தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1997

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களில் முதல் பரிசு பெற்ற நூலாசிரியருக்கு ரூபாய் பத்தாயிரமாகவும், இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரமாகவும், மூன்றாம் பரிசு ரூபாய் இரண்டாயிரம் என பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1997 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் தலைப்பு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 கவிதை 1. நாகநாட்டு இளவரசி பீலிவளை (முதல் பரிசு),
2. காதல் காவியம் (இரண்டாம் பரிசு)
3. புதிய தமிழ் இயக்கம் (மூன்றாம் பரிசு)
1. பாவலர் மணிவேலன்
2. புலவர் த. முருகேசன்
3. புலவர் ப. சாத்தன்
1. குறிஞ்சிக்குமரன் பதிப்பகம், அரூர்.
2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
3. அன்றில் பதிப்பகம், சென்னை.
2 புதினம் 1. கனவுக் கிராமம் (முதல் பரிசு)
2. செம்பியன் தமிழவேள் (இரண்டாம் பரிசு)
3. நீதியின் காவலர் நீதிபதி நீலமேகம் (மூன்றாம் பரிசு)
1. அறிவியல் நம்பி (வெ. சுந்தரம்)
2. புலவர் பொறிஞர் செந்தமிழ்ச் சேய்
3. முனைவர் திருக்குறள் சி. ராமகிருட்டிணன்
1. மதி நிலையம், சென்னை.
2. மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை, கடலூர்.
3. கரிகாலன் பதிப்பகம், சென்னை.
3 சிறுகதை 1. வண்ணங்கள் (முதல் பரிசு)
2. சக்தி (இரண்டாம் பரிசு)
3. ஒரு தொடர்கதை முற்றுப்பெறுகிறது (மூன்றாம் பரிசு)
1. ப. முருகேசன்
2. அய்க்கண்
3. சரோஜா பாண்டியன்
1. தனலட்சுமி பதிப்பகம், சென்னை.
2. மதி நிலையம், சென்னை
3. மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
4 நாடகம் 1. செம்பியன் செல்வன் (முதல் பரிசு)
2. ஒரு கனவுக் கா(வி)யம் (இரண்டாம் பரிசு)
3. அறிவுப்பேரொளி புத்தர் பெருமான் (வரலாற்று நாடகம்) (மூன்றாம் பரிசு)
1. வ. த. இராமசுப்பிரமணியம்
2. தனஞ்செயசாரதி
3. பட்டுக்கோட்டை குமாரவேல்
1. முல்லை நிலையம், சென்னை.
2. வாணி லட்சுமி பதிப்பகம், சென்னை
3. இந்துமலர் வெளியீடு, சென்னை.
5 தமிழ் மொழி, இலக்கியம் பண்பாடு பற்றிய நூல்கள் 1. சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே! (முதல் பரிசு)
2. உலகம் பரவிய தமிழின் வேர்கள் (இரண்டாம் பரிசு)
3. இதழியல் (மூன்றாம் பரிசு)
1. முனைவர் ச. அகத்தியலிங்கம்
2. முனைவர் கு. அரசேந்திரன்
3. முனைவர் சு. சக்திவேல்
1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
2. ரெத்னம் வெளியீடு, இங்கிலாந்து.
3. மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
6 தமிழ்க்கலைகள், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் 1. மாணிக்கச் செம்மல் (முதல் பரிசு)
2. பண்பாளர் பன்னீர்செல்வம் (இரண்டாம் பரிசு)
3. எண் கணிதத்தின் ஏந்தல் (சீனிவாச இராமானுஜன்) (மூன்றாம் பரிசு)
1. முனைவர் இரா. சாரங்கபாணி
2. பேராசிரியர் மது. ச. விமலானந்தம்
3. கோவி. பழநி
1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை..
2. சேகர் பதிப்பகம், சென்னை.
3. சூடாமணி பிரசுரம், சென்னை.
7 மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் 1. இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும் (முதல் பரிசு)
2. பெண்ணுரிமையின் இயற்கையின் அடிப்படை விதியும் (இரண்டாம் பரிசு)
3. உயிர்ப்பிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் (மூன்றாம் பரிசு)
1. கு. ச. ஆனந்தன்
2. வி. ஏ. எம் (வி. அழகுமுத்து)
3. ப்பி. எல். இராசேந்திரன்
1. தங்கம் பதிப்பகம், சென்னை.
2. வடமலையான் நிலையம், சென்னை.
3. சங்கீதா பதிப்பகம், சென்னை.
