பேரியம் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரியம் குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பேரியம் மூரியேட்
பேரைட்டுகளின் மூரியேட் [1]
பேரியம் டைகுளோாரைடு
இனங்காட்டிகள்
10361-37-2 Y
10326-27-9 (டைஐதரேட்டு) N
ChemSpider 23540 Y
EC number 233-788-1
InChI
  • InChI=1S/Ba.2ClH/h;2*1H/q+2;;/p-2 Y
    Key: WDIHJSXYQDMJHN-UHFFFAOYSA-L Y
  • InChI=1/Ba.2ClH/h;2*1H/q+2;;/p-2
    Key: WDIHJSXYQDMJHN-NUQVWONBAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25204
வே.ந.வி.ப எண் CQ8750000 (நீரற்ற)
CQ8751000 (டைஐதரேட்டு)
SMILES
  • [Ba+2].[Cl-].[Cl-]
UNII 0VK51DA1T2 Y
பண்புகள்
BaCl2
வாய்ப்பாட்டு எடை 208.23 கி/மோல் (நீரற்ற)
244.26 கி/மோல் (டைஐதரேட்டு)
தோற்றம் வெண்ணிறத்திண்மம்
அடர்த்தி 3.856 கி/செமீ3 (நீரற்ற சேர்மம்)
3.0979  கி/செமீ 3 (டைஐதரேட்டு)
உருகுநிலை 962 °C (1,764 °F; 1,235 K) (960 °செ, டைஐதரேட்டு)
கொதிநிலை 1,560 °C (2,840 °F; 1,830 K)
31.2 கி/100 மிலி (0 °செ)
35.8 கி/100 மிலி (20 °செ)
59.4 கி/100 மிலி (100 °செ)
கரைதிறன் மெதனாலில் கரையக்கூடியது, எதில் அசிடேட் மற்றும் எதனாலில் கரையாதது,[2]
-72.6•10−6 செமீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு செங்கோணவட்டம் (நீரற்ற சேர்மம்)
ஒற்றைச்சாய்வு (டைஐதரேட்டு)
ஒருங்கிணைவு
வடிவியல்
7-9
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−858.56 கியூல்/மோல்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு நச்சுத்தன்மையுடையது (T)
தீங்கு விளைவிக்கக்கூடியது (Xn)
R-சொற்றொடர்கள் R20, R25
S-சொற்றொடர்கள் (S1/2), S45
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாதது
Lethal dose or concentration (LD, LC):
78 மிகி/கிகி (எலி, வாய்வழி)
50 mg/kg (சீமைப்பெருச்சாளி, வாய்வழி)[4]
112 மிகி Ba/கிகி (முயல், வாய்வழி)
59 மிகி Ba/கிகி (நாய், வாய்வழி)
46 மிகி Ba/கிகி (சுண்டெலி, வாய்வழி)[4]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.5 மிகி/மீ3[3]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.5 மிகி/மீ 3[3]
உடனடி அபாயம்
50 மிகி/மீ 3[3]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பேரியம் புளோரைடு
பேரியம் புரோமைடு
பேரியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பெரில்லியம் குளோரைடு
மெக்னீசியம் குளோரைடு
கால்சியம் குளோரைடு
இசுட்ரான்சியம் குளோரைடு
ரேடியம் குளோரைடு
காரீய குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பேரியம் குளோரைடு (Barium Chloride) BaCl2 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது ஒரு மிகவும் பொதுவான நீரில் கரையக்கூடிய பேரியத்தின் உப்பாகும். மற்ற பேரியம் உப்புக்களைப் போல, இதுவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகும். எரியும் போது மஞ்சள் கலந்த பச்சை நிறத்தைச் சுடருக்குத் தருகிறது. இது நீர் உறிஞ்சும் தன்மை கொண்டதாகும்.

