினால், அதை அறியாமல் புரிந்து கொள்ள முடியாமல் விலகி விடுகிறார்கள். தான் எழுதிய கட்டுரையைக் காணவில்லை என்பது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. இயன்ற அளவு, அவர்களுக்கு தகவல்கள் சென்று சேரச் செய்யலாம். தொலைப்பேசி, மின்மடல் மூலம் பேசிவிடுவதும் புரிதல், நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றது. பேச்சுப் பக்கச் சச்சரவுகளைத் (சண்டைகளைத்) தீர்க்கவும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம் :)

நற்கீரன் போன்றோர் பரிந்துரைக்கும் உள்வாங்கும் (inclusionist) கொள்கையை நாம் கொஞ்ச காலத்துக்கேனும் பின்பற்றலாம். கட்டுரைகளை நீக்குவதில் சற்று பொறுமை காட்டலாம்.

4. ஆழமற்ற பல குறுங்கட்டுரைகள், ஒரே துறை சார் கட்டுரைகள் தமிழ் விக்கியின் மதிப்பைக் குறைத்துக் காட்டுகிறது. விரிவான பல் துறை சார் அடிப்படை கட்டுரைகள் எழுதுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

5. ஏதோ ஒரு ஊரில் தடுப்பூசியால் பிரச்சினை என்றால் அது தடுப்பூசி நன்றாக இருக்கும் மற்ற ஊர்களிலும் பதற்றத்தை உண்டு செய்கிறது. அது போல ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள பிரச்சினைகளால் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய தவறான புரிதல் வருவது இயல்பே. இது branding காலம். தமிழ் விக்கிப்பீடியாவின் நலனை முன்னிட்டாவது, தமிழ் விக்கிப்பீடியர்களாகிய நாம் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள தமிழ் சமூகம் சார் கட்டுரைகளை எப்படி மேம்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும்.

6. அதிகாரி, நிர்வாகி, admin, bureaucrat போன்ற பெயர்கள் விக்கியின் பயனர் செயல்பாடு குறித்து பிழையான மனநிலையைத் தோற்றுவிக்கின்றன. "என்னை அதிகாரம் செய்ய நீ யார்? நிருவாகிகள் வைத்தது தான் சட்டமா? நாங்கள் எல்லாம் குறைவா?" என்பது போன்ற எண்ணங்கள். வேறு பொருத்தமான பெயர்கள் ஏதும் இருந்தால் சிந்திக்கலாம். நிருவாகப் பொறுப்பின் மூலம் துப்புரவுப் பணிகளையே மேற்கொள்கிறோம். பேசாமல் குப்பை கூட்டும் பயனர் (sysop), ரொம்ப நாளாக குப்பை கூட்டும் பயனர் (bureaucrat) பயனர் என்று பெயரை மாற்றலாமோ ;) --ரவி 05:02, 16 ஜூன் 2009 (UTC)

இலக்கண மாற்றம்[தொகு]

உருசியா, இராமன் போன்ற சொற்களில் “இலக்கணத்திற்க்காக” , உ, இ என்ற எழுத்துகள் போடப்படுகிறன. தற்காலத்தில் மக்கள் பெச்சிலும், எழுத்துலும் அந்த நியதியை பெரும்பான்மையினர் கடை பிடிப்பதில்லை. அதனால் இ,உ (எ.கா. உருசியா) என்ற கற்பனை நியதியை தவிர்க்க பரிவு. அதனால் 13ம் நூற்றாண்டிலிருந்து 21ம் நூற்றாண்டுக்கு முன்னேறுவோம். முன் நன்றிகள்--Ginger 19:52, 16 ஜூன் 2009 (UTC)

எம்மொழியும் அதன் இலக்கணம் இயல்பின் படியே இயங்குகிறது. பிழைகள் நிகழ்வதும், பிழைகள் செய்வோரும் என்றும் இருப்பர்தாம்.அதற்காக அதனை எடுத்தாளவ்து தவறு. எது சரியானதோ, எது முறையானதோ அதனை விடுவது தவறு. "பெரும்பான்மையர்" வால்க, ஒளிக என்கிறார்கள், ஆகவே அப்படியெல்லாம் எழுதுதல், அதுவும் கலைக்களஞ்சியம் போன்ற சீரிய படைப்புகளில் கூடாது. தமிழ்மொழியை இன்றளவும் செம்மையான (செழிப்பான, சீரொழுக்கம் மிக்க) மொழியாக இருக்கச் செய்வது தமிழர்கள் தங்கள் மொழியை போற்றி வந்திருக்கும் பண்பும் தமிழறிஞர்கள் காட்டிய வழிகாட்டுதலும் ஆகும். தமிழ் இலக்கண வரம்புகள் உள்ள செம்மொழி. "கற்பனை நியதி" என்று நீங்கள் நினைப்பதாக இருக்கலாம், ஆனால் அவை நம் மொழியின் முறைகள். எல்லா இலக்கண விதிகளையும் "கற்பனை" விதிகள் என்று வாதிடவும் முடியும். அவரவர் தங்கள் இச்சைப்படி மாற்றிக்கொண்டால், மொழி குட்டிச்சுவராகும். உங்கள் பரிந்துரை ஏறகத்தக்கதல்ல என்பது என் கருத்து. இப்படி அ, இ, உ முதலிய எழுத்துகள் இடுவது ஒரு நுட்பமான முறைப்பாடால். ல, ள, ர, ட, ண முதலான மொழி முதல் வாரா எழுத்தொலிகளை பலுக்கும் பொழுது நா பெரிதும் வளைகின்றது, இதனால் வாய் திறக்க வேண்டியுள்ளது (இதற்கு அங்காத்தல் என்று பெயர்), இதனால் ஒலிக்க எளிமைப்படுத்த உயிரெழுத்து ஒன்றை முன்னே இட தமிழ் மொழி இலக்கணம் விதி தருகின்றது. இதன் அறிவுடைமையை நுண்ணிதின் அறிவோர்ர் நன்கு உணர்வர். தமிழை மதிக்கத் தெரிந்தோர் இதனை நுணுகி அறிந்து போற்றுவர். தமிழின் நெடுங்கால உயிர்ப்புக்கு இத்தகைய அறிவார்ந்த நுணுக்க அறிவும், தமிழை எளிமையாக நிறுவிய தன்மைகளும் துணை நின்றன, நிற்கும். பொதுமக்கள் இசுக்கூலுக்குப் போனான் என்றும் டேசனுக்கு போய் கூட்டியாந்துடறேன் என்றும் கூறுவது இலக்கண நூலில் உள்ளதால் அல்ல, அவை இயல்பான மொழி ஒலிப்பு மரபுகள் என்பதால். தமிழில் இவை போற்றப்படுகின்றன எப்படி ஸ்தலம் என்பது தலம் என்பதோ அது போல அவன் ஸ்டேச^ன் என்பதை டேசன் என்கிறான். சிலர் இசுட்டேசனுக்கு என்றும் சொல்வர் (சு என்பது உகரம் மிகக்குறைந்து ஸ் என்பது போல ஒலிக்கும்). --செல்வா 22:18, 16 ஜூன் 2009 (UTC)

விக்சனரி[தொகு]

ஒரு சொல்(cryptography)லின் தமிழாக்கத்தை பார்க்க விக்சனரி சென்றேன். அதற்கு தொடர்பில்லாமல் ஒரு பொருள் இருக்கு. அது தமிழ் இணைய பல்கலைகழகத்திலிருந்து இறக்குமதி செய்தது போலிருக்கு http://ta.wiktionary.org/wiki/cryptography cryptography: மருத்துவம். நீர்ப்பை வரைவியல்

கிரிப்டாக்ரபி என்பது தகவலை ஒளித்து அனுப்புவதன் உபாயம். நீர்ப்பைக்கு தொடர்பற்றது. இதைப் போல் எவ்வளவு தவறுகள் உள்ளனவோ. அதை தமிழில் கிரிப்டாக்ரபி அல்லது தகவலொளியியல் எனலாம்--Ginger 16:02, 17 ஜூன் 2009 (UTC)

Ginger நீங்கள் சொன்னதை மாற்றி விட்டேன். விக்சனரிக்கு மென்மேலும் உங்கள் பங்களிப்பை அளியுங்கள்--பரிதிமதி

கமுக்கவியல், தகவல்மறைப்பியல் என்னும் பொருள்களை அங்கு இட்டுள்ளேன். தகவலொளியியல் என்பது குழப்பம் தரவல்லது. ஒளிவு என்பது மறைப்பு என்னும் பொருள் தந்தாலும் வெளிச்சம், ஒளிர்வு என்னும் பொருளோடு முரண்படும். எனவே தகவல்மறைப்பியல் என்று மாற்றியுள்ளேன்.--செல்வா 18:18, 17 ஜூன் 2009 (UTC)

சுட்டிக்காட்டியதற்கு நன்றி, ginger. விக்சனரியின் பல பக்கங்கள் தமிழ் இணையப் பல்கலை அகரமுதலியில் இருந்து எடுக்கப்பட்டவை. அவற்றிலும் சில பிழைகள் உள்ளன. உறுதியாக பிழை தான் எனத் தெரிந்து, சரியான சொல்லும் உறுதியாகத் தெரிந்தால், நீங்களே நேரடியாக மாற்றிவிடுங்கள். அல்லது, சொல்லின் பொருள் சரிபார்க்க வேண்டிய தேவை இருப்பின் {{சரிபார்} பக்கத்தின் மேல் இடுங்கள். பிறகு, உங்கள் கருத்தை அந்தந்த பேச்சுப் பக்கங்களிலேயே தெரிவித்து விடுங்கள். நன்றி--ரவி 18:40, 17 ஜூன் 2009 (UTC)

விக்கிப்பீடியா உரையாடல் ஒலிப்பதிவு[தொகு]

சூன் 13, 2009 அன்று வலைப்பதிவர்களுக்கு விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்திய உரையாடல் ஒலிப்பதிவு

தூய தமிழ் என்று கதைக்கும் சிலர் தூய தமிழில் ஆங்கிலம் கலாக்காமல் பேசாதது ஏனோ என்று தெரியவில்லை. "சோ" போடாமல் சோறு இறங்காதவர்கள் வாய்கிழிய பேசுகிறார்கள். . ஆங்கிலம் கலக்காமல் பேசத்தெரியாதவர்கள் தமிழை காக்க புறப்படுவதாக காட்டிக்கொள்வது கொடுமையிலும் கொடுமை. அட.. ஆமாம்.. சமசூகிறதம் மீது தானே உங்கள் வெறுப்பும், நச்சு உமிழும் செயலும். சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள் ஊருக்குத்தான் உபதேசம் என்று !!! −முன்நிற்கும் கருத்து 66.197.149.15 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.


ஒருவரின் தட்டச்சை வீணாக்காமல் பக்கங்களை திருத்த முடியுமா?[தொகு]

மேற்கூறிய கேள்விக்கு பதில் முடியும். இதுதான் எடிட்டிங், சீரமைப்பு. கட்டுரையாளர் அவர் மனநிலையில் உருவாக்குகின்றார். அந்த தட்டச்சில் சிலவற்றை மாற்றினாலே மாறிவிடும். நீக்கும் பொழுது சிலவற்றை நாமும் உள்ளிட்டால் கட்டுரை குறையாது வளர்ந்து கொண்டே இருக்கும். கட்டுரையை உருவாக்கியவருக்கும் ஒரு திருப்தி இருக்கும். நாம் துவங்கிய கட்டுரை நன்றாக வளருகின்றது என்ற மனநிலை உருவாகும். இதை சிலர் பின்பற்றுகின்றனர். பலர் பின்பற்றுவதில்லை. மாறாக குறை சொல்லுவதை தவிர்க்க வேண்டும். பெரும்பாலான பேச்சு பக்கத்திலும் இம்மாதிரி குறைகள்தான் சொல்லப்பட்டிருக்கின்றது. அதில் அவரே பங்கெடுத்து சீர்செய்ய முயற்சிக்கலாம் மேற்கோளுடன், சரியான முறைகளில். வேண்டுமென்றே.........உள்ளிடப்பட்டுள்ளது என்ற வாசகங்கள் முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டும்.


கட்டுரை என்பது குழந்தை அது வளருவதை காண அதை உருவாக்கியவருக்கும் சரி வாசிப்பவருக்கும் சரி ஆவல் மிகும். இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும் இது தகவ்ற் களஞ்சியம் சில சமயசார்பற்றவர்களுக்கும் அவர்கள் சமயத்தையும் குறிப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அது தவறில்லை. அது தகவல் அதற்குத்தான் தகவற் பெட்டி. அதில் இதைக் குறிப்பிடவேண்டும் இதைக் குறிப்பிடக்கூடாது என்றில்லை. ஒரு தளத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் அது இன்னொரு தளத்தில் தவறு என்று எப்படி ஆகும். இது குறித்து ஏதோவொரு மாநிலத்தில், அல்லது நாட்டில் இருப்பவருக்கு வசிப்பவருக்கு ஒரு போட்டித்தேர்வு எழுதும் ஒரு தமிழருக்கு தகவல் தேவைப்பட்டால் இதைப் பார்த்துக்கொள்ளலாம். ஒரு வரி நீக்கினால் நாம் குறைந்தது ஐந்து வரிகளாவது உள்ளிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நமக்கு நாமே விதித்துக் கொள்ளவேண்டும் (இது சாத்தியமா? என்பது வேறு விடயம்).


மேற்கோள் வேண்டும் என்று இடுவதும் மட்டும் நமது குறிக்கோள் அல்ல. அந்த மேற்கோளை நாமும் தேட முயற்சிக்க வேண்டும். அந்த மேற்கோள் கிடைக்கவில்லை. இது தேவையா? என்ற வினாவை எழுப்பலாம். குறைந்த பட்சம் உரையாடலில் நான் மேற்கோள் வேண்டும் என்று இட்டுள்ளேன் நானும் தேடுகின்றேன். என்று காலவரையும் நிரணயித்து குறிப்பிடலாம். ஒரு நபரை பற்றி கட்டுரை தனியாக எழுத வேண்டுமென்றால் வெகுவிரைவில் எழுதிமுடித்து விடுவேன் இது அனைவராலும் முடியும். இங்கு பலவற்றை பார்த்து நீக்கி எழுதவேண்டியுள்ளது. ஆகையால் அனைவருமே கட்டப்படுகின்றார்கள்,........... இதை நினைவில் நிறுத்தி............ நாமும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். தனித்து யாரையும் குறிப்பிடுவன அல்ல.--செல்வம் தமிழ் 05:35, 24 ஜூன் 2009 (UTC)

திருத்தங்களுக்கான உதாரணம்[தொகு]

ஒருவர் சுமார் 200 திருத்தங்கள் உள்ள கட்டுரையில் ஒருவர் முயன்றால் அவரால் 50 திருத்தங்களை மேற்கொள்ள முடியும் அதில் 10 திருத்தங்கள் மீண்டும் திருத்தக்கூடியவையாக அல்லது பொருந்தாதவைவாக கூட இருக்கும் அடுத்து வருவர் (கட்டுரையாளராக் கூட இருக்கலாம்)மீதமுள்ள 150+10 திருத்தங்களில் ஒரு 75 திருத்தங்களை மேற்கொள்வார். அதிலும் 10, 20 திருத்தங்கள் பொருந்தாதவையாக இருக்கும். அடுத்து வருபவர் 100 இலிருந்து 110 வரை மேற்கொண்டு கடைசியில் 20 திருத்தங்களை பொருந்தாதவையாக நிறுத்துவார் அதன்பின் அதை இறுதி திருத்தமாக மேற்கொண்டு கட்டுரையை முழுமையான கட்டூரையாக ஆக்கிவிடலாம். இதனிடையே உள்ளீடும் செய்யலாம். அதுவும் திருத்தப்படலாம். நாம் திருத்தியதை அவர் திருத்திவிட்டாரே என்று எண்ணத் தேவையில்லை. ஒவ்வொருவருக்கு ஒருசில விடயங்களை மட்டுமே கண்ணில் படும் (அவர்கள் கண்ணில் அந்த கட்டூரை மட்டுமே இருப்பதால்-இதுவும் தியரி). பிழைதிருத்துநர் முறையில் பின்பற்றப்படும் முறை (தியரி) எழுதியவருக்கே எல்லா பிழையும் கண்ணில் படாது. இது அனைத்து கட்டுரையாளருக்கும் பொருந்தும். ஆனால் இது தவறுதலாக பின்பற்றல் கூடாது (இது எழுத்திற்கு செய்யும் துரோகம் எனக் கருதப்படுகின்றது).

