பிட்டி மொகந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிட்டி மொகந்தி
பிறப்புபிட்டிகோத்ரா மொகந்தி
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்பிட்டி, இராகவ் ராஜன்
செயற்பாட்டுக்
காலம்
2006 - தற்போது வரை
அறியப்படுவதுஜெர்மன் பெண்ணை வன்கலவி செய்த வழக்கு

பிட்டி மொகந்தி (Bitti Mohanty) பிட்டிகோத்ரா மொகந்தி என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு கணினிப் பொறியாளரும், அதிமுக்கியமான குற்றவாளியும் ஆவார். [1] இந்தியாவின் அல்வாரில் ஒரு ஜெர்மன் சுற்றுலாப் பெண்ணை வன்கலவி செய்ததற்காக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். மேலும் ஒடிசாவின் கட்டக்கில் இவரது நோய்வாய்ப்பட்ட தாயை சந்திக்க 20 நவம்பர் 2006 அன்று பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாக இருந்தார். இவர் கேரளாவின் கண்ணூரிலிருந்து, மார்ச் 9, 2013 சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்.[2] [3] [4] இவரது வழக்கு விரைவுன நீதிமன்றத்தால் நடத்தப்பட்ட மிக விரைவான வன்கலவி விசாரணைகளில் ஒன்றாகும்; புகார் அளித்த 15 நாட்களுக்குள் விசாரணை முடிந்தது.[5] இவர் தண்டனை பெற்ற 8 மாதங்களுக்குள் பிணை வழங்கப்பட்டது. [3] இந்தியக் காவல் பணி அதிகாரியான இவரது தந்தை, வித்யா பூசண் மொகந்தி (விபி மொகந்தி), தனது மகனின் 15 நாள் பிணைக்கு உத்தரவாதமாக இருந்தார். பின்னர் தனது மகனை மறைத்தும் அடைக்கலம் கொடுத்ததற்காகவும் குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.[2] [3] பின்னர் இவர் 2009இல் மீண்டும் காவல் பணியில் சேர்க்கப்பட்டு, 2012இல் ஓய்வு பெற்றார். [6] தனது மகன் காணாமல் போன ஆறாண்டுகளுக்குப் பிறகு, தனது மகன் எங்கே இருக்கிறார் என்பது பற்றி அறியாமையை வெளிப்படுத்தி, தனது மகன் எந்த பெரிய குற்றமும் செய்யவில்லை என்று கூறினார்.[3]

காவல் துறை அதிகாரிகளான ஏ. எஸ். கில் (ராஜஸ்தான் காவல்துறை தலைமை இயக்குநர் ), விபி மொகந்தி ஆகியோரின் தலையீட்டால் விசாரணை மந்தமானதாகக் கூறப்படுகிறது.[6] விசாரணை அதிகாரி 29 மே 2007 அன்று திடீரென மாற்றப்பட்டார். இது விரைவான விசாரணைக்கு இடையூறாக இருந்தது.[6]

தந்தை[தொகு]

இந்தியக் காவல் பணி அதிகாரியான, பிட்டி மொகந்தியின் தந்தை, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும், ராஜஸ்தான் மாநில மனித உரிமைகள் ஆணையத்திலும் மனு அளித்து, தனது மகனுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவை என்றும் கைது செய்யக்கூடாது என்றும் கூறினார்.[7] மற்ற கைதிகளுடன் தொடர்புகொள்வதன் மூலம் தனது மகனின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை இவர் கண்டுபிடித்தார்.[7] ஜெர்மன் பெண்ணும் தனது மகனும் நெருக்கமாக இருந்ததாகவும், ஒன்றாக வாழ்வதாகவும் வாதிட்டார்.[7]

காணாமல் போதல்[தொகு]

இவர் மார்ச் 21, 2006 அன்று ஒரு ஜெர்மன் நாட்டவரை வன்கலவி செய்தார். ஜெர்மன் பெண்மணியும் பிட்டி மொகந்தியும் ராஜஸ்தானில் விடுமுறையில் இருந்தனர். 20 மார்ச் 2006 அன்று அல்வாரில் ஒரு விடுதியில் அறையை எடுத்து தங்கியிருந்தனர். இவர் 12 ஏப்ரல் 2006 அன்று விரைவு நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஒடிசா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த காவல்துறையினர் இவரை கண்டுபிடிக்க முடியவில்லை.[6]

