எதுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.

அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை
அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்

என்பது தொல்காப்பியர் கூற்று.

எடுத்துகாட்டு :

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

இக்குறளில் "நீந்துவர்" "நீந்தார்" ஆகிய இரண்டு சீர்களில் உள்ள இரண்டாம் எழுத்து "ந்" ஒன்றாக அமைவதால் இங்கு எதுகை சுட்டி காட்டப்படுகின்றன.

எதுகை வகைகள்[தொகு]

எதுகை சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இவை முறையே சீரெதுகை என்றும் அடியெதுகை என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக அடியெதுகையே செய்யுள்களில் சிறப்புப் பெறுகின்றது. சீரெதுகை அதிகம் கைக்கொள்ளப் படுவதில்லை.

வெளி இணைப்புகள்[தொகு]



"http://ta.wikipedia.org/w/index.php?title=எதுகை&oldid=1397691" இருந்து மீள்விக்கப்பட்டது