பேச்சு:விவாகக் கிரியைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவ சமயத்தில் நானறிய அனைத்து திருமணச் சடங்குகளுமே தமிழில்தாம் நடத்தப்படுகின்றன. விவாகக் கிரியைகள் என்ற பெயரைக்கூட நான் கேள்விப்பட்டதில்லை. (நான் கேள்விப்பட்டதில்லை என்பதற்காகச் சொல்லவில்லை, அந்த அளவுக்கு இதன் பயன்பாடு உள்ளது?) திருமணச் சடங்குகள் என மாற்றப் பரிந்துரைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 10:40, 7 சூலை 2013 (UTC)[பதிலளி]

சைவத் திருமணச் சடங்கு என்ற விரிவான கட்டுரை இருக்கும் போது இதை எதற்காகத் தொடங்கினீர்கள்?--Kanags \உரையாடுக 11:49, 7 சூலை 2013 (UTC)[பதிலளி]
ஆம், கனக்ஸ்! இந்தக் கட்டுரையை நீக்கலாம். மேலும், ஜெகதீஸ்வரன் தொடங்கிய இந்து சமயம் (சைவ சமயம் + வைணவ சமயம்) தொடர்புடைய பல கட்டுரைகளின் தலைப்புகள் வடமொழிச் சொற்களில்தான் இருக்கின்றன. அவற்றில் தமிழ்ப்படுத்தக் கூடிய தலைப்புகளை மட்டுமாவது தமிழ்ப்படுத்தலாம். வடமொழித் தலைப்புகளை வழிமாற்றாக வைத்துக் கொள்ளலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 12:48, 7 சூலை 2013 (UTC)[பதிலளி]
அவற்றில் பெரும்பாலானவற்றுக்குத் தமிழ்ப்பெயர்கள் இருக்க வேண்டும், தேனி. மு. சுப்பிரமணி. எடுத்துக்காட்டாக பாடல்பெற்ற தலங்களுக்கான தமிழ்ப்பெயர்கள் (அல்லது தமிழ் முறைப்படி எழுதிய பெயர்கள்) இந்தத் தளத்தில் தரப்பட்டுள்ளன. (அது தரும்புரத்து ஆதீனத்தின் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.) அவற்றை ஒரு சிறு பெர்ள் நிரல் எழுதிப்பெற்றேன். அவை பின்வருவன (சில பாடல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தலங்களைப் பற்றி இருப்பதால் சிறு வழு உள்ளது, எளிதில் அவற்றை மட்டும் நீக்க முடியும்):
  1. காவிரிப்பூம்பட்டினத்துத்திருப்பல்லவனீச்சரம்
  2. கீழைத்திருக்காட்டுப்பள்ளி
  3. சீகாழி
  4. திருஅச்சிறுபாக்கம்
  5. திருஅம்பர்மாகாளம்
  6. திருஅன்பிலாலந்துறை
  7. திருஅன்னியூர்
  8. திருஆப்பனூர்
  9. திரு ஆவூர்ப்பசுபதீச்சரம்
  10. திருஇடும்பாவனம்
  11. திருஇடைச்சுரம்
  12. திருஇராமனதீச்சரம்
  13. திருஇலம்பையங்கோட்டூர்
  14. திருஎருக்கத்தம்புலியூர்
  15. திருக்கச்சியேகம்பம்
  16. திருக்கடைமுடி
  17. திருக்கண்ணார்கோயில்
  18. திருக்கயிலாயம்
  19. திருக்கரவீரம்
  20. திருக்கழுக்குன்றம்
  21. திருக்கழுமலம்
  22. திருக்கள்ளில்
  23. திருக்கற்குடி
  24. திருக்கானூர்
  25. திருக்குடந்தைக்காரோணம்
  26. திருக்குரங்கணின்முட்டம்
  27. திருக்குற்றாலம்
  28. திருக்கொடிமாடச்செங்குன்றூர்
  29. திருக்கொடுங்குன்றம்
  30. திருக்கோலக்கா
  31. திருக்கோளிலி
  32. திருச்சண்பைநகர்
  33. திருச்சிரபுரம்
  34. திருச்சிராப்பள்ளி
  35. திருச்சிவபுரம்
  36. திருச்செங்காட்டங்குடி
  37. திருச்செம்பொன்பள்ளி
  38. திருச்சேய்ஞலூர்
  39. திருச்சோபுரம்
  40. திருச்சோற்றுத்துறை
  41. திருத்தருமபுரம்
  42. திருத்தூங்கானைமாடம்
  43. திருத்தோணிபுரம்
  44. திருநல்லம்
  45. திருநல்லூர்