பத்திரிகை துறையில் பின்பற்றப்படும் முறை அவர் திருத்தியதை வேறொருவர்,மற்றொருவர், என்று நான்கு முறைப் போய் இறுதி செய்யப்படும். சில முக்கிய கட்டுரைகள் ஐந்து ஆறு முறை கூட போகும். அதன்பின்னே அச்சில் ஏற்றப்படும். செய்தி ஆசிரியர் கட்டுரை மட்டுமே எழுதுவார், மொழிபெயர்ப்பார். அவர் திருத்தமாட்டார், திருத்தக்கூடாது தலையங்கம் உட்பட இங்கு அப்படி பின்பற்றத்தேவையில்லை, அது பணி. சில நேரங்களில் எந்திரத்தை நிறுத்திக்கூட பிழையை திருத்தி மீண்டும் அச்சிடுவர். அதுவரை அச்சிட்டவை வீண்தான்

(ஒரளவிற்க்கு பின்பற்றினால் போதும். ஏனென்றால் பத்திரிகை துறையில் ஏதாவது பிரச்சினை என்றால் பிழைதிருத்துநர் மேல் பழியைப் போடுவதற்காக கையாளும் முறை. (அப்படிதான் எடுத்துக் கொள்ளவேண்டும், நான் சந்தித்தவை-உண்மையில் கட்டுபாடுக்காக அதேப் பணியை மேற்கொள்வதால்) பல நேரங்களில் செய்தி ஆசிரியர்கள் தன்னிச்சையாக பிழையைத் திருத்தி சர்ச்சை வரும்பொழுது பிழைதிருத்துநர் மேல் பழியை போட்டுவிடுவார்கள். பிழைதிருத்துநர்களுக்கு மட்டுமே திருத்தும் உரிமை உண்டு. பத்திரிகைத் துறையில் மிக கடுமையாக பின்பற்றப்படும் முறை.)

கட்டுரை புத்தகங்களும் அணிந்துரைக்காக அப்படித்தான அனுப்பபடுகின்றன. அவர்கள் கொடுக்கப்படும் அறிவுரையின் படி சிலநேரம் கட்டுரையாளர் மாற்றுகின்றார். அதுமட்டுமில்லாமல் நூலகத்துக்கு இலவசமாக புத்தகங்களை வழங்க வேண்டும் எந்த புத்தகம் யார் எழுதினாலும். இது சட்டம். (தமிழகத்தில் இப்படி பிற நாடுகளில் மாநிலங்களில் தெரியாது) அந்த புத்தகங்களை நூலகர் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதன்பின் மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். (அது வாசகர் பயன்படுத்தும் கால குறிப்பில் இருந்து தெரிந்து கொள்வர்). அது மக்களால் விரும்ப படவில்லையெனில் அந்த புத்தகம் நூலகத்தில் இருந்து நீக்கப்பட்டு கிடங்கில் வைக்கப்படும். மக்கள் கருத்துக்கேற்ப அரசுக்கு நூலகமும் பரிந்துரைக்கும். (தடை செய்ய வேண்டுமா? வேண்டாமா?)

மேற்கூறியவை இங்கு பின்பற்றலுக்கான உதாரணத்துக்காக குறிப்பிட்டேன். (வழக்கமான எழுத்துப்பிழைகள், வார்த்தைப்பிழைகள், முரண்பாடான வார்த்தைமாற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும், கருத்து முரண்பாடுகளுக்கு, இதர எழுத்து மாற்றங்களுக்கு (அவைகுறித்து தீர்வு வரவில்லை) பொருந்தாது) இதனால் பலருக்கும் முரண்பாடு வராது என்பதால் குறிப்பிட்டேன். தவறுதலாக எடுத்துக்கொள்ள வேண்டாம். (விக்கி பட்டறைகளில் இது பற்றி வாதம் வந்தது அதற்கும் சேர்த்து.....) நன்றி--செல்வம் தமிழ் 08:36, 24 ஜூன் 2009 (UTC)


உங்கள் கருத்துக்களுக்கு நன்றி செல்வன். பத்திரிகை, இதழ். நூல் ஆகிய வடிவங்களில் இருந்து விக்கி குறிப்பிடத்தக்க வழிகளில் வேறுபட்டது. இங்கு நான் தொடர்ந்து ஒரு கட்டுரையை மேம்படுத்த முடியும். எனினும் பல கட்டுரைகள் (சர்சைக்குரிய கட்டுரைகளைத் தவிர்த்து) ஒரு முதிர்ச்சி நிலையை அடைய முடியும். கட்டுரையின் தோற்றப்பாட்டிலும் அமைப்பிலும் சீரான முறையைப் பின்பற்றுததல் நன்று. எ.கா முதல் வசனத்தில் அல்லது பந்தியில் வரைவிலக்கணத்தைத் தருதல். --Natkeeran 21:16, 24 ஜூன் 2009 (UTC)

குங்குமம் இதழில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய செய்தி[தொகு]

சூலை 2, 2009 குங்குமம் இதழில் பக்கம் 24-26ல் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய செய்தி வந்துள்ளது. செய்திப் படம்1, செய்திப் படம்2. விக்கிப்பீடியா:செய்திக்_குறிப்பு பக்கத்தையே அனுப்பி வைத்திருந்தேன். எனினும் பல பெயர்கள் விடுபட்டுள்ளன. சென்னை நிகழ்வுக்கு வந்தவர்கள் தவிர பிறர் படங்களை இடம்பெற வைக்க இயலவில்லை. இதற்கு வருந்துகிறேன். அடுத்தடுத்த ஊடகத் தொடர்புகளில் இயன்ற அளவு அனைவரின் பெயர்களையும் குறிப்பிட வேண்டி முயல்வேன். --ரவி 14:34, 24 ஜூன் 2009 (UTC)

ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள்[தொகு]

பூவுலகு போன்ற துறை சார் இதழ்களில் தமிழ் விக்கி கட்டுரைகளைப் பயன்படுத்த / வெளியிடக் கேட்டுப் பார்க்கலாமா? பல அச்சு இதழ்களின் மூலம் புதிய துறை சார் ஆர்வலர்களைச் சென்று அடைவதின் மூலம் புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க இயலலாம். இது பற்றிய விக்கிப்பீடியா திட்டப் பக்கம் - விக்கிப்பீடியா:அச்சு இதழ்களில் விக்கிப்பீடியா கட்டுரைகள் --ரவி 08:25, 25 ஜூன் 2009 (UTC)

a comptetive translation software for tamil wikipedia[தொகு]

Dheeraj kumar என்ற மாணவர் எனக்கு ஒரு மடல் அனுப்பி இருந்தார். உங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். விக்கிப்பீடியாவைக் காட்டிலும் விக்சனரிக்கு அல்லது விக்கிக்கு வெளியேயான ஒரு தமிழ்த் திட்டத்துக்கு இம்மென்பொருள் கூடுதலாக உதவ இயலும் என்று எண்ணுகிறேன். Google Image labeler போன்ற தளங்கள் கிட்டத்தட்ட இதே போன்ற செயல்பாட்டைக் கொண்டுள்ளன. --ரவி 03:12, 26 ஜூன் 2009 (UTC)

I am Dheeraj Kumar, a computer science student from Chennai. I'm interested in developing the tamil Wikipedia, and I propose a new method to do it. The problem we face can be summarized as:

  1. Normal people do not write entire articles, containing hundreds/thousands of words by themselves.
  2. They are not interested and are lazy.
  3. They consider it a waste of time.
  4. They do not get anything in return.

So, I suggest translating the english Wikipedia to tamil. However, the problems still exist. I came to realize a way to rope in more people for translation, which solves all the problems we face.

  1. Most people use computers at home or work.
  2. Consider a small software that resides in your system tray, and whenever you are free, or taking a break, the software pops up.
  3. The software displays one single sentence in english, taken from english Wikipedia.
  4. You can translate that single sentence to tamil. You don't have to learn tamil typing. Rather, you just type how you would pronounce it in tamil.
  5. Example - typing "neenga" will be converted to the tamil alphabet automatically.
  6. This would be sent to an internet server.
  7. Each english sentence is translated by (say) 5 people independantly. This is to prevent fake translations.
  8. Whatever words are found in a majority of translations, they are considered for final translation.
  9. Example - if "city" is translated by 4 people as "nagaram" and 1 person as "oor" then "nagaram" is taken as the tamil translation, because of majority.
  10. When all sentences in an article are translated, it is ready for adding to the tamil Wikipedia. It can be proofread entirely, by an editor before adding.

I also add a points system to the software.

  1. Every user registers for free, and logs into the software.
  2. For each word in his translation that is added to the final article, he gets 1 point.
  3. The no. of points each user has can be displayed on a website, and a ranking list can be maintained.
  4. That would encourage more users to participate in this translation project, so that they can also maintain a rank.
  5. Statistics can be calculated for each user, like what percentage of words he translated correctly, etc. That can also demostrate a person's tamil knowledge.
  6. Sponsors can be roped in, who can award small prizes and certificates to top 10 contributors.

The advantages of this system are:

  1. Anyone can do it in free time - students, IT workers, call centre employees, retired people, housewives...
  2. They translate one sentence - not an entire article.
  3. They will do it, because of the competitive model involved. They spend time because they want to contribute more than others.
  4. They can get prizes and certificates for contributions.

The competitive model is the key to involving a large no. of people in translation. Here are some examples of people spending time doing practically nothing for the sake of competition:

  1. WhatPulse (www.whatpulse.org) It ranks people for the no. of keys they press and no. of mouse clicks they make. Highly popular.
  2. Mafia Wars, Vampire Wars, etc... (www.facebook.com) It ranks people for earning maximum cash in the online game. People are addicted to it.
  3. SETI @ Home, Mersenne Number Search, and many more...

This is not an easy project, but I am a good programmer, and can contribute to it. If you like this idea, we can rope in other students and software professionals who would be willing to help.


ஒவ்வொரு வசனங்களாக மொழி பெயர்க்கக் கேட்டு, யார் கூட பங்களிக்கிறார்களோ, அவர்களுக்கு பரிசில்கள் என்பது அடிப்படை எண்ணக்கரு என்று கொள்கிறேன். புது அணுகுமுறை. முடிந்தால் நிச்சியம் முயன்று பாக்கலாம். எனினும் ஒர் அடிப்படை நடைமுறைச் சிக்கல்கலை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒரு கட்டுரையை ஒவ்வொரு வசனமாக மொழி பெயர்த்தல் சிரமமானது. ஒவ்வொரு வசனமும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஒரு கருத்துருவை உருவாக்கும். ஒவ்வொன்றையும் வெவ்வேறு நபர்கள் மொழி பெயர்க்கும் போது அந்த கருத்துரு எந்தளவு கூட்டாக வெளிப்படும் என்பது கேள்விக்கு உரியது. ஆனால் இதுவரை இவ்வாறு யாரு செய்து பாக்கவில்லை, எனவே முயன்று பாக்கலாம். மேலும், தமிழ் விக்கிப்பீடியா எவ்வாறு ரேரடியாக இங்கு உவத முடியும் என்று தெரியவில்லை. --Natkeeran 00:59, 27 ஜூன் 2009 (UTC)
முயன்று பார்க்கலாம். தவறே இல்லை. ஆனால் தமிழில் ஆக்குவது வெறும் மொழி பெயர்ப்பு இல்லை என்றும் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் பல கோணங்களிலும் ஆக்கங்கள் நிகழட்டும். எதுவும் செய்து பார்த்தால்தான் நன்மை தீமை, எது இயலும் எது இயலாது என்று விளங்கும். ஒரு வரி என்பதை விட 2-3 வரிகள் (முழு சொற்றொடர்கள்) என்று கொண்டால் இன்னும் இணங்கி வரக்கூடும்.--செல்வா 02:54, 27 ஜூன் 2009 (UTC)
நற்கீரனுடைய எண்ணம் தான் எனக்கும் ஏற்பட்டது. ரவி எடுத்துக் காட்டியது போல் இது வேறு விக்கித் திட்டங்களுக்குக் கூடுதல் பொருத்தமாக இருக்கக்கூடும். ஒவ்வொரு சொல்லுக்கும் பெரும்பான்மை அடிப்படையில் பொருத்தப்பாடு கண்டுபிடிப்பது, கட்டுரையின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கான நடைமுறைகள் போன்றவற்றுக்கு பெருமளவு நேரம் செலவு செய்யக்கூடிய பயனர்களின் தேவையும் அதிகரிக்கும். மேலும் தற்போதைய நிலையில் விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கைகளும், அதன் மென்பொருளும் இந்த நடைமுறைக்கு இடமளிக்காது. எனவே இதனை விக்கிப்பீடியாவுக்கு வெளியில் வைத்துத்தான் செய்யவேண்டியிருக்கும். இது ஒரு புதிய எண்ணக்கரு. சோதனை செய்து பார்க்கலாம். எப்படி என்பது அடுத்த கேள்வி? முதலில் பல்வேறு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்த எண்ணக்கருவை மேலும் மேம்படுத்த வேண்டும். தற்போதைக்கு, தீரஜ் குமாரை இது விடயத்தில் ஊக்கப்படுத்துவதற்காக இதனை மேலும் மேம்படுத்துவது குறித்த ஆலோசனைகளை விக்கிப்பீடியாவின் பயனர்கள் அவருக்கு வழங்கலாம். மயூரநாதன் 03:50, 27 ஜூன் 2009 (UTC)
இத்திட்டத்தின் அடிப்படை எண்ணம் பரவலான பலனளிக்கக் கூடியது. பெரிதும் வரவேற்கிறேன். அதிலும் ஒருவர் தானே நிரல் எழுதவும் முன்வந்துள்ளதால் கட்டாயம் அவரை ஊக்குவிக்க வேண்டும். அடுத்த தலைமுறை நிரலாக்கர்கள் வந்தால் தான் தொடர்ச்சி பேணப்படும். விக்கி கட்டுரைகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் நீங்கள் சுட்டியுள்ள நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன என்பதை உணர்கிறேன். முதலில் மீடியாவிக்கிப் பெயர்வெளியில் உள்ள செய்திகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாமா? (அடுத்தது தமிழ் விக்சனரியில் முயன்று பார்க்கலாம். மற்ற தன்னார்வ மொழிபெயர்ப்புகளில் உள்ள குறைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக ஆங்கிலத்திலிருந்து இருக்கமாக மொழிபெயர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தெரிவு செய்யப்படும் மொழிபெயர்ப்புகளை ஒருமுறை மெய்ப்பார்த்துவிட்டு இற்றைப்படுத்தலாம். விக்கிப்பீடியாவைப் பொருத்த மட்டில் மொழிபெயர்ப்பு என்றில்லாமல் வேறு பணிகளுக்கு இது போன்ற ஒருமுறையைக் கையாள முடியுமா எனப் பார்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 09:55, 27 ஜூன் 2009 (UTC)
இந்த திட்டத்தை நாம் கண்டிப்பாக வரவேற்க வேண்டும் :) . தமிழுக்காக ஒருவர் தானாக நிரல் எழுதவந்திருப்பது மிகவும் பாரட்டதக்கது. நக்கீறன் மற்றும் மயூரநாதன் சொன்னது போல் த வியில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால், துணை திட்டங்களில் முயற்சி செய்யலாம், அதிலும் விக்கி இனங்கள் இன்னும் தமிழில் ஆரம்பிக்கவே இல்லை என நினைகிறேன். இந்த திட்டத்தில் ஒரு இனத்தின் வகைப்பாட்டியல் விவரம் மற்றும் அதன் படமும் இருக்கும் (உதாரணம் செந்நாயின் பக்கம் http://species.wikimedia.org/wiki/Cuon_alpinus ). இதில் உள்ள ஆங்கில விவரத்தை தமிழில் மொழி பெயர்க்கலாம்/தமிழ் படுத்தலாம், ஆதாவது Mammalia என்பதை மேமேலியே என்றோ அல்லது பாலூட்டிகள் என்றோ ஆக்கலாம். இதன் முதல் படியாக Mammalia என்பதை மேமேலியே என்று மாற்றினால் பிறகு வேறொரு நிரல் மூலம் மேமேலியே என்பதை பாலூட்டிகள் என்று மாற்ற வேண்டும். இங்கு இலக்கண பிழைகளோ அல்லது வேறு மொழி சார்ந்த பிரச்சனைகளோ இருப்பதாக எனக்கு தெரியவில்லை. முயற்சிப்போம்:)--கார்த்திக் 13:14, 27 ஜூன் 2009 (UTC)
[தலைப்பில் இருந்து வேறான கருத்து] கார்த்திக், முயல்வோம் என்று கூறுங்கள் அல்லது முயற்சி செய்வோம் என்று கூறுங்கள். மிக மலிந்து வரும் பிழை இந்த "முயற்சித்தல்". இங்காவது சரியான பயன்பாட்டைக் கடைபிடிப்போம். நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று எண்ணிக் கூறுகின்றேன். இவ்வேண்டுகோள் எல்லோருக்கும்தான். நன்றி.--செல்வா 14:13, 27 ஜூன் 2009 (UTC)
இனிமேல் இப்படியான பயன்பாட்டை தவிர்க்கிறேன் செல்வா. :( முன்பே பல இடங்களில் நான் இந்தகைய பிழைகளை செய்வதாக சுந்தர் கூறினார், கண்டிப்பாக இந்த மாதிரியான பிழைகளை திருத்திக் கொள்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி செல்வா :)--கார்த்திக் 18:06, 27 ஜூன் 2009 (UTC)


