மின்னோட்டமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகரும் இரும்பு மின்னோட்டமானியின் விபரிப்பு மாதிரி ஒன்றின் படம்

மின்னோட்டமானி அல்லது ஆம்ப்பியர்மானி அல்லது அம்பியர்மானி (ammeter)என்பது ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை அளந்திடப் பயன்படும் கருவி. அளக்கப்படவேண்டிய மின்னோட்டத்தின் அளவைப் பொறுத்து இது மில்லி மின்னோட்டமானி, மைக்ரோ மின்னோட்டமானி எனவும் வகைப்படுத்தப்படும். மின்னோட்டமானி மின்சுற்றில் தொடரிணைப்பிலேயே இணைக்கப்பட வேண்டும். மேலும் மின்னோட்டமானியின் மின்தடை மிகக்குறைவாக இருத்தல் வேண்டும்; அப்போதுதான் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவு மாறாது.

நேர்த்திசை மின்னோட்டமானி (D.C. Ammeter)[தொகு]

குறைவான மின்தடை கொண்ட மின்தடையாக்கி ஒன்றை இயங்குசுருள் கால்வனாமீட்டருடன் பக்க இணைப்பாக இணைத்தால், அது நேர்த்திசை மின்னோட்டமானி எனப்படும். குறைந்த மின்தடையுடைய மின்தடையாக்கி இணைத்தடம் (shunt) எனப்படும். இணைத்தடத்தின் மின் தடை குறையக் குறைய மின்னோட்டமானியின் மின்னோட்ட-நெடுக்கம் (range) அதிகரிக்கும்.

மாறுதிசை மின்னோட்டமானி (A.C. Ammeter)[தொகு]

பூச்சிய மைய மின்னோட்டமானி

நேர்த்திசை மின்னோட்டமானியை மாறுதிசை மின்னோட்டத்தை அளவிடப் பயன்படுத்த முடியாது. ஏனெனில், மாறுதிசை மின்னோட்டத்தின் திசைமாறும் இயல்பு நேர்த்திசை மின்னோட்டமானியின் குறிமுள்ளை அலைவுறச் செய்து கொண்டே இருக்கும்; எனவே, குறிப்பிட்டு ஒரு அளவீட்டினை அளவிடவே முடியாது. எனவே தான், மாறுதிசை மின்னோட்டமானி தேவைப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கருவிகள் மாறுதிசை மின்னோட்டத்தை அளவிடப் பயன்படுத்தப் படுகின்றன:

  1. இயங்கு இரும்பு கருவிகள் (moving-iron instruments) - காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ள உலோகத்தண்டுகளுக்கு இடையே ஏற்படும் விலக்கத்தின் அடிப்படையில் வேலை செய்கின்றன.
  2. சுடுகம்பி கருவிகள் (hot wire instruments) - மின்னோட்டம் தாங்கிய கம்பியில் உருவாகும் விரிவின் அடிப்படையில். (இக்கருவி நேர்த்திசை, மாறுதிசை மின்னோட்டம் இரண்டையும் அளவிடும்)
  3. அலைதிருத்தி வகை கருவிகள் (rectifier instruments) - மாறுதிசை மின்னோட்டத்தை நேர்த்திசை மின்னோட்டமாக மாற்றிய பிறகு அளவிடும் முறை.
  4. டைனமோமீட்டர் கருவிகள் (dynamometer instruments)
  5. டையோடு-வால்வு வோல்ட்மீட்டர் (diode-valve voltmeter)
  6. கேத்தோடு கதிர் அலைவரைவி (cathode ray oscilloscope CRO).

500Hz அதிர்வெண்ணிற்கு மேல்[தொகு]

500 Hz அதிர்வெண்ணிற்கு மேல் கொண்ட மாறுதிசை மின்னோட்டத்தை இயல்பான மாறுதிசை மின்னோட்டமானியின் உதவியால் அளந்திட முடியாது; எனவே, வெப்ப வகைக் கருவிகள் (thermal type instruments) மூலம் கேள் அதிர்வெண் (AF), வானொலி அதிர்வெண் (RF) மின்னோட்டங்களை அளவிடலாம்.

குறிப்புதவி[தொகு]

  • இயல்பியல் களஞ்சியம் - ப.க. பொன்னுசாமி - பக். 188, 189

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னோட்டமானி&oldid=3522537" இலிருந்து மீள்விக்கப்பட்டது