பெனிட்டோ முசோலினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முசோலினி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெனிட்டோ முசோலினி
Benito Mussolini
இத்தாலியின் 40 வது பிரதமர்
ஆட்சியாளர்கள்மூன்றாம் விக்டர் இமானுவேல்
(அரசராக)
முன்னையவர்லுகி பேக்டா
(தலைவராக)
பின்னவர்பியுட்ரோ படாஜியோ
பேர்ரசின் முதல் படைத்தளபதி
பதவியில் 30 மார்ச் 1938 முதல் 25 ஜூலை 1943 வரை
பின் வந்தவர்
பியுட்ரோ படாஜியோ
இத்தாலிய சோசலிச குடியரசு டியூஸ்
பதவியில் 23 செப்டம்பர், 1943 முதல் 25 ஏப்ரல் 1945 வரை.
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புthumb
(1883-07-29)சூலை 29, 1883
பிரிடேப்பியோ, போர்லி, இத்தாலி
இறப்புஏப்ரல் 28, 1945(1945-04-28) (அகவை 61)
கோமோ ஆறு, இத்தாலி
இளைப்பாறுமிடம்thumb
250px
தேசியம்இத்தாலியர்
அரசியல் கட்சிபாசிசக் குடியரசுக் கட்சி
(1943–1945),
தேசிய பாசிசக் கட்சி
(1921–1943)
இத்தாலிய பொதுவுடமைக் கட்சி
(1901–1914)
துணைவர்sரெய்ச்சல் முசோலினி
பெற்றோர்
  • thumb
  • 250px
வேலைபத்திரிகை எழுத்தாளர், அரசியல்வாதி, சர்வாதிகாரி

பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883ஏப்ரல் 28, 1945) என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922–1943 காலப்பகுதியில் தலைமை வகித்தவர். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினார். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கி பேணினார். ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்றார். ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். இவரது உடல் மிலானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

இளமைக்காலம்[தொகு]

தோற்றம்[தொகு]

முசோலினி எமிலியா-ரொமக்னா என்னும் ஊரிலுள்ள போர்லி மாகாணத்தினலுள்ள டோவியா டை பிரிடாப்பியோ என்னும் நகரத்தில் ஓர் உழைக்கும் பாட்டாளியின் குடும்பத்தில் பிறந்தார். இவர் பெற்றோருக்கு இவரே மூத்தவர் இவரின் உடன் பிறந்தோர் அமால்டோ முசோலினி மற்றும் எட்விக் முசோலினி. இவர் தந்தை பெயர் அலெக்சாண்ட்ரோ முசோலினி. இவர் ஒரு இரும்பு அடிக்கும் கொல்லர். இவர் தாய் ரோசா முசோலினி ஆசிரியை. இவர் தாய் கத்தோலிக்க மதத்தில் அதிக இறை பற்றுடையவர்.

கல்வி[தொகு]

முசோலினி சிறு வயதில் தன் தந்தையின் தொழிலுக்கு மிகவும் உதவி புரிந்தார். தந்தையாரின் சீர்திருத்தக் கொள்கையினால் அவருக்கு ஞானஸ்நானம் செய்யப்படவில்லை. தன் தந்தையின் பொதுவுடமை, சீர்திருத்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அதன் காரணமாக மெக்சிக்கன் சீர்திருத்தவாதியான பெனிட்டோ ஜீவாரசின் பெயரை தன் பெயரோடு சேர்த்து பெனிட்டோ முசோலினி என்று மாற்றி கொண்டார். பிறகு விடுதிப்பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டார் அப்பள்ளியில் இவர் செய்த குறும்புகளின் காரணமாக பள்ளியைவிட்டு நீக்கப்பட்டு வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டார், அங்கு சிறப்பானதொரு கல்வி பயின்றார். 1901 ஆம் ஆண்டு பள்ளி இறுதி தேர்வுக்குப்பின் தொடக்க கல்வி ஆசிரியராக அப்பள்ளியிலேயே நியமிக்கப்பட்டார்.