கார்த்திக் சுட்டியது ஒன்றைப் பற்றிய குறிப்பு. Mammalia என்பதை மேமேலியே என்று எழுத்துப்பெயர்ப்புச் செய்யலாம். ஆனால் அது மொழிபெயர்ப்போ அல்லது கலைச்சொல்லாக்கமோ அல்ல. இதைப் பற்றி தெளிவாக இருக்க வேண்டும் இல்லை என்றால் மேமேலியே என்று மேற்கோள் காட்ட தலைப்படுவர். அத்தோடு தமிழ்99 தட்டச்சுமுறையையும் ஒரு தெரிவாக அமைக்க வேண்டும் (இந்த திட்டம் நிறைவேற்றப்படுவதாக இருந்தால்).

--Natkeeran 21:01, 27 ஜூன் 2009 (UTC)

கார்த்திக், நீங்கள் சொன்ன ப்ரச்சனைக்கு என் சார்பில் ஒரு யோசனை: இந்த திட்டத்தில் பங்கேர்க்கும் ஒவ்வொருவரும் அவர்கள் சார்ந்த துறையில் மொழிபெயர்ப்பு செய்யலாம். உதாரணமாக, நோய்கள் பற்றி மருத்துவ வல்லுனர்கள் எழுதலாம், கணினி பற்றி அதை சார்ந்தவர்கள் எழுதலாம், மேலும், Mammalia பற்றி தெரிந்தவர்கள் அதை எழுதலாம்.

நடைமுறைச் சிக்கல்கள் பற்றி, பங்கேர்ப்பவர்களின் மொழிபெயர்ப்பு நேரடியாக விக்கிபீடியாவில் இடம்பெறாது. ஒரு பத்திரிக்கையை போல, நிருபர்களின் எழுத்துக்கள் எடிட்டர்களால் திருத்தப்பட்டு அதற்கு பிறகே வெளிவரும். ஒரு article முழுவதும் பங்கேர்ப்பவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டால், உங்களை போல ஒரு எடிட்டர் அதை முழுதாக பிழைதிருத்தம் செய்து, ஒவ்வொரு வரியும் அடுத்ததுடன் இணையும்படி சிறு திருத்தங்கள் செய்து, அதன் பின் விக்கிபீடியாவில் அதை ஒரு கருத்துருவாக்கலாம். எனக்கு தோன்றுகின்ற இன்னொரு யோசனை என்னவென்றால், ஒவ்வொரு வரியாக ஒரு முழு சொட்ற்றொடர் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பிறகு, அதை பங்கேர்ப்பவர்கள் முழுதாக பிழைதிருத்தலாம். செய்ய நேரம் இருப்பவர்கள் சொட்ற்றொடர்களை பிழைதிருத்தலாம், நேரம் இல்லாதவர்கள் வரிகளை மொழிபெயர்க்கலாம்.


நல்ல எண்ணக்கரு. தானே நிரலெழுதவும் முன்வந்திருப்பதால் அவரை ஊக்குவிக்கலாம். எழுதப்படும் மென்பொருள் firefox இற்கான நீட்சியாக அமைந்தால் எல்லா இயங்குதளங்களிலும் பிரசிச்னை இன்றிப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும் செல்வா குறிப்பிட்டதுபோல மொழிபெயர்ப்பு சற்றே மேம்பாடான விசயமே. இருப்பினும் நாம் முயன்று பார்க்கலாம்.
  • 1. பயனர் மொழிபெயர்க்க ஆசைப்படும் விடயப்பரப்புக்களை, பதிவு செய்யும்போது அவரே தெரிவு செய்துகொள்ளக்கூடியவண்ணம் அமைத்துக்கொள்வது சிறப்பானது.
  • 2. தேவைப்படும்போது குறித்த வசனம் உள்ள உரைப்பகுதியை முழுமையாகப் பார்க்கும் வசதி தேவை.
  • 3. மொழிபெயர்க்கும் ஒவ்வொரு சொல்லும் CC உரிமத்தின் படி விநியோகிக்கப்படவேண்டும்.
  • 4. விக்கிக்கு வெளியான திட்டமாக இதனை தனித்தே செயற்படுத்த வேண்டும்.
  • 5. ஏற்றுக்கொள்ளப்படும் வார்த்தை எண்ணிக்கைக்கேற்ப பரிசில்களுக்குப்பதிலக கொடுப்பனவுகள் செய்யக்கூடியதாய் இருந்தால் சிறப்பு. கொடுப்பனவை வருமானத்துக்குத்தக்கபடி அமைத்துக்கொள்ளலாம். வருமானத்தை கூகிள் விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் பெறலாம். (வார்த்தையோடு கூகிள் விளம்பரங்களை அனுப்ப முடியும்)
  • 6. விக்கிபீடியா மட்டுமென்றில்லாமல் தமிழுக்கு தேவைப்படும் பல்வேறு முக்கிய விடயதானங்களையும் கூட இவ்வாறு மொழிபெயர்க்கலாம். வெற்றியளிக்கும் பட்சத்தில் இது வணிக ரீதியாகக்கூட வளர்த்தெடுக்கப்படக்கூடியது.
  • 7. உண்மையில் இது தமிழுக்கு மொழிபெயர்ப்பு மென்பொருள் இல்லாத குறையை வேறொரு கோணத்தில் தீர்க்கும் முயற்சி.

கட்டாயம் முயற்சித்துப்பார்க்க வேண்டும்.


உங்கள் எல்லாருடைய ஊக்கபடுத்தும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி, உங்கள் முடிவுக்கு காத்திருப்பேன்.--Dheeraj Kumar 07:03, 28 ஜூன் 2009 (UTC)

முதற் பக்கம் இன்றைப்படுத்தல், பிறர் பொறுப்பெடுத்தல்[தொகு]

பல மாதங்களாக முதற் பக்க கட்டுரைகள், உங்களுக்குத் தெரியுமா, சிறப்புப் படம் போன்றவற்றை நானே இன்றைப்படுத்தி வந்திருக்கிறேன். பலரும் கருத்துக் கூறக் கூடியவாறு அமைக்கப்பட்டிருந்ததலும் அது நடைமுறையில் அவ்வளவு இல்லை. பிற நிர்வாகிகள்/பயனர்கள் இதை பொறுப்புடன் செய்ய முன்வந்தால், நான் இடம் தர விரும்புகிறேன் (அடுத்த கிழமையில் இருந்து !). ஒருவரே தொடந்து செய்தால் தெரிவுகளில் பல்வகைத்தன்மையை குறையும். அத்தோடு தொலைநோக்கிலும் இந்த முறை சரிவராது. குறைந்தது ஒரு சுழற்சி முறை நன்று. மிக்க நன்றி. --Natkeeran 00:16, 28 ஜூன் 2009 (UTC)

நற்கீரன், முதற்பக்க இற்றைப்படுத்தல் மிகவும் சிரமமான பணி. அதை மிகச் சிறப்பாக ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறீர்கள். நன்றியும் பாராட்டுகளும். உங்கள் பணிச்சுமையைக் குறைக்கவும் வேறு விக்கி பணிகளில் உங்களை ஈடுபடச் செய்வதற்காகவும் இதை ஆள் மாற்றி மாற்றித் தான் செய்ய வேண்டும். தற்போது கார்த்திக் பாலா முன்வந்திருக்கிறார். அவர் களைக்கும் போது நான் எடுத்துக் கொள்கிறேன் :) கார்த்திக்கு ஒரே ஒரு வேண்டுகோள்: முதற்பக்க கட்டுரைகளை நிறைய பேர் பார்ப்பார்கள் என்பதால், அவற்றைக் காட்சிப்படுத்தும் முன் ஒரு முறை உரை திருத்தி விடுவது நல்லது. அல்லது, காட்சிப்படுத்திய உடன் மற்ற பங்களிப்பாளர்கள் விரைந்து உரை திருத்த உதவ வேண்டும்--ரவி 04:45, 28 ஜூன் 2009 (UTC)
நற்கீரன் உங்கள் பணி கட்டாயம் பாராட்டப்பட வேண்டியதே. முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும் சிறப்புப் படம் பகுதியை நான் பொறுபேற்கிறேன்.--Terrance \பேச்சு 00:33, 1 ஜூலை 2009 (UTC)

சாதிப் பெயர்கள் மற்றும் பட்டப் பெயர்கள்[தொகு]

தலைப்புகளில் சாதிப்பெயர்கள் இருக்கின்றது. பலருக்கு இல்லை இது குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டுமா? அப்படியென்றால் அனைவருக்கும் குறிப்பிடலாமே? இதுவும் தவறில்லை? பட்டப் பெயர்களும் குறிப்பிட்டிருக்கலாமே இதுவும் தவறில்லை? 3 வருடங்களாக அப்படியே உள்ளது. இது வேறுபாட்டுணர்வை ஏற்படுத்தும் என்பது எப்படி நமக்குத் தெரியாமல் போனது? இப்படி போட்டுவிட்டு மற்றவர்களை எப்படி வலியுறுத்திச் சொல்லமுடியும். இதற்கு உடனே ஆவண செய்யுமாறு வேண்டுகின்றேன். இது இங்கே இல்லை என்று பெருமையடைந்திருந்தேன். இப்பொழுது இது அதிர்ச்சியாக உள்ளது.--செல்வம் தமிழ் 05:50, 28 ஜூன் 2009 (UTC)

செல்வம், சிலரது பெயர்கள் அவர்கள் சாதியுடன் கூடியே அறியப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, உ. வே. சாமிநாதையர். இத்தகையோர் பெயரே அப்படியே எழுதப்படுகிறது. சாதியால் அறியப்படாதோர் பெயரையும் வேண்டுமென்றே அப்படி திணித்து எழுதுவது இல்லை. சாதிப்பெயரை விடுத்து எழுத வேண்டும் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். இந்த சாதிப்பெயர் ஒரு வரலாற்றுக் குறிப்பு என்பதால் அதை அப்படியே பதிவு செய்ய வேண்டும், விக்கிப்பீடியா ஒரு சமூக சீர்திருத்தக் களம் அல்ல என்று இன்னொரு சாரார் கருதுகின்றனர். இது வரை இது குறித்த தமிழ் விக்கி கொள்கை இல்லை. மற்ற பங்களிப்பாளர்கள் கருத்தை வரவேற்கிறேன்--ரவி 06:19, 28 ஜூன் 2009 (UTC)

நீங்கள் சொல்வது உண்மைதான் இதை காரணமாக வைத்து அனைவரையும் ஒன்று படுத்த முடியாது. உ.வே.சாமிநாதையர் என்ற தலைப்பை உ.வே.சா என்று மாற்றி எழுதி கட்டுரையாக்கியுள்ளனர். இது மாதிரி நிறைய கட்டுரைகள் மாற்றப்பட்டுள்ளன. இதுவே அனைவரையும் ஒன்றுபடுத்த முடியும். இங்கேயும் உ.வே.சா என்று மாற்றாலாம். அல்லது உ.வே.சாமிநாதன் என்று மாற்றாலாம். சாமிநாதர் என்றும் மாற்றி எழுதி சர்ச்சை எழாமல் பார்த்துக்கொள்ளலாம். நன்றி--செல்வம் தமிழ் 07:56, 28 ஜூன் 2009 (UTC)

கண்டிப்பாக உ. வே. சா என்பது போல் முதன்மைத் தலைப்பில் கட்டுரையை வெறும் பெயர்ச்சுருக்கங்களாக இட இயலாது. முதற்பெயரை மட்டுமாவது விரித்து எழுத வேண்டும். இது கலைக்களஞ்சிய வழமை. உ. வே. சாமிநாதன் அல்லது உ. வே. சாமிநாதர் என்று எழுதலாம். ஆனால், இது சர்ச்சையைக் கிளப்புவது நிச்சயம். அவரை அவமானப்படுத்தி விட்டதாக கூறுவர் (இத்தனை ஆண்டு விக்கி அனுபவத்தில் கற்றுக் கொண்டது ;) ). மேலும் மணிசங்கர் ஐயர் போன்றோரில் உள்ள சாதிப்பெயர் கிட்டத்தட்ட அவர்களது அதிகாரப்பூர்வ பெயராக இருக்கிறது. சர்மா, பட்டேல் போன்று இங்கு இது ஒரு இரண்டாவது பெயர் (surname). ஏகப்பட்ட வட நாட்டவர் பெயர்களின் இரண்டாம் பெயர் மூலம் சாதி அடையாளத்தை அப்படியே தான் விட்டுள்ளோம். நாமாக யாருக்கும் சாதிப் பெயர் இட வேண்டாம். அவர்களாக இட்டுக் கொண்டால் அப்படியே விட்டு விடுவது நடைமுறைக்கு ஒத்து வரும் முறையாக இருக்கும்--ரவி 09:44, 28 ஜூன் 2009 (UTC)

