தண்டியலங்காரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம் ஆகும். காவியதர்சம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவராவார். இது உரைதருநூல்களில் ஒன்று. இலக்கணம் இயற்றிய ஆசிரியரே இலக்கணத்துக்கு உரை மேற்கோள்களாகத் தாமே பாடல்களையும் இயற்றி உரையுடன் இணைத்துள்ளார். தமிழ்த் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் (1133-1150) பன்னிரண்டாம் நூற்றாண்டு.

பொருளடக்கம்

அமைப்பு [தொகு]

பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ள இந்நூலில், தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பல்வேறு அணி வகைகளுக்கான இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.

பொதுவியல் [தொகு]

பொதுவியல், முத்தகச் செய்யுள், குளகச் செய்யுள், தொகைநிலைச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள் எனும் நான்கு வகையான செய்யுள்கள் பற்றி விளக்குகிறது. தொடர்நிலைச் செய்யுள் வகை பற்றிக் கூறும்போது அதன் வகைகளான பெருங்காப்பியம், காப்பியம் என்பவற்றின் இலக்கணங்கள் பற்றி இந்நூல் விளக்குகின்றது.

பொருளணியியல் [தொகு]

பொருளணியியலில்,

ஆகிய 37 அணிகளுக்காண இலக்கணம் கூறப்பட்டுளளது.

சொல்லணியியல் [தொகு]

சொல்லணியியல், மடக்கு, சித்திரகவி, வழுக்களின் வகைகள் ஆகியவை பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

வெளியிணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தண்டியலங்காரம்&oldid=1399517" இருந்து மீள்விக்கப்பட்டது