  46. திருநள்ளாறு
  47. திருநள்ளாறும் திருவாலவாயும்
  48. திருநறையூர்ச்சித்தீச்சரம்
  49. திருநாகைக்காரோணம்
  50. திருநின்றியூர்
  51. திருநெடுங்களம்
  52. திருநெய்த்தானம்
  53. திருப்பரங்குன்றம்
  54. திருப்பராய்த்துறை
  55. திருப்பருப்பதம்
  56. திருப்பழனம்
  57. திருப்பறியலூர்வீரட்டம்
  58. திருப்பனையூர்
  59. திருப்பாச்சிலாச்சிராமம்
  60. திருப்பாதாளீச்சரம்
  61. திருப்பாம்புரம்
  62. திருப்பாற்றுறை
  63. திருப்பிரமபுரம்
  64. திருப்புகலி
  65. திருப்புகலியும் திருவீழிமிழலையும்
  66. திருப்புகலூர்
  67. திருப்புத்தூர்
  68. திருப்புள்ளமங்கை
  69. திருப்புறவம்
  70. திருப்புன்கூர்
  71. திருப்பூவணம்
  72. திருப்பேணுபெருந்துறை
  73. திருமயிலாடுதுறை
  74. திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்
  75. திருமறைக்காடு
  76. திருமாற்பேறு
  77. திருமுதுகுன்றம்
  78. திருவடுகூர்
  79. திருவண்ணாமலை
  80. திருவதிகைவீரட்டானம்
  81. திருவலிதாயம்
  82. திருவலிவலம்
  83. திருவல்லம்
  84. திருவாரூர்
  85. திருவாலங்காடு
  86. திருவாலவாய்
  87. திருவாழ்கொளிபுத்தூர்
  88. திருவிடைமருதூர்
  89. திருவியலூர்
  90. திருவீங்கோய்மலை
  91. திருவீழிமிழலை
  92. திருவூறல்
  93. திருவெங்குரு
  94. திருவேட்களம்
  95. திருவேணுபுரம்
  96. திருவேற்காடு
  97. திருவையாறு
  98. திருவோத்தூர்
இதைப்போலவே சிவபெருமானின் பெயர்களும் கட்டாயம் கிடைக்கும். -- சுந்தர் \பேச்சு 16:29, 7 சூலை 2013 (UTC)[பதிலளி]
சைவ திருமணச் சடங்கு கட்டுரை திருமண முறைப்பற்றி கூறுவதாக நினைத்து சடங்குகளுக்கான புதிய கட்டுரை தொடங்கினேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:59, 7 சூலை 2013 (UTC)[பதிலளி]
தற்போதைய நிலையில் வடமொழிப் பெயரிலான கட்டுரைத் தலைப்புகளுக்கு பொருத்தமான தலைப்புகளை (சுந்தர் குறிப்பிட்டுள்ளதைக் கொண்டு) கட்டுரையைத் தொடங்கிய சகோதரன் ஜெகதீஸ்வரனே தமிழ்ப்படுத்தினால் நல்லது. தமிழ் விக்கிப்பீடியாவில் வடமொழித் தலைப்புகளுடனான கட்டுரை ---- எண்ணிக்கையுள்ளது என்று யாராவது குறை சொல்வதற்கு முன்பாக இதைச் செய்யலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:37, 7 சூலை 2013 (UTC)[பதிலளி]
இந்த விவாதங்கள் நீடிக்கும் முன்பு என்னுடைய தொடங்கிய கட்டுரைகள் பக்கத்தினை ஒரு முறை பார்த்துவிட்டு பின்பு முடிவெடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். பாடல்பெற்ற தலங்களென சுந்தர் எழுதியுள்ளதற்கும், என்னுடைய கட்டுரைகளுக்கும் என்ன முடிச்சு, அவற்றை கொண்டு எப்படி பொருத்தமான தலைப்புகளை இடுவது என்று சற்றும் புரியவில்லை. நானறிந்து தொடங்கிய நூற்றியெட்டு சிவதாண்டவங்களும், சிவனுடைய வடிவங்களும் இணையத்தை மூலமாக கொண்டு எடுக்கப்பட்டவை. இவைகளின் தமிழ்ப்பெயர்களை ஆய்வு செய்து எழுதியுள்ள நூல்களை அறிந்தவர்கள்தான் மாற்ற இயலும். உச்சத்துணையாக கொண்ட நூல்களில் வடமொழி என்று கருதுபவைகளே இடம்பெற்றிருந்தமையால் அத்தலைப்புகளை இட்டேன்.
