மணிவாசகர் பதிப்பகம்
மணிவாசகர் பதிப்பகம், சென்னையில் அமைந்துள்ள நூல் வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்று. இப்பதிப்பகம் மொழிக் கொள்கை, வெளியீட்டுக் கொள்கை, விலைக்கொள்கை என்கிற மூன்றின் அடிப்படையில் இயங்கி வருகிறது. இப்பதிப்பகத்தைப் முனைவர் ச. மெய்யப்பன் என்பவர் நிறுவினார். இப்பதிப்பகம் வெளியிட்டுள்ள பல நூல்கள் பரிசுகளைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.[1]
முனைவர். ச. மெய்யப்பன் [தொகு]
முனைவர். ச. மெய்யப்பன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 36 ஆண்டுகளாகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழகத்தில் தமிழுக்கென்று ஏறத்தாழ 40, 000 நூல்களுடன் முதல் தனியார் ஆய்வகம் ஒன்றை சிதம்பரத்தில் அமைத்தவர். இவர் எழுதிய தாகூர் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. பள்ளி மாணவர்களுக்காக "வெற்றித் துணைவன்" எனும் பெயரில் பாட நூல்களுக்கான கையேடுகளை வெளியிட்டுள்ளார். "பதிப்புச் செம்மல்" என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.