தாயாசுடீ
| தாயாசுடீ (பெக்காரி, Peccaries) புதைப்படிவ காலம்: Late Eocene–Recent |
||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Collared Peccary, Tayassu tajacu
|
||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||
|
||||||||||
| இனம் | ||||||||||
தாயாசுடீ (Tayassuidae) அல்லது பெக்காரி என்பது நடு, தென் அமெரிக்காவில் வாழும் காட்டுப் பன்றி போல் தோற்றமளிக்கும் ஆனால் வேறான, உயிரினக் குடும்பம். எசுப்பானிய மொழியில் இக்குடும்பத்தினைச் சேர்ந்த விலங்குகளை ஃகாபலி (Jabali) என்றும், போர்த்துகீச மொழியில் ஃகாவலி என்றும் அழைக்கின்றனர். இவ் விலங்குக் குடும்பம், பாலூட்டி வகுப்பில் இரட்டைப்படைக் குளம்படி வரிசையில் உள்ள தாயாசுடீ (Tayassuidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த பன்றிபோல் அளவுடைய விலங்குகள். தாயாசுடீ என்னும் சொல் தூப்பி மக்களின் மொழியில் உண், உண்ணுதல் என்னும் பொருள் தரும் தாயசு (tayassu, tayaçu) என்னும் சொல்லில் இருந்து பெற்று, 1858 இல் இருந்து ஆங்கிலத்தில் வழங்கி வருகிறார்கள். [1]. தமிழ்ச்சொலும் இதனைப் பின்பற்றி பெற்ற சொல். தாயாசுடீ குடும்பம் சூயினா (Suina) என்றழைக்கப்படும் பன்றிகளின் துணைவரிசையைச் சேர்ந்த ஒன்று. [2].இலத்தீன் மொழியில் சூ (su) என்றால் பன்றி என்றுபொருள்.
உடலமைப்பு [தொகு]
தாயாசுடீக்கள் ஏறத்தாழ 90 முதல் 130 செமீ (3-4 அடி)நீளம் வரை வளரக்கூடியவை. இவை ஏறத்தாழ 20-40 கிலோகிராம் (44-88 பவுண்டு) எடை கொண்டிருக்கக்கூடும். ஓரளவுக்குப் பன்றிகளைப்போலவே, மூக்கும் எயிறும் கொண்டவை. வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் காட்டுப்பன்றிகளின் எயிறு (பல்) வளைந்து இருக்கும், ஆனால் தாயாசுடீக்களின் எயிறு நேராக இருக்கும். பன்றிகளைப்போலவே காலின் நடு இரு விரல்களைப் பயன்படுத்துகின்றன. இதன் வயிறு மூன்று பாகங்களாக உள்லன ஆனால் அசைபோடும் விலங்கின் இயக்கம் போன்றதல்ல.[3].
தாயாசுடீக்கள் அனைத்துண்ணிகள். பெரும்பாலும் இதன் உணவு கிழங்குகளும், சிதைகளும் கொட்டைகளும், பழங்களும், புல்லும் என்றாலும், சிறு விலங்குகளையும் உண்ணும்.
இதன் பல்லின் வகையடுக்கு கீழ்க்காணுமாறு உள்ளது:
| பல் வகையடுக்கு |
|---|
| 2.1.3.3 |
| 3.1.3.3 |
ஊடகங்கள் [தொகு]
-
Javelinas for wikipedia.jpg
அரிசோனாவில் உள்ள டூழ்சானில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு ஃகாவலினாக்கள்
-
தாயாசுடீ - நெதர்லாந்தில் உள்ள ஆர்ன்னெம் (Arnhem)என்னும் இடத்தில் உள்ள பர்கர் உயிரினக் காட்சியகத்தில்.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் [தொகு]
- ↑ ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி, Oxford English Dictionary, "tayassu, tayaçu"
- ↑ Haraamo, Mikko (2008-03-11). "Mikko's Phylogeny Archive (Suina)". பார்த்த நாள் 2009-01-30.
- ↑ Castellanos, Hernan (1984). Macdonald, D.. ed. The Encyclopedia of Mammals. New York: Facts on File. pp. 504–505. ISBN 0-87196-871-1.
]