பேச்சு:பகாய் சமயம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



The contents at this point are from the பஹாய் சமயம் web site, and have been directly quoted. --Natkeeran 18:02, 18 மார்ச் 2006 (UTC)

ஒரு கலைக்களஞ்சியத்துக்குமைய நடை, உள்ளடக்கம் ஆகியவற்றில் சில மாற்றங்கள் தேவை. அவற்றை பிரதான ஆக்கருடான கலந்துடையாடலுடன் செய்ய முடியும். --Natkeeran 06:08, 29 மார்ச் 2006 (UTC)

இக்கட்டுரை நல்ல தகவல்கள் அடங்கியுள்ள ஒரு கட்டுரையாகத் தெரிகிறது. இடையிடையே நக்கீரன் சொல்வதுபோல் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. சிறிய மாற்றங்கள்தான். விக்கிபீடியாவின் நோக்கங்களுக்கு முரணாகப் பிரச்சாரம் போல் தோன்றிய கட்டுரையின் இறுதி வசனத்தை நீக்கியுள்ளேன். வெளியிணைப்பிலும் சிறிய மாற்றம் செய்திருக்கிறேன். Mayooranathan 04:51, 31 மார்ச் 2006 (UTC)

மோசஸ் எதிர் மோசே[தொகு]

இங்கு மோசே என்பதே சரியானது எபிரேயரான மோசேயின் பெயர் அவர் பேசிய மொழியான எபிரேய மொழியில் מֹשֶׁה என்றவாறு எழுதப்படும் இதன் உச்சரிப்பு ஆங்கிலத்தில் எழுதினால் கிட்டத்தட்ட Moshe என்றவாறு வெரும் இதற்க்கொத்த தமிழ் மோசே என்பதாகும் மேலும் இதையே கிறித்தவ விவிலியத்தில் பயன்படுத்தி வருகின்றார்கள். இசுரேல் என்பது இவ்வாறே இவற்றில் கிரந்த எழுத்துக்களை புகுத்த வேண்டாம் அவ்வாறு செய்தால் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றப்படும்.--Terrance \பேச்சு 04:08, 15 மே 2008 (UTC)[பதிலளி]

பஹாவுல்லா எதிர் பாகாவுல்லா[தொகு]

அதே போன்று பஹாவுல்லா எனும் வார்த்தையே சரியானது மற்றும் மரியாதைக்குரியதுமாகும். இது உலகளாவிய முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். தமிழில் தக்க எழுத்து இல்லை என்பதற்காக ஓர் இறை அவதாரத்தின் திருப்பெயரை விருப்பப்படி எழுதிவிட முடியாது. தமிழ் எழுத்துக்களுக்கு நிறைவுச் சொற்களாக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கிரந்தச் சொற்களை இதற்காக பயன்படுத்துவது எவ்வகையில் தவறாகும் எனப் புரியவில்லை. ஆகவே இங்கு கடமையிலுள்ள நண்பர்கள் இதைக் கவனத்தில் கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடனும் சகோதர மனப்பான்மையுடனும் வேண்டி மேற்கொண்டு இத்தகைய misunderstandings நிகழாமல் இருக்க தயவு செய்து என் போன்றோர் கவனத்திற்கு இங்கு நடைமுறையிலுள்ள எழுத்து மற்றும் சொல் விதிமுறைகளை எங்கு எப்படி பெறமுடியும் என்பதைத் தெரியப்படுத்தவும். prsamy@gmail.com

