பின்வருநிலையணி
பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ இவ்விரண்டுமோ பல முறை பின்னரும் வருவது[1].
பொருளடக்கம் |
பின்வருநிலையணியின் வகைகள் [தொகு]
பின்வருநிலையணி மூன்று வகைப்படும்:
- சொல் பின்வருநிலையணி
- பொருள் பின்வருநிலையணி
- சொற்பொருள் பின்வருநிலையணி
சொல் பின்வருநிலையணி [தொகு]
சொல் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளிலோ அல்லது வேறு ஒரு பொருளிலோ பின்னரும் பலமுறை வருவது.
எ.கா:
| “ | உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும் [2] |
” |
இக்குறட்பாவில் 'உடைமை' என்ற சொல்லானது பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொல் பின்வருநிலையணி ஆகும்.
பொருள் பின்வருநிலையணி [தொகு]
பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது.
எ.கா:
| “ | அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ் விண்டன கொன்றை விரிந்த கருவிளை கொண்டன காந்தள் குலை[3] |
” |
இப்பாடலில் மலருதல் என்னும் பொருள் தரக்கூடிய அவிழ்தல், அலர்தல், நெகிழிதல், விள்ளல், விரிதல் ஆகிய சொற்கள் பல முறை வந்துள்ளமையால் இது பொருள் பின்வருநிலையணி ஆகும்
சொற்பொருள் பின்வருநிலையணி [தொகு]
சொற்பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.
எ.கா:
| “ | எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.[4] |
” |
அணிப் பொருத்தம்:
இக்குறட்பாவில் விளக்கு என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்
உசாத்துணைகள் [தொகு]
- ↑ http://www.tamilvu.org/courses/degree/d031/d0314/html/d03142l1.htm
- ↑ திருக்குறள் (592)
- ↑ தண்டியலங்கார மேற்கோள் (பக். 88)
- ↑ திருக்குறள் : 299
வெளி இணைப்புகள் [தொகு]
|
|||||||||||