மலேசிய வெள்ளம் 2020–2021

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய வெள்ளம் 2020–2021
Malaysian Floods 2020–2021
Banjir Malaysia 2020–2021
Kuantan during December 2021 Malaysian floods
திசம்பர் 2021-இல் மலேசிய
வெள்ளத்தின் போது குவாந்தான்
நாள்நவம்பர் 2020 - சனவரி 2021
அமைவிடம்பகாங்
குவாந்தான், தெமர்லோ, மாரான், ரொம்பின், பெக்கான், பெரா, ரவுப், ஜெராண்டுட், லிப்பிஸ்
ஜொகூர்
ஜொகூர் பாரு, பத்து பகாட், குளுவாங், கோத்தா திங்கி, சிகாமட், மெர்சிங்
திராங்கானு
கெமாமான், டுங்குன், உலு திராங்கானு, பெசுட்
கிளாந்தான்
பாசீர் மாஸ், தானா மேரா, கோலா கிராய், குவா மூசாங், ஜெலி
பேராக்
ஈலிர் பேராக், உலு பேராக், கம்பார்
சிலாங்கூர்
உலு சிலாங்கூர், கோலா சிலாங்கூர், உலு லங்காட்
சபா
பியூபோர்ட்
காரணம்வடகிழக்கு பருவக்காற்று
இறப்புகள்9 பேர் (சனவரி 9, 2021 முதல்)[1]

மலேசிய வெள்ளம் 2020–2021 (ஆங்கிலம்: Malaysian Floods 2020–2021; மலாய்: Malaysian Floods 2020–2021) என்பது 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் மலேசியாவின் பல மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிகழ்வாகும்.

வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரிடர் புனர் மையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏறக்குறைய அனைத்து வகையான தரைவழி போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகள்[தொகு]

தீபகற்ப மலேசியாவின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இந்த முறை பகாங்[2][3][4] மற்றும் ஜொகூர்[5] மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. திராங்கானு,[6][7] கிளாந்தான்,[8] சிலாங்கூர்[9] மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களும் பாதிக்கப்பட்ட பிற மாநிலங்களாகும்.[10] கிழக்கு மலேசியா, சபா மாநிலத்தின் பியூபோர்ட் மாவட்டத்திலும் வெள்ளம் ஏற்பட்டது.[11]

வெள்ளத்திற்கான காரணம்[தொகு]

தென்சீனக் கடலைத் தாக்கிய வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தீபகற்ப மலேசியா முழுவதும் தொடர்ச்சியாகப் பல நாட்கள் பலத்த மழை பெய்தது.[12] கனமழை தாய்லாந்தையும் தாக்கியது.[13] மேலும் அங்கு கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.

சேதம்[தொகு]

பெரும் அளவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பெரும்பாலான தரைவழி போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. பகாங்கின் பிரேசர் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.[14]

கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை வழியாக காராக்கில் இருந்து லஞ்சாங் வரை செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் அந்தச் சாலை மூடப்பட்டது.[15] கூட்டரசு சாலைகளும் மற்றும் மாநிலச் சாலைகளும் மூடப்பட்டன.[16]

உயிரிழப்புகள்[தொகு]

இந்த வெள்ளத்தினால் கிளாந்தான், பாசீர் பூத்தே கம்போங் தாசெக் கோங் காலா (Kampung Tasek Gong Kala) எனும் கிராமத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.[17] பகாங், சுங்கை புவாஸ் (Sungai Puas) எனும் இடத்தில், இரண்டு குழந்தைகள் வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்ததாகப் பதிவு செய்யப்பட்டது.[18][19] ஜொகூரில் ஒரு பெண்ணும்[20] மற்றும் ஓர் இளைஞரும்[21] உயிரிழந்தனர்.

எச்சரிக்கை[தொகு]

மலேசிய வானிலை ஆய்வுத் துறை (Malaysian Meteorological Department), நவம்பர் 2020 தொடக்கத்தில் இருந்து கனமழை மற்றும் வெள்ள எச்சரிக்கைகளை அறிவித்து வந்தது.[22]

வெள்ளத்தின் போது[தொகு]

மலேசிய தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (National Security Council (Malaysia) அறிவுறுத்தல்களின் அடிப்படையில்; தற்காலிக வெளியேற்ற மையங்கள் (Temporary Evacuation Center) சமூக நலத் துறையால் (Social Welfare Department) திறக்கப்பட்டு இயக்கப்பட்டன.[23]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்கான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் சமூக நலத்துறை வழங்கியது.[24]

மேற்கோள்கள்[தொகு]