பஹாய், மற்றும் பஹாவுல்லா என எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை எனவே நானும் நினைக்கிறேன்.--Kanags \பேச்சு 08:07, 15 மே 2008 (UTC)[பதிலளி]
தமிழ் எழுத்துக்களைக் கொண்டு ஒருவரது பெயரை எழுதுவது அவமரியாதை என்கிறீர்களா?
//ஆகவே இங்கு கடமையிலுள்ள நண்பர்கள் // அப்படி யாரும் இல்லை உங்களுக்குள்ள உரிமைத் தான் எல்லோருக்கும்.
Muhammad தமிழில் முகம்மது என எழுதப்படுவது போல Bahá'u'lláh பகாவுல்லா எனலாம். கிரந்த எழுத்து தொடர்பில் இங்கே ஒரு கட்டாய கருத்து இல்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனியான நடைமுறையை கலந்துரையாடி மேற்கொள்கிறோம். தமிழுக்கு அறிமுகமாகும் போதே ஏன் தேவையில்லாமல் கிரந்தத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டும் பகாவுல்லா என்றாலே போதும்.--Terrance \பேச்சு 08:12, 15 மே 2008 (UTC)[பதிலளி]
அப்படிப்பார்த்தால் 'பஹாவுல்லா' என்பது கூட (முதல் எழுத்தில்) துல்லியமானதில்லையே நண்பரே? 'ஹ' என்ற எழுத்து வழக்கில் இல்லாமலிருந்தால் என்ன செய்திருப்போம்? அப்போதும் இறைவனை அவமதிப்பதாகுமா? எல்லா மொழிகளிலும் இறைவனின் பெயரை எழுதுவதற்கான எழுத்துக்கள் உள்ளனவா? எண்ணிப் பாருங்கள். மற்றபடி நான் பகாவுல்லா என்பதை வற்புறுத்தவில்லை. -- சுந்தர் \பேச்சு 08:44, 15 மே 2008 (UTC)[பதிலளி]

நண்பர்களே, நான் குறைகூறும் நோக்கத்தோடு எதையும் கூறவில்லை. பஹாவுல்லாவின் பெயர் "அதி உயரிய நாமம்" என உலக பஹாய்களால் போற்றப்படுகின்றது. அவரது திருப்பெயரை பிரார்த்தனையாகவும் கொள்ளப்படுகின்றது. பாரசீக மொழியில் ´ka´ மற்றும் ´ha´, ´ba´ மற்றும் ´pa´ எழுத்துக்கள் தனித் தனியே உண்டு. பஹாவுல்லாவின் பெயர் 'ka' மற்றும் ´pa´ அல்லாமல் 'ba' மற்றும் 'ha' எனும் எழுத்தையே கொண்டு எழுதப்படுகின்றது. சுருங்கக் கூறின் அவரது பெயர் ஆன்மீக உள்ளாற்றல் கொண்டதாகும். முடிந்தவரை சரியாக உச்சரிக்கப்படுவது மிகவும் அவசியம் எனக் கூறுகின்றேன். தமிழில் ழ, ள மற்றும் ண போன்ற எழுத்துக்களை ஒருவர் சரியாக உச்சரிக்காத போது வேதனையாக இருக்கின்றதல்லவா. அது போன்றுதான் தோழர்களே. குறை கூறவில்லை, மன்னித்துக்கொள்ளுங்கள். தமிழ் பேசும் பஹாய்கள் தமிழ் பற்றில் சிறிதும் சலைத்தவர்கள் அல்ல. கடந்த நூறாண்டுகளில் நூற்றுக்கணக்கான பஹாவுல்லாவின் திருவாக்குகள் பாரசீக மொழியிலிருந்து பழைய ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்போது தமிழுக்கும் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. முடிந்தவரை வடமொழி சொற்களை பயன்படுத்தாமலேயே மொழியாக்கம் நடைபெறுகின்றது. தமிழ்ப் பள்ளிக்கே போகாத நான் சுயமாக தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டு பஞ்சத்திற்கு ஆண்டியென என்னால் முடிந்த ஆங்கில/தமிழ் மொழியாக்கம் செய்து வருகின்றேன். ஆகவே, என் போன்றோர் தமிழை எங்கள் வகையில் வாழ வைத்துக்கொண்டுதான் இருக்கின்றோம் என்றென்றும் வாழவைத்துக்கொண்டே இருப்போம். கவலைப்படாதீர்கள். −முன்நிற்கும் கருத்து Prsamy (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