ஒரு கட்டுரைத் தலைப்பை பார்த்துதான் சாதிப்பெயரே இடுகின்றார்கள். இ.பத்மாநாபன்....., பெரியார்...... எனக்கு வேண்டியவர்..... வேண்டாவதவர்..... ஒரளவுக்கு கட்டுப்பாடு இருக்கவேண்டும்.......--செல்வம் தமிழ் 13:54, 28 ஜூன் 2009 (UTC)

(தலைப்பில்) சாதிப் பெயர்களை விடுத்து எழுதுவதில் பெரிய சிக்கல் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. காட்டாக வ.உ.சி. பெயரில் அமைந்த மாவட்டம் (இப்போதைய தூத்துக்குடி), கல்லூரி என எல்லாம் வ.உ.சிதம்பரனார் மாவட்டம் என்றே அழைக்கப்படுகின்றன. -- சுந்தர் \பேச்சு 08:30, 10 ஜூலை 2009 (UTC)

தீக்கதிர் இதழில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்[தொகு]

சூன் 28, 2009 தீக்கதிர் நாளிதழுடன் வரும் வண்ணக்கதிர் நூலில் பக்கம் 4,5ல் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகக் கட்டுரை வந்துள்ளது. நாளை ஒளிவருடி பதிவேற்றுகிறேன்.--ரவி 06:21, 28 ஜூன் 2009 (UTC)

தமிழ் விக்கி பரவலாக அறியப்பட நீங்கள் எடுத்து வரும் முயற்சிகளுக்குப் பாராட்டும் நன்றியும்.--சிவக்குமார் \பேச்சு 22:10, 30 ஜூன் 2009 (UTC)

நன்றி, சிவா--ரவி 04:36, 1 ஜூலை 2009 (UTC)

விருதெழுத்து[தொகு]

தமிழ் விக்கிபீடியாவிற்கு விருதெழுத்தாக (motto) “எழுதியது கைம்மண் அளவு, எழுதாதது உலகளவு” என்பதை பரிந்துரைக்கிரேன். அதை `கட்டற்ற கலைக்களஞ்சியம்’ கீழ் வைக்கலாம்.--Ginger 11:58, 29 ஜூன் 2009 (UTC)

இதை இணைப்பது நல்லது போலதான் தெரிகிறது. எப்படி இணைப்பது எங்கே இணைப்பது பற்றி தெரியவில்லை.--Terrance \பேச்சு 00:27, 1 ஜூலை 2009 (UTC)
இது போன்று பிற விக்கிமீடியா திட்டம் எதிலும் வழக்கமுண்டா?--ரவி 04:36, 1 ஜூலை 2009 (UTC)

தவறு[தொகு]

வைத்தீசுவரன் கோயில் கட்டுரையின் முக்கால் பகுதி எழுதியப் பிறகு அதை ஒரு மூன்று வரிக்கட்டுரையுடன் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடாமல் இணைப்பது தவிர்க்கப்படவேண்டுகிறேன். தேவையென்றால் மூன்று வரிக்கட்டுரையை நீக்கியிருக்கலாமே?. கனக் வழக்கமாக குறிப்பிடுபவார் ஏன் குறிப்பிடவில்லை என்றுத் தெரியவில்லை. ஆனால் கோபி குறிப்பிட்டிருக்க வேண்டும் மிக வருத்தத்திற்குரியது.--செல்வம் தமிழ் 17:12, 30 ஜூன் 2009 (UTC)

செல்வம் தமிழ், மூன்று வரிக் கட்டுரை என்றாலும் ஏற்கனவே உள்ள கட்டுரையில் இருந்து தொடர்வதே விக்கிப்பீடியா கொள்கை. தவறுதலாக வேறொரு கட்டுரை ஆக்கப்பட்டிருந்தால் அதனை முதலாவது கட்டுரையுடன் (பழைய வரலாறுகளுடன்) இணைப்பதே முறை. அந்த வகையில் கோபி அதனை இணைத்திருந்தார். இரு கட்டுரைகளை வரலாறுகளுடன் எப்படி முறையாக இணைப்பது என்பதை நான் சில நாட்களுக்கு முன்னர் தான் கற்றுக் கொண்டேன். அதன் படி சில கட்டுரைகளை இணைத்து வருகிறேன். நீங்கள் குறிப்பிட்ட கட்டுரை ஏற்கனவே வேறு பெயரில் இருந்தது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் இணைப்பு வார்ப்புருவை தந்திருப்பேன்.--Kanags \பேச்சு 21:27, 30 ஜூன் 2009 (UTC)
இதே தவறுதனை நான் இசுலாவியர் என்னும் கட்டுரை எழுதும்பொழுது செய்திருக்கின்றேன். யாரேனும் வரலாற்றை இணைத்து சிலாவிக் மக்கள் என்னும் கட்டுரையுடன் இணைக்க வேண்டுகிறேன். --செல்வா 23:37, 30 ஜூன் 2009 (UTC)

சார் சார் இதற்கெல்லாம் விளக்கம் வேண்டாம் சார். இது பண்பாடு சம்பந்தபட்ட விடயம். நான் செய்தாலும் தவறுதான். நீங்கள் கேட்டிருந்தால் நான் கொடுத்திருக்கும் பதில் சார் வருந்துகின்றேன். என்ற மதில் மட்டும் தான் எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருக்கிருக்கிறீர்கள் இந்த பதில் தெரியாதா? இதெல்லாம் நாம் உருவாகிக்யது தானே? யாரயிருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டுவிட்டுதான் மாற்றவேண்டும். உங்கள் மூன்று வரி கட்டுரை இருந்தால் நான் ஏன் எழுதப் போகின்றேன். சில விடயங்களில் கொஞ்சம் யோசித்து பதில் எழுதுங்கள். செல்வம் இதற்கு நீங்களே ஆலோசனை வழங்குங்கள். ஏற்கனைவே குறிப்பிட்டு வார்ப்புரு இடுவது வழாக்கம் தானே? அதை ஏன் செய்யவில்லை? நீங்கள் குறிப்புட்டுஇருந்தால் நான் மேற்கொண்டு தொகுத்து இருக்க மாட்டேன். இது அவர்கள் உழைப்பு சம்பந்த பட்ட விடயம். மனது சம்பந்த பட்ட விடயம். கொள்கை சம்பந்த பட்ட விடயம் காமாண்ட் பண்ண முடியாது. செல்வாஈ நீங்கள் சிலவற்றுக்கு நீங்களே இது தவறு என்று சொல்லுவீர்கள் இதற்கு கனகிடம் சொல்ல்லாமே? இதற்கு பதில் இதுவல்ல என்று? இதுதான் இணையத்தில் எதிர்பார்க்கின்றேன்.--செல்வம் தமிழ் 01:01, 1 ஜூலை 2009 (UTC)

கோபி புள்ளிருக்குவேளூர் என்று எழுதியிருக்கின்றார். நீங்கள் வார்ப்புரு இட்டு விட்டுதான் மாற்றியிருக்க வேண்டும். இதுமாதிரி 3 வரி கட்டுரை ஆயிரம் எழுத முடியும். நான் ஒரு வேளை எழுதியிருந்தாலும் இதை விரும்பியிருக்க மாட்டேன். நான் எழுதிய மூன்று வரிக்கட்டுரையைத்தான் நீக்க சொல்லியிருப்பேன். அதுவும் முதுநிலைப் பயனர் அதுவும் நிர்வாகியாக இருக்கின்றார் என நீனைக்கின்றேன். கனக் மறந்துவிட்டிருப்பார் அல்லது அந்த கட்டுரை இருப்பது அவர் அறிந்திருக்க மாட்டார். இவருக்கு கட்டுரை தெரிந்திருக்கின்றது எழுதியவரும் இவர் தான். வரலாறு பார்த்துவிட்டுதன் கட்டுரைத் தொகுக்கின்றேன். இதற்கு விளக்கம் எதிர்பார்க்கின்றேன்.--செல்வம் தமிழ் 01:13, 1 ஜூலை 2009 (UTC)

செல்வம் தமிழ், நீங்கள் விக்கி முறைகளை அருள்கூர்ந்து அறிந்து உரையாட வேண்டுகிறேன். கனகு சிறீதரன் கூறுவது முற்றிலும் உண்மை. நான் அண்மையில் செய்த தவற்றைத் திருத்த அவரிடம் வேண்டினேன். இதனைப் புரிந்து கொள்ளுங்கள்(அவர் தற்பொழுது எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்திருப்பதால்தான் அவரிடம் வேண்டினேன்; முன்னர் இது போல ஓரிரு முறை பயனர் சுந்தரிடம் வேண்டி நான் எழுதிய சில கட்டுரைகளை முன்னரே இருந்த கட்டுரைகளுடன் இணைக்க வேண்டியிருக்கின்றேன்). பயனர் தானியல் பாண்டியன் என்பவர் முன்னரே இருந்த பல கட்டுரைகளை எத்தனையோ மடங்காக வளர்த்தெடுத்திருக்கின்றார். அருள்கூர்ந்து இணக்கமுடன், வளர்முகமாக கூட்டுழைப்பாக இங்கே பணியாற்ற வேண்டுகிறேன். இது அவர்கள் உழைப்பு சம்பந்த பட்ட விடயம். மனது சம்பந்த பட்ட விடயம். கொள்கை சம்பந்த பட்ட விடயம் காமாண்ட் பண்ண முடியாது போன்ற உங்கள் கூற்றுகளும் அவற்றின் கோணமும், உணர்ச்சிப் போக்கும் விக்கியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. இணக்க உணர்வுடன், நன்னோக்கத்துடன் அணுக வேண்டுகிறேன். அருள்கூர்ந்து இதற்கு ஒரு நெடிய மறுமொழியைத் தர வேண்டாம். நன்றி.--செல்வா 01:56, 1 ஜூலை 2009 (UTC)

சார் ஆலமரத்தடியில் சராசரியாக உரையாடலாம் சார். இதில் ஒன்றும் தவறில்லை விக்கி முறைகள் என்பது எனக்கு புரியவில்லை. தமிழ் முறைகள் தான் எனக்கு தெரியும். நான் என்ன குறிப்பிட்டிருக்கின்றேன் அதில் என்ன முறை தவறியிருக்கின்றது. பண்பாடு பொதுவானது செல்வா. இதை அனைவரையும் பின்பற்ற வேண்டும் விக்கி முறை என்று கூறுவதே எனக்கு புரியவில்லை. தமிழருடைய பண்பாட்டையே விக்கியா கற்று கொடுத்தது. நம்மை நோக்கி வினா வைத்தாளே தவறு என்று ஆகி விடாது. நாம் மனிதர்கள் தவறு செய்வது இயற்கை தவறு செய்யாதவர்கள் யார். குறையில்லாத மனிதன் ஏது? நாளடைவில் இது ஒரு தமிழாக பயனபாட்டுக்கு வந்து விடும். 3 வரிக்கட்டுரையை இவ்வளவு நாள் குறிப்பிடாமல் இருக்கலாமா? நான் ஏறகனவே கட்டுரை எழுதியிருக்கின்றேன் என்று குறிப்பிட வேண்டுமா வேண்டாமா? அதோடு இணைக்கின்றேன் என்று தெரிவிக்க வேண்டுமா? வேண்டாமா? தமிழர்கள் பழையவர்கள் விக்கிதான் புதிது. எல்லாவற்றுக்கும் விக்கி விக்கி என்று கூறுவது விளங்கவில்லை. இதை யாரிடம் வேண்டுமானாலும் நடுநிலைவாதியிடம் கேளுங்கள். இங்கு அனைவரும் சமம். --செல்வம் தமிழ் 02:11, 1 ஜூலை 2009 (UTC)

ஆரம்பத்திலேயே கனக் செய்வார் என்றுதான் பண்பாட்டுடன் ஆரம்பித்திருக்கின்றேன். அவர் 3 வரிக்கட்டுரை........... இந்த பதிலைத் தான் ஆரம்பிப்பார் என்று என்க்குத் தெரியும் அதைதான் எதிர்க்கின்றேன் தமிழ் ஒரே மாதிரி எல்லாருக்கும் அர்த்தத்தை உருவாக்குவதில்லை. இதற்கு ஆமாம் அப்படித்தான் மாற்றிருக்கவேண்டும் மறந்து விட்டார்கள் இனி இது வராமால் பார்த்துக் கொள்வோம் இந்த மறமொழி கொடுத்தால் கோபியும் மறுமொழி அல்லது விளக்கம் கொடுக்கலாம் என்று குறிப்பிட்டால் அடுத்த கட்டத்திற்கு நகராது. சுருக்கமாக முடியவேண்டியதை எப்பொழுதுமே வளர்ப்பது..........--செல்வம் தமிழ் 02:27, 1 ஜூலை 2009 (UTC)

அந்தக் கட்டுரையின் தொகுத்தல் வரலாறு அப்படியே பேணப்பட்டுள்ளதே, செல்வம். இங்கே பாருங்கள். அதனால் உங்கள் தொகுப்புகளும் அதை நீங்கள் எவ்வாறு செய்தீர்கள் என்ற வரலாறும் அப்படியே தான் உள்ளன. தலைப்பு மட்டும்தானே முன்னரிருந்த தலைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது? இந்த இரு கட்டுரைகளை இணைப்பது நுட்ப அளவில் சற்று சிக்கலானது. இதை நானும் சிரமப்பட்டு ஆங்கில விக்கி உதவிப் பக்கத்தைப் படித்து அறிந்து கொண்டேன். இதைச் செய்ய முயலும்போது சில வேளை தவறு நேரக்கூடும். அதை மற்ற பயனர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நல்லெண்ண நம்பிக்கை கொண்டே பணிபுரிகிறோம். ஆனால் கனகு இதைத்தான் சொல்வார் என்று எதிர்பார்த்தேன் என்று கூறுகையில் நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்? -- சுந்தர் \பேச்சு 02:58, 1 ஜூலை 2009 (UTC)

