ஜாஞ்சுகீர்

ஆள்கூறுகள்: 22°01′01″N 82°34′01″E / 22.017°N 82.567°E / 22.017; 82.567
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாஞ்சுகீர்
நகரம்
ஜாஞ்சுகீர் is located in சத்தீசுகர்
ஜாஞ்சுகீர்
ஜாஞ்சுகீர்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாஞ்சுகீர் நகரத்தின் அமைவிடம்
ஜாஞ்சுகீர் is located in இந்தியா
ஜாஞ்சுகீர்
ஜாஞ்சுகீர்
ஜாஞ்சுகீர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°01′01″N 82°34′01″E / 22.017°N 82.567°E / 22.017; 82.567
நாடு India
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்ஜாஞ்சுகீர்-சாம்பா மாவட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்40,561
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி, சத்தீஸ்காரி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்495668
தொலைபேசி குறியீடு07817
வாகனப் பதிவுCG-11
அருகமைந்த நகரங்கள்பிலாஸ்பூர், சம்பா, கோர்பா
எழுத்தறிவு73%
இணையதளம்janjgir-champa.nic.in
Temple of vishnu.
விஷ்ணு கோயில், ஜாஞ்சுகீர்
A big pond.
பீமா குளம்

ஜாஞ்சுகீர் (Janjgir) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஞ்சுகீர்-சம்பா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். 1998-இல் பிலாஸ்பூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொன்டு ஜாஞ்சுகீர்-சம்பா மாவட்டம் உருவானது. ஜாஞ்சுகீர் தொடருந்து நிலையம் மாநிலத் தலைந்கர் ராய்ப்பூர் மற்றும் பிலாஸ்பூர் நகரங்களுடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 200 பிலாஸ்பூர் மற்றும் ராய்ப்பூர் போன்ற பெரிய நகரங்களுடன் இணைக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 21 வார்டுகளும், 8,690 வீடுகளும் கொண்ட நய்லா ஜாஞ்சுகீர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 40,561 ஆகும். அதில் ஆண்கள் 20,