Prsamy, முதலாவது, உங்கள் நல்லாக்கத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து பங்களிக்கவும் வேண்டுகிறேன். பகாவுல்லா என்பதை நீங்கள் விரும்பவில்லை என்றால் பஃகாவுல்லா என்று எழுத முடியுமா என்று எண்ணிப்பாருங்கள். தமிழில் ஒலிக்கும் பொழுது pahaavullaa என்று இருக்கும். bahaavullaa என்று முதல் பகரத்தை மெலிந்து ஒலிக்க இயலாது. உலகில் உள்ள பல மக்கள் தாங்கள் கடவுள் என்றும், இறைதூதர் என்றும் நினைக்கும் பெயர்கள் எல்லாம், எல்லா மொழியிலும் மூல மொழியில் உள்ளது போலவே துல்லியமாய் ஒலித்தல் இயலாது. இது உலக இயற்கை. இறைவன் படைத்ததாக நம்பப்படும் பறவைகளின் ஒலியை எத்தனை மொழிகளில் துல்லியமாய் எழுத்தொலியாக எழுதியும் ஒலித்தும் காட்ட இயலும் சொல்லுங்கள். எக்கருத்தையும், சொல்ல்லையும் (பெயர்ச்சொல்லாக இருந்தாலும்) அவ்வவ் மொழியின் முறைப்படித்தான் எழுத முடியும். ஹா, ஷா முதலான கிரந்த எழுத்துக்கள் அண்மையில் தமிழில் ஊடகங்களிலே சற்று பெருகி வருகின்றது உண்மை. இப்படி பெருகுவதால், தமிழின் ஒலிப்பு சீர்மையும், ஒலிப்பாங்கும், தமிழ் இலக்கண விதிமுறைகளும் கெடுகின்றது எனப் பலர் நினைக்கின்றனர். எனவே பஃகாவுல்லா அல்லது பஃகாஉல்லா என்று எழுதினால் ஒலிப்பு நெருக்கம் சற்று கூடும் என்பது என் கருத்து. எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.--செல்வா 12:23, 15 மே 2008 (UTC)[பதிலளி]

கிரந்த எழுத்துப் பயன்பாடு குறித்து தெளிவான கொள்கை ஏதும் இதுவரை இங்கு இல்லை. அதனால், தற்காலிகமாக பஹாய், பஹாவுல்லா என்றே எழுதலாம்.

தனிப்பட்ட ஒரு சமயம் குறித்த கட்டுரையில் மட்டும் திருத்தத்தை மேற்கொள்வது அச்சமயத்துக்கு எதிரானதாகப் புரிந்து கொள்ளப்படவே கூடுதல் வாய்புண்டு. கிரந்த எழுத்து குறித்து எந்தக் கொள்கை முடிவு, வழிகாட்டலானாலும் அது விக்கிப்பீடியா முழுமைக்கும் செயற்படுத்தப்படுவதே நடுநிலையாக இருக்கும். (பஃகாவுல்லா என்ற செல்வாவின் பரிந்துரை ஏற்பே)

ஒரு ஆன்மீகப் பெயர், மந்திரம் எப்படி உச்சரிக்கப்பட வேண்டும், அப்படி உச்சரித்தால் தான் அதன் பலன் இருக்கும் என்பது எல்லாம் அவரவர் நம்பிக்கை. ஆனால், ஒரு சமயம் எவ்வளவு முக்கியமோ அதைப் போலே சமயங்கள், நாடுகள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மொழிகளும் அவற்றின் இயல்புகளும் முக்கியமானவை. ஒரு சமயத்தின் இயல்பு கெடக்கூடாது என்று எவ்வளவு மெனக்கெடுகிறீர்களோ அதே அளவு தமிழின் இயல்பு கெடாமல் இருப்பதற்காக மெனக்கெடுவது தான் நமது முதற் கடமையாக இருக்க முடியும். 17ஆம் நூற்றாண்டு வரை இலக்கியங்களில் கிரந்த எழுத்துக்களைக் காண இயலாதிருக்கிறது. பிறகு, புகுத்தப்பட்டதற்கு என்ன காரணம் என்றால் இந்த "இப்படி உச்சரித்தால், எழுதினால் தான் பலன் இருக்கும்" என்ற சிந்தனையே. இன்னும் தமிழில் பதியப்படாத சமயங்கள், கருத்துகள் எவ்வளவோ உள்ளன. ஒவ்வொருவரும் தத்தம் நம்பிக்கைகளுக்காகத் தமிழை சிதைத்துக் கொண்டே போவது முறையா?