இல்லை சுந்தர் 2006 இல் ஆரம்பித்திருக்கின்றார் புள்ளிருக்குவேளூர் என்று ஆரம்பித்திருக்கின்றார். தலைப்பு மாறியவுடன் அந்த தலைப்புடன் தான் வரும் என நின்க்கின்றேன். இது குறித்து பல இடங்களில் அலசப்பட்டு வருகின்றது. அதில் தலையிட வரும்பவில்லை. அவரும் புள்ளிருக்கு வேளுர் என்று மாற்றி மீண்டும் சீ.வை.கோ என்று மாற்றியிருக்கின்றார் என்பது உங்களுக்கும் தெரியும். அதைத்தான் பேச்சு பக்கத்தில் குறிப்பிட வேண்டும் என சொல்கின்றேன். 2006 க்கு அப்புறம் அவர் கட்டுரையை ஆங்கில கட்டுரையுடன் இணைத்திருக்க வேண்டும் இணைக்கவில்லை. கனக் பெயர் மாற்றியிருக்கின்றார். இவர் அந்த மூன்று வரி கட்டுரையை இணைத்திருக்கின்றார். முடிந்து விட்டது. இதெல்லாம் எதனால் வருகின்றது என்று சொன்னால் விக்கி.......... என்றால் ஒரு பெரிதாக வெடிக்கத்தான் செய்யும் அவர் கட்டுரை எழுதியிருக்கின்றார் என்று தெரிந்தால் நான் ஏன் எழுதப்போகின்றேன் அதை முடிவெடுப்பது நான் தானே. முக்கால் வாசி முடிந்த பிறகு ஏன் அந்த 3 வரி கட்டுரை சரி இணைக்கவேண்டுமென்றால் குறிப்பிடுங்கள். இதை யார் வேண்டுமானாலும் எழுப்புவார்கள். இது எதனால் ஆயிரமா.......இரண்டா....... இதன் விளவுதான். அதை இங்கு நன்றாக வெளிப்படுத்துகின்றது. அதை அறிந்து கொண்டபிறகு எழுப்பித்தான் ஆகவேண்டும் இல்லையேல் மறுபடியும் இது தொடரும். தெரிந்து நானே தொகுப்பது வேறு. நான் இறையியல் கட்டுரைகளில் சில முறைகளை என்னுள் வைத்திருப்பேன் இவர் எழுதியது என்றால் விலகியிருப்பேன் இல்லையேல் தொடர்ந்தும் இருப்பேன். அது என் மனது சம்பந்தபட்ட விடயம் அதில் கட்டுப்பாடு விதிக்கமுடியாது. கட்டுரைகளை தேர்ந்தெடுப்பது கட்டுரையாளர் முடிவு. இதைக்கூட இங்கு வெளியிடத் தேவையில்லை. வெளிப்படையாக ஏதோ ஒன்றை உணர்த்துகின்றது. ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டது போல் குறிப்பிட்டால் முடிந்த்து. இதுதான் பண்பாடு என்ன காரணம் வேண்டுமென்றாலும் இருக்கலாம். இங்கு பல நேரங்களில் ஒரே மாதிரியான உரையாடல்கள் பின்பற்றப்படுவது தவறான கருத்தையே உருவாக்கும். ஒருவர் ஒரு கருத்தை சொன்னால் வேண்டாம் இது முரண்பாடாக இருக்கின்றது பின்வாங்கலாமே? என்று குறிப்பிட வேண்டும் அப்படி குறிப்பிடப்படுவதில்லை. வரிசையாக தாக்குதல் தொடுக்கப் படுவது தவிர்க்கப்படவேண்டும். இவ்விடயத்தில் மட்டுமல்ல எல்லா விடயத்திலும். எதற்கு போய் கட்டுரைகளை பாராட்டுகின்றோம் அதற்குதான் ஏற்று கொண்டால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் விட்டு விடுங்கள். இரண்டு வரிகளில் முடிக்கவேண்டியதை இவ்வளவு இழுக்க ...........அவசியமென்ன? நம்மையே எதிர்த்து கேள்வி கேட்டு விட்டாரே என்றால் உங்கள் பதில் எனக்கு...... என் கேள்வி உங்களுக்கு.......தவ.... அவ்வளவுதான். இங்கு அனைவரும் சமம் சமம் சமம். எவ்வளவு உயரிய படிப்பு படித்திருந்தாலும் அப்படித்தான் பட்டறைகளில் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். சுயமரியாதையை விக்கி தடுக்கவோ, கற்று கொடுக்கவோ முடியாது.--செல்வம் தமிழ் 04:09, 1 ஜூலை 2009 (UTC)

செல்வம், வைத்தீசுவரன் கோயில் கட்டுரை முக்கால் பகுதி எழுதியப் பிறகு அதை ஒரு மூன்று வரிக்கட்டுரையுடன் இணைக்கப்படவில்லை. தயவுசெய்து பின்வரும் மாற்றத்தைப் பாருங்கள் [1]

புதிய கட்டுரை ஏற்கனவே இருந்த மூன்று வரியினை பிரதியீடு செய்துள்ளது. உண்மையில் ஏற்கனவே இருந்த கட்டுரையின் வரலாறு மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

ஒன்றாக எழுதப்பட வேண்டியது இரண்டு கட்டுரைகளாக இருந்தால் அவற்றை இணைக்க முன்னர் வார்ப்புரு இட்டு கால அவகாசம் கொடுத்து இணைக்க வேண்டும். ஆனால் ஒரே விடயம் இரு தடவை எழுதப்பட்டால் இரண்டாவது கட்டுரையை நீக்கி முதற்கட்டுரையுடன் இணைப்பது வழக்கம்.

ஆனால் வைத்தீசுவரன் கோயில் கட்டுரையில் புதியது நீக்கப்படவில்லை. பழையது நீக்கப்பட்டு அதன் வரலாறு மட்டுமே புதியதுடன் இணைக்கப்பட்டது.

இவ்வாறு ஏன் வரலாறு இணைக்கப்பட வேண்டும்?

ஏற்கனவே இருந்த மூன்று வரியை நீக்கி விட்டுப் புதியதை வைத்துக் கொண்டால் மூன்று வரி எழுதியவர்களின் பங்களிப்பு நீக்கப்பட்டு விடும். நாளை இன்னொருவர் வந்து 300 பக்கங்களில் மூன்றாவதாக ஒன்றை எழுதிவிட்டுச் செல்வம் எழுதியதை நீக்கினால் முத இரு கட்டுரைகளுக்குப் பங்களித்த வரலாறுகளும் அழிந்து விடும். பலரும் இணைந்து பங்களித்து வளர்த்தெடுக்கும் விக்கிப் பண்புக்கு இது ஏற்புடையதல்ல. ஆதலாலேயே கட்டுரை வரலாறுகள் இணைக்கப்படுகின்றன.

நன்றி. கோபி 04:18, 1 ஜூலை 2009 (UTC)

//அவரும் புள்ளிருக்கு வேளுர் என்று மாற்றி மீண்டும் சீ.வை.கோ என்று மாற்றியிருக்கின்றார்//

செல்வம், அம்மாற்றம் கட்டுரை வரலாறுகளை இணைப்பதற்காகச் செய்யப்பட்டதாகும். இரண்டு கட்டுரைகளின் வரலாறுகளை இணைப்பதற்கு அவ்விரு கட்டுரைகளும் ஒரே பக்கத்தில் வைத்து நீக்கப்பட்டு பின்னர் மீட்டெடுக்கப்பட வேண்டும். அவ்வகையில் கட்டுரை வரலாறுகளை நீக்குவதற்காக முதலில் புள்ளிருக்கு வேளூர் பக்கத்தை நீக்கினேன். பின்னர் சீ. வை. கோ பக்கத்தை பு. வே பக்கத்துக்கு நகர்த்தினேன். பின்னர் அதனையும் நீக்கினேன். பின்னர் அனைத்தையும் மீட்டெடுத்தேன். அவ்வகையில் நீக்கப்பட்ட இரு கட்டுரை வரலாறுகளும் மீட்கப்பட்டன. பின்னர் கட்டுரையை சீ. வை. கோ பக்கத்துக்கு நகர்த்தினேன். பு. வே பக்கத்துக்கு நகர்த்தியமை வரலாறுகளை இணைப்பதற்கு மட்டுமே. நன்றி கோபி 04:25, 1 ஜூலை 2009 (UTC)


ஏன் சார் இதெல்லாம் உங்கள் மனதுக்குள் வைத்திருந்தால் யாருக்கு தெரியும். பிறருக்கும் தெரியவேண்டாமா? இது பற்றியெல்லாம் எதிர் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றனவே? குறைந்த பட்சம் கட்டுரையில் குறிப்பிடவேண்டாமா? நான் 2006 இல் 3 வரி தான் இயற்றிருக்கின்றேன் இணைக்கவா? என்று குறிப்பிட வேண்டுமா? வேண்டாமா? இது குறித்து தான் வினா? வரலாறை மட்டும் இணைக்க என்ன அவசியம் என்று தெரியவில்லை. கனக் தான் பெயர் மாற்றி வைத்துவிட்டாரே? அப்புறம் ......?--செல்வம் தமிழ் 05:11, 1 ஜூலை 2009 (UTC)

செல்வம், மீடியாவிக்கி மென்பொருள் சற்று சிக்கலானது. இரு பக்கங்களை இணைப்பதற்கு பக்கங்களை நீக்கிவிட்டு அதன்பின் இணைத்து பின்னர் நீக்கப்பட்டதை மீள்விப்பது முறை. இந்த உதவிப்பக்கத்தைப் பாருங்கள், அந்த முறையிலுள்ள சிக்கல் தெரிய வரும். (இந்த உதவிப்பக்கத்தை எளிமையாகத் தமிழில் எழுத வேண்டும்.) கோபி மேலே சொல்லியுள்ள விளக்கம் அப்போது தெளிவாகும். பக்கத்தின் வரலாறை இணைப்பது விக்கியின் அடிப்படைத் தேவை. ஒருவர் மூன்று வரியோ முன்னூறு வரிகளோ எழுதியிருந்தாலும் அந்த சான்று மறைந்து விடக் கூடாது (உள்ளடக்கம் நீக்கப்பட்டிருந்தாலும் கூட). இந்த அளிப்புரிமம் அதன் நோக்கத்தைத் தெரிவிக்கும். பேச்சுப் பக்கத்தில் செய்தி விட்டிருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது. ஆனால் இந்த விசயத்தில் பொதுவாக எல்லாப் பயனர்களும் புரிந்துணர்வுடன் செயல்படுவதால் பல வேளைகளில் செய்தி விடுக்காமல் விட்டு விடுவதுண்டு. நகர்த்தல் மற்றும் நீக்கலின்போது தொகுப்புச் சுருக்கத்தில் காரணம் தரப்படுவதால் அதைப் பார்த்து நோக்கத்தைப் புரிந்து கொள்வோம். ஆனால், அதைக் காட்டிலும் எடுத்த எடுப்பில் இவர் வேண்டுமென்றே நமக்கு எதிராகச் செயல்படுகிறார் என்ற எண்ணத்தை இதுவரை பங்காற்றிய எவரும் கொண்டிருக்காததால் இத்தகைய சிக்கல் வந்ததில்லை. -- சுந்தர் \பேச்சு 05:19, 1 ஜூலை 2009 (UTC)


சுந்தர், சர்ச்சை எழுவதற்கு முன் குறிப்பிடவேண்டியதை எழுந்தபின் குறிப்பிடுகிறீர்கள் அதற்காகத் தான் அந்த வார்ப்புரு உங்களுக்கு "ஆட்சேபணை உள்ளதா? கருத்துரைக்கவும்" என்று கேட்கும் வார்ப்புரு. தவறு நடப்பது இயற்கைதான் அதை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும் அந்த எண்ணம் வராதவரை இது நிகழ்ந்து கொண்டே இருக்கும். வெளியே பிரச்சினை வெடித்துகொண்டே இருக்கும். நான்குறிப்பிடுவது வேறு நீங்கள் குறிப்பிடுவது வேறு. அவர் தொடங்கிய கட்டு................பாருங்கள் (பக்கத்தை) புரியும். இல்லையென்றால் இத்துடன் விட்டு விடுங்கள். அவருக்கு என்ன தெரியப்போகின்றது என்ற எண்ணம் வள............. விமர்சனம் தான் வளரும். *தொடங்கிய கட்டுரைகள் இதைப்பார்த்துதான் தெரிந்து கொண்டேன். இந்த மனப்போக்கை இனிமேலாவது விடவேண்டும் என்பது என்அவா. எல்லாம் வைத்தீசுவரனுக்கு வெளிச்சம். அவர் பார்த்து கொள்வார். அப்படித்தான் விட்டு வடவேண்டும். (கடவுள் கட்டுரையிலே இப்படி) நன்றி--செல்வம் தமிழ் 06:22, 1 ஜூலை 2009 (UTC)

  • [2] பக்கத்தில் கட்டுரையில் செய்யப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் உள்ளன.
  • 09:31, 10 ஜூன் 2009 இல் Kanags வைத்தீசுவரன் கோயில் என்பதனை சீர்காழி வைத்தீசுவரன் கோயில் என்ற தலைப்புக்கு நகர்த்தினார்.
  • 11:36, 10 ஜூன் 2009 இல் இருந்தபடியான கட்டுரையில் கோபி இரு மாற்றங்கள் செய்துள்ளார்.
  • மாற்றங்களுக்கு முன்பும் பின்பும் இருந்த பதிப்புக்களை ஒப்பிட்டால் கோபி கட்டுரையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது தெளிவாகும். பார்க்க [3]
  • கோபி செய்த மாற்றம் புள்ளிருக்கு வேளூர் என்ற தலைப்பில் இருந்த கட்டுரையை நீக்கியதும் அதன் வரலாற்றை சீர்காழி வைத்தீசுவரன் கோயில் கட்டுரை வரலாற்றுடன் இணைத்ததும் மட்டுமே.
  • ஒரே தலைப்பிலான கட்டுரைகள் இணைக்கப்பட்டால் அவற்றின் வரலாறுகள் பேணப்பட வேண்டும் என்பது விக்கிக் கொள்கைகளுள் அடங்குவதாகும்.
  • அந்த வகையில் கோபி செய்த மாற்றங்களில் எந்தத் தவறும் இல்லை.

