துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2015 துடுப்பாட்ட உலகக்கோப்பை இறுதிப்போட்டி
இறுதிப் போட்டியின்போது மைதானம்
நிகழ்வு2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
நியூசிலாந்து ஆத்திரேலியா
நியூசிலாந்து ஆத்திரேலியா
183 186/3
45 நிறைவுகள் 33.1 நிறைவுகள்
நாள்29 மார்ச் 2015
அரங்கம்மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்போர்ன்
நடுவர்கள்ரிச்சர்ட் கெட்டில்பரோ (இங்; கள நடுவர்)
குமார் தர்மசேன (இல; கள நடுவர்)
மராயிசு எராசுமசு (தெஆ; தொலைக்காட்சி நடுவர்)
இயன் கூல்ட் (இங்; மேலதிக நடுவர்)
பார்வையாளர்கள்93,013[1]
2011
2019

2015 துடுப்பாட்ட உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி 29 மார்ச் 2015 அன்று ஆத்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானத்தில் நடந்தது. இது போட்டியின் இரண்டு இணை நடத்துனர்களான நியூசிலாந்து மற்றும் ஆத்திரேலியா இடையே விளையாடப்பட்டது. பலமான அணியாகக் கருதப்பட்ட ஆத்திரேலியா [2][3] இந்தப்போட்டியில் 7 இலக்குகளால் வெற்றியீட்டி தமது ஐந்தாவது உலகக் கோப்பைய வென்றது. 93,013 பார்வையாளர்கள் முன்னிலையில் இந்தப் போட்டி நடைபெற்றது. இது ஆத்திரேலியாவில் ஒருநாள் துடுப்பாட்டத்தில் சாதனை படைத்தது.

பின்னணி[தொகு]

நியூசிலாந்தின் முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இதுவாகும்.[4] அவர்கள் இதற்கு முன்பு 1975 மற்றும் 2011 க்கு இடையில் ஆறு முறை அரையிறுதியில் தோற்றுள்ளனர். ஆத்திரேலியா தனது ஏழாவது இறுதிப் போட்டியில் விளையாடியது. இதுவரை நான்கில் ( 1987, 1999, 2003 மற்றும் 2007 ) வெற்றி பெற்று இரண்டில் ( 1975, 1996 ) தோல்வியடைந்திருந்தது.

இந்த போட்டி ஆத்திரேலிய அணித்தலைவர் மைக்கல் கிளார்க் (போட்டிக்கு முன்பே ஓய்வு பெறுவதாக அறிவித்தார்),[5] பிராட் ஆடின்,[6] மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி,[7] ஆகியோரின் கடைசி ஒருநாள் சர்வதேசப் போட்டியாகவும் இருந்தது. ஆடினும் வெட்டோரியும் போட்டிக்குப் பிறகு தங்கள் ஓய்வை அறிவித்தனர்.

29 மார்ச் 2015
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
183 (45 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
186/3 (33.1 நிறைவுகள்)
ஆத்திரேலியா 7 இலக்குகளால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்போர்ன்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல) மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோ (இங்)
ஆட்ட நாயகன்: ஜேம்சு பால்க்னர் (ஆத்)
  • நியூசிலாந்து நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஆத்திரேலியா துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை ஐந்தாவது முறையாக வென்றது.[8][9]
  • மைக்கல் கிளார்க் (ஆத்),[5] பிராட் ஹாடின் (ஆத்),[6] டேனியல் வெட்டோரி (நியூசி)[7] மற்றும் மிட்செல் ஜோன்சன் (ஆத்).[10] ஆகியோர் விளையாடிய இறுதி ஒருநாள் போட்டி இதுவாகும்.
  • இந்தப் போட்டியின் பார்வையாளர் எண்ணிக்கையான 93,013, ஆத்திரேலியாவில் துடுப்பாட்டப் போட்டியொன்றுக்கு வந்த அதிக பார்வையாளர் எண்ணிக்கை என்ற சாதனையைப் படைத்தது. இதற்கு முன்னைய சாதனையாக 2013 டிசம்பர் 26 இல் நடைபெற்ற தேர்வுப் போட்டிக்கு 91,112 பார்வையாளர்கள் வந்திருந்தனர். ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் முன்னைய சாதனையாக 1992 உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு 87,182 பார்வையாளர்கள் வந்திருந்தனர்.[11]

போட்டி[தொகு]

உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது எம்.சி.ஜி

போட்டி அதிகாரிகள்[தொகு]

