ஏதுவணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏதுவணி அல்லது ஏது அணி செய்யுளில் கூறப்படும் கருத்து நிகழ்வதற்கான காரணத்தைச் சிறப்பாக எடுத்துச்சொல்ல ஆசிரியர்கள் கையாண்ட அணியாகும். "ஏது" என்பதற்கு காரணம் எனப்பொருள் உண்டு.

குறிப்பு[தொகு]

"யாதென் திறத்தினும் இதனின் இது விளைந்ததென்
றேதுவிதந்(து) உரைப்ப(து) ஏது ; அதுதான்
'காரக ஞாபகம் எனவிரு திறப்படும்." என்கிறது தண்டியலங்காரம் 57-ம் பாடல்.

விளக்கம்[தொகு]

ஏதேனும் ஒரு பொருளின் திறத்தைக் கூறும்போது இதனால்தான் இது நிகழ்ந்தது என்ற காரணத்தைச் சிறப்பித்து எடுத்துச் சொல்வது ஏது அணி ஆகும் என்று முதல் இரு அடிகளிலும், இதன் வகைகள் காரக ஏது மற்றும் ஞாபக ஏது என்றும் உரைத்திற்று.

அணியின் வகைகள்[தொகு]

இவ்வணி இரு வகைப்படும் என தண்டியலங்காரம் 57-ஆம் பாடலின் கடைசி வரி குறிப்பிடுகின்றது.

  1. காரகவேது அணி
  2. ஞாபகவேது அணி

காரகவேது அணியின் வகைகள்[தொகு]

முதல்வனும் பொருளும் கருமமும் கருவியும்
ஏற்பது நீக்கமும் எனஇவை காரகம்." என்கிறது தண்டியலங்காரம் 57-ஆம் பாடல்.

இதன் பொருளானது, காரகவேது அணி 8 வகைப்படும். அவையாவன:

  1. முதல்வன் ஏற்பது (நன்மை பயத்தல்)
  2. முதல்வன் நீக்கம் (அழிக்க வருதல்)
  3. பொருள் ஏற்பது (நன்மை பயத்தல்)
  4. பொருள் நீக்கம் (அழிக்க வருதல்)
  5. கருமம் ஏற்பது (நன்மை பயத்தல்)
  6. கருமம் நீக்கம் (அழிக்க வருதல்)
  7. கருவி ஏற்பது (நன்மை பயத்தல்)
  8. கருவி நீக்கம் (அழிக்க வருதல்)

எடுத்துக்காட்டு[தொகு]

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. (12-வது திருக்குறள், அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு)


உணவிற்கு வழிவகுக்கும் மழையே உணவாகவும் (குடிக்க நீர்) ஆகிறது என்பது பொருள். இங்கு மழை ஒரு பொருளாகவும், கரும ஏதுவாகவும், கருவியாகவும் இருப்பதனைக்காண இயல்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏதுவணி&oldid=3307728" இலிருந்து மீள்விக்கப்பட்டது