மோரிகோன்

ஆள்கூறுகள்: 26°15′12″N 92°20′33″E / 26.253317°N 92.342405°E / 26.253317; 92.342405
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோரிகோன்
நகரம்
மோரிகோன் கல்லூரி
மோரிகோன் கல்லூரி
மோரிகோன் is located in அசாம்
மோரிகோன்
மோரிகோன்
அசாம் மாநிலத்தில் மோரிகோன் நகரத்தின் அமைவிடம்
மோரிகோன் is located in இந்தியா
மோரிகோன்
மோரிகோன்
மோரிகோன் (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°15′12″N 92°20′33″E / 26.253317°N 92.342405°E / 26.253317; 92.342405
நாடு India
மாநிலம்அசாம்
கோட்டம்நடு அசாம் கோட்டம்
மாவட்டம்மரிகாவன் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்மோரிகோன் நகராட்சி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்29,164
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமிய மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்782105
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS
இணையதளம்morigaon.nic.in

மோரிகோன் (Morigaon), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடு அசாம் கோட்டத்தில் அமைந்த மரிகாவன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[1]மோரிகோன் நகரம் மாநிலத் தலைநகரான குவாகாத்திக்கு கிழக்கே 77 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 27 மோரிகானை குவாகாத்தி நகரத்தை இணைக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 8 வார்டுகளும், 6,627 வீடுகளும் கொண்ட மோரிகோன் நகரத்தின் மக்கள் தொகை 29,164 ஆகும். அதில் ஆண்கள் 14,793 மற்றும் பெண்கள் 14,371 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 971 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 89.4% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,414 மற்றும் 3,305 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 77.84%, இசுலாமியர் 21.77% மற்றும் பிறர் 0.29% ஆகவுள்ளனர்.[2]

போக்குவரத்து[தொகு]

வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தின் இருப்புப் பாதைகள் குவாகாத்தி-லாம்டிங் நகரங்களை இணைக்கும் தொடருந்துகள், மோரிகோன் நகரத்திற்கு 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சபர்முக் சந்திப்பு தொடருந்து நிலையம் வழியாகச் செல்கிறது.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MORIGAON Pin Code, Search MORIGAON MARIGAON PinCode". Archived from the original on 7 December 2019. பார்க்கப்பட்ட நாள் 8 December 2014.
  2. Marigaon Population, Religion, Caste, Working Data Morigaon, Assam - Census 2011
  3. CHAPARMUKH JN CPK Railway Station Trains Schedule


"https://ta.wikipedia.org/w/index.php?title=மோரிகோன்&oldid=3583839" இலிருந்து மீள்விக்கப்பட்டது