ஜோசப் ஸ்டாலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோசெப் ஸ்டாலின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோசப் ஸ்டாலின்
იოსებ ბესარიონის ძე ჯუღაშვილი
Иосиф Виссарионович Сталин
Iosif Vissarionovich Stalin


சோவியத் ஒன்றிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில்
ஏப்ரல் 3, 1922 – மார்ச் 5, 1953
முன்னவர் பதவி அறிமுகப்படுத்தவில்லை
பின்வந்தவர் ஜார்ஜி மெலங்கோவ்

(பிரிமியர்) ரஷ்ய மக்கள் சபைத் தலைவர்
பதவியில்
மே 6, 1941 – மார்ச் 19, 1946
முன்னவர் வியாசெஸ்லேவ் மலடோவ்
பின்வந்தவர் பதவி நீக்கப்பட்டது

ஒருங்கிணைந்த சோசலிச சோவியத் ரஷ்ய அமைச்சரவையின் தலைவர்
- USSR,(பிரிமியர்)
பதவியில்
மார்ச் 19, 1946 – மார்ச் 5, 1953
முன்னவர் பதவி அறிமுகப்படுத்தவில்லை
பின்வந்தவர் ஜார்ஜி மலன்கோவ்
அரசியல் கட்சி சோவியத் ஒன்றியப்
பொதுவுடைமைக் கட்சி

பிறப்பு திசம்பர் 18, 1878(1878-12-18)
ரஷ்யப் பேரரசின் டிப்லிஸ் ஆளுமைக்குட்பட்ட கோரி,
(தற்பொழுது) ஜார்ஜியா
இறப்பு மார்ச் 5 1953 (அகவை 74)
மாஸ்கோ, Russian SFSR, சோவியத் ஒன்றியம்
தேசியம் ஜார்ஜியன்
சமயம் இறைமறுப்பாளர்

ஜோசப் ஸ்டாலின் என்று அனைவராலும் அறியப்படுகிற இவரின் ரஷ்ய மொழி உச்சரிப்பின் முழுப்பெயர் ஜோசிப் விசாரியோனவிச் ஸ்தாலின் (Iosif Vissarionovich Stalin, ஜோர்ஜிய மொழி: იოსებ ბესარიონის ძე ჯუღაშვილი, இரசிய மொழி: Иосиф Виссарионович Сталин, 18 டிசம்பர், 1878[1] - மார்ச் 5, 1953) லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது; அதன் பொருளாதாரம் மேம்பட்டது. ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதார சீரமைப்புகள் குறும் நோக்கிலும் தொலைநோக்கிலும் பல உணவுப் பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது. இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று, வல்லரசு ஆனது. 1930 களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைபடுத்தல் கொள்கையை (Great Purge) பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையாக, கொள்கையாக கடைப்பிடித்ததால், ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சகம், ஊழல் என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பயங்கரவாதி (Great Terror) என்றும் அழைக்கப்பட்டார்.

பதவியேற்றல்[தொகு]

1924ல் இலெனின் இறந்ததால் அந்த பதவிக்கான போட்டியில் ஸ்டாலினும் இடிராட்சுகியும் இறங்கினர். ஸ்டாலினும் காமனேவும் சினோவ்யேவும் தொழிற்துறை மேம்பாடடைய வேளாண்மையும் அதை சார்ந்த விவாசாயிகள் மற்றும் இதர சமூகத்தைனரின் வளர்ச்சியும் முக்கியம் எனக் கூறி வந்தனர். அதை ஸ்டாலின் எதிர்த்துடன் ஒரே நாட்டில் சமவுடைமை என்னும் தத்துவத்தை முன்மொழிந்தார்.[2] ஆனால் அதை எதிர்த்த இடிராட்சுகி தொழிற்துறை வளர்ச்சி முதன்மை பெற வேண்டும் என்றும் அதில் உலகப்புரட்சி தேவை எனவும் கூறினார். ஆனால் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சியே சிறந்திருந்தது. இதனால் அவரின் சகாக்களான காமனேவும் சினோவ்யேவும் ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட்டனர். ஆனால் அனைத்தையும் தாண்டி ஸ்டாலினே ஆட்சியை பிடித்தார்.

மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் (1928 - 1942)[தொகு]

1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் சமூகவுடைமைப் புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது. இந்த பத்தாண்டு கொண்டாட்டத்தில் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களை ஜோசப் ஸ்டாலின் செயல்படுத்தினார். முதலாம் ஐந்தாண்டு திட்டம் 1928ஆம் ஆண்டு முதல் 1932ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இதில் கூட்டுப்பண்ணை விவசாயம், தொழிற்துறை வளர்ச்சி, தொடர்வண்டிகளின் முன்னேற்றம் போன்றவை முக்கியத்துவம் பெற்றன. இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 1933ஆம் ஆண்டு முதல் 1937ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இதில் முதல் ஐந்தாண்டு திட்டத்தை விட தொழில் வளர்ச்சி இரன்டு மடங்கு அதிகப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. அதனால் இரண்டரை மடங்கு மூலதனம் ஒதுக்கப்பட்டது.

இந்த இரண்டு திட்டங்களின் விளைவாக பொறியியல் துறையில் இயந்திரங்கள் 44 சதவீதமாக வளர்ந்தது. கலனினக்கன், இடிரான்சுகாகசசு பர்க்கானா ஆகிய இடங்களில் நெசவாலைகளும் செலியபிசுக், கிசல், ரோவ்கா போன்ற இடங்களில் போன்ற இடங்களில் அனல் மின் நிலையங்கள் கட்டப்பட்டன. தானியங்கள் ஏற்றுமதிக்காக துர்கிசுத்தான் சைபீரிய இருப்புப் பாதை 1500 கிமீ தூரம் போடப்பட்டதால் ஏற்றுமதி அதிகமானது. குசுனட்சுக்கு, மாக்னிதோ, கோர்சுக் ஆகிய இடங்களில் இரும்பு, எஃகு ஆலைகள் திடங்கப்பட்டதால் நாட்டின் இயந்திர இறக்குமதி சிறிது சிறிதாக குறைந்து பின்னர் நிறுத்தவும் பட்டது. 6000 தொழில் நீறுவனங்கள் தோற்றம் பெற்றன. 2.5 இலட்சம் கூட்டுப்பண்னைகள் உருவாக்கப்பட்டது. 1913ல் இருந்ததை விட 5 மடங்கு நாட்டின் வருவாய் அதிகரித்து.

மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தால் இரசியா எண்ணெய் உற்பத்தியில் முதலாம் நாடாகவும், எஃகு உற்பத்தியில் மூன்றாம் நாடாகவும், நிலக்கரி உற்பத்தியில் நான்காம் நாடாகவும் வளர்ந்தது. தொழில் ஏடுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் தொழிலாளிகளின் தினசரி அலுவல்களும் பணிகளும் பதிவு செய்யப்பட்டன.

இறப்பு[தொகு]

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போதே ஸ்டாலினின் உடல்நிலை பாதிக்கட்டது. இவரின் அதிக புகைப்பிடிக்கும் பழக்கத்தால் தமனிக்கூழ்மைத் தடிப்பு ஏற்பட்டது. அக்டோபர் 1945ஆம் ஆண்டு இவருக்கு இதயத்திசு இறப்பு ஏற்பட்டதால் இறந்தார்.[3]

மூலம்[தொகு]

  • முனைவர் A. சுவாமிநாதன். நாகரிக வரலாறு (கி. பி. 1453 - 1990 வரை). 2003: சுபா பதிப்பகம். பக். 139 - 153. 

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. Although there is an inconsistency among published sources about Stalin's year and date of birth, Iosif Dzhugashvili is found in the records of the Uspensky Church in Gori, Georgia as born on 18 December (Old Style: 6 December) 1878. This birth date is maintained in his School Leaving Certificate, his extensive tsarist Russia police file, a police arrest record from 18 April 1902 which gave his age as 23 years, and all other surviving pre-Revolution documents. As late as 1921, Stalin himself listed his birthday as 18 December 1878 in a curriculum vitae in his own handwriting. However, after his coming to power in 1922, Stalin changed the date to 21 December 1879 (Old Style date 9 December 1879). That became the day his birthday was celebrated in the Soviet Union."Prominent figures". State and Power in Russia. Retrieved 19 July 2008.
  2. Wheatcroft, S. G.; Davies, R. W.; Cooper, J. M. (1986). Soviet Industrialization Reconsidered: Some Preliminary Conclusions about Economic Development between 1926 and 1941. 39. Economic History Review. பக். 30–2. ISBN 978-0-7190-4600-1. http://books.google.com/?id=m-voAAAAIAAJ&dq. 
  3. Medvedev, Zhores A. (2006) The unknown Stalin p. 6

வெளி இணைப்புகள்[தொகு]

Search Wikimedia Commons விக்கிமீடியா பொதுவில் ஜோசப் ஸ்டாலின் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன.

இவற்றையும் பார்க்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_ஸ்டாலின்&oldid=1627316" இருந்து மீள்விக்கப்பட்டது