ஏற்கனவே கிரந்தம் கலந்து உள்ள சொற்களைத் தமிழ்ப்படுத்துவதே பெரும் பணியாக இருக்கையில் புதுப் புதுக் கருத்துகளிலும் புதிய புதிய கிரந்தச் சொற்களை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாமே? தெரன்சு சொன்னது போல் தமிழுக்கு அறிமுகமாகும் போதே ஏன் தேவையில்லாமல் கிரந்தத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டும்? தமிழுக்குப் புதிதாக அறிமுகமாகும் சொற்களை இயன்றவரை கிரந்தம் தவிர்த்து எழுதுவது என்ற நிலைப்பாட்டை எடுக்கலாம். குறிப்பாக, "கிரந்தம் தவிர்த்தால் இன்னாருக்கு மரியாதை குறைவு, ஆன்மீகப் பலன் குறையும்" போன்ற சிந்தனைகளின் அடிப்படையில் கிரந்தப் பயன்பாட்டை அனுமதிப்பது ஆபத்தான போக்காகும்.--ரவி 12:27, 15 மே 2008 (UT C)

ஆங்கிலத்தில் அகர வரிசையில் Bahaullah என்று உள்ளது கட்டுரையில் Bahá'u'lláh என்று பல ஒலித்திரிபுக் குறிகளுடன் எழுதியுள்ளார்கள். பிற ஐரோப்பிய மொழிகளிலும் சிறுசிறு மாற்றத்துடன் ஒலித்திரிபுக் குறிகளுடன் எழுதியுள்ளார்கள். தமிழில் ஒலித்திரிபுகள் இட்டுக்காட்டுவது அவ்வளவாக நடைமுறையில் இல்லை. Sa என்னும் ஒலிக்கு சில இடங்களில் அச்சில் ஃச என்று எழுதுகிறார்கள். சமசுகிருத வல்லினங்களின் 4 வேறுபாடுகளைக் காட்ட எண்கள் இட்டுக் காட்டுகின்றனர். நான் இங்கே ஒரு முறை காட்டியுள்ளேன். ˚பஃகாஉல்லா என்றோ, 'பஃகாஉல்லா என்றோ, ˚பஃஆஉல்லா என்றோ, ˚ப˚ஆஉல்லா என்றோ எழுதியும் காட்டலாம். அதாவது இருக்கும் எழுத்துகளில் ஏதோ சிறு ஒலித்திரிபுக்குறி இட்டு சிறுபான்மையான இடங்களில் காட்டி எழுதலாம். துல்லியம் கருதி இவை மிக அதிகமாக பொதுமொழியில் வந்தால் மொழியின் ஒலிப்பும், இயல்பும் ஒலிப்பாங்கு இனிமை எல்லாமும் கெடும். பகாவுல்லா என்று எழுதி pagaavullaa என்று ஒலிப்பதுதான் தமிழில் நல்லது. ஆன்மீகம், மந்திரம் தந்திரம் என்பது வேண்டும் என்றால் தனிக்குழுக்களில் ஒலித்திரிபுக் குறிகள் இட்டு, ஒலிப்பு முறையையும் அக்கறையுடன் எடுத்துக்கூறி பயிற்சி அளித்தல் வேண்டும். ஆங்கிலத்திலும் பொது மொழியில் Tamil என்று எழுதி டாமில் என்றுதான் கூறுவர். ஆனால், துறை சிறப்பு நூல்களில், tamiḻ; IPA: [t̪ɐmɨɻ] என்றெல்லாம் எழுதிக் காட்டுவர். திருஞானசம்பந்தர் என்பதை எத்தனை மொழிகளில் ஒலிப்புக் குன்றாமல் எழுதி ஒலித்தல் கூடும்? நம்மாழ்வார், பழனி ஆண்டவர் என்பதனை எப்படி கூறுவர்? எனவே சற்று எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். --செல்வா 12:51, 15 மே 2008 (UTC)[பதிலளி]

நண்பர்களே, உங்கள் மனக்குறைகள் புரிகின்றன. எனக்கும் நீங்கள் கூறுவது தெளிவாக இருக்கின்றது. நீங்கள் கருத்துரைத்திருப்பது போல் பஃகாஉல்லா அல்லது பஃகா'உ'ல்லா என்றே எழுதப்படுவதில் எந்தக் குறைபாடும் இல்லை. இங்கு பொருள் என்னவென்றால் பெயரை எப்படி எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல மாறாக சரியாக உச்சரிக்கப்படுகின்றதா என்பதே குறிக்கோள். அவ்வகையில் யாருக்கும் எவ்வித பிரச்சினையும் கிடையாது. ஆனால், இத்தகைய மாற்றங்கள் பொது உடன்பாடாக இருக்கவேண்டும் மற்றும் காலப்போக்கில் நிதானமாக நடைபெற வேண்டிய ஒன்றும் ஆகும். என்னைப் போன்ற தனிநபர் பஹாய்கள் இதைத் தீர்மானிக்க முடியாது. தமிழ் (பஹாய்/பஃகாய்/பஃகா'யி/பஃகா'இ) சமூகம் இப்பொருள்கள் குறித்த விழிப்புணர்வைப் பெற்று ஏற்கத்தக்க மாற்றங்களுக்குத் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் என்பது உங்களைப்போன்றே என்னுடைய அவாவும் ஆகும். இக்கருத்துக்களையும் செல்வா அவர்களின் பரிந்துரைகளையும் தொடர்புடைய என் நண்பர்களுக்கு அனுப்பிவிட்டேன். அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம். இராமசாமி.