கோபி 17:01, 1 ஜூலை 2009 (UTC)

முத்துகமலத்தில் த வி பற்றி கட்டு்ரை[தொகு]

முத்துகமலம் இணைய இதழில் த வி பற்றி கட்டு்ரை --கார்த்திக் 06:50, 1 ஜூலை 2009 (UTC)

Tamil Wikinews[தொகு]

Sorry I am not writing in Tamil. Tamil Wikinews was proposed for closure some months ago. See this for a link to the votation. Regards. --81.38.38.140 09:24, 1 ஜூலை 2009 (UTC)

http://meta.wikimedia.org/wiki/Proposals_for_closing_projects பக்கத்தில், தமிழ் விக்கி மேற்கோள் திட்டத்தையும் மூடச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். தயவுசெய்து எல்லா தமிழ் விக்கிப்பீடியர்களும் இவை இரண்டுக்கும் எதிராக வாக்களிப்பதுடன் ஓரிருவர் இத்திட்டங்களிலும் அவ்வப்போது பங்களிக்கத் துவங்க வேண்டும். வெறும் வாக்குகள் கணக்கில் வராது. தகுந்த காரணங்களைச் சொல்லி எதிர்ப்பைத் தெரிவியுங்கள். மூடுவது இலகு. ஆனால், ஒரு திட்டத்தைத் திரும்ப துவங்கச் சொல்ல ஏகப்பட்ட நடைமுறைகள். மாதக் கணக்காகும். தற்போதைய ஈழத்துச் சூழ்நிலையின் வரலாற்று முக்கியத்துவம் கருதி பலர் செய்திகளை வலைப்பதிவுகளில் தொகுத்து வருகிறார்கள். அதையே விக்கி செய்திகளில் செய்தால் கூட போதும்.--ரவி 10:55, 1 ஜூலை 2009 (UTC)
The same happens with Tamil Wikiquote. Here is the recent notification outside Meta. --81.38.38.140 13:48, 1 ஜூலை 2009 (UTC)
I think maybe it would be a good idea if you announced about this proposals of closure either in the main page or in the site notice feature so that the info reaches most Tamil Wikipedia users. There may be users who would be happy to develop those projects but who either they do not know about them or about their proposal of closure. ta.wiktionary is also big, an announcement there maybe could as well help to know what the Tamil Wikimedia community think or want about it. Regards. --81.38.38.140 13:57, 1 ஜூலை 2009 (UTC)
Thank you for your notice. You are the first person to inform us. How can they make this proposal or a decision without consulting or even informing the Tamil Wikimedia community. This leves a very negative impression. we are in process of introducing the Tamil wiki projects to a wider audience. We completed four work shops, and several talks. So, we expect greater activity in the future. Thank you again. We should put this as a site wide notice. --Natkeeran 14:02, 1 ஜூலை 2009 (UTC)

Hi 81.38.38.140, thank you for informing us. I have notified this now sitewide in tamil wiktionary and tamil wikipedia--ரவி 14:43, 1 ஜூலை 2009 (UTC)

குறித்த விக்கிகளை மூடிவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறேன். விக்கிப்பீடியாவும் விக்சனரியும் தமிழில் ஓரளவு இயங்குகின்றன. விக்கிநூல்கள், விக்கி மூலம் போன்றவை கூட போதிய பங்களிப்பை ஈர்க்காத நிலையில் மேலும் இரு விக்கிகளுக்கு பங்களிக்கத் தொடங்குவதால் எந்தப் பயனும் இல்லை. எதிர்காலத்தில் ஓரிரு பயனர்களை குறித்த விக்கிகள் ஈர்த்தால் கூட அது த.விக்கிப்பீடியாவுக்கு ஏற்படும் இழப்பாக மட்டுமே நான் பார்ப்பேன். ஏறத்தாழ ஆறாண்டுகளாக 18,000 கட்டுரைகள் மட்டுமே உள்ளன. இன்னும் 100 பேர் வந்தால் கூட விக்கிப்பீடியாவுக்கே போதாது.
எமது தேவைகள், அடைய வேண்டிய இலக்குகள், கிடைக்கும் வளங்கள் என்பவை தொடர்பாக போதிய புரிதல் வேண்டும் என நினைக்கிறேன். அரைகுறையாகப் பல விக்கிகளை வைத்திருந்து அவற்றுக்கு வளங்களைச் வீணடிப்பதாக மட்டுமே இருக்கும். பரப்பைக் குறைத்து செயற்பாடுகளை அதிகரிக்க முயல்வது அதிகப் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி. கோபி 17:49, 1 ஜூலை 2009 (UTC)
கோபியின் கூற்றுக்களிலும் உண்மை உள்ளது. எனினும் அது மிகக் குறுகியகாலப் பார்வையாகத் தெரிகிறது. --Natkeeran 17:57, 1 ஜூலை 2009 (UTC)
விக்கி செய்திகள் இடத்தை நிரப்ப வேண்டுமானால் இணையப் பத்திரிகைகள் நிரம்ப உள்ளன. ஆனால் விக்கி மேற்கோள் அவ்வாறல்ல. தமிழின் அரிய சொத்துக்களான பழமொழிகள், நன்னெறி கூறும் நூல்களினின்று எடுக்கப்பட வேண்டிய சிந்தனைகள், பிற மொழிகளின் சிறந்த, அரிய மேற்கோள்கள் இவை யாவும் தமிழ் உலகிற்கு எடுத்துச்செல்ல ஒரு நல்ல தளம் தற்போது இல்லை. அவ்விடத்தை விக்கி மேற்கோள்கள் நிரப்பும். அவ்வாறு செய்வதும் சிரமமான வேலையல்ல என்று நான் கருதுகிறேன்.--பரிதிமதி 18:15, 1 சூலை 2009 (UTC)[பதிலளி]

கோபி, வளங்கள் சிதறுகின்றன என்பது குறுகிய கால பார்வையாகத் தான் இருக்க முடியும். தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்தில் இருந்து தமிழ் விக்கி மேற்கோள் இருக்கிறது. அதில் பங்களிக்க ஆர்வம் இருந்தவர்களுக்கு விக்கிப்பீடியாவில் ஆர்வம் இல்லை. தமிழ் விக்சனரியில் பெருத்த பங்களிப்பு அளித்திருக்கும் தகவல் உழவனுக்கு விக்கிப்பீடியாவைக் காட்டிலும் அங்கு தான் கூடுதல் ஆர்வம். திட்டத்தை ஓரளவு கட்டிக் காத்து வைத்தால், அத்திட்டத்தில் பெரும் ஆர்வமுடையவர் வந்து தொடர்ந்து செல்வர் என்று நம்புகிறேன். தமிழில் இரு திட்டங்களுக்கான தேவையும் கண்டிப்பாக உள்ளன. எத்தனை நடுநிலையான, நம்பத் தகுந்த செய்தி ஊடகங்கள் உள்ளன? மேற்கோள்கள் திட்டத்தின் முக்கியத்துவத்தை பரிதிமதி சுட்டியுள்ளார். திட்டத்தை மூடுவது இலகு. திரும்ப கொண்டு வருவது எவ்வளவு நீளமான நடைமுறை என்று உங்களுக்குத் தெரியும். சும்மாவேனும் கொஞ்சம் கொஞ்சம் பங்களிப்புகள் செய்து அத்திட்டங்களை உயிருடன் வைத்திருப்போமே?--ரவி 18:40, 1 ஜூலை 2009 (UTC)

ரவியின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். விக்கிமூலம் எந்நிலையில் உள்ளது? -- சுந்தர் \பேச்சு 04:08, 2 ஜூலை 2009 (UTC)

ரவி, த.வி.பீ தொடங்கிய காலத்திலிருந்து இருக்கும் த.வி. மேற்கோளில் எந்தப் பயனுள்ள உள்ளடக்கமும் இல்லை. விக்கி செய்திகள் தொடர்ந்து இற்றைப்படுத்தப்படவில்லை. விக்கி நூல்களில் கூட அதிக உள்ளடக்கமேதுமில்லை. இந்த விக்கித் திட்டங்கள் பயனில்லாதவை என்று நான் சொல்ல வரவில்லை. அவற்றுக்கு ஒதுக்க எம்மிடம் வளங்கள் இல்லை என்கிறேன். யாருக்காவது ஆர்வம் வந்து அங்கு சென்றால் கூட அது த.வி.பீடியாவுக்கு இழப்பாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னுடைய பார்வை குறுகியதாக இருக்கலாம். ஆனால் நாம் எதனைச் சென்றடையப் போகிறோம் என்பதில் தெளிவில்லாமல் எவ்வளவு நீண்ட தொலைவு பார்த்தாலும் பயனில்லை என்பதே என் தாழ்மையான அபிப்பிராயம். விகடன் வெளியிட்ட பிரிடானிகா தகவல் களஞ்சியம் பார்த்தேன். அந்த நூல் அளவுக்குப் பயன்படுவதாக த.வி.பீ எப்பொழுது வளர்ச்சியடையும் என்றும் எண்ணிப் பார்த்தேன். ஏப்ரல் 2007 இல் புதிதாகத் தொடங்கப்படும் கட்டுரை எண்ணிக்கையே ஏப்ரல் 2009 இலும் தொடங்கப்படுகிறது.

த.வி.பீ ஒரு முழுமையாகப் பயனுடைய கலைக்களஞ்சியமாக எத்தனை கட்டுரைகள் தேவை? ஒரு 100,000 தேவை எனக் கொண்டால் இன்னும் 81,000 தேவை. நாளொன்றுக்கு 20 எழுதப்பட்டாலும் 11 ஆண்டுகள் தேவை. இப்பொழுது நாளொன்றுக்கு உள்ள 15 ஆனது ஒவ்வோராண்டும் 20, 25, 30 என அதிகரித்துச் செல்வதாகக் கொள்வோம். அவ்வாறு சென்றாலும் 7 ஆண்டுகள் தேவை. இதைவிடவும் வேகமாக ஓர் ஐந்தாண்டுகளில் 100,000 பயனுள்ள கட்டுரைகளை எழுத வேண்டுமானால் தேவையான உழைப்பு என்ன? அதற்கு எத்த்னை பயனர்கள் தேவை?

விக்கிப்பீடியாவுக்கு ஏறத்தாழப் பங்களிக்காத நிலையில் இருக்கும் நான் இக்கேள்விகளைக் கேட்கும் தகுதியற்றவன்தான். ஆனால் ஐந்தாண்டுகள் என்பது குறுகிய காலம் அல்ல.

செய்திகளாகப் பதிவு செய்ய வேண்டிய உள்ளடக்கங்களின் தகவல்களைப் போதிய அளவு விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் பதிவு செய்யலாம். தமிழின் நீதிநூல்கள் இன்ன பிறவற்றை விக்கிமூலத்தில் பதிந்து கொள்ளலாம். வலைப்பதிவர்கள் போன்றோர் விக்கிப்பீடியாவை விட விக்கிநூல்களில் கவனம் செலுத்தலாம் என்ற வகையில் அதனை வளர்க்க ஆட்களைத் தூண்டலாம். ஆனால் ஆறு விக்கித்திட்டங்கள் என்பது எமக்கு மிக அதிகம்.

விக்கிப்பீடியா, விக்சனரி ஆகிய இரண்டுக்கும் கூடிய கவனம் கொடுப்பதோடு விக்கிமூலம், விக்கிநூல்கள் ஆகியவற்றை அவ்வப்போது துப்பரவுசெய்து கொண்டிருப்பது பொருத்தமாயிருக்கும் என்பது என் நிலைப்பாடு.

இரு விக்கித்திட்டங்களை மூடுவதென்பதை உணர்வுபூர்வமாக அணுக வேண்டியதில்லை. பல பிரிவுகளைக் கொண்ட பெருவணிக நிறுவனங்கள் காலத்துக்குக் காலம் தங்கள் பிரிவுகளின் பயனை கணக்கெடுத்து அதிகப் பயனில்லாத பிரிவுகளை மூடிவிடுவார்கள். காரணம் அப்பிரிவுகளில் செலவிடும் வளங்களை பயனதிகமுள்ள பிரிவுகளுக்குச் செலவிடுவதற்கே.

இல்லை, பயனர்கள் வருவார்கள் வருவார்கள் வருவார்கள் என்று பார்த்துக் கொண்டு குப்பை கூட்டிக் கொண்டிருந்தோமென்றால் நாம் எதனையும் சென்றடையப் போவதில்லை.

இணையத் தமிழ் உள்ளடக்கம் சார்ந்து,

  • எமது தேவைகள் என்ன?
  • அவற்றுக்கு எம்மிடம் உள்ள வளங்கள் என்ன?
  • அவ்வளங்களை எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம்?

ஆகிய கேள்விகளுக்குத் தெளிவான பதில்களுடன் வளங்களைக் குவித்து முன்னேறுவது காலத்தின் தேவை.

அடம்பன் கொடியும் திரண்டால் தான் மிடுக்கு. சிதறிச் சென்றால் கூகிளில் 20,000 முடிவு வருகிறது; ஊடகங்களில் இப்படித்தான் எழுதுகிறார்கள் போன்ற கருத்துக்களுக்குக் காலம் முழுக்கப் பதில் சொல்லிக் கொண்டிருப்போம்.

இவை எனது தனிப்பட்ட கருத்துக்கள் மட்டும். நன்றி. கோபி 05:17, 2 ஜூலை 2009 (UTC)

விக்கிசெய்திகள் முதற்பக்கத்தை மீள வடிவமைத்துள்ளேன். இயலுமானவர்கள் தங்கள் பங்களிப்புகளைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \பேச்சு 12:53, 6 ஜூலை 2009 (UTC)

விக்கியில் உள்ள குறிப்பிட்ட தலைப்பிலான படிமங்கள்[தொகு]

விக்கி திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட தலைப்பு குறித்த படிமங்களை மட்டும் பெறுவது எப்படி? எடுத்துக்காட்டுக்கு, ஒரு வலைப்பதிவர் ஈழம் தொடர்பான படிமங்களைப் பெற விரும்பினால் எப்படி பெறுவது? ஒவ்வொரு திட்டமாக போய் பகுப்பு பகுப்பாக பார்க்க வேண்டுமா அல்லது குறுக்கு வழி உண்டா? இக்கேள்வி வலைப்பதிவர் சந்திப்பில் கேட்கப்பட்டது. ஆனால், விடை தெரியவில்லை--ரவி 11:36, 1 ஜூலை 2009 (UTC)

இந்தக் கருவியைப் பயன்படுத்திப் பார்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 04:09, 2 ஜூலை 2009 (UTC)

நன்றி சுந்தர். கூகுள் அறிமுகப்படுத்தி இருக்கும் commons படிமத் தேடலும் உதவலாம். எடுத்துக்காட்டுக்கு, black kittens படிமங்கள்.--ரவி 03:58, 10 ஜூலை 2009 (UTC)

அல்லது பல காலம் முன்பே தொடங்கப்பட்ட யாகூ கிரியேட்டிவு காமன்சு தேடலைப் பயன்படுத்தலாம். ;) -- சுந்தர் \பேச்சு 05:50, 10 ஜூலை 2009 (UTC)
ஓ, அதில் ஏனோ தளத்துக்குள்ளான தேடல் வசதி இல்லை. வழு போலிருக்கிறது. -- சுந்தர் \பேச்சு 05:53, 10 ஜூலை 2009 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆக்கப் போட்டி[தொகு]

தமிழ் வலைப்பதிவுகளிலும், அச்சு இதழ்களிலும் சிறுகதைப் போட்டிகள் மிகுந்த வரவேற்பை பெறுகின்றன. இது போன்ற ஒரு போட்டி மூலம் தமிழ் விக்கிப்பீடியா குறித்த விளம்பரம், விழிப்புணர்வைப் பெறலாம் என்று பல முறை தனிப்பட்ட உரையாடல்களில் பேசி இருக்கிறோம். இந்த ஆண்டுத் தொடக்கம் பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால், இதனை முன்னெடுப்பது பொருத்தமாக இருக்கும்.

சுந்தர்,

  1. இது போன்ற பரிசுப்போட்டிகள் ஏதும் வேறு மொழி விக்கி திட்டங்களில் நடந்தது உண்டா?
  2. இத்தகைய ஒரு போட்டிக்கு விக்கிமீடியா இந்தியப் பிரிவில் இருந்து உதவித் தொகை பெறலாம் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். எவ்வளவு பெற இயலும்? அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாமா? பணம் கைக்குப் பெற சில நாள் / மாதம் ஆகும் என்பதால் முன்கூட்டியே தொடர்பு கொள்ளலாம்.