  1. 9 korban banjir di 3 negeri. Harian Metro. Published 9 Januari 2021. Retrieved 9 Januari 2021.
  2. BERNAMA (4 December 2020). "Raub daerah pertama dilanda banjir di Pahang". Sinar Harian இம் மூலத்தில் இருந்து 4 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201204031924/https://www.sinarharian.com.my/article/113247/EDISI/Raub-daerah-pertama-dilanda-banjir-di-Pahang. 
  3. Asrol Awang (6 January 2021). "Mangsa banjir di Pahang meningkat, 19,527 orang di PPS". Harian Metro. https://www.hmetro.com.my/node/660787/amp. 
  4. Nor Khalilah Gusti Hassan (4 January 2021). "Banjir: 33 PPS dibuka di Kuantan". Sinar Harian. https://www.sinarharian.com.my/article/117500/EDISI/Banjir-13-PPS-dibuka-di-Kuantan. 
  5. Mohamad Faizal Hashim (4 January 2021). "Banjir: 7,112 mangsa terjejas di Johor". Utusan Malaysia. https://www.utusan.com.my/nasional/2021/01/banjir-7112-mangsa-terjejas-di-johor/. 
  6. "Banjir mula landa Terengganu". Berita Harian SG. 18 November 2020. https://www.beritaharian.sg/dunia/banjir-mula-landa-terengganu. 
  7. Zaid Salim (20 December 2020). "Mangsa banjir di Kemaman, Dungun semakin meningkat". HMetro. https://www.hmetro.com.my/mutakhir/2020/12/655209/mangsa-banjir-di-kemaman-dungun-semakin-meningkat. 
  8. Aimuni Tuan Lah (4 January 2021). "Banjir kilat, tanah runtuh landa Gua Musang". Utusan Malaysia. https://www.utusan.com.my/berita/2021/01/banjir-kilat-tanah-runtuh-landa-gua-musang/. 
  9. Siti Rohaizah Zainal (3 January 2021). "Hulu Bernam, Bestari Jaya dinaiki air, 190 mangsa dipindahkan". Utusan Malaysia. https://www.utusan.com.my/nasional/2021/01/hulu-bernam-bestari-jaya-dinaiki-air-190-mangsa-dipindahkan/. 
  10. Asliza Musa (4 January 2021). "1,010 terjejas banjir di Perak". Utusan Malaysia. https://www.utusan.com.my/berita/2021/01/1010-terjejas-banjir-di-perak/. 
  11. Syah Hairizal Kamalul Arifin (6 January 2021). "Banjir Sabah: 44 kampung terjejas banjir di Beaufort". https://www.astroawani.com/berita-malaysia/banjir-sabah-44-kampung-terjejas-banjir-di-beaufort-276363. 
  12. Suhaimi, Fauzi (5 January 2021). "Banjir: 250 'hot spot' dijangka dilanda banjir sekali lagi di pantai Timur - Bomba" (in ms). Maran, Pahang, Malaysia. https://www.astroawani.com/berita-malaysia/banjir-250-hot-spot-dijangka-dilanda-banjir-sekali-lagi-di-pantai-timur-bomba-276234. பார்த்த நாள்: 10 January 2021. 
  13. BERNAMA (4 December 2020). "9 wilayah selatan Thailand dilanda banjir". BHarian. https://www.bharian.com.my/dunia/asean/2020/12/761486/9-wilayah-selatan-thailand-dilanda-banjir. 
  14. BERNAMA (3 January 2021). "Tanah runtuh di Bukit Fraser, 13 kenderaan terkandas" (in ms). Sinar Harian இம் மூலத்தில் இருந்து 4 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210104114038/https://www.sinarharian.com.my/article/117437/EDISI/Tanah-runtuh-di-Bukit-Fraser-13-kenderaan-terkandas. 
  15. Halim, Nabilah (4 January 2021). "Laluan Karak – Lanchang ditutup" (in ms). Malaysia Gazette இம் மூலத்தில் இருந்து 4 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210104114956/https://malaysiagazette.com/2021/01/04/laluan-karak-lanchang-ditutup/. 
  16. Asrol Awang (3 January 2021). "Bandar Kuantan mula dinaiki air". Berita Harian இம் மூலத்தில் இருந்து 3 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210103054404/https://www.bharian.com.my/berita/nasional/2021/01/771548/bandar-kuantan-mula-dinaiki-air. 
  17. Torek Sulong (4 December 2020). "Mayat lelaki ditemui terapung dalam parit". Kosmo!. https://www.kosmo.com.my/2020/12/04/mayat-lelaki-ditemui-terapung-dalam-parit/. 
  18. Abdul Rashid Abdul Rahman (4 January 2021). "Banjir Pahang rekod mangsa lemas pertama". Utusan Malaysia. https://www.utusan.com.my/nasional/2021/01/banjir-pahang-rekod-mangsa-lemas-pertama/. 
  19. Abdul, Aira (6 January 2021). "Banjir Pahang: Mayat pelajar UMP ditemukan". https://www.astroawani.com/berita-malaysia/banjir-pahang-mayat-pelajar-ump-ditemukan-276323. 
  20. Adnan Ibrahim (2 January 2021). "Banjir Johor ragut mangsa pertama". HMetro. https://www.hmetro.com.my/utama/2021/01/659458/banjir-johor-ragut-mangsa-pertama. 
  21. Ibrahim, Adnan (5 January 2021). "'Ralat dia tak tinggal pesan'". HMetro. https://www.hmetro.com.my/utama/2021/01/660367/ralat-dia-tak-tinggal-pesan. 
  22. "Musim tengkujuh diramal bermula Rabu ini". BHarian. 9 November 2020. https://www.bharian.com.my/berita/nasional/2020/11/752262/musim-tengkujuh-diramal-bermula-rabu-ini. 
  23. Mohd Rafi Mamat (3 January 2021). "JKM buka 99 PPS di Pahang". HMetro. https://www.hmetro.com.my/mutakhir/2021/01/659909/jkm-buka-99-pps-di-pahang. 
  24. "Banjir". InfoBencana JKM. Archived from the original on 2018-10-13. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_வெள்ளம்_2020–2021&oldid=3688256" இலிருந்து மீள்விக்கப்பட்டது