இராணுவத்தில் பணிபுரிதல்[தொகு]

முசோலினி இராணுவத்தில் 1917

1902 ம் ஆண்டு முசோலினி தன் சொந்த மண்ணை விட்டு சுவிட்சர்லாந்துக்கு குடியேறினார்.அங்கு வேலை கிடைக்காமல் குடும்ப வறுமைக்கு தள்ளபட்டார். அதன் சோசலிச இயக்கத்தில் சேர்ந்தனினால் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு தன்னிச்சையாக இராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்தார். அவருடைய இராணுவப்பணியில் குறைகள் குற்றங்கள் ஏதுமின்றி சிறப்பான பணி புரிந்தார். இத்தகவல்கள் அவருடைய இராணுவத்தொழில் குறிப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1917 வரை இராணுவத்தில் சிறப்பானதொரு பணிபுரிந்தமையால் 40 க்கும் அதிகமான பதக்கங்கள் அவர் உடையை அலங்கரித்தன. அதன்பின் டைபாய்டு விஷக்காய்ச்சலின் காரணமாகவும் மார்ட்டர் வெடிவிபத்தில் சிக்கி விபத்துக்கள்ளானதல் அப்பணியை தொடரமுடியாமல் போனது.

அரசியல் செயற்பாடுகள்[தொகு]

1912 இல் இத்தாலிய சோசலிஸ்ட் கட்சியின் தேசிய இயக்குநராக இருந்த முசோலினி. முதலாம் உலகப் போரில் இராணுவ தலையீட்டிற்கு நடுநிலைமை வகிக்காத்தால், கட்சியின் நடுநிலைப்பாட்டிற்கு எதிரான செயலைசெய்த்தாக கூறி, பிஎஸ்ஐ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1917 வரை போரின் போது அவர் ராயல் இத்தாலிய இராணுவத்தில் பணியாற்றினார். பின்பு அவர் காயமடைந்ததால் விடுவிக்கப்பட்டார்.

PSI கட்சியை முசோலினி கண்டனம் செய்தார், இப்போது அவருடைய கருத்துக்கள் சோசலிசத்திற்கு பதிலாக தேசியவாதத்தை மையமாகக் கொண்டு இருந்தது, பின்னர் பாசிச இயக்கத்தை நிருவ இதுவே காரணமாகியது.அவர் சமத்துவமற்ற வர்க்கமுரண்பாடுகளை எதிர்த்து வந்தார், அதற்கு பதிலாக புரட்சிகர தேசியவாத வர்க்கக் கோட்பாடுகளை கடந்து செல்லுமாறு பரிந்துரைத்தார். அக்டோபர் 1922 இல் ரோம் நகரில் மார்சில் இத்தாலிய வரலாற்றில் இளைய பிரதமராக ஆனார் (2014 பிப்ரவரி மாதம் மாட்டோ ரென்சி நியமனம் வரை).[1]

பின்னர், முசோலினி மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஒரு கட்சியை ஒரு கட்சி சர்வாதிகாரமாக மாற்ற தொடர்ச்சியான சட்டங்கள் மூலம் தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தினர். ஐந்து ஆண்டுகளுக்குள் அவர் சர்வாதிகார அதிகாரத்தை சட்டப்பூர்வ மற்றும் அசாதாரணமான வழிகளில் நிறுவியதோடு ஒரு சர்வாதிகார அரசை உருவாக்க விரும்பினார். முசோலினி 1943 ஆம் ஆண்டில் கிங் விக்டர் இம்மானுவல் மூன்றாம் அதிகாரத்தை கைப்பற்றும் வரை பதவியில் இருந்தார். சில மாதங்களுக்குப் பிறகு, அவர் இத்தாலிய சமூக குடியரசின் தலைவராக ஆனார். 1945 ல் அவர் இறக்கும்வரை அவர் பதவியை வகித்தார்.