இத்தகைய ஒரு போட்டியை எப்படி நடத்தலாம், வழிமுறைகள் என்னவாக இருக்கலாம் என்று பங்களிப்பாளர்கள் கருத்தை வரவேற்கிறேன்.--ரவி 11:45, 1 ஜூலை 2009 (UTC)

ஆங்கில விக்கியில் இது போன்று பல போட்டிகள் நடைபெற்றுள்ளன. செருமனிலும் நடந்ததாகக் கேள்விப்பட்டுள்ளேன். தொடர்புடைய இணைப்புகள்:
இப்போதைக்கு விக்கிமீடியாவின் இந்தியப் பிரிவு பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இந்த நிறுவனத்தார் தருவதாக உறுதியளித்துள்ளனர். (நான் விக்கிமேனியா மாநாட்டுக்கு உதவி கேட்டதில், அது இயலாது, ஆனால் தமிழ் விக்கிக்கு இந்தியாவுக்குள் நடைபெறும் திட்டங்களுக்குக் கட்டாயம் உதவுவோம் என்றனர்.) பத்தாயிரம் தருவதில் தயங்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அதற்கு மேலானாலும் கேட்டுப் பார்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 12:56, 1 ஜூலை 2009 (UTC)

நல்லது சுந்தர். விக்கிப்பீடியா:கட்டுரை ஆக்கப் போட்டி பக்கத்தில் தொடர்ந்து உரையாடுவோம்--ரவி 05:24, 10 ஜூலை 2009 (UTC)

மின்மடலில் விக்கி கட்டுரைகள், விக்சனரி சொற்கள்[தொகு]

இங்கு உள்ளது போல் தேர்ந்தெடுத்த தமிழ் விக்கி கட்டுரைகள், விக்சனரி சொற்களை நாள் ஒரு முறையோ வாரம் ஒரு முறையோ மின்மடலில் அனுப்பி வைக்க வழி உண்டா? தமிழுக்கு இவ்வசதி இல்லா நிலையில் wikimedia.orgக்கு வெளியே இருந்து இதைச் செய்யலாமா?--ரவி 11:43, 3 ஜூலை 2009 (UTC)

செய்யலாம், ஆனால் சில நாட்களில் புதுமை மறைந்துவிடும். ஒரு கிழமைக்கு (வாரத்துக்கு) ஒன்று என்று அனுப்பலாம். நான் தமிழ் மன்றம் என்னும் கூகுள் குழுமம் தொடங்கியதே அவ்வப்பொழுது தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியாகும் நல்ல கட்டுரைகளைப் பற்றிக் குறிப்பிடவும், அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கருத்துரையாடவும் என்னும் நோக்கங்களைக் கருத்தில் கொண்டே. --செல்வா 14:20, 3 ஜூலை 2009 (UTC)

வாரத்துக்கு ஒன்றாகவே அனுப்பலாம். சுந்தர், மேல் விக்கி மூலம் இதை செய்வதில் சிரமம் என்றால் கூகுள் குழுமம் தொடங்கலாமா? அனைவருக்கும் ஒப்புதல் என்றால் இதனை உடனடியாகச் செயற்படுத்துகிறன். இக்குழுமத்தில் மற்ற உரையாடல்கள் ஏதும் இருக்காது. வாரா வாரம் கட்டுரை மட்டும் அனுப்புவோம். (அல்லது, தமிழ் விக்கிக்கான செய்தி இதழாகவும் இதைச் செய்வோமா? பட்டறைகள் போன்ற அறிவிப்புகளை வெளியிட உதவும்)--ரவி 04:30, 10 ஜூலை 2009 (UTC)

மேல்விக்கியில் கேட்டுப் பார்க்கலாம். அவ்வகையில் ஒரு அலுவல் முறை இருக்கும். இல்லாவிட்டாலும் தவறில்லை, கூகுள் குழுமத்திலேயே செய்யுங்கள். -- சுந்தர் \பேச்சு 05:45, 10 ஜூலை 2009 (UTC)

தமிழ் விக்கி தேர்ந்தெடுத்த கட்டுரைகள் நூல்[தொகு]

இணையத்துக்கு வெளியே உள்ள வாசகர்களையும் சென்றடையும் வகையில் தமிழ் விக்கியில் இருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளை ஒரு சிறு நூலாக வெளியிடலாமா? விலங்குகள், பறவைகள் போன்று சிறந்த, தனித்துவ உள்ளடக்கம் உள்ள கட்டுரைகள், 365 நாட்களுக்கும் உள்ள கட்டுரைகள், உங்களுக்குத் தெரியுமா துணுக்குச் செய்திகள் போன்றவற்றைக் கூட தொகுத்து வெளியிடலாம். இது குறித்து அனைவரின் கருத்தையும் அறிய விரும்புகிறேன். உடன்பாடென்றால், இத்தகைய ஒரு முயற்சியை எப்படி முன்னெடுக்கலாம் என்று சிந்திக்கலாம்--ரவி 11:48, 3 ஜூலை 2009 (UTC)

கட்டாயம் செய்யலாம். "தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து" என்று ஒரு புதிய தொடர் வெளியீடு செய்யலாம். --செல்வா 14:22, 3 ஜூலை 2009 (UTC)
கட்டாயம் செய்யவேண்டிய ஒன்று. பகுப்பு வாரியாக விலங்குகள், மென்பொருள்கள், மின்னனுவியல் என பல தொகுப்புகள் வெளியிடலாம். அருமையான யோசனை ரவி--கார்த்திக் 17:24, 3 ஜூலை 2009 (UTC)

நல்லது செல்வா, கார்த்திக். விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா நூல்கள் பக்கத்தில் தொடர்ந்து உரையாடுவோம்--ரவி 05:15, 10 ஜூலை 2009 (UTC)

பயனர் கணக்குகள் 10,000 ஐ எட்ட இருக்கின்றோம்[தொகு]

பயனர் கணக்குகள் இன்றளவில் 9713. --செல்வா 17:05, 3 ஜூலை 2009 (UTC)

பாடசாலை மாணவர்களுக்கிடையில் விக்கிபீடியாவை அறிமுகம் செய்யலாமே? --Shameermbm 06:44, 7 ஜூலை 2009 (UTC)

கண்டிப்பாக செய்யலாம், shameermbm. பள்ளி மாணவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பது தான் தமிழ் விக்கியின் முதன்மை நோக்கம். இதை எப்படி செய்யலாம் என்பது குறித்து ஏதேனும் வழிமுறைகளை எண்ணியுள்ளீர்களா?--ரவி 04:28, 10 ஜூலை 2009 (UTC)

கட்டுரைகளில் கவனம் செலுத்துவோம்[தொகு]

செல்வா, மயூரனாதன் போன்று மதிப்புக்குரியவர்கள் சிறிதளவும் அடிப்படை நேர்மையற்ற, திறந்த மனதற்ற, தமிழுணர்வற்ற, தகுதியற்ற, முகமற்ற, உள்நோக்கும் காழ்ப்பும் கூடியவர்களின் பேச்சுகளைக் கேட்க வேண்டி இருப்பது வருத்தம் அளிக்கிறது. நியாயமற்ற விமர்சனங்களைப் புறக்கணித்து நமது நேரத்தை கட்டுரையாக்கத்திலும் வழமையான விக்கி பணிகளிலும் செலவிட உறுதி பூண்டிருக்கிறேன். மற்ற பங்களிப்பாளர்களிடமும் இதையே வேண்டுகிறேன். பல அடிப்படை துறைகளில் தரமான, தகவல் செறிவான கட்டுரைகளை இலட்சக்கணக்கில் வளர்த்து எடுப்போம்.

ஒரு சிறிய குழு தான்தோன்றித்தனமாக கொள்கைகளை வகுத்துக் கொண்டது என்ற பழிச்சொல் வரக்கூடாது என்றே இத்தனை ஆண்டுகள் கொள்கை முடிவுகளில் பொறுமை காட்டினோம். ஆனால், இந்த நன்னோக்கே நமக்கு எதிரான விமர்சனமாக முன்வைக்கப்படுகிறது. தமிழ் விக்கி தொடங்கி 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இனியும் கொள்கை முடிவுகள், வழிகாட்டல்கள் வகுப்பதில் சுணங்காமல் இந்த ஆண்டின் முக்கிய வேலைத்திட்டமாக இதை முன்னெடுப்போம். தேவையான கொள்கை பக்கங்கள், வழிகாட்டல்கள், உதவிப் பக்கங்களை முழுக்க தமிழில் வடிப்போம். நன்றி--ரவி 17:10, 3 ஜூலை 2009 (UTC)

செல்வா போன்ற ஒருவர் எவ்வளவு பொருமையாக விளக்கிக்கூறியும், மயூரநாதன் ஐயா போன்ற ஒருவர் இவ்வளவு சொல்லியும் கேட்காத ஒரு மனிதர், யார் வந்து சொன்னாலும் கேட்கப்போவதில்லை. ஆதலால் இதில் நேரவிரயம் செய்வதை தவிர்த்து கட்டுரைகள் வளர்ப்போம். மேலும் ரவி கூறியது போல கொள்கை பக்கங்கள், வழிகாட்டல்கள், உதவிப் பக்கங்களை தமிழில் வடிப்போம். இந்த பயனர் (இஞ்சி) த விக்கு ஒரு அத்தியவசியமான பங்களிப்பு வருவதற்கு காரணமாகியிருக்கிறார் என இப்பிரச்சனையின் நல்லதை உளமார ஏத்துக்கொள்வோம். இவருக்கு(இஞ்சி) பதிலிளித்து எவரும் நேரத்தை வீணடிக்கவேண்டாம். நம் பணியை நாம் தொடர்ந்து செய்வோம்.--கார்த்திக் 17:36, 3 ஜூலை 2009 (UTC)
விசமிகள், குளப்பவாதிகள் பற்றிய எமது விழிப்புணர்வை நாம் கூட்ட வேண்டும். தனி மனிதத் தாக்குதல், பண்பற்ற உரையாடல், இழிவுபடுத்தல் போன்ற கூறுகளை அவதானிக்கலாம். --Natkeeran 13:24, 5 ஜூலை 2009 (UTC)

தமிழ், ஆங்கில இலக்கணம்[தொகு]

மார்ச் 25, 2009 அன்று முத்தமிழ் என்னும் கூகுள் குழுமத்தில் கீழ்க்கண்ட செய்தியைக் குறித்திருந்தேன். முழுச்செய்தியை அங்கு பார்க்கவும். இங்கு ஆக்ஃசுபோர்டு அகரமுதலி கூறுவதை மட்டும் குறிப்பிடுகிறேன்:
"In early Eng. use grammar meant only Latin grammar, as Latin was the only language that was taught grammatically. In the 16th c. there are some traces of a perception that the word might have an extended application to other languages (cf. quot. 1530 under GRAMMATICAL 1); but it was not before the 17th c. that it became so completely a generic term that there was any need to speak explicitly of ‘Latin grammar’. Ben Jonson's book, written c1600, was app. the first to treat of ‘English grammar’ under that name. " (நன்றி, thanks to OED) --செல்வா 20:51, 3 ஜூலை 2009 (UTC)

so?--Ginger 22:33, 3 ஜூலை 2009 (UTC)

நாடுகளுக்கு ஈரெழுத்து குறுக்கங்கள் தேவை[தொகு]

ஐ.எசு.ஓ 639 போன்று ஒவ்வொரு நாட்டிற்கும் இரு தமிழ் எழுத்துகள் கொண்டு பட்டியல் வைத்துக்கொண்டால் நீளமான மொழி பெயர்களை தவிர்க்கலாம். எடுத்துக்காட்டாக மலையாளம்..ஆங்கிலத்தில் ml: என முடிந்துவிடுகிறது. அதேபோல நாணயங்களுக்கும்: $ என்ற குறியீடு அமெரிக்கா மட்டுமன்றி வேறுசில நாடுகளிலும்(ஆத்திரேலியா,சிங்கை..) பாவனையில் உள்ளதால் ஆங்கில இணையத்தில் US$ என குறிக்கப்படுகிறது. தமிழில் அமெரிக்க $ என நீளமாக குறிப்பிடாது ஐ.அ $,ஆத்தி.$,சி$ என சீர்படுத்திக்கொள்ளலாமா ? நாணய குறுக்கங்களை ஒரு பக்கத்தில் தெரியபடுத்தலாம். -- 05:07, 6 ஜூலை 2009 (UTC)−முன்நிற்கும் கருத்து Rsmn (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பன்னாட்டு சீர்தர அமைப்பின் 639 ஆவது சீர்தரத்தின் படி எந்த மொழியாயினும் நாடுகளைக் குறிக்க இலத்தின் ஈர் எழுத்துக்களைத் தான் பயன்படுத்த வேண்டும். வேரு ஓர் சீர்தரத்தின் படி அலகுகள் இலத்தின் எழுத்திலேயே எழுதப்பட வேண்டும். மீட்டர் என்பதற்கு மீ அல்ல m எனதே சரி (அல்லது குறுக்காமல் மீட்டர் என முழ்மையாக எழுதலாம்). அதே போல US$ என்பதை ஐக்கிய அமெரிக்க டாலர் என்றெழுதவேண்டும் குறுக்குவதாயின் US$ என்றே எழுதவேண்டும். இன்னொரு வழி [[ஐக்கிய அமெரிக்க டாலர்|US$]] என்றவாறு எழுதுவதாகும்.--Terrance \பேச்சு 00:26, 7 ஜூலை 2009 (UTC)
தெரன்சு, நீங்கள் சொல்வது பொதுவாக உண்மைதான், ஆனால் இலத்தீன் எழுத்தில் எழுதாத உருசிய மொழியில் அனைத்துலக அலகுகளுக்கு சிரிலிக் எழுத்தில் குறிக்கிறார்கள் பார்க்கவும். நம் பயன்பாட்டுக்காக மீ (மீட்டர்) போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தலாம். உங்களுக்கு நிப்பானிய மொழி தெரியுமாகையால் அவர்கள் இப்பக்கத்தில் எப்படி எழுதியிருக்கின்றார்கள் என்று கூற வேண்டுகிறேன். பயனர்:Rsmn கூறுவது பயனுடையது என்று நானும் நினைக்கிறேன். நாம் ஐ.நா என்று ஐக்கிய நாடுகள் அவையைக் குறிப்பது போல ஒவ்வொரு நாட்டுக்கும் நமக்கென்று, நம் பயன்பாட்டுக்கு "சீர்தரம்" செய்து வைத்துப் பார்க்கலாம். இந்தியாவுக்கு இயா, இந்தோனேசியாவுக்கு இனே, இரானுக்கு இரா, இராக்குக்கு இகு, ஐக்கிய இராச்சியத்துக்கு ஐஇ, நெதர்லாந்துக்கு நெத, தான்சானியாவுக்கு தாசா, சிறீலங்காவுக்கு சிறீ, பாக்கித்தானுக்கு பாக், என்று இப்படியாக முயன்று பார்க்கலாம். பயனர்:Rsmnசொன்ன கருத்து நல்ல புதிய கருத்து. சில நாடுகளுக்கான நாணயங்களுக்கு குறியீடுகள் உண்டு அவற்றை மாற்ற இயலாது, ஆனால் கனடிய டாலருக்கு C$ என்பதற்கு ஈடாக க$ என்று எழுதிப்பார்க்கலாம். --செல்வா 02:16, 7 ஜூலை 2009 (UTC)
நீங்கள் குறித்த இரசிய மொழி இணைப்பிலும் நிப்பொன் மொழி இணைப்பிலும் குறியீடு என்பதை இலத்தின் எழுத்துக்களால் குறித்துள்ளது போல தெரிகந்து. தமிழில் சுறுக்கியெழுதும் வழக்கம் இல்லைதானே?--Terrance \பேச்சு 04:28, 7 ஜூலை 2009 (UTC)

நுட்பக் குறிப்புகள்[தொகு]

  • Acai என்ற பெயரில் விக்கிப்பீடியாவுக்கு மேம்பட்ட இடைமுகம் ஒன்று வெளியாகி உள்ளது. பயனர் விருப்பத்தேர்வுகளில் appearance பகுதியில் vector வார்ப்புருவைத் தேர்ந்தெடுப்பது மூலம் இதைச் செயற்படுத்தலாம்.
  • Firefox 3.5 பயன்படுத்தினால் விக்கியில் உள்ள ஒலி, ஒளி கோப்புகளை இலகுவாக காணலாம்.
  • விக்கியில் நடக்கும் நுட்ப மாற்றங்களை அறிய http://techblog.wikimedia.org/ படிக்கலாம்

