தக்காளி ஆம்லெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தக்காளி ஆம்லெட் (Tomato omelette) ( மராத்திய மொழியில் பெயர் = टॉमॅटो धिरडे) என்பது மகாராட்டிரா மாநிலத்தில் பெரும்பாலும் காலை வேளையில் தயாரிக்கப்படும் உணவு ஆகும். இதன் காட்சி தோற்றத்தின் காரணமாக ஆம்லெட் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் இது ஒரு தவறான பெயர் ஆகும். உண்மையில் இது முட்டையில் தயாரிக்கப்படும் உணவு இல்லை. உண்மையில் சைவ உணவு உண்பவர்வகளுக்கு தயாரிக்கப்படும் துணை தயாரிப்பு ஆகும்.

இதன் முக்கிய மூலப்பொருள் கொண்டைக்கடலை மாவு அல்லது கடலை மாவு ஆகும். [1] சில நேரங்களில், இவ்வுணவு தோசை மாவு (அரிசி மாவு மற்றும் உளுந்து) கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஒரு சிறிய அளவு கடலை மாவு பிணைப்பை வழங்குவதற்காக மட்டுமே சேர்க்கப்படுகிறது. இவ்வுணவு ஊத்தப்பம் எனவும் அழைக்கப்படுகிறது.

குழை மாவு ஆனது தண்ணீர் மற்றும் கடலை மாவுடன் சேர்த்து நிலைத்தன்மை ஏற்படுத்த இறுதியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளி சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இக்கலவையை சூடான வாணலியில் ஊற்றி, சமையல் எண்ணெயுடன் சேர்த்து இருபுறமும் சமைக்கவும். தக்காளி ஆம்லெட்டுகள் தக்காளி சுவைச்சாறு, தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது வேறு ஏதேனும் ஊறுகாயுடன் சூடாக பரிமாறப்படுகின்றன.

இவ்வுணவானது மகாராட்டிரா மாநிலத்தின் புனே, மும்பை போன்ற நகரங்கள் முழுவதும் உள்ள பல உணவகங்கள், சிற்றுண்டி சாலைகளின் மத்தியில் பிரபலமான மற்றும் எளிதில் கிடைக்கும் உணவு ஆகும். புனே பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழக சிற்றுண்டி சாலைகளில் பிரபலமான உணவாக பரிமாறப்படுகிறது. காலை சிற்றுண்டி நாடு முழுவதும் கிடைக்கும் வேளையில், இவ்வுணவு பொதுவாக மகாராட்டிர வீடுகளில் தாலிபீத் அல்லது திர்தே போன்ற பிற காலை சிற்றுண்டி உணவுகளுடன் தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்காளி_ஆம்லெட்&oldid=3773122" இலிருந்து மீள்விக்கப்பட்டது