மலை குக்குறுவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழுப்பு தொண்டை குக்குறுவான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
மெகலைமிடே
பேரினம்:
சைலோபோகன்
இனம்:
சை. மான்டிகோலா
இருசொற் பெயரீடு
சைலோபோகன் மான்டிகோலா
சார்ப்பி, 1889
வேறு பெயர்கள்

மேகாலைமா மான்டிகோலா

மலை குக்குறுவான் (சைலோபோகன் மான்டிகோலா) என்பது மெகலைமிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது தென்கிழக்கு ஆசியத் தீவான போர்னியோவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

இவை பெண் செந்தொண்டை குக்குறுவானை ஒத்திருக்கின்றன. இவை சிறிய அலகுகளைக் கொண்டுள்ளன. மேல் அலகின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள ரிக்கை முட்கள் அடிப்பகுதியில் சிவப்பு புள்ளி இல்லை.

நடத்தை மற்றும் சூழலியல்[தொகு]

மலை குக்குறுவான்கள் முதன்மையாகப் பழங்களை உண்கின்றன. ஆனால் எறும்புகள், சிக்காடாக்கள், தட்டாரப்பூச்சி, கிரிக்கெட்டுகள், வெட்டுக்கிளிகள், வண்டுகள், அந்துப்பூச்சிகள் மற்றும் மான்டிட்கள் போன்ற பலவிதமான பூச்சிகளையும் உண்ணும்.

இந்த பறவைகள் மரத்துளைகளில் கூடு கட்டும். பொதுவாக 2 முதல் 4 முட்டைகள் வரை இடும். இவை 13 முதல் 15 நாட்களுக்கு முட்டைகளை அடைகாக்கும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Psilopogon monticola". IUCN Red List of Threatened Species 2016: e.T22681643A92915081. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681643A92915081.en. https://www.iucnredlist.org/species/22681643/92915081. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. "Mountain Barbets". Beauty Of Birds. 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-07-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_குக்குறுவான்&oldid=3757696" இலிருந்து மீள்விக்கப்பட்டது