ஆம்பியர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆம்பியர் (குறியீடு: A) என்பது மின்னோட்டத்தின் பன்னாட்டு முறைமை (SI) அடிப்படை அலகு ஆகும். ஒரு அம்பியர் என்பது, வெற்றிடமொன்றில் 1m தொலைவில் உள்ள இரண்டு முடிவிலி நீளக் கம்பிகளுக்கு இடையில் 2 x 10-7N எனும் விசையைத் தோற்றுவிக்கும் மாறாத மின்னோட்டத்தின் அளவு என வரையறுக்கப்படுகிறது..