போட்டியின் நடுவராக இலங்கையின் குமார் தர்மசேனா மற்றும் இங்கிலாந்தின் ரிச்சர்ட் கெட்டில்பரோ ஆகியோர் இருந்தனர். இருவரும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர்.[12] கெட்டில்பரோ 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டின் ஐசிசி நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [13] தர்மசேனா 2012 இல் விருதை வென்றார் [14] 1996 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியில் தர்மசேனா இடம்பெற்றிருந்தார்; மேலும் இறுதிப் போட்டியில் வீரராகவும் நடுவராகவும் இடம்பெற்ற முதல் நபர் ஆனார்.[12] போட்டியின் தீர்ப்பாளராக இலங்கை வீரர் ரஞ்சன் மதுகல்லேயும், தொலைக்காட்சி நடுவராக தென்னாபிரிக்காவின் மராயிஸ் எராஸ்மஸ், நான்காவது நடுவராக இங்கிலாந்து அணியின் முன்னாள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர் இயன் கோல்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.[12]

விவரங்கள்[தொகு]

கோப்பையை பெற்றுக் கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள்

நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் பிரண்டன் மெக்கல்லம் ஆட்டமிழந்தார். மெதுவாக முன்னேறி 12 நிறைவுகளில் 2 இலக்குகள் இழப்புக்கு 38 ஓட்டங்கள் எடுத்திருந்த நேரத்தில் இரண்டாவது இலக்காக மார்ட்டின் கப்டில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 12 ஓட்டங்களில் மிட்செல் ஜான்சனின் அடுத்த ஓவரில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் பாதியில் நியூசிலாந்து 3 இலக்கு இழப்புக்கு 93 ஓட்டங்களுடன் இருந்தது. கிராண்ட் எலியட் 39 ஓட்டங்களுடனும், ராஸ் டெய்லர் 20 ஓட்டங்களுடனும் இருந்தனர். டெய்லர் 36 வது ஓவர் நிறைவு வரை நீடித்து 40 ஓட்டங்களில் ஜேம்ஸ் பால்க்னரின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 36 நிறைவுகளில் நியூசிலாந்து 5 இலக்குகள் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்த நிலையில், கோரி ஆண்டர்சனை ஓட்டமெதுவும் எடுக்காத நிலையில் ஆட்டமிழக்கச் செய்து பால்க்னர் தனது வெற்று நிறைவை மேம்படுத்தினார். ஸ்டார்க்கின் பந்துவீச்சில் லூக் ரோஞ்சி கிளார்க்கிடம் பிடி கொடுத்து ஓட்டமேதும் பெறாமல் ஆட்டமிழந்தார். டேனியல் வெட்டோரி 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து 41 ஓவர்களில் 7 இலக்குகள் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்த நிறைவில் எலியட் 83 ஓட்டங்களுடன் பிராட் ஹாடினிடம் பிடிகொடுத்து பால்க்னரிடம் வீழ்ந்தார். மேட் ஹென்றி மற்றும் டிம் சவுத்தி இருவரும் 45ஆவது நிறைவில் ஆட்டமிழந்தனர். ஜான்சன் [15] பந்தில் ஹென்றி ஸ்டார்க்கிடம் பிடி கொடுத்தார். சவுதி ஓட்ட ஆட்டமிழப்பு ஆனார். நியூசிலாந்து மொத்தம் 183 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.[16]

ஆஸ்திரேலியாவின் ஆரம்பமும் மோசமாகவே அமைந்தது. இரண்டாவது நிறைவில் ட்ரென்ட் போல்ட்டின் பந்துவீச்சில் ஆரோன் ஃபின்ச் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். 10ஆவது நிறைவின் முடிவில், ஆத்திரேலியா 1 இலக்கு இழப்புக்கு 56 ஓட்ட்ங்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 39 ஓட்டங்களும், ஸ்டீவ் ஸ்மித் [17] 13 ஓட்டங்களும் பெற்றிருந்தனர். வார்னர் 13ஆவது நிறைவில் 45 ஓட்டங்களில் ஹென்றியின் பந்துவீச்சில் எலியட்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் ஆத்திரேலியா 20 நிறைவுகள் முடிவில் 2 இலக்குகள் இழப்புக்கு 98 ஓட்டங்களிலும், கிளார்க் 21 ஓட்டங்களிலும், ஸ்மித் 25 ஓட்டங்களிலும் உறுதியாக இருந்தனர். 30ஆவது நிறைவின் முடிவில், பெரும்பாலான பந்துகளை எதிர்கொண்ட கிளார்க் 57 ஓட்டங்களிலும், ஸ்மித் 47 ஓட்டங்களிலும் இருந்தனர். கிளார்க் 74 ஓட்டங்களுடன் ஹென்றியின் பந்துவீச்சில் 32ஆவது நிறைவில் ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது ஆத்திரேலியாவுக்கு 113 பந்துகளில் 9 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டன.[18] 34ஆவது நிறைவின் முதல் பந்தில் ஒரு நான்கு ஓட்டங்கள் அடித்து ஷேன் வாட்சன், போட்டியை ஏழு இலக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.[16]

