மருத்துவத்தில் மக்னீசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்னீசியம் உப்புகள் (Magnesium salts) பல்வேறு வகையான கலப்புகளில் உருவாக்கப்பட்டு மருந்துகளாக கிடைக்கின்றன. மக்னீசியம் குறைபாடு, குறைந்த இரத்த மக்னீசியம், சூல்வலிப்பு போன்ற பல நோய்களுக்கான சிகிச்சையில் மருந்துகளாக இவை பயன்படுத்தப்படுகின்றன. மக்னீசியம் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒரு முக்கியமான கனிமமாகும்.[1]

பல்லுயிர்ச்சத்து உள்ளிட்ட துணை உணவு தயாரிப்புகளில் வழக்கமாக குறைந்த அளவுகளில் மக்னீசியம் தாது பொதுவாக சேர்க்கப்படுகிறது. குழம்பு நிலை மக்னீசியம் சில நேரங்களில் உறிஞ்சுதலுக்கு உதவுகிறது.

2017 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பரிந்துரைக்கப்பட்ட பொதுவான மருந்துகளில் மக்னீசியம் 171 ஆவது மருந்தாகும். மூன்று மில்லியனுக்கும் அதிகமான முறை அப்போது இவை பரிந்துரைக்கப்பட்டன. [2][3]

மருத்துவப் பயன்[தொகு]

  • முற்றிய ஆஸ்துமா போன்ற மூச்சுக் கோளாறு நோயாளிகளுக்கு பீட்டா-தசை சுருக்கி மற்றும் பித்தநீர் நரம்புக் கோளாறு முகவர்கள் கொடுத்து முயற்சித்தப் பின்னர் ஓர் மூச்சுக்குழாய் தளர்த்தியாக மக்னீசியம் உப்புகள் கொடுக்கப்படுகிறது. [4]
  • கடுமையான ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைக்க மக்னீசியம் சல்பேட்டு கரைசல் தெளிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. [4] இச் சிகிச்சையில் நரம்பு வழியாக மக்னீசியம் சல்பேட்டு கரைசல் தெளிக்கப்பட்டு ஆஸ்துமா நோய் நிர்வகிக்கப்படுகிறது. [5][6]

பக்க விளைவுகள்[தொகு]

வயிற்றுப் போக்கும் வயிற்று உபாதைகள் போன்றவை மக்னீசியம் உப்புகள் எடுத்துக் கொள்வதால் விளையும் பொதுவான பக்கவிளைவுகளாகும். கால்சியம் பற்றாக்குறை நோய் ஏற்கனவே இருந்தால் மேலும் கால்சியக் குறைவு தோன்றும்[7]

மிகையளவு மக்னீசியம்[தொகு]

சிறப்பு சூழ்நிலைகளில் மட்டுமே மக்னீசியத்தை மிகை மருந்தாக கொடுக்க முடியும். இதனால் வயிற்றுப்போக்கு, [8] குமட்டல், வாந்தி, இரத்த அழுத்தம் கடுமையாகக் குறைதல், குழப்பம், இதயத் துடிப்பு குறைதல், சுவாச முடக்கம் [7] [9]ஆகிய பக்க விளைவுகள் ஏற்படலாம். மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில், கோமா, இதய இரத்தக் குறைவு, இதயச் செயலிழப்பு மற்றும் இறப்பு போன்ற அபாயங்கள் ஏற்படும். [7]

கால்சியம் குளுக்கோனேட்டைக் கொடுப்பதான் மூலம் மிகை மக்னீசியத்தின் பாதிப்புகளை எதிர்க்கலாம். [10]

தயாரிப்பு வகை[தொகு]

நடைமுறையில் மக்னீசியம் ஓர் உப்பு வடிவத்தில் குளோரைடு அல்லது சல்பேட்டு போன்ற எதிர்-அயனிகளாக செயல்படும் பல எதிர்மின்மச் சேர்மங்களுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. ஆயினும்கூட மக்னீசியம் பொதுவாக ஒரு செயல்படும் கூறு என்றே கருதப்படுகிறது. பேரியம் குளோரைடு நச்சுக்கான [11] சிகிச்சையில் மட்டும் மக்னீசியம் சல்பேட்டு உப்பு பயன்படுத்தப்படுவது ஒரு விதிவிலக்காகும். இங்கு சல்பேட்டு பேரியத்துடன் பிணைக்கப்பட்டு கரையாத பேரியம் சல்பேட்டை உருவாக்குகிறது.

மக்னீசியம் அஸ்பார்டேட்டு, குளோரைடு, லாக்டேட்டு, சிட்ரேட்டு மற்றும் கிளைசினேட்டு போன்றவை உடலில் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் மக்னீசியத்தின் ஆக்சைடு வடிவத்தை விட 4 மடங்கு அதிகமான மக்னீசியத்தைக் கொண்டுள்ளன. இவை விற்பனையில் இல்லாவிட்டாலும் ஒவ்வொன்றிலும் உள்ள மக்னீசியத்தின் அளவு சமமானவை. [12][13]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. "The Top 300 of 2020". ClinCalc. பார்க்கப்பட்ட நாள் 11 April 2020.
  3. "Magnesium - Drug Usage Statistics". ClinCalc. பார்க்கப்பட்ட நாள் 11 April 2020.
  4. 4.0 4.1 "Aerosolized magnesium sulfate for acute asthma: a systematic review.". Chest 128 (1): 337–44. 2005. doi:10.1378/chest.128.1.337. பப்மெட்:16002955. https://archive.org/details/sim_chest_2005-07_128_1/page/337. 
  5. "Committee Opinion No 652: Magnesium Sulfate Use in Obstetrics". Obstetrics and Gynecology 127 (1): e52–53. January 2016. doi:10.1097/AOG.0000000000001267. பன்னாட்டுத் தர தொடர் எண்:1873-233X. பப்மெட்:26695587. 
  6. Crowther, Caroline A.; Brown, Julie; McKinlay, Christopher J. D.; Middleton, Philippa (2014-08-15). "Magnesium sulphate for preventing preterm birth in threatened preterm labour". The Cochrane Database of Systematic Reviews (8): CD001060. doi:10.1002/14651858.CD001060.pub2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1469-493X. பப்மெட்:25126773. 
  7. 7.0 7.1 7.2 Magnesium at University of Maryland Medical Center (UMMC). Reviewed last on: 6/17/2011 by Steven D. Ehrlich
  8. https://ods.od.nih.gov/factsheets/Magnesium-HealthProfessional/ Section: Health Risks from Excessive Magnesium
  9. "மக்னீசியம் ஏன் முக்கியமானது?". www.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-13.
  10. "Magnesium sulphate therapy in women with pre-eclampsia and eclampsia in Kuwait". Med Princ Pract 17 (3): 227–32. 2008. doi:10.1159/000117797. பப்மெட்:18408392. https://www.karger.com/Article/PDF/000117797. 
  11. "BARIUM CHLORIDE DIHYDRATE 4. First Aid Measures". Jtbaker.com. பார்க்கப்பட்ட நாள் 2009-07-06.
  12. Firoz M, Graber M: "Bioavailability of US commercial magnesium preparations.", Magnesium Research 2001 Dec;14(4):257-62.
  13. Lindberg JS, Zobitz MM, Poindexter JR, Pak CY: "Magnesium bioavailability from magnesium citrate and magnesium oxide.", J Am Coll Nutr. 1990 Feb;9(1):48-55.