2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துடுப்பாட்ட உலகக் கிண்ணம் 2015
ICC Cricket World Cup 2015
நிர்வாகி(கள்) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வகை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித்தொடர் வகை தொடர்சுழல் முறை மற்றும் வெளியேற்றம்
நடத்துனர்(கள்) ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
நியூசிலாந்து கொடி நியூசிலாந்து
பங்குபற்றிய அணிகள் 10
2011 (முந்தைய) (அடுத்த) 2019

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் பதினோராவது துடுப்பாட்ட உலகக்கிண்ணமாகும். இதனை ஆத்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடத்துகின்றன.விளையாடப்படும் இடங்கள் இருநாடுகளிலும் சமமாக பிரிக்கப்படும். இறுதி ஆட்டம் நிகழுமிடம் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

இப்போட்டிகளை ஏற்றுநடத்தும் உரிமையை 2011 உலகக்கிண்ணம் மற்றும் 2019 உலகக்கிண்ணங்களை ஏலம் விடும்போதே தீர்மானிக்கப்பட்டது. 2011 உலகக்கிண்ணம் நடத்த நான்கு ஆசிய தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் நாடுகளான இந்தியா, பாக்கித்தான், இலங்கை மற்றும் வங்காள தேசம் இணைந்து பத்துக்கு மூன்று என்ற வாக்குகளில் தேர்வானது (ஆயினும் பின்னர் பாக்கித்தான் ஏற்று நடத்தும் உரிமையை இழந்தது). டாசுமானிய நாடுகளின் முயற்சியால் கவரப்பட்ட பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை 2015 உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தும் உரிமையை அவர்களுக்கு வழங்கினர். [1][2]

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டிகளை ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இரண்டாம் முறையாக, 1992ஆம் ஆண்டிற்குப் பிறகு, இணைந்து நடத்துகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Boards 'disappointed' with 2011 World Cup snub". Cricinfo. 30 April 2006. http://content-uk.cricinfo.com/ci/content/story/245809.html. 
  2. "Asia to host 2011 World Cup". Cricinfo. 30 April 2006. http://content-nz.cricinfo.com/ci/content/current/story/245789.html.