தேவிசரண் பருவா மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவிசரண் பருவா மகளிர் கல்லூரி
கல்லூரி நுழைவாயில்
வகைபொது, பெண்கள், கலை அற்வியல் கல்லூரி
உருவாக்கம்1955
முதல்வர்ஜினாமோனி பாயுயான்
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புதிப்ருகர் பல்கலைக்கழகம்
இணையதளம்Official website

தேவிசரண் பருவா மகளிர் கல்லூரி (Devicharan Barua Girls' College) என்பது அசாமின் ஜோர்ஹாட்டில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியாகும். இக்கல்லூரி 1955-இல் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி திப்ருகர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1][2]

வரலாறு[தொகு]

தேவி சரண் பருவா பெண்கள் கல்லூரி, 1955ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, அசாமில் பெண் கல்வியைப் பரப்புவதற்கு செயல்பட்டு வருகிறது. மறைந்த ராய் பகதூர் தேவிசரண் பருவாவின் நான்கு புகழ்பெற்ற மகன்களான ஹேரம்ப பிரசாத் பருவா, உமாசரண் பருவா, தேபா பிரசாத் பருவா மற்றும் பிஷ்ணு பிரசாத் பருவா ஆகியோரின் தாராள பங்களிப்புடன் இக்கல்லூரி நிறுவப்பட்டது. 56 மாணவர்களையும் 12 ஆசிரியர்களையும் மட்டுமே கொண்டு தொடங்கிய இக்கல்லூரி இப்போது முழுமையாகச் செயல்படும் கல்லூரியாகக் கலை மற்றும் அறிவியல் துறைகளில் 1800 மாணவியர் பயிலும் கல்லூரியாக உள்ளது. கல்லூரியின் அறிவியல் துறைகள் 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

துறைகள்[தொகு]

கலைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Dibrugarh University".
  2. https://collegedunia.com/college/1043-devicharan-barua-girls-college-dcb-jorhat

வெளி இணைப்புகள்[தொகு]