அமைப்பு மற்றும் பண்புகள்[தொகு]

BaCl2 இரண்டு வடிவங்களில் படிகமாகிறது(பல் உருவ அமைப்புகள்). ஒரு வடிவமானது, கன சதுர படிக புளோரைட்டு (CaF2) வடிவ அமைப்பைக் கொண்டுள்ளது. மற்றொன்று செஞ்சாய்சதுர படிக வடிவ கோட்டுனைட்டு (PbCl2) வடிவம் ஆகும். இரண்டு பல் உருவஅமைப்புகளுமே பெரிய Ba2+ அயனிக்கு, ஆறை விடப்பெரிய அணைவு எண்ணையே தருகின்றன.[5] புளோரைட்டு வடிவத்தில் Ba2+ அயனியின் அணைவு எண் 8 ஆகவும் [6] கோட்டுனைட் (காரீய (II) குளோரைடு என்ற கனிமத்தின் வடிவத்தையொத்த) என்ற வடிவத்தில் அணைவு எண் 9 ஆகவும் காணப்படுகிறது.[7] BaCl2 இன் கோட்டுனைட்டு வடிவத்தின் மீது 7–10 கிகாபாசுகல் அளவிற்கு அழுத்தத்திற்குட்படுத்தும் போது அது இன்னொரு மூன்றாவது வடிவத்திற்கு ஒற்றைச்சாய்வு படிக வடிவத்திற்கு (கோட்டுனைட்டின் தொடர் நிலை) மாறுகிறது. இந்த வடிவத்தில் Ba2+ இன் அணைவு எண்ணானது 9 இலிருந்து 10 ஆக உயர்கிறது.[8]

நீரிய கரைசல்களில் BaCl2 ஒரு எளிய உப்பைப் போலவே இருக்கிறது. நீரில் இது ஒரு 1:2 மின்பகுளியாகவும் இதன் கரைசலானது நடுநிலையான காரகாடித்தன்மைச் சுட்டெண் மதிப்பையும் கொண்டுள்ளது.

இதன் கரைசல் சல்பேட்டு அயனியுடன் வினைபடும் போது ஒரு அடர் வெண்மையான பேரியம் சல்பேட்டு வீழ்படிவைத் தருகிறது:

Ba2+(கரைசல்) + SO42−(கரைசல்) → BaSO4(திண்மம்)

ஆக்சலேட்டும் இதே போன்றதொரு வினையைத் தருகிறது:

Ba2+(கரை) + C2O42−(கரை)BaC2O4(திண்மம்)

இது சோடியம் ஐதராக்சைடுடன் வினைபுரியும் போது மிதமான அளவில் நீரில் கரையக்கூடிய டைஐதராக்சைடைத் தருகிறது.

தயாரிப்பு[தொகு]

பேரியம் குளோரைடானது பேரியம் ஐதராக்சைடு அல்லது இயற்கையில் கிடைக்கக்கூடிய கனிமமான விதரைட்டுடன் சேர்ந்த பேரியம் கார்பனேட்டிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த எளிய அடிப்படை உப்புக்கள் ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து நீரேற்றப்பட்ட பேரியம் குளோரைடினைத் தருகிறது. தொழில்முறை தயாரிப்பில் பேரைட்டிலிருந்து (பேரியம் சல்பேட்டு) பெறப்படக்கூடிய இரண்டு படிநிலைகளைக் கொண்ட செயல்முறையானது பயன்படுத்தப்படுகிறது:[9]

BaSO4(திண்மம்) + 4 C(திண்மம்) → BaS(திண்மம்) + 4 CO(வாயு)

இந்த முதல் படிநிலையானது நிகழ்வதற்கு அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது.

