விளையாட்டுப் பாடல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
பாடல் வகைகள் |
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சிறுவர்கள் விளையாடும் பொழுது பாடப்படும் பாடல்கள் விளையாட்டுப் பாடல்கள் எனப்படும். பாட்டும் விளையாடும் ஒன்றிணைந்து இருக்கும். இப்பாடல்கள் நாட்டார் பாடல் வகைகளில் அடங்கும்.
பொருளடக்கம் |
கிட்டிப் புள்ளு [தொகு]
- ஆலையிலே சோலையிலே
- ஆலங்காடிச் சந்தையிலே
- கிட்டிப் புள்ளும் பம்பரமும்
- கிறிக்கியடிக்கப்
- பாலாறு, பாலாறு, பாலாறு.
கிள்ளுப்பிராண்டி [தொகு]
1)
- கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி
- கீயா மாயாப் பிராண்டி
- கொப்பன் தலையில் என்ன பூ....
- {முருங்கைப்பூ)
- முருங்கைப்பூவைத் திண்டவளே
- முன்னடிக் கஞ்சி குடிச்சவளே
- பாதி விளாங்காய் திண்டவளே
- பாவட்டங் கையை ம-ட-க்-கு.
2)
- தக்காளி , தக்காளி ,குண்டு தக்காளி
- பம்பரேறி குண்டுபோட
- எங்கு சென்றாய் நீ
- (ஊர்ப் பெயர்: எ.கா: மட்டக்களப்பு)
- ம..ட்..ட..க்..க..ள..ப்..பு.
வினா விடை [தொகு]
- என்ன அன்னம் - சோத்தன்னம்
- என்ன சோறு - பழஞ்சோறு
- என்ன பழம் - வாழைப்பழம்
- என்ன வாழை - திரி வாழை
- என்ன திரி - விளக்குத்திரி
- என்ன விளக்கு - குத்துவிளக்கு
- என்ன குத்து - இந்தக்குத்து
ஊஞ்சல் பாட்டு [தொகு]
- உஞ்சிலே மாமாங்கே
- ஊரார் வீட்ட போகாதே
- கஞ்சிக்கும் சோற்றுக்கும்
- வாழைப்பழத்திற்கும்
- காணாமே நீ போகாதே
கண்ணாம்பூச்சி [தொகு]
- கண்ணாம்பூச்சி கடற்கரைப்பூச்சி
- எவடம்.... எவடம்.....
- கண்ணாம்பூச்சி கடற்கரைப்பூச்சி
- எவடம்.... எவடம்....
நண்டூருது நரிஊருது [தொகு]
- சின்னான் சின்ன விரல்
- சீனத்தம் பன்றிக்குட்டி
- வாழை இளங்குருத்து
- வந்தாரைக் கைகாட்டி
- பேரைப் பெருவிரல்
- நண்டூருது நரிஊருது...
- நண்டூருது நரிஊருது...
- நண்டூருது நரிஊருது...
- அக்குளு கிளு கிளு
மேலும் பாடல்கள் [தொகு]
- தா பூ தாமரைப் பூ
- கீரைக்குத் தண்ணீர் இறைத்தல்
- சாலச் சாலச் சப்பாணி
- கைவீசம்மா கைவீசு
- பிச்சக்காரன் பிராமணப் பெடியன்
- ஆணை ஆணை
- சின்னான் சின்னிவிரல்
- தத்தக்கப் பித்தக்க நாலுகால்
- ஊஞ்சாலே ஊஞ்சப்பனே
- சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
- சண்டைக்கு வாறியா திறப்புத் தாறியா
- டிக் டிக் தபால் பெட்டி
- டாங்குப் பித்தளம் டசுக்குப் பித்தளம்
- அப்பி அப்பி மாமா
- நாய்க்கு மூக்கில்லை நரிக்கு மூக்கில்லை
உசாத்துணைகள் [தொகு]
- அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம். கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.
- செவி வழிக்கேள்வி