தமிழ் இணைய மாநாடு 2009ல் தமிழ் விக்கிப்பீடியா பங்கேற்பு[தொகு]

தமிழ் இணைய மாநாடு 2009ல் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக மு. மயூரன் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கான ஆய்வுக் கட்டுரை, பிற பங்களிப்புகளை நாம் கூட்டாகவே அளிப்பது நன்றாக இருக்கும். என்ன தலைப்பில் எழுதலாம்? சுந்தர், விக்கிப்பீடியா:Tamil Wikipedia: A Case Study கட்டுரையை அப்படியேவோ, அதை ஒட்டி தமிழாக்கியோ அளிப்பது இரு நிகழ்வுகளின் விதிகளுக்கும் பொருந்தி வருமா தெரியவில்லை?--ரவி 05:30, 10 ஜூலை 2009 (UTC)

சற்றேனும் மாற்றியெழுத வேண்டும். நெறிமுறைகளுக்காக இல்லாவிட்டாலும் எழுதப்படும் வாசகர்களுக்காக. -- சுந்தர் \பேச்சு 05:47, 10 ஜூலை 2009 (UTC)
இல்லை ரவி, சுந்தருடைய கட்டுரையை அப்படியே தமிழாக்கி எழுதுவது நல்லதல்ல. புதிதாகச் சூழலுக்கு ஏற்றவாறு எழுதுவதுதான் நல்லது. நிச்சயமாகச் சுந்தருடைய கட்டுரையில் இருந்து தகவல்கள் எடுத்துக்கொள்ளலாம் மேற்கோள்கள் சுட்டலாம். புதிதாகப் புதிய கோணத்தில் எழுதுவதுதான் சிறப்பு. சுந்தர் எடுத்துக்காட்டியது போல, ஒரே விடயத்தைத் திரும்பத்திரும்ப ஒரேமாதிரியாக எல்லா இடங்களிலும் வெளிப்படுத்தினால் அதனைக் கேட்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் கூடச் சலிப்புத்தட்டிவிடும். அதிகம் பயன்படாது. மகாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் என்ன அடைய விரும்புகிறோம் என்பதை முதலில் தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்றவாறு திட்டமிட்டுக் கட்டுரையை அமைப்பதே உகந்தது. மயூரநாதன் 12:52, 10 ஜூலை 2009 (UTC)
தமிழ் இணைய மாநாடு தமிழர்களையே குறிவைத்து இருக்கும். அத்துடன், தமிழிலான அறிவுப் பரவல் தொடர்பில் தமிழ் இணையத்தின் பயன்பாட்டு வடிவங்கள், பலவகையான சாத்தியப்பாடுகள் என்பன குறித்த முரண்பட்ட கருத்துக்களும், ஐயப்பாடுகளும், கேள்விகளும் மாநாட்டுக்கு வருபவர்கள் மத்தியில் இருக்கும். இத்தகைய ஒரு சூழலில், தமிழ் விக்கிப்பீடியாவின் நிலைப்பாடு; சாத்தியப்பாடுகள்; நிறை குறைகள்; எதிர் நோக்கும் பிரச்சினைகள்; விக்கித் திட்டங்களை எவ்வாறு தமிழ் மொழியினதும், மக்களினதும் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்; போன்ற விடயங்களை இக் கட்டுரையில் முக்கியத்துவம் கொடுத்து ஆராய்வது நன்மை பயக்கும். இவை தவிர இணையத்தின் ஒட்டுமொத்தத் தமிழ்வழி முயற்சிகளுக்குத் தமிழ் விக்கிப்பீடியா அளிக்கக்கூடிய பங்களிப்புப் பற்றியும் ஆராயலாம். அத்துடன், பொதுவான தமிழ் வளர்ச்சிக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளான, புதுச் சொற்களின் உருவாக்கம், கலைச்சொற்களின் தரப்படுத்தல், பிறமொழிகளின் தாக்கம், புதிய கருத்துக்களைத் தமிழில் மக்களிடம் கொண்டு செல்லல் போன்றவை தொடர்பில் முக்கிய பணி ஆற்றுவதற்குத் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இருக்கும் வசதிகள், வாய்ப்புக்கள் என்பன தொடர்பிலும் தகவல்கள் கட்டுரையில் இருப்பது நல்லது. மயூரநாதன் 13:32, 10 ஜூலை 2009 (UTC)
செருமனி தமிழிணைய மாநாட்டில் மயூரன் கலந்து கொள்வதையிட்டு மிக்க மகிழ்ச்சி. மயூரன் ஏற்கனவே தமிழ் விக்கி குறித்த பல இணையப் பரப்புரைகளை மேற்கொண்டவர். உண்மையைச் சொல்லப்போனால் என்னை விக்கிக்கு அறிமுகப்படுத்தியது அவரது தமிழ்விக்கி பற்றிய வலைப்பதிவே! அனைத்து விதத்திலும் பொருத்தமானவர்.--Kanags \பேச்சு 23:59, 10 ஜூலை 2009 (UTC)


கல்யாண் அனுப்பிய மடல் ஒன்றில் விக்கிபீடியா பட்டறை போன்ற வடிவமும் ஏற்கத்தக்கதே என்பது போன்ற கருத்தொன்றைச் சொல்லியிருந்தார். இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். --மு.மயூரன் 14:13, 11 ஜூலை 2009 (UTC)

தமிழ் கட்டுரையை ஏற்பார்களா?[தொகு]

தமிழ் இணைய மாநாடுதான், ஆனால் மாநாடு பற்றி முழுக்க (ஒரு செய்திக் குறிப்பைத் தவிர்த்து) ஆங்கிலத்தில் இருக்கிறது. எனவே இங்கு தமிழ்க் கட்டுரை சமர்க்க முடியுமா என்று அறிய வேண்டும். மயூரன் செல்வது குறித்து மகிழ்ச்சி. அத்தோடு சந்திரவதனா அவர்களும் போக இருப்பதாக அறிகிறேன். இருவரும் செல்ல முடிந்தால் சிறப்பு. --Natkeeran 02:30, 11 ஜூலை 2009 (UTC)

அங்கு ஆங்கிலத்தில் அறிவிப்பு இருப்பது வருந்தத்தக்கது. நேற்றுதான் ஒரு பகுதியை மொழிபெயர்த்து அனுப்பியுள்ளேன். எப்படியானாலும் தமிழில் கட்டாயம் எழுதலாம். மயூரன் இம்மாநாட்டில் கலந்து கொள்வது சிறப்பு. (இதுவரை செய்திருக்காவிடில்) விரைவில் உங்கள் பெயரைப் பதிந்து கொள்ளுங்கள், மயூரன். சந்திரவதனாவும் கலந்து கொள்ள முடிந்தால் நன்று. -- சுந்தர் \பேச்சு 03:09, 11 ஜூலை 2009 (UTC)
அவர்களின் செயல்பாட்டை விமர்சிக்க இது தளம் அல்ல. ஆனால் அவர்கள் எந்தளவுக்கு "தமிழ்" இணையத்தில் ஈடுபாடாக உள்ளார்கள் என்பதைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. பிறரும் இங்கு தமது கவனத்தை தர வேண்டுமா என்று இரண்டு முறை யோசிக்க வேண்டும். --Natkeeran 13:29, 11 ஜூலை 2009 (UTC)


கட்டுரையை தமிழில் அளிப்பதில் அங்கே எந்தத்தடையும் இல்லை என்றே நம்புகிறேன். கட்டுரை தமிழிலேயே அளிக்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். மாநாடு தமிழருக்கானது. --மு.மயூரன் 14:13, 11 ஜூலை 2009 (UTC)

தமிழ் இணையம் குறித்த நூலில் தமிழ் விக்கிபீடியா[தொகு]

தமிழ் இணையம் குறித்து நூல் எழுதும் நண்பர் ஒருவர் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய சில கேள்விகளைக் கேட்டுள்ளார். விக்கிப்பீடியா:தமிழ் இணையம் நூலில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் என்ற பக்கத்தில் உங்கள் பதில்களை அளிக்கலாம்--ரவி 05:37, 10 ஜூலை 2009 (UTC)

தொலைவுக்கு எந்த அலகைப் பயன்படுத்துவது?[தொகு]

புதுச்சேரி கட்டுரையில் ‘170 கல்’ என்று சென்னைக்கும் புதுவைக்கும் இடையிலான தொலைவு தரப்பட்டுள்ளதை கண்டேன். ‘கல்’ என்பது எந்த தொலைவிற்கும் வரையறுக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். படிப்பவர்கள் இது குறித்து கி.மீ. என்று அனுமானம் செய்தே படிக்கவேண்டும். ’மைல்’-இல் தொலைவைக் குறிக்கும் நாட்டில் வசிப்பவர்கள் இதனை மைல் என அனுமானம் செய்யலாம். எனவே மெட்ரிக் அளவான கி.மீ.ஐயே தமிழ் விக்கியி முழுவது பயன்படுத்துவது சிறந்தது.−முன்நிற்கும் கருத்து Mageshsai (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஆம் நீங்கள் சொல்வது முக்கியமான கருத்து. நாம் மெட்ரிக் முறையை முதன்மைப் படுத்துவது நல்லது. கிமீ என்று எழுதலாம். கூடிய மட்டிலும் மைல், அடி அங்குலம் முதலான பழைய பிரித்தானியப் பேரரசின் அலகுக்ளை பிறைக்குறிகளுக்குள் கொடுக்கலாம். இன்னமும் அமெரிக்கர்கள் பொதுவாழ்விலும் அறிவியலிலும் கூட அதிக அளவு பழைய பிரித்தானிய முறையைப் பின்பற்றுகிறார்கள்.உலகம் முழுவதிலுமே அமெரிக்காவும், மியான்மாரும், லைபீரியாவும் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே மெட்ரிக் முறையைப் பின்பற்றாமல் இருக்கின்றன.--செல்வா 13:54, 11 ஜூலை 2009 (UTC)

நற்கீரன், படிமம்:Shanaathanan.jpg பக்கள் உரையாடல் இங்கே ...[தொகு]

படிமங்கள் நீக்கப்படுவது பற்றி[தொகு]

இந்தப் படிமம் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தரவும். நீங்கள் முன்னெடுக்கும் பணியை விபரித்து மேற்கொள்வது நல்லது. சில படங்கள் வரலாற்றுத் தகவல்களுக்காக இருக்க வேண்டியவை. அத்தோடு ஒரு குறிப்பிட்ட தொகுதிப் படங்களை மட்டும் நீக்குவது போலவும் தெரிகிறது. --Natkeeran 13:42, 11 ஜூலை 2009 (UTC)

இந்த படிமம் கிரியேட்டிவ் காமன்சின் Attribution-Noncommercial-No Derivative Works 2.0 Generic என்ற பதிப்புரிமையின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. Noncommercial-No Derivative வகை படிமங்கள் வீக்கிப்பீடியாவுக்கு ஏற்புடையதல்ல. படிமம் அவ்வளவு முக்கியமாயின் Attribution-Share Alike 3.0 Unported வகை பதிப்புரிம்னையின் கீழ் பிலிக்கர் தளத்தில் அல்லது இங்கே வெளியிடச் சொல்லுங்கள்.
//நீங்கள் முன்னெடுக்கும் பணியை விபரித்து மேற்கொள்வது நல்லது. // எத்தனெயோ முறை கதைத்தாயிற்று. விபரிக்க : காப்புரிமை மீறிய படிமங்கள் நீக்கப்படும்.
//சில படங்கள் வரலாற்றுத் தகவல்களுக்காக இருக்க வேண்டியவை.// தவி ஒரு படிமங்களின் பரண் இணையம் அல்ல. படங்களின் பயன்பாட்டை முதலில் பதிப்புரிமைதான் நிர்ணயிக்கும். பின்னர் அதன் தேவை. தேவை கூடுதலாக இருந்து பொது உரிமைப் படிமமொன்றை தயாரிக்க முடியாவிட்டால்..அடுத்த நிலைக்கு போகலாம்.
//ஒரு குறிப்பிட்ட தொகுதிப் படங்களை மட்டும் நீக்குவது போலவும் தெரிகிறது. // இங்கே உள்ளதன் அடிப்படையில் தான் செய்கிறேன். நீங்கள் இங்கே சூட்டுவது எனக்கு புரிகிறது. நீங்கள் பதிவேற்றிய தமிழீழத்துடன் தொடர்பான படங்கள் பதிப்புரிமைகள் மீறியுள்ள நிலையில் அவற்றை நிக்கீனேன். பல படிமங்களுக்கு பிழையான காப்புரிமை கொடுக்கப்பட்டுள்ளது.--Terrance \பேச்சு 22:50, 11 ஜூலை 2009 (UTC)
விளக்கத்துக்கு நன்றி. இலங்கைப் படைத்துறை மேற்கொண்ட மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பான படங்களை நீக்கமால் இருப்பது தேவை. அங்கு சுதந்திரமாக உடகங்கள் இயங்கமுடியாத நிலையில் வரலாறு தொடர்பான சில படங்கள் அவசியமாகின்றன. தேவைக்கு ஒரு முக்கியத்தும் இங்கு தரப்பட வேண்டும். இவை சினிமா நடிகைகளின் படங்கள் இல்லை. அவற்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். --Natkeeran 04:34, 12 ஜூலை 2009 (UTC)
முறையான வார்ப்புருக்களை இட்டு அவற்றை அனுமதிப்பது நல்லது.--Kanags \பேச்சு 03:32, 12 ஜூலை 2009 (UTC)
ஆம் படிமங்களை பதிவேற்றும் போதே தேவையான வார்ப்புருக்களை இட்டு பதிவேற்றல் மூலம் பின்னர் படிமங்கள் நீக்கப்படுவதை தவிர்க்கலாம். எனக்கும் வேலை மிச்சம் :). இலங்கை போர் தொடர்பான படிமங்களைக் குறிக்க புதிய வார்ப்புருவை உருவாக்குகிறேன். பதிவேற்றியுள்ள படிமங்களின் காப்புரிமை நிலைமை சரி பார்ப்பது பதிவேற்றுனரின் கடமை. தேவைக்கு முக்கியத்துவம் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். எனினும் தேவை ஒருவருக்கொருவர் மாறுபடக்கூடியது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சிலருக்கு திரைப்பட நடிகைகள் முக்கியமாக இருக்கலாம். அது போக எல்லா திரைப்பட நடிகைகளது கட்டுரையும் ஒரே முக்கியத்துவமல்ல.--Terrance \பேச்சு 04:07, 12 ஜூலை 2009 (UTC)
நன்றி டெரன்சு. உங்களோடு முரண்படவது எனக்கு நோக்கம் இல்லை. ஓரளவு புரிந்து நடந்தால் மகிழ்ச்சியே. ஒவ்வொருக்கொருவர் முக்கியத்துவம் வேறுபடும் என்பது ஓரளவு உண்மை. அதேவேளை ஒரு புறவய மதிப்பீடும் உண்டு. திரைப்பட நடிகையா, மனத உரிமைகளா முக்கியன் என்பதை அந்த நோக்கில் தீர்மானிக்கலாம். --Natkeeran 04:34, 12 ஜூலை 2009 (UTC)