8 பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை 1. நிர்வாகவியல் வரலாறு (முதல் பரிசு)
2. இன்றே இப்பொழுதே தொடங்குங்கள் வணிகம் (இரண்டாம் பரிசு)
1. ஆர். நடராசன்
2. பா. இராமமூர்த்தி(சங்கமித்ரா)
1. மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.
2. திலகம் வெளியீடுகள், சென்னை.
9 கணிதவியல், வானவியல் 1. இலக்கியங்களில் வானியல் (முதல் பரிசு) 1. முனைவர் அ. சிவபெருமாள் 1. நூல் வெளியீட்டுத் துறை, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.
10 மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் 1. குழந்தைகள் நலம் (முதல் பரிசு)
2. ஆஸ்துமாவிற்கு புதிய சிகிச்சை முறைகள் (இரண்டாம் பரிசு)
3. பெண்ணே உனக்காக (மூன்றாம் பரிசு)
1. மரு. மா. திருநாவுக்கரசு
2. மரு. முத்துச் செல்லக்குமார்
3. விஜயலட்சுமி நரேந்திரன்
1. வானதி பதிப்பகம், சென்னை.
2. கற்பகம் புத்தகாலயம், சென்னை.
3. பூம்புகார் பதிப்பகம், சென்னை.
11 தத்துவம், சமயம், அளவியல், அறவியல் 1. தொன்மக்கதைகள் கோட்பாட்டு ஆய்வுகள் (முதல் பரிசு)
2. கம்பரின் அறவியல் (இரண்டாம் பரிசு)
3. தமிழகத்தில் உலகாயதம் (மூன்றாம் பரிசு)
1. முனைவர் சரசுவதி வேணுகோபால்
2. முனைவர் அ. அறிவுநம்பி
3. முனைவர் கி. முப்பால்மணி
1. தாமரை வெளியீடு, சென்னை.
2. அருள் நூலகம், புதுச்சேரி.
3. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை.
12 உயிரியல்,வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் 1. நம் சுற்றுச்சூழல் (முதல் பரிசு)
2. வானியலும் வேளாண்மையும் (இரண்டாம் பரிசு)
3. பந்தயப் புறாக்கள் (மூன்றாம் பரிசு)
1. தி. த. கிருட்டிணன், முனைவர் கு. சந்தானகுமார்
2. பொறிஞர் கே. ஆர். திருவேங்கடசாமி
3. ம. ச. முருகு சுப்பிரமணியம்
1. சுபா பதிப்பகம், நாகர்கோயில்.
2. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை.
3. காவ்யா பதிப்பகம், பெங்களூரு.
13 பொறியியல், தொழில்நுட்பவியல் 1. ஊர்திப் பொறியியல் (முதல் பரிசு)
2. மின்னியங்கி மீளச் சுற்றுதல் (இரண்டாம் பரிசு)
1. மா. பாலசுப்பிரமணியம்
2. கலா சான்சிராணி
1. காமாட்சி பதிப்பகம், கங்குவார் சத்திரம்.
2. கலா பதிப்பகம், சேலம்.
14 வரலாறு, தொல்பொருளியல் 1. தமிப்பண்பாட்டு வரலாறு (முதல் பரிசு)
2. ஐ. நா. மனிதகுல நம்பிக்கை ஒளி (இரண்டாம் பரிசு)
3. கசாலின் பார்வையில் அரிக்கமேடு (மூன்றாம் பரிசு)
1. செ. வைத்தியலிங்கன்
2. முனைவர் அடைக்கலம் சுப்பையன்
3. முனைவர் சோ. முருகேசன்
1. நூல் வெளியீட்டுத் துறை, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.
2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
3. அம்மாமுத்து பதிப்பகம், புதுச்சேரி.
15 குழந்தை இலக்கியம் 1. பாவேந்தரும் பூந்தளிர்களும் (முதல் பரிசு)
2. தமிழ்த்தென்றலின் கதை (இரண்டாம் பரிசு)
3. நற்பண்பை வளர்க்கும் சிறுவர் கதைகள் (மூன்றாம் பரிசு)
1. புலவர் இலமா. தமிழ் நாவன்
2. மணவனூர் நி. பழநிச்சாமி
3. பி. நல்லசிவம்
1. கார்த்திக் பதிப்பகம், சென்னை.
2. மீனா புத்தகப் பண்ணை, விழுப்புரம்.
3. பிரியா நிலையம், சென்னை.

ஆதாரம்[தொகு]