முசோலினி குறைந்தபட்சம் 1942 வரை ஐரோப்பாவில் ஒரு பெரிய போரை தாமதப்படுத்த முயன்றார். இருப்பினும், ஜெர்மனி 1 செப்டம்பர் 1939 இல் போலந்து மீது படையெடுத்தது. இதன் விளைவாக பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம்(United Kingdom) இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தை அறிவித்தது.அறிவித்தது. ஜூன் 10, 1940-ல் பிரான்சின் வீழ்ச்சிக்கு உடனடியாக முசோலினி ஜேர்மனியின் போரில் அதிகாரப்பூர்வமாக போரில் நுழைந்தார், ஆனால் இத்தாலிக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் நீண்ட போர் நடத்தும் இராணுவ திறன் மற்றும் ஆதாரங்கள் இல்லை என்பதை அறிந்திருந்தார்.1941 ம் ஆண்டு கோடையில், முசோலினி இத்தாலிய படைகளை சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பில் பங்கேற்க அனுப்பினார், மேலும் டிசம்பர் மாதம் அமெரிக்காவுடன் யுத்தம் நடந்தது.ஜூலை 24, 1943 இல் சிசிலி மீது கூட்டணிப் படைகளின் படையெடுப்பு தொடங்கியவுடன், அவர் பாசிச கிராண்ட் கவுன்சிலால் பதவி நீக்கம் செய்யப்பட்டார், ஜூலை 25 இல் கிங் வரிசையில் கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 12, 1943 இல், ஜெர்மன் சிறப்பு படைகளால் முசோலினி கிராஸ் சாஸோ தாக்குதலில் சிறையில் இருந்து மீட்கப்பட்டார். ஏப்ரல் இறுதியில் 1945 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், முசோலினி மற்றும் அவரது மனைவி கிளாரா பெட்ஸ்கி சுவிட்சர்லாந்துக்குச் செல்ல முயன்றனர், ஆனால் இருவரும் இத்தாலிய கம்யூனிஸ்டுகளால் கைப்பற்றப்பட்டுமற்றும் சுருக்கமாக துப்பாக்கி சூடு மூலம் கொல்லப்பட்டனர்.[2]

பாசிசம் உருவாதல்[தொகு]

முதலாம் உலகப் போரில் நேச நாட்டு படைபிரிவுக்காக பணிபுரிந்து திரும்பியவுடன் தன் சோசலிச கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சோசலிசம் தோற்றுப்போன ஓன்று. ஆகையால் தன்னை கொடுரகுணம் கொண்ட மனிதனாக மாற்றிக்கொண்டார். இப்படியிருந்தால் மட்டுமே இத்தாலியை அதன் பழையநிலைக்கு நிமிர்த்தமுடியும் என நம்பினார். சோசலிசம் இறந்துபோன ஓன்று; அவற்றால் நாட்டுக்கு பயன் இல்லை என்பதை அறிவித்தார்.

பாசிசத்தின் முக்கிய பங்கு[தொகு]

பாசிசம் வகுப்பு வாதத்தையும் வகுப்பு வாதக்கலவரங்களையும் எதிர்த்த்து. பாசிசம் தேசியவாதிகளின் உரிமைகளை நிறைவேற்றவும் அவர்களின் பங்கினால் தேசத்தை ஒருங்கிணைத்து இத்தாலியை அதன் பழைய உயரத்துக்கு உயர்த்தியது. பிரபுக்களையும் நடுத்தரவர்க்கத்தினரையும் இணைக்கும் பாலமாக பாசிசம் பயன்பட்டது. இதன் மூலம் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியை இத்தாலியில் நுழைய முடியாமல் செய்தது. தொழிலாள வர்க்கத்துக்கு முசோலினி எதிரியல்ல என்றாலும் பாசிச கொள்கைக்கு எதிராக யார் செயல்படுவதையும் பாசிஸ்டுகள் தடுத்தனர். இதன் கொள்கை விளக்க அறிவிப்பான பாசிசப் போராட்ட அறிக்கை (The Manifesto of the Fascist Struggle) ஜூன்,1919 ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் குறைந்தபட்ச ஊதியம், பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை ஊழியர்களின் தொழிற்சங்க கோரிக்கைகளையும் உள்ளடக்கி வெளியிடப்பட்டது. இந்த கொள்கை பழமைவாதிகளையும், புதுமைவாதிகளையும் ஒரு சேர கட்டுபடுத்தியது. அனைவராலும் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டு பின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது,

அரசியலின் மூன்றாம் வழி[தொகு]

முசோலினியின் கருஞ்சேனை

முசோலினியின் பாசிசக் கொள்கையில் அதிக பற்று கொண்ட முசோலினியின் நம்பிக்கைக்குரிய டினோ கிராண்டி என்பவர் இராணுவத்தில் ஒய்வு பெற்றவர்களிடம் பரப்புரை செய்து அவர்களை ஒன்று திரட்டி கருஞ்சேனை (Black Shirts) என்ற தனி இராணுவப்பிரிவை உருவாக்கினார். இந்த கருஞ்சேனைப் படையினர் கம்யூனிசவாதிகளையும், பொதுவுடமை வாதிகளையும் மற்றும் குழப்பவாதிகளையும் அடக்கும் பணியினை மேற்கொண்டது. இது அரசியலின் மூன்றாம் வழியாக (The Third Way) கையாளப்பட்டது. கம்யூனிசத்தை அப்போதய அரசு வெறுத்ததினால் இவற்றின் வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் அப்போதைய அரசு கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக பாசிஸ்டுகளின் எண்ணிக்கை இரண்டு வருடங்களில் கணிசமான எண்ணிக்கையை எட்டியது. பின் தேசிய பாசிசக் கட்சியாக (National Fascist Party) ரோமில் உருவெடுத்தது. 1921 தேர்தலில் முசோலினி முதன் முறையாக இத்தாலி கீழ் சபை பாராளுமன்றக்குழு தலைவராகத் (Chamber of Deputies) தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கொள்கையால் முசோலினி 1911 முதல் 1938 வரை யூதர்களின் கணிசமான எதிர்ப்பையும் பெற்றுக்கொண்டார்.