BaS + CaCl2 → BaCl2 + CaS

இரண்டாவது படிநிலையில், வினைபடுபொருட்களின் உருகுதல் நிகழ்த்தப்பட வேண்டியுள்ளது. BaCl2 ஆனது நீருடனான கலவையிலிருந்து வடித்தெடுக்கப்படலாம். பேரியம் குளோரைடின் நீரிய கரைசல்களிலிருந்து, டைஐதரேட்டானது வெண்ணிறப்படிகங்களாக படிகமாக்கப்படலாம்: BaCl2•2H2O

பயன்கள்[தொகு]

விலைமலிவான பேரியத்தின் கரையக்கூடிய உப்பாக இருப்பதால், பேரியம் குளோரைடு ஆய்வகத்தில் மிக விரிவான பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இது சல்பேட்டு அயனிக்கான பண்பறி பகுப்பாய்வில் மிக முக்கியமான சோதனையாக உள்ளது. தொழிற்துறையில், பேரியம் குளோரைடானது எரிகுளோரின் உலைகளில் உப்புக்கரைசலைத் துாய்மைப்படுத்துவதில் முக்கியமாகப் பயன்படுத்ததப்படுகிறது. மேலும், வெப்பத்தால் பண்படுத்தப்படும் உப்புக்களின் தயாரிப்பு எஃகு வார்ப்புகளை கடினப்படுத்தும் செயல்முறைகள், நிறமிப்பொருட்களின் தயாரிப்பு மற்றும் இதர பேரியம் உப்புக்களின் தயாரிப்பு ஆகியவற்றில் பயன்படுகிறது. BaCl2 பட்டாசுத்தொழிலில் பிரகாசமான பச்சை நிறத்தைத் தருவதற்கு பயன்படுகிறது. இதன் நச்சுத்தன்மையின் காரணமாக பயன்பாடுகளின் அளவானது ஒரு எல்லைக்குட்பட்டதாக அமைகிறது.

பாதுகாப்பு[தொகு]

பேரியம் குளோரைடு, இதர நீரில் கரையக்கூடிய பேரியம் உப்புக்களுடன் சேர்த்து மிகுந்த நச்சுத்தன்மை உள்ளதாகும்.[10] சோடியம் சல்பேட்டு மற்றும் மக்னீசியம் சல்பேட்டு ஆகியவை பேரியம் குளோரைடுடன் வினைபுரிந்து நீரில் கரையாத பேரியம் சல்பேட்டைத் (BaSO4) தருவதாலும், அத்தகைய பேரியம் சல்பேட்டு தனது கரையாத தன்மையால் ஒப்பீட்டு நிலையில் குறைவான நச்சுத்தன்மையற்றதாக உள்ளதாலும், மிகச்சிறந்த எதிர் மருந்துகளாக உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://play.google.com/books/reader?printsec=frontcover&output=reader&id=nKQ-AAAAYAAJ&pg=GBS.PA64
  2. Handbook of Chemistry and Physics, 71st edition, CRC Press, Ann Arbor, Michigan, 1990.
  3. 3.0 3.1 3.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0045". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  4. 4.0 4.1 "Barium (soluble compounds, as Ba)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  5. Wells, A. F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6.
  6. Haase, A.; Brauer, G. (1978). "Hydratstufen und Kristallstrukturen von Bariumchlorid". Z. anorg. allg. Chem. 441: 181–195. doi:10.1002/zaac.19784410120. 
  7. Brackett, E. B.; Brackett, T. E.; Sass, R. L. (1963). "The Crystal Structures of Barium Chloride, Barium Bromide, and Barium Iodide". J. Phys. Chem. 67 (10): 2132. doi:10.1021/j100804a038. 
  8. Léger, J. M.; Haines, J.; Atouf, A. (1995). "The Post-Cotunnite Phase in BaCl2, BaBr2 and BaI2 under High Pressure". J. Appl. Cryst. 28 (4): 416. doi:10.1107/S0021889895001580. 
  9. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  10. The Merck Index, 7th edition, Merck & Co., Rahway, New Jersey, 1960.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_குளோரைடு&oldid=2748924" இலிருந்து மீள்விக்கப்பட்டது