வடமொழியில் குறிப்பிட்டுள்ள பலவற்றிக்கு சரியான பெயரை நானறியேன், அத்துடன் அவை வழக்கில் உள்ளமையா என்றும் நான் அறியேன். எனவே வடமொழி தலைப்பினாலான கட்டுரைகளை என்னால் மாற்ற இயலாது. அறிந்தவர்கள் மாற்றிக்கொள்ள தடையேதும் இங்கில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். விக்கிப்பீடியாவை வடமொழி கட்டுரைகள் அதிகம் உள்ளது என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளக்க இவ்வாறு செய்யவில்லை. அவ்வாறு நிர்வாகிகள் நினைக்கும் பட்சத்தில் முன் அறிப்பு இன்றி கட்டுரைகளை நீக்கம் கூட செய்துகொள்ளலாம். நான் ஏன் என்று வினவமாட்டேன். நிலையறிவீர்கள் என்று நினைக்கிறேன். பேச்சுப்பக்கத்தில் என்னிடம் உரையாடுவதை செயலில் ஈடுபடுங்கள். விக்கியின் நடைமுறைகளை அறிந்தே பங்களித்துக்கொண்டிருக்கிறேன். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:08, 7 சூலை 2013 (UTC)[பதிலளி]
செகதீசுவரன், நான் பாடல்பெற்ற தலங்களை ஒரு எடுத்துக்காட்டாகத்தான் குறிப்பிட்டேன். முன்பு அந்தத் தலங்களில் உள்ள கோயில்களின் பெயரை தமிழ்முறையில் ஒலிபெயர்த்து எழுதும்படி உங்களைக் கேட்டுக் கொண்டதாக நினைவிருந்தது. அவ்வளவே. இதே முறையில் மற்ற பெயர்களுக்கும் தரவுகள் கிடைத்தால் எளிதில் வழிமாற்றலாம் என்ற பொருளில் சொன்னேன். நிற்க.
நீங்கள் வேண்டுமென்றே வடமொழியைப் புகுத்துவதாக எண்ணவில்லை. ஆனால், சில வேளைகளில் விரைவாக நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கிப் பின் சரியான பெயரறிந்து மாற்றுவது எளிதல்ல. அதனால்தான் அக்கட்டுரைகளைத் தொடங்கும் முன்னரே முடிந்தவரை தேடிப் பார்த்துவிட்டுப் பெயரிடுமாறு உங்களிடம் கேட்டுக் கொண்டோம். -- சுந்தர் \பேச்சு 08:11, 8 சூலை 2013 (UTC)[பதிலளி]
ஈஸ்வரன் என்பதை ஈசுவரன் என்று மாற்றவே என்னிடம் கோரப்பட்டது. நான் ஊரின் பெயர் + கோயில் மூலவர் பெயர் + கோயில் என்றே தலங்களுக்குப் பெயரிட்டு வந்துள்ளேன். வெறும் தலத்தின் பெயர் மட்டும் இருந்ததை நீக்க கோரிக்கையும் வைத்திருக்கிறேன். புரிதலில் எங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது. தமிழ்ப்பெயரை தேடிக்கொண்டிருந்தால் கிடைக்கின்ற கட்டுரையை நான் தவறவிடக்கூடும். இன்றுவரை நூற்றியெட்டு சிவதாண்டவங்களுக்கான தமிழ் பெயர்கள் தெரியவில்லை. எனவே இறுகத்தினை தளர்த்த வேண்டுகிறேன். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:34, 8 சூலை 2013 (UTC)[பதிலளி]