இட்லரும் முசோலினியும்[தொகு]

இட்லருடன் முரண்பாடு[தொகு]

முசோலினியும் இட்லரும் ஆரம்பத்தில் எதிரிகளாகத்தான் இருந்தனர். 1933 இல் முசோலினியின் நண்பர் எய்ஞ்பெட் டால்பஸ் மற்றும் அவருடைய நண்பரும் ஆஸ்திரிய நாசிக்களால் கொல்லப்பட்டனர். அது முதல் முசோலினி இட்லரை எதிரியாகத்தான் பாவித்தார். முசோலினியின் பாசிசக் கட்சியில் யூதர்கள், யூதரல்லாதவர், யூத பகைமை என்ற கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படவில்லை. பாசிசக்கொள்கையை மட்டுமே வலியுறுத்தினார். ஆகையால் முசோலினிக்கு இட்லரின் கொள்கை பிடிக்கவில்லை. முசோலினி போப்பிடம் பற்றுகொண்டவர். அது மட்டுமில்லாமல் கலாச்சார பண்புகளையும், செயல்களையும் வைத்து ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வர்க்கபேதத்தை உருவாக்கலாம் ஆனால் பிறப்பினால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் எடுபடாது என்ற நம்பிக்கையுடையவர் என்பதால் இட்லரின் நாசிசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 1920 முதல் 1934 வரை உள்ள கால ஒட்டத்தில் யூதர்கள் சமூகத்தின் எல்லா மட்டங்களில் இருந்ததால் இத்தாலிய பாசிசம் யூதர்களுக்கு எதிரான வர்க்கபேதத்தையும், வகுப்புவாதத்தையும் வளர்க்கவில்லை. அவர்கள் ஒரு சிறு கூட்டமாக இருந்ததால் ரோம் அரசர் காலத்திலிருந்து அவர்களால் எந்த தொல்லையும் ஏற்படவில்லை.

இட்லருடன் இணக்கமாதல்[தொகு]

1938 ல் இட்லரின் தாக்கம் இத்தாலியில் அதிகமிருந்த நேரத்தில் இனவேறுபாட்டுணர்வு அறிக்கையை முசோலினி தயாரித்து வெளியிட்டார் அந்த அறிக்கை முழுக்க முழுக்க இட்லரின் கொள்கையை பறை சாற்றியது. அதில் எந்த நேரத்திலும் எந்த பதவியிலிருந்தும், குடியுரிமையிலிருந்தும் யூதர்களை விலக்க உரிமையுண்டு என்பதை அறிவித்தது. இந்த அறிக்கை இத்தாலிய பெரும்பான்மை பாசிசவாதிகளின் ஆதரவை பெறவில்லை மாறாக முசோலினிக்கு எதிர்ப்பை வளர்த்தது. ரோம ஆலயத்தின் போதகர் பதினேழாம் போப் பயஸ் இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதினார்.

முசோலினியை கொல்ல முயற்சி[தொகு]

முசோலினியின் பரப்புரைகள் அவ்வப்போது எதிர்ப்புகளை காட்டத்தயங்காது பெரும்பாலும் சிறிய எதிர்ப்புகளை அவரே ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார். 7 ஏப்ரல், 1926 வையலட் ஜிப்சன் துப்பாக்கியால் சுட்டதில் அவர் மூக்கில் காயம் ஏற்பட்டது. பின் 31 அக்டோபர், 1926 ஐரிஷ் பெண்ணும் அவர் மகளும் சுட்டதில் தப்பித்துகொண்டார், 15 வயதுடைய ஆன்டியோ ஜாம்போனி சுடமுற்பட்டபோது பிடிபட்டு அங்கேயே மரண தண்டனை கொடுக்கப்பட்டது. ரோமிலும் அவரை கொல்ல இரு கலகக்காரர்கள் முயன்றனர். முயற்சி முறியடிக்கப்பட்டு இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 1938 ல் சிலோவேனிய பாசிசபகைமைவாதி கோபரிட் முயற்சித்தான் அவன் முயற்சி தோல்வியுற்றது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

