விழித்திரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விழித்திரை | |
|---|---|
| மனிதரின் வலது கண். மிருகங்கள் பலவற்றின் கண்கள் மனிதக் கண்ணிலிருந்தும் வேறுபட்டவை. | |
| கிரேயின் | |
| தமனி | central retinal artery |
| ம.பா.தலைப்பு | Retina |
விழித்திரை (Retina) என்பது நமது கண்ணில் உட்கடைசி உறையாகும். இது மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.[1] விழி வெளிப்படலம், திரவம், லென்ஸ், கூழ்ம திரவம் வழியாக வரும் ஒளியானது இதில் படுகிறது. இந்த ஒளி சில மின்வேதி மாற்றங்களை உண்டு செய்து மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. மூளை இத் தகவல்களை உருவங்களாக மாற்றுகிறது.
எல்லாப் பொருட்களின் பிம்பமும் விழித்திரையில் தலை கீழாகத் தான் விழும். மூளை தான் இவற்றை நேராக்குகிறது.
விழித்திரையில் பத்து அடுக்குகள் உள்ளன.[2] வெளியிலிருந்து உள்ளாக அவை பின்வருமாறு,
- நிறமிகள் கொண்ட எபிதீலியம் உள்ள அடுக்கு
- ஒளி உணர்விகளான கூம்புகளும் குச்சிகளும் உள்ள அடுக்கு
- வெளிப்புற எல்கை அடுக்கு
- வெளிப்புற உட்கரு அடுக்கு
- வெளிப்புற மடிப்பு அடுக்க
- உட்புற உட்கரு அடுக்கு
- உட்புற மடிப்பு அடுக்கு
- நரம்பணுத் திரள் அடுக்கு
- நரம்பு இழை அடுக்கு
- உட்புற எல்கை அடுக்கு
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Sensory Reception: Human Vision: Structure and function of the Human Eye" vol. 27, Encyclopaedia Britannica, 1987
- ↑ The Retinal Tunic. Virginia-Maryland Regional College of Veterinary Medicine