நிலைமின்னியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இயற்பியலில் நிலைமின்னியல் (Electrostatics) எனப்படுவது நிலையாகவுள்ள அல்லது மெதுவாக நகரும் மின்னூட்டங்களினால் ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றி அறிய உதவும். பொருள்களில் ஏற்படும் இலத்திரன் இழப்போ அல்லது ஏற்போ அதனை மின்னூட்டம் அடையச்செய்கிறது. அம்பர்[1] போன்ற சில பொருட்கள் தூசு, மரத்துகள் ஆகியவற்றை ஈர்க்கும் ஆற்றல் உள்ளவை என்பது பழங்காலந்தொட்டே அறியப்பட்ட ஒன்றாகும். எலக்ட்ரான் என்ற சொல் அம்பரின் கிரேக்க-மூலச்சொல்லான elektron என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.