மிசோ யூனியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிசோ யூனியன் (Mizo Union (6 ஏப்ரல் 1946 – 12 சனவரி 1974), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாகாணத்தின் மிசோ மலைகள் பகுதியில் 6 ஏப்ரல் 1946 அன்று அய்சால் நகரத்தில் நிறுவப்பட்ட முதல் அரசியல் கட்சியாகும். 1951, 1957, 1962 மற்றும் 1966ம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் இக்கட்சி மிசோ மலைகள் மாவட்டக் குழு தேர்தல்களில் பெரும்பான்மை பெற்றது.

1958களில் வடகிழக்கு இந்தியாவில் குறிப்பாக மிசோ மலைகள், மணிப்பூர், திரிபுரா, நாகலாந்து பகுதிகளில் மௌடம் எனும் மூங்கில் காடுகள் ஒரே நேரத்தில் பூத்த காரணத்தினால், எலிகள் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகி, விளைச்சலை சேதப்படுத்தியதால் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மிசோ மலைப்பகுதிகளில் மிசோ தேசிய முன்னணியின் எழுச்சி ஏற்பட்டதுடன், லால்தெங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி நிறுவப்பட்டது. இதனால் மிசோ யூனியன் கட்சி கலைக்கப்பட்டது. மேலும் 1974ல் மிசோ யூனியன் கட்சி ஆதரவாளர்கள் இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் இணைந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசோ_யூனியன்&oldid=3781749" இலிருந்து மீள்விக்கப்பட்டது