பயனர் பேச்சு:Kovaisarala

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Kovaisarala, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:10, 22 மார்ச் 2012 (UTC)

வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவில் தாங்கள் பங்களிப்பது குறித்து மகிழ்ச்சி. நீங்கள் அண்மையில் எழுதியுள்ள கட்டுரைகள் அல்லது கட்டுரைப் பகுதிகள் விமரிசன நோக்கில் அல்லது விளம்பர நோக்கில் எழுதப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு வறுவல் என்ற கட்டுரை. பொதுவாக வலைப்பதிவுகள் குறித்த கட்டுரைகள் இங்கு ஏற்கப்படுவதில்லை. அதனை நீக்கியிருக்கிறேன். விக்கிப்பீடியாவுக்கு உங்களால் நிறைய ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்ய முடியும். கட்டுரைகளை நடுநிலை நோக்கில் தாருங்கள். தனிப்பட்ட விமரிசனங்களைத் தவிருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 20:24, 12 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

தேவையானதும் வேண்டப்படாததும் (அல்லது விரும்பப்படாததும்)[தொகு]

சிலரால் வேண்டப்படுவது/விரும்பப்படுவது சமூகத்துக்குத் தேவையானதா? அல்லது சமூகத்துக்குத் தேவையானதுதான் (ஒரு)சிலரால் வேண்டப்படுகின்றதா?

இங்கு நோக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், அந்த ஒருசிலரே பொதுப்படையாக சகல அதிகாரங்களையும், வல்லமைகளையும் தங்கள் கைகளில் தக்க வைத்திருக்கின்றார்கள் என்பதே!

இந்த வகையில் - சமூகத்துத் தேவையான எல்லாவற்றையும் வரவேற்கக்கூடிய திறந்த முன்னேற்றவாதக் கொள்கைகள் அந்த ஒருசிலரிடம் இருப்பதில்லை என்பதனையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

விக்கிபீடியா ஒரு மட்டற்ற தகவல் களஞ்சியம், ஆனால் தகவல்கள் அனைத்துமே உண்மையானவையா? இவைகள் கேள்விகள் மட்டுமே! விமர்சனமல்ல!

ஆனாலும், இந்த விக்கியூடக அணுகுமுறை (குறிப்பாகத் தமிழ் வழியில்) இன்னமும் முன்னேற வேண்டியுள்ளது என்பது ஏற்கப்படவேண்டியதுதான்!

ஏனெனில் சில பல (தனிப்பட்ட) அறியாமைகளின் விளைவினால் ஏற்படுகின்ற தணிக்கைச்செயற்பாடுகளின் விளைவு சரித்திரங்களின் உண்மையான பிரதிபலிப்புகளின் விகாரமான அல்லது 'பூசிமெழுகப்பட்ட' விலகல்களை மட்டுமே ஆவணப்படுத்தி அட்டவணைப்படுத்துவதில் போய் முடிகின்றது!

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kovaisarala&oldid=1258771" இலிருந்து மீள்விக்கப்பட்டது