ஆத்திரேலிய அணித்தலைவர் கிளார்க், முன்னைய நவம்பர் மாதம் எகிறிப் பந்தால் கழுத்தில் தாக்கப்பட்டு இறந்த பிலிப் ஹியூஸுக்கு வெற்றியை அர்ப்பணித்தார்.[19]

ஆட்ட விபரம்
முதல் இன்னிங்சு
நியூசிலாந்து துடுப்பாட்டம்[20]
வீரர் நிலை ஓட்டங்கள் பந்துகள் 4-கள் 6-கள் ஓட்டவீதம்
மார்ட்டின் கப்டில் ப மக்சுவெல் 15 34 1 1 44.11
பிரண்டன் மெக்கல்லம் ப ஸ்டார்க் 0 3 0 0 0.00
கேன் வில்லியம்சன் ப & பி ஜோன்சன் 12 33 1 0 36.36
ரோசு தெய்லர் பி ஆடின் ப பால்க்னர் 40 72 2 0 55.55
கிராண்ட் எலியட் பி ஆடின் ப பால்க்னர் 83 82 7 1 101.21
கோரி ஆன்டர்சன் ப பால்க்னர் 0 2 0 0 0.00
லூக் ரொங்கி பி கிளார்க் ப ஸ்டார்க் 0 4 0 0 0.00
டேனியல் வெட்டோரி ப ஜோன்சன் 9 21 1 0 42.85
டிம் சௌத்தி ஓட்ட ஆட்டமிழப்பு (மக்சுவெல்) 11 11 0 1 100.00
மாட் என்றி பி ஸ்டார்க் ப ஜோன்சன் 0 7 0 0 0.00
டிரென்ட் போல்ட் ஆட்டமிழக்காமல் 0 1 0 0 0.00
உதிரிகள் (காஓ 7, அ 6) 13
மொத்தம் (அனைத்து இலக்குகளையும் இழந்து; 45 நிறைவுகள்) 183

இலக்குகள் வீழ்ச்சி: 1/1 (மெக்கலம், 0.5 நி), 2/33 (கப்டில், 11.2 நி), 3/39 (வில்லியம்சன், 12.2 நி), 4/150 (தெய்லர், 35.1 நி), 5/150 (ஆன்டர்சன், 35.3 நி), 6/151 (ரோங்கி, 36.2 நி), 7/167 (வெட்டோரி, 40.6 நி), 8/171 (எலியட், 41.5 நி), 9/182 (என்றி, 44.5 நி), 10/183 (சௌத்தி, 44.6 நி)

ஆத்திரேலியப் பந்துவீச்சு[20]
பந்துவீச்சாளர் நிறைவுகள் ஓட்டமில்லாதவை ஓட்டங்கள் இலக்குகள் Econ அகலங்கள் NBs
மிட்செல் ஸ்டார்க் 8 0 20 2 2.50 {{{wides}}} {{{no-balls}}}
ஜோஷ் ஹேசல்வுட் 8 2 30 0 3.75 {{{wides}}} {{{no-balls}}}
மிட்செல் ஜோன்சன் 9 0 30 3 3.33 {{{wides}}} {{{no-balls}}}
கிளென் மாக்சுவெல் 7 0 37 1 5.28 {{{wides}}} {{{no-balls}}}
ஜேம்சு பால்க்னர் 9 1 36 3 4.00 {{{wides}}} {{{no-balls}}}
ஷேன் வாட்சன் 4 0 23 0 5.75 {{{wides}}} {{{no-balls}}}
இரண்டாவது இன்னிங்சு
ஆத்திரேலியத் துடுப்பாட்டம்[20]
வீரர் நிலை ஓட்டங்கள் பந்துகள் 4-கள் 6-கள் ஓட்டவீதம்
டேவிட் வார்னர் பி எலியட் ப என்றி 45 46 7 0 97.82
ஆரோன் பிஞ்ச் ப & பி போல்ட் 0 5 0 0 0.00
ஸ்டீவ் சிமித் ஆட்டமிழக்காமல் 56 71 3 0 78.87
மைக்கல் கிளார்க் ப என்றி 74 72 10 1 102.77
ஷேன் வாட்சன் ஆட்டமிழக்காமல் 2 5 0 0 40.00
கிளென் மாக்சுவெல்
ஜேம்சு பால்க்னர்
பிராட் ஹாடின்
மிட்செல் ஜோன்சன்
மிட்செல் ஸ்டார்க்
ஜோஷ் ஹேசல்வுட்
உதிரிகள் (காஓ 3, அ 6) 9
மொத்தம் (3 இலக்குகள்; 33.1 நிறைவுகள்) 186

