புற நரம்பு மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனிதனின் நரம்புத் தொகுதி, சிவப்பு நிறம் - மைய நரம்பு மண்டலம், நீல நிறம் - புற நரம்பு மண்டலம்

புற நரம்பு மண்டலம் அல்லது புறநரம்புத் தொகுதி (Peripheral Nervous System - PNS) எனப்படுவது, நரம்புத் தொகுதியின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகவும், அத் தொகுதியின் மைய நரம்பு மண்டலம் தவிர்ந்த ஏனைய உணர் நரம்புக் கலங்களையும், அவற்றை நரம்பு நாண்கள் (nerve cord), முண்ணாண் (spinal cord), மூளை என்பவற்றுடன் இணைக்கும் நரம்புக் கலங்களையும் கொண்டது. மையநரம்புத் தொகுதி]]யுடன், கண், காது போன்ற உணர் உறுப்புக்களையும், தசைகள், குருதிக் கலன்கள், சுரப்பிகள் போன்ற அனைத்து உடல் உறுப்புக்களையும் இணைக்கும் பகுதியாக புற நரம்பு மண்டலமானது அமைந்திருக்கிறது.

மைய நரம்பு மண்டலம் போலன்றி, புற நரம்பு மண்டலமானது எலும்புகளால் சூழப்பட்டிருப்பதில்லை. இதனால் பாதுகாப்பின்றி நச்சுப்பொருள் மற்றும் பொறிமுறைத் தாக்கங்களுக்கு உட்படலாம்.

விழித்திரை நரம்பு மற்றும் மண்டையோட்டு நரம்பு என்பனவும் புற நரம்பு மண்டலத்தையே சாரும். மண்டையோட்டு நரம்புகளின் நரம்புக் கலத்திரள் (ganglia) மூளையினுள் இருந்தாலும், அவற்றின் நரம்பிழைகள் (axons) மூளைக்கு வெளியாக அமைந்திருப்பதனால், இவை புற நரம்பு மண்டலத்தையே சாரும்.[1]

[தொகு] Reference

  1. James S. White (21 March 2008). Neuroscience. McGraw-Hill Professional. pp. 1–. ISBN 9780071496230. http://books.google.com/books?id=bBsvkBiQAy0C&pg=PA1. Retrieved 17 November 2010. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=புற_நரம்பு_மண்டலம்&oldid=1125467" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்