பீப்புப் பாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"பீப்புப் பாடல்"
பாட்டு by சிலம்பரசன் (பாடகர்)[1]
எழுதியவர்சிலம்பரசன்[2]
மொழிதமிழ்

என்ன ***க்கு இலவ்வு பண்ணுறோம் எனத் தொடங்கும் பீப்புப் பாடல் அல்லது பீப் பாடல் (Beep song) என்பது 2015இல் இணையத்தில் கசிந்து, சச்சரவை ஏற்படுத்திய, அலுவன்முறையாக வெளியிடப்படாத ஒரு தமிழ்ப் பாடல் ஆகும்.[3][4][5] சிலம்பரசன் இப்பாடலை எழுதிப் பாடியுள்ளார்.[6] தனிப்பட்ட முறையில் சிலம்பரசனால் பாடப்பட்ட இப்பாடல், நிறைவுறாத நிலையிலே திருடப்பட்டு, இயூட்டியூபில் வெளியிடப்பட்டது.[7][6] இப்பாடலுக்கு அனிருது இரவிச்சந்திரன் இசையமைத்துள்ளதாகக் கூறப்பட்டது.[8] ஆயினும், இதனை அனிருது இரவிச்சந்திரனும் சிலம்பரசனும் மறுத்துள்ளனர்.[9][1]

சச்சரவு[தொகு]

பீப்புப் பாடல் பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.[10] இதனையடுத்து, சிலம்பரசன், அனிருது இரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சனநாயக மாதர் சங்கத்தினர் கோவைக் காவல் துறையில் முறைப்பாடு அளித்தனர்.[11] இப்பாடலில், பீப்பு ஒலி கொண்டு மறைக்கப்பட்ட சொற்களைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.[4][5]

பீப்புப் பாடலுக்குப் பெண் ஒருவர் பதிலளிக்கும் வகையிலும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் அமைந்த ஒரு பாடலும் சிவரஞ்சனியால் பாடப்பட்டு, மதராசு செண்டிரலால் வெளியிடப்பட்டது.[12]

மாற்றுக்கருத்துகள்[தொகு]

அலுவன்முறையாக வெளியிடப்படாத இப்பாடலைக் கேட்டுவிட்டு, சிலம்பரசனையும் அனிருது இரவிச்சந்திரனையும் திட்டுவதற்கு உரிமையில்லை எனத் திரைப்படத் திறனாய்வாளரான பிரசாந்து கருத்துத் தெரிவித்துள்ளார்.[13] இப்பாடலில் நல்ல கருத்துகளும் கூறப்பட்டிருப்பதாகத் தி. இராசேந்தர் தெரிவித்துள்ளார்.[14] மேலும், சிலம்பரசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவருடைய சுவடர்கள் நால்வர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.[15]

2016 புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, சென்னையிலுள்ள ஒரு விருந்து மண்டபத்தில் பீப்புப் பாடல் ஒலிக்கவிடப்பட, அதற்கு இளைஞர்கள் நடனமாடினர்.[16]

வழக்கு[தொகு]

சிலம்பரசன், அனிருது இரவிச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் கோவைக் காவல் துறையினரும் சென்னைக் காவல் துறையினரும் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.[17] இப்பாடலைக் குமுக வலைத்தளங்களிலிருந்து அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.[17] இப்பாடலைப் பதிவேற்றம் செய்தவரின் விவரத்தை வழங்குமாறும் பாடலை அகற்றுமாறும், சென்னைக் காவல் துறை இயூட்டியூபிடம் கோரியுள்ளது.[18][19] இப்பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள கெட்ட சொற்கள் பீப்பு ஒலியால் மறைக்கப்பட்டுள்ளதால், பாடலை அகற்றவேண்டிய தேவை இல்லையென இயூட்டியூபு மறுத்துள்ளது.[20]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "பீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிகர் சிலம்பரசன் பேட்டி". தி இந்து. 20 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
  2. "பீப் பாடல் விவகாரம்: நடிகர் சிம்புவை கைது செய்ய தனிப்படை தீவிரம்". தினகரன். 23 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
  3. DN (20 திசம்பர் 2015). "பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு, அனிருத் மீதான பிடி இருகிறது; சென்னைப் போலீஸாரும் வழக்குப் பதிவு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
  4. 4.0 4.1 ச. அருண் (13 திசம்பர் 2015). "'பீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் பதில்!". விகடன். பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
  5. 5.0 5.1 சாருநிவேதிதா (13 திசம்பர் 2015). "சிம்பு, அநிருத் இருவரின் சமூக விரோத செயல்!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
  6. 6.0 6.1 "ஆபாச பாடல் பிரச்சினையில் மேலும் 2 வழக்கு பதிவு முன்ஜாமீன் கேட்டு நடிகர் சிம்பு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை". தினத்தந்தி. 22 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
  7. "மன்னிப்பு கேட்பது மாபாதகமா?: தலையங்கம்". மாலைமலர். பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
  8. ஸ்கிரீனன் (19 திசம்பர் 2015). "'பீப்' பாடல் குறித்து ரஜினியிடம் கேளுங்கள்: கங்கை அமரன் காட்டம்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
  9. DN (14 திசம்பர் 2015). "பீப் பாடல்: அனிருத் & டி. ஆரின் முரண்பட்ட விளக்கங்கள்!". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
  10. "'பீப்' பாடல் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது: நடிகர் சங்கம் கண்டனம்!". விகடன். 21 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2015.
  11. ச. ஜெ. ரவி (12 திசம்பர் 2015). "பீப் பாடல்: சிம்பு, அனிருத்துக்கு எதிராக மாதர் சங்கத்தினர் போலீசில் புகார்; ஆர்ப்பாட்டம்!". விகடன். பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2015.
  12. எம். மணிகண்டன் (25 திசம்பர் 2015). "இது பதிலடி 'பீப்'!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2015.
  13. Tamil Cinema Review (12 திசம்பர் 2015). "Whats wrong with Beep song?". YouTube. பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2015.
  14. "மகனுக்கு டி.ராஜேந்தர் வக்காலத்து: 'பீப்' பாடலில் நல்ல கருத்து உள்ளது". தினமலர். 22 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2015.
  15. ஸ்கிரீனன் (21 திசம்பர் 2015). "'பீப்' பாடல் சர்ச்சை: சிம்பு ரசிகர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2015.
  16. "'பீப்' பாடலுடன் சென்னையில் புத்தாண்டு உற்சாகக் கொண்டாட்டம்!". விகடன். 1 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2016.
  17. 17.0 17.1 "சமூக வலைதளங்களில் இருந்து 'பீப்' பாடலை உடனடியாக அகற்ற வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு". தி இந்து. 23 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2015.
  18. "பீப் பாடலை பதிவேற்றியது யார்?- யூடியூபிடம் விவரம் கோரியது சைபர் கிரைம் போலீஸ்". தி இந்து. 23 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2015.
  19. "10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கேட்ட 'பீப்' பாடலை யூடியூப்பில் அகற்றுவதில் நீடிக்கும் சிக்கல்: போலீஸார் குழப்பம்". தி இந்து. 27 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2015.
  20. "யூடியூப் நிர்வாகம் சிம்பு பாடலை அகற்ற மறுப்பு". வணக்கம் லண்டன். 27 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீப்புப்_பாடல்&oldid=3577838" இலிருந்து மீள்விக்கப்பட்டது