இலக்குகள் வீழ்ச்சி: 1/2 (பின்ச், 1.4 நி), 2/63 (வார்னர், 12.2 நி), 3/175 (கிளார்க், 31.1 நி)

நியூசிலாந்து பந்துவீச்சு[20]
பந்துவீச்சாளர் நிறைவுகள் ஓட்டமில்லாதவை ஓட்டங்கள் இலக்குகள் Econ அகலங்கள் NBs
டிம் சௌத்தி 8 0 65 0 8.12 {{{wides}}} {{{no-balls}}}
டிரென்ட் போல்ட் 10 0 40 1 4.00 {{{wides}}} {{{no-balls}}}
டேனியல் வெட்டோரி 5 0 25 0 5.00 {{{wides}}} {{{no-balls}}}
மாட் என்றி 9.1 0 46 2 5.01 {{{wides}}} {{{no-balls}}}
கோரி ஆன்டர்சன் 1 0 7 0 7.00 {{{wides}}} {{{no-balls}}}

மேற்கோள்கள்[தொகு]

  1. "2015 Cricket World Cup Final: Australia v New Zealand - Melbourne Cricket Ground, Melbourne".
  2. "Cricket World Cup final: Preview of Australia v New Zealand". BBC Sport. 28 March 2015. பார்க்கப்பட்ட நாள் 29 March 2015.
  3. "Sir Ian Botham: New Zealand can upset Australia in World Cup final". 28 March 2015. பார்க்கப்பட்ட நாள் 29 March 2015.
  4. "New Zealand beat South Africa by four wickets to reach first ever World Cup final". http://www.stuff.co.nz/sport/cricket/67491930/trent-boult-does-damage-as-south-africa-batting-first-in-cricket-world-cup-semifinal. 
  5. 5.0 5.1 "Smith, Hazlewood book semi-final berth". ESPNcricinfo. 28 March 2015. http://www.espncricinfo.com/australia/content/story/856431.html. 
  6. 6.0 6.1 "Haddin to join Clarke in retirement". ESPNcricinfo. 31 March 2015. http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/content/story/857277.html. 
  7. 7.0 7.1 "New Zealand's Daniel Vettori retires from international cricket". 31 March 2015. https://www.bbc.co.uk/sport/0/cricket/32127049. 
  8. "Cricket World Cup 2015: Australia crush New Zealand in final". BBC Sport. 29 March 2015. பார்க்கப்பட்ட நாள் 29 March 2015.
  9. "Majestic Australia win fifth World Cup". ESPNcricinfo. 29 March 2015. பார்க்கப்பட்ட நாள் 29 March 2015.
  10. Johnson retires from international cricket
  11. "Record crowd for World Cup final". Cricket.com.au. 29 March 2015. http://www.cricket.com.au/news/world-cup-final-sets-new-record-crowd-for-australia-odi-melbourne-cricket-ground/2015-03-29. 
  12. 12.0 12.1 12.2 "Cricket World Cup: Kumar Dharmasena first to play and umpire in final". http://www.smh.com.au/sport/cricket/cricket-world-cup-kumar-dharmasena-first-to-play-and-umpire-in-final-20150327-1m9mne.html. 
  13. "Richard Kettleborough". ESPNcricinfo.
  14. "Kumar Dharmasena". ESPNcricinfo.
  15. "Full Scorecard of New Zealand vs Australia Final 2014/15 - Score Report". ESPNcricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 19 November 2021.
  16. 16.0 16.1 "ICC Cricket World Cup, Final: Australia v New Zealand at Melbourne, Mar 29, 2015". பார்க்கப்பட்ட நாள் 29 March 2015.
  17. "Australia win Cricket World Cup – Michael Clarke bows out in style as New Zealand succumb in final at MCG". 29 March 2015. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
  18. "Australia steamroller New Zealand to win World Cup final in style". 29 March 2015. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
  19. "World Cup 2015: Michael Clarke dedicates win to Phillip Hughes". BBC Sport. 29 March 2015. பார்க்கப்பட்ட நாள் 29 March 2015.
  20. 20.0 20.1 20.2 20.3 "Final: Final (D/N), ICC Cricket World Cup at Melbourne, Mar 29 2015". 29 March 2015. பார்க்கப்பட்ட நாள் 29 March 2015.