முசோலினியின் முதல் மனைவி பெயர் இடா டாலசர், 1914 ம் ஆண்டு டிரன்டோ வில் திருமணம் புரிந்தார் இவர்களுக்கு பெனிட்டோ அல்பினோ என்ற மகன் உள்ளார், ஓராண்டு கழித்து முசோலினி ராச்சிலி குடி என்பவரை 1915 ல் மணந்தார். 1910 ஆண்டே இவருக்கு திருமணம் நடந்ந்துவிட்டதாகவும் தன் அரசியல் கவுரவத்திற்காக இருவரிடமும் மறைத்துவிட்டார். முதல் மனைவியும் மகனும் பின்னாளில் அதிக தொல்லைகொடுத்தனர். ரேச்சலுக்கு இரு மகள்கள் எட்டா (1910–1995) அன்னா மரியா (3 செப்டம்பர் 1929- 25 ஏப்ரல் 1968), அதற்குபின் ரவேன்னாவை 11 ஜூன் 1960, நன்டோ புசி நெக்ரி ல் திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு விட்டோரியோ (1916–1997). புருனோ (அக்டோபர் 1918-7 ஆகஸ்டு 1947). ரோமேனோ (1927–2006) என மூன்று மகள்கள் பிறந்த்னர். முசோலினிக்கு பல தாரங்கள் உண்டு. மார்கெரிடா சபாட்டி கடைசியாக கிளாரா பெட்டாசி இன்னும் பல பெண்களுடன் லீலா விநோதங்கள் புரிந்துள்ளதாகவும் அதனால் பெண்களின் சூழல் அதிகம் இருந்ததாக அவருடைய சுயசரிதையாளர் நிக்கோலஸ் பேரல் குறிப்பிடுகிறார்.

முசோலியின் மரணம்[தொகு]

முசோலினி மற்றும் மனைவி கிளாரா பெட்டாசி மரணம்

28 ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். 29 ஏப்ரல், 1945 ம் ஆண்டு முசோலினி மற்றும் அவர் மனைவி கிளாரா பெட்டாசியின் உடல்களும் மிலனில் உள்ள பியஜேல் லொரெட்டோ விற்கு எடுத்துசெல்லப்பட்டு தலைகீழாக எரிவாயு நிரப்பும் நிலையத்தின் கூரையிலுள்ள இறைச்சியை தொங்கவிடும் கொக்கியில் மாட்டித் தொங்கவிட்டனர். இந்த செயல்களின் நோக்கம் பாசிசவாதிகளை அச்சுறுத்துவதற்காகவும், இதற்குமுன் பார்ட்டிசான்களை இக்கொடுரமான முறையிலேயே முசோலினியும் அச்சு நாட்டு அதிகாரிகளும் செய்ததற்கு பழிவாங்கும் நோக்கில் தொங்கவிடப்பட்டது, அதன் கீழேயிருந்து அங்குவாழும் மக்கள் அவர்களின் உடல்கள் மீது கற்களைக்கொண்டு அடித்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துகொண்டனர். பலரும் வசைவு மொழிகொண்டு பதவியிழந்த தலைவரின் அட்டூழியங்களை கேலியும் கிண்டலுமாக பேசினர்.முசோலினியின் விசுவாசியும் தீவிர பாசிசவாதியுமான அக்கிலி ஸ்டாரேஸ் தன்னைத்தானே ஒப்படைத்து பின் மரணதண்டனை விதிக்கபட்டு முசோலினியின் உடல் தொங்கவிடப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று காட்டப்பட்டார் அங்கு முசோலினியின் உடலை பார்த்து உன்னை விட யார் இது மாதிரி செய்யமுடியும் முசோலினி நீ ஒரு கடவுள் என்று கூறி வீரவணக்கம் வைத்து என் தலைவனுக்காக நான் என்ன கொடுக்கமுடியும் என்று கூறியவுடன் அக்கிலி ஸ்டாரேஸ் தலையில் குண்டுகள் பாய்ந்தன தன் தலைவனின் பக்கத்தில் அந்த விசுவாசியும் சரிந்து விழுந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனிட்டோ_முசோலினி&oldid=3696352" இலிருந்து மீள்விக்கப்பட்டது