மீனவர் பாடல் (தமிழ் நாட்டுப்புறவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாட்டுப்புற
பாடல் வகைகள்
தமிழ் நாட்டார் பாடல்கள்
தாலாட்டுப் பாடல்
கும்மிப் பாடல்
சோபனப் பாடல்
நழுங்குப் பாடல்
வாழ்த்துப் பாடல்
ஒப்பாரிப் பாடல்
விளையாட்டுப் பாடல்
நையாண்டிப் பாடல்
கதைப்பாடல்
காதல் பாடல்
தொழிற்பாடல்
மீனவர் பாடல்
நெற்குத்திப் பாடல்
ஏற்றப் பாடல்
நடவுப் பாடல்

தொகு

தொழிற் பாடல் வகையைச் சேர்த நாட்டுப்புறப் பாடல்களில் மீனவர் பாடல்களும் ஒன்று. கடல் தொழில் செய்யும் போது பாடப்படும்

பாடல்களே மீனவர் பாடல்கள் ஆகும்.

எடுத்துக்காட்டு[தொகு]

இந்த எடுத்துக்காட்டு சு. சக்திவேலின் நாட்டுப்புற இயல் ஆய்வு நூலில் இடம்பெற்றுள்ளது. [1]

விடிவெள்ளி நம்விளக்கு - ஐலசா
விரிகடலே பள்ளிக்கூடம் - ஐலசா
அடிக்கும் அலையே நம்தோழன் - ஐலசா
அருமைமேகம் நமதுகுடை - ஐலசா
பாயும் புயல் நம்ஊஞ்சல் - ஐலசா
பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா
காயும் ரவிச்சுடர்கூரை - ஐலசா
கட்டுமரம் வாழும் வீடு - ஐலசா
மின்னல்வலை அரிச்சுவடி - ஐலசா
பிடிக்கும் மீன்கள் நம்பொருட்கள் - ஐலசா
மின்னல் இடிகாணும் கூத்து - ஐலசா
வெண்மணலே பஞ்சுமெத்தை - ஐலசா
முழுநிலாதான் கண்ணாடி - ஐலசா
மூச்சடக்கி நீந்தல் யோகம் - ஐலசா
தொழும் தலைவன் பெருவானம் - ஐலசா
தொண்டு தொழிலாளர் நாங்கள் - ஐலசா
ஒத்துமை கொண்டாடனும் - ஐலசா
உரிமையை உயர்த்திடனும் - ஐலசா

மேற்கோள்கள்[தொகு]

  1. சு. சக்திவேல். (2003). நாட்டுப்புற இயல் ஆய்வு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.