தட்டாரப்பூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தட்டாரப்பூச்சி
நமீபியச்ச் செந்தும்பிTrithemis kirbyi
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: கணுக்காலிகள்
வகுப்பு பூச்சிகள்
வரிசை: ஓடோனாட்டா
துணைவரிசை: எப்பிப்புரோக்டா
உள்வரிசை: அனிசோப்டெரா (Anisoptera)
எட்மண்டு டி சிலீசு லாங்ஷம்ப்ஸ், 1800
(Edmond de Selys Longschamps).
Families

Aeshnidae
Austropetaliidae
Cordulegastridae
Corduliidae
Gomphidae
Libellulidae
Macromiidae
Neopetaliidae
Petaluridae

தட்டாரப்பூச்சி அல்லது தட்டான் என்பது நீர்நிலைகளுக்கு அருகே காணப்படும் கண்ணைக் கவரும் ஓர் அழகான பறக்கும் பூச்சி. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இப்பூச்சியைத் தும்பி என்றும் அழைக்கிறார்கள்.

இப்பூச்சியின் உடல் கண்ணைக் கவரும் நிறத்தில் மெல்லிய கம்பி போல் நீண்டு இருக்கும். தட்டாரப்பூச்சிக்கு நான்கு இறக்கைகள் உள்ளன. இவை வலைபோலவும் மிக மிக மெல்லிய, கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவும் படலமாகவும் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு திறமையுடன் பறக்கின்றன. மணிக்கு 70 முதல் 90 கிமீ வரையிலும் விரைவாக பறக்க வல்லன. தட்டான் பூச்சிக்கு இரண்டு பெரிய கூட்டடுக்குக் கண்களும் ஆறு கால்களும் உண்டு. கால்களில் மெல்லிய மயிர் போன்ற இழைகள் நெடுகிலும் உண்டு. தட்டாரப்பூச்சி, உயிரினப் வகைப்பாட்டில் “பல்லுள்ள” என்று பொருள்படும் ஓடோனட்டா என்னும் வரிசையில், எப்பிப்புரோக்டா என்னும் துணைவரிசையைச் சேர்ந்த ஓர் உயிரினம். தட்டாரப்பூச்சிக் குடும்பத்தின் அறிவியல் பெயர் அனிசோப்டெரா (Anisoptera) என்பதாகும்.

நிப்பானின் நீலத் தட்டான்

தட்டாரப்பூச்சியைப் போலவே ஆனால் இன்னும் மெல்லிய உடல் கொண்ட ஊசித்தட்டாரப் பூச்சி (அல்லது ஊசித்தட்டான், ஊசித்தும்பி) என்னும் பிறிதொரு உள்வரிசையும் உண்டு. இந்த ஊசித்தட்டான் சைகோப்டெரா (Zygoptera) என்னும் உள்வரிசையைச் சேர்ந்தது. தட்டான், ஊசித்தட்டான் பூச்சிகளில் ஏறத்தாழ 6000 வகைகள் உள்ளன. இவை உலகில் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் வாழ்கின்ற ஓர் உயிரினம். இப்பூச்சி இனம் நில உலகில் மிகத்தொன்மையான காலத்தில் இருந்தே வாழ்ந்து வரும் ஓர் உயிரினம். 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிவுற்ற தொன்மாக்களுக்கும் மிக முன்னதாகவே, ஏறத்தாழ 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வாழ்ந்துவரும் ஓர் உயிரினம்.(வளரும்)

பொருளடக்கம்

[தொகு] உடலமைப்பு

[தொகு] வாழ்முறை

[தொகு] உசாத்துணை

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்