மின்காந்தத் தூண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மின்காந்தத் தூண்டல் (Electromagnetic induction) என்பது, ஒரு கடத்தியினை மாறும் காந்தப் பாயத்திற்கிடையே வெளிப்படுத்தும்போது, அக்கடத்தியின் இரு முனைகளுக்கிடையே மின்னழுத்தம் உண்டாகும் நிகழ்வைக் குறிக்கிறது.

1831ல் மைக்கெல் ஃபாரடே என்பார் மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுகிறது. அதே ஆண்டு யோசப்பு ஹென்றி என்பாரும் இதனைச் சுயமாகக் கண்டுபிடித்தார் என்றும் அறியப்படுகிறது. ஆனால் ஃபாரடே தான் முதலில் இக்கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

ஒரு மூடப்பட்ட சுற்று காந்தப் பாயத்துடன் தொடர்பு கொண்டிருக்கும்போது, அக்காந்தப் பாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினால், அதன் விளைவாக அச்சுற்றில் ஒரு மின்னழுத்தம் உருவாகி மின்னோட்டம் தூண்டப்படுகிறது. அவ்வாறு உருவாகும் மின்னழுத்தத்தைத் தூண்டப்பட்ட மின்விசை எனவும், அப்பாதையில் பாயும் மின்னோட்டத்தைத் தூண்டப்பட்ட மின்னோட்டம் என்றும் அழைப்பர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மின்காந்தத்_தூண்டல்&oldid=1371485" இருந்து மீள்விக்கப்பட்டது