இராமசாமி, உங்கள் புரிந்துணர்விற்கு நன்றி. இது போன்ற ஒலிப்புத் துல்லியம் காட்ட ஆங்கில விக்கியில் en:IAST அல்லது en:IPA என்ற குறியீட்டைப் பயன்படுத்துகின்றனர். நாம் இதுபோன்ற இடங்களில் அடைப்புக்குறிகளில் மட்டும் கட்டுரைத் தலைப்பிற்கு செல்வா பரிந்துரைத்த குறியீட்டைப் பயன்படுத்தலாமெனக் கருதுகிறேன். கூடிய இடங்களில் ஒலிக்கோப்புகளை இணைக்கலாம். -- சுந்தர் \பேச்சு 03:15, 16 மே 2008 (UTC)[பதிலளி]

நன்றி சுந்தர். கட்டுரையை முதலில் தனியே "அப்டேட்" செய்து பின் உங்கள் பார்வைக்கு "அப்லோட்" செய்கிறேன். --prsamy 06:51, 17 மே 2008 (UTC)[பதிலளி]

கட்டாயம் செய்யுங்கள். -- சுந்தர் \பேச்சு 11:59, 17 மே 2008 (UTC)[பதிலளி]

update - இற்றைப்படுத்து
upload - ஏற்று
download - இறக்கு

--செல்வா 14:02, 17 மே 2008 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா. --prsamy 04:15, 19 மே 2008 (UTC)[பதிலளி]

சரி, கட்டுரையை முடிந்தவரை இற்றைப்படுத்தியுள்ளேன். மேலும் புகுத்தவேண்டியை இருப்பினும் புகுத்தவேண்டியவற்றைப் புகுத்தி முழுக் கட்டுரையையும் ஏற்றுவதற்கு முன் அதை யாராயினும் இப்பொழுதே இடையிலேயே கண்ணோட்டமிட்டு பரிந்துரைகள் வழங்கினால் நன்றியுடையவனாக இருப்பேன். யாரிடம் அனுப்பி வைக்க?--prsamy 05:31, 20 மே 2008 (UTC)[பதிலளி]

யாருக்கும் அனுப்ப வேண்டியதில்லை இராமசாமி. கட்டுரையில் இற்றைப்படுத்தினால் மற்ற பங்களிப்பாளர்கள் வேண்டிய திருத்தங்களைச் செய்வர். தயக்கமிருந்தால் இந்த சிவப்பு இணைப்பை அழுத்தி கட்டுரையை இட்டுவிடுங்கள். -- சுந்தர் \பேச்சு 06:13, 20 மே 2008 (UTC)[பதிலளி]

வரைவு[தொகு]

இராமசாமியின் வரைவைச் செம்மைப்படுத்தி கட்டுரைக்கு நகர்த்தலாம். -- சுந்தர் \பேச்சு 10:34, 20 மே 2008 (UTC)[பதிலளி]

மீதமுள்ள சில துணைத் தலைப்புக்களை கூடிய விரைவில் விரிவுபடுத்துகிறேன். அவற்றுக்குத் தக்க நிழற்படங்களையும் தேடவேண்டும். மற்றும் ஆங்காங்கு விளங்காத அல்லது அறிமுகமற்ற விஷயங்கள் நிச்சயமாகவே இருக்கின்றன. அவற்றை அவற்றின் விளக்கங்களோடு தொடர்புபடுத்தவும் வேண்டுமல்லவா. --prsamy 08:22, 26 மே 2008 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பகாய்_சமயம்&oldid=1876007" இலிருந்து மீள்விக்கப்பட்டது