நற்சாந்துபட்டி

ஆள்கூறுகள்: 10°19′26″N 78°43′24″E / 10.323811°N 78.723305°E / 10.323811; 78.723305
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நற்சாந்துபட்டி
Narchandhupatti
கிராமம்
நற்சாந்துபட்டி Narchandhupatti is located in தமிழ் நாடு
நற்சாந்துபட்டி Narchandhupatti
நற்சாந்துபட்டி
Narchandhupatti
தமிழ்நாட்டில் அமைவிடம்
நற்சாந்துபட்டி Narchandhupatti is located in இந்தியா
நற்சாந்துபட்டி Narchandhupatti
நற்சாந்துபட்டி
Narchandhupatti
நற்சாந்துபட்டி
Narchandhupatti (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°19′26″N 78°43′24″E / 10.323811°N 78.723305°E / 10.323811; 78.723305
நாடு India
மாரிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
ஏற்றம்82 m (269 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்86,422
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்622 404
தொலைபேசி குறியீடு914333

நற்சாந்துபட்டி (Nachandupatti) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இங்கு அதிகமாக நகரத்தார் இனமக்கள் வசிக்கின்றனர். புகழ்மிக்க கோயில்களும், பலவித திருவிழாக்களும், சமய சடங்குகள் பலவும் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஊரினைச் சுற்றி புதூர், கோட்டூர் போன்ற கிராமங்கள் உள்ளன.

பெயர்[தொகு]

நற்சாந்துபட்டியின் உண்மையான பெயர்  திருமலை சாம் உத்திரம் என்பதாகும். ஊமத்துரை (கட்டபொம்மனின் இளைய சகோதரர்) குடியிருக்க திருமயத்தில் ஒரு கோட்டை கட்டினார். அக்கோட்டையினைக் கட்டுவதற்கு தேவையான சாந்து, நச்சாந்துபட்டியிலிருந்தே கொண்டுவரப்பட்டது. ஆதலால் நல்ல சாந்து பட்டி என்ற அழைக்கப்பட்டது. பின்னர் நற்சாந்துபட்டி என்று மருவியது.

பொது தகவல்[தொகு]

நச்சாந்துபட்டி, திருச்சிராப்பள்ளியிலிருந்து 69 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 17 கி. மீ. தொலைவில் பொன்னமாரவதி சாலையில் அமைந்துள்ளது. 3.6    ச. கி. மீ. பரப்பளவில், 3500  நபர்களுக்கு மேல் இங்கு வாழ்கின்றனர். இந்த ஊரின் அஞ்சலக் குறியீட்டு எண் 622404.[1]

இந்த சிறிய கிராமத்தில் 100 முதல் 200 ஆண்டுகளுக்கு முன்பு, நகரத்தாரால் கட்டப்பட்ட பல வீடுகள், வியக்கத்தக்க கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன.

கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு விசித்திரமான புனைபெயர் உண்டு. உதாரணமாக காட்டு மீனி ஆயல் வீடு அல்லது சுபன் செட்டியார் வீடு. இங்கு தெருக்களுக்கு தேசிய  தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது (நேதாஜி தெரு, இராஜாஜி தெரு, நேரு தெரு).

வசதிகள்[தொகு]

பொது மற்றும் வணிக சேவைகள்[தொகு]

நற்சாந்துபட்டியில்  ஐசிஐசிஐ வங்கியும், இந்திய யூனியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கியும் செயல்படுகிறது.[2] தபால் அலுவலகம் ஒன்றும் இங்கு இயங்குகிறது. நற்சாந்துப்பட்டியில் பொது நூலகம் ஒன்றும் உள்ளது.

இங்கு மழை நீர் சேகரிப்பு வசதியுடன் கூடிய மூன்று தண்ணீர் சேகரிப்பு தொட்டிகள் உள்ளன. இம்மூன்று தொட்டியில் இரண்டு பொதுப் பயன்பாட்டிற்கும், மூன்றாவது தண்ணீர் தொட்டி பிரத்தியேகமாக குடிநீர் நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று சிவன் கோயில் ஊரணி பகுதியில் சந்தை நடைபெறும். முந்தைய காலங்களில் திரையரங்கம் இருந்தது. இத்திரையரங்கம் தற்பொழுது செயல்பட வில்லை.  

கல்வி[தொகு]

இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றும், சண்முக விலாச கலாசாலை தொடக்கப் பள்ளியும் நச்சாந்துபட்டியில் செயல்படுகின்றன.

போக்குவரத்து[தொகு]

 சென்னைக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது. புதுக்கோட்டை மற்றும் பொன்னமராவதி ஊர்களிலிருந்து பேருந்து சேவை அரசு மற்றும் தனியாரால் இயக்கப்படுகிறது. 

வழிபாட்டு இடங்கள்[தொகு]

பல பிரபலமான கோயில்கள் நச்சாந்துபட்டியைச் சுற்றி உள்ளன. 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கருப்பர் கோவில் பிரசித்தி பெற்றது. பல்லவர் ஆட்சி காலங்களில்  கோயில்கள் மலைகளுக்குள்ளே செதுக்கப்பட்டன. இத்தகைய கோயில்களில் சிவன் கடவுள் உள்ள திருவருள் காளீசுவரர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மலையக்கோயில் மிகச்சிறப்பு வாய்ந்தது. மலைக் கோயில் மீது நகரத்தாரால் முருகன் கோயில் கட்டப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்சாந்துபட்டி&oldid=3735088" இலிருந்து மீள்விக்கப்பட்டது