ராஜஸ்தான் முதலமைச்சர் பிட்டி மொகந்தியை உயர் குற்றவாளியாகக் கருதுவதால், சிறப்பு குழுக்களை அமைப்பதன் மூலம் அவரை கண்டுபிடிக்க காவலர்கள் முயற்சிப்பதாக உறுதியளித்தனர்.[1] எவ்வாறாயினும், குற்றவாளி காணாமல் ஏழு வருடங்களுக்குப் பிறகு, ராஜஸ்தானின் அரசாங்கம் பிட்டி மொகந்தியை கைது செய்ய முடிந்த அனைத்தையும் செய்ததாகக் கூறியது.[8]

கைது[தொகு]

இவர் இராகவ் ராஜன் என்ற அடையாளத்துடன் ஒரு வங்கியில் பணிபுரிந்தார்.[9] [10] ஆந்திராவைச் சேர்ந்த இராகவ் ராஜனாக இவர் பணிபுரியும் வங்கி கிளை அதிகாரிகளுக்கு அநாமதேய கடிதம் மூலம் பிட்டியின் தகவல் கிடைத்தது, அந்த நபர் பிட்டியாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். இவரது புகைப்படம் தொலைக்காட்சிகளிலும், இணையத்தில் பாலியல் குற்றங்களின் குற்றம் சாட்டப்பட்ட படங்களில் காட்டப்பட்டது. இது இவரை அடையாளம் காண உதவியது. பிட்டி மொகந்தி கேரளாவின் கண்ணூரில் இருந்து மார்ச் 9, 2013 அன்று கைது செய்யப்பட்டார். [9] .

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 PTI (1 January 2010). "Rajasthan Police will try to arrest Bitty Mohanty : CM". Zeenews. http://zeenews.india.com/news/states/rajasthan-police-will-try-to-arrest-bitty-mohanty-cm_591796.html. பார்த்த நாள்: 3 January 2013. 
  2. 2.0 2.1 "Mohanty surrenders in Jaipur". The Hindu. 11 January 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/mohanty-surrenders-in-jaipur/article1176745.ece?css=print. பார்த்த நாள்: 3 January 2013. 
  3. 3.0 3.1 3.2 3.3 "Where is Bitti Mohanty?". The Times of India, Times Now. 17 July 2011 இம் மூலத்தில் இருந்து 6 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130106213000/http://www.timesnow.tv/Where-is-Bitti-Mohanty/articleshow/4378929.cms. பார்த்த நாள்: 3 January 2013. 
  4. "Has Navin Patnaik forgotten Bitti case?". The Times of India, Times Now. 1 January 2010 இம் மூலத்தில் இருந்து 29 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120529104928/http://www.timesnow.tv/articleshow/4335447.cms. பார்த்த நாள்: 4 January 2013. 
  5. Garg (4 January 2013). "Rape trials shouldn't take more than 15-20 days". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/delhi/Rape-trials-shouldnt-take-more-than-15-20-days/articleshow/17878257.cms. பார்த்த நாள்: 4 January 2013. 
  6. 6.0 6.1 6.2 6.3 Rakesh Dixit (3 January 2012). "Accused of raping a german woman, man still at large after six years". India Today. http://indiatoday.intoday.in/story/accused-of-rape-bitihotra-mohanty-still-at-large-after-six-years/1/240656.html. பார்த்த நாள்: 4 January 2012. 
  7. 7.0 7.1 7.2 PTI (20 December 2006). "Rajasthan police arrives in Cuttack to look for rape convict". Outlook India இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130216145628/http://news.outlookindia.com/items.aspx?artid=438736. பார்த்த நாள்: 4 January 2012. 
  8. "Bitti Mohanty case: Raj Govt evades responsibility". The Times of India - Times Now இம் மூலத்தில் இருந்து 13 மார்ச் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130313100838/http://www.timesnow.tv/Exclusives/News/Bitti-Mohanty-case-Raj-Govt-evades-responsibility/videoshow/4418055.cms. பார்த்த நாள்: 3 January 2013. 
  9. 9.0 9.1 http://zeenews.india.com/news/nation/german-woman-rape-absconding-bitti-mohanty-arrested_834042.html
  10. "'Raghav Rajan' is indeed Bitti Mohanty". The Hindu (Chennai, India). 15 March 2013. http://www.thehindu.com/news/national/kerala/raghav-rajan-is-indeed-bitti-mohanty/article4512345.ece?homepage=true. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்டி_மொகந்தி&oldid=3792479" இலிருந்து மீள்விக்கப்பட்டது