மயூரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயூரா (சமசுகிருதம்: मयूर Mayūra) என்பது மயில் என்பதற்கான சமசுகிருத வார்த்தையாகும்.[1] இது இந்து கலாச்சாரத்தின் புனித பறவைகளில் ஒன்றாகும். இது பல இந்து மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பல பகுதிகளில் பயன்படுத்தப்படும் சமகால இந்துப் பெயராகும்.

பின்னணி[தொகு]

An Indian Peacock
An Indian Peacock

மயில் இந்து கலாச்சாரத்தின் மற்றொரு தெய்வீக பறவையான கருடனின் இறகுகளிலிருந்து உருவாக்கப்பட்டது என்று புராணக்கதை ஒன்று கூறுகிறது. கருடன் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் வாகனம் என்று நம்பப்படுகிறது. மயில் புராணப் பறவையாக உள்ள படங்களில், இது ஒரு பாம்பைக் கொல்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்து மத நூல்களின் படி, இச்செயல் காலச் சுழற்சியின் அடையாளமாக உள்ளது.

முக்கியத்துவம்[தொகு]

மயில் இந்துக்களின் பல கடவுள்கள் மற்றும் தெய்வங்களுடன் தொடர்புடையது:

உத்தர ராமாயணத்தில் உள்ள ஒரு கதையின்படி இராவணனை வெல்ல முடியாமல், மயிலின் இறக்கையின் கீழ் தஞ்சமடைந்தான் இந்திரன். பின்னர் "ஆயிரம் கண்கள்" மற்றும் பாம்புகளிடமிருந்து அச்சமின்றி வாழ ஆசீர்வதிக்கப்பட்டான். இன்னொரு கதையில் ஆயிரம் புண்களுடன் சாபம் பெற்றுப் பிறந்த இந்திரன் பின்னர் சாபம் நீங்கி, ஆயிரம் கண்கள் கொண்ட மயிலாக மாறினான்.[2]

சப்தகன்னியர் பொதுவாக ஒரு மயிலுடன்சித்தரிக்கப்படுகின்றனர். சப்தகன்னியரின் வாகனமாக மயில் உள்ளது.

பரவணி என்ற பெயருடைய மயில், கார்த்திகேய கடவுளின் வாகனமாக உள்ளது.

கிருஷ்ணர் பொதுவாக மயில் இறகுகளால் தன் தலையை அலங்கரிக்கிறார்.

விஷ்ணுவின் மனைவியான இலட்சுமி, செழிப்பு, அதிர்ஷ்டம் மற்றும் அழகுக்கான தெய்வம். அவள் மயூராவால் அடையாளப்படுத்தப்படுகிறாள்.

மயூரேஸ்வரர் விநாயகரின் அவதாரம். இவருடைய வாகனமும் மயில் (விநாயக புராணத்தில்)

சித்ரமேகலா என்ற மயில் சரசுவதியுடன் தொடர்புடையது. கருணை, பொறுமை, இரக்கம், இரக்கம் மற்றும் அறிவு ஆகியவற்றைக் குறிக்கும் தெய்வம், சரசுவதி.

அட்ட பைரவர்களில் ஒருவர் சிறீ சந்தா பைரவர் ("எட்டு பைரவர்கள்"); ஆசுதா பைரவர். இவருடைய வாகனமும் மயில். விகட (Vikaṭa) ("அசாதாரண வடிவம்", "தவறான வடிவம்"), விநாயகரின் அவதாரம், மயில் வாகனமாக உள்ளது (முத்கல புராணத்தில்).

பொதுவாக, மயிலின் இறகுகள் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. மேலும் இவை இந்து கடவுகளின் படங்களையும் கருவிகளையும் தூசி நீக்கப் பயன்படுகின்றன.

ஆசிய நாட்டுப்புறக் கதைகளில், குறிப்பாக இலங்கையின் வேத கதைகளில், மயில் நூற்றுக்கணக்கான பூரான் மற்றும் பாம்புகளைக் கொல்வதால் பாராட்ப்படுகிறது.[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • ஆர்கஸ் பனோப்டெஸ்
  • மஹாமயூரி
  • மெலெக் டாஸ்

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  1. witzel, michael (1999). "Substrate Languages in Old Indo-Aryan (Ṛgvedic, Middle and Late Vedic)". Electronic Journal of Vedic Studies 5 (1). http://www.ejvs.laurasianacademy.com/ejvs0501/ejvs0501article.pdf. பார்த்த நாள்: 3 March 2013. 
  2. Anonymous (1891). Ramavijaya (The mythological history of Rama). Bombay: Dubhashi & Co.. பக். 14. https://archive.org/stream/ramavijayathemyt00unwkuoft#page/n27/mode/1up/. 
  3. C.G. and C.S.Seligman, "The Vedas", Oosterhout 1969
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயூரா&oldid=3652837" இலிருந்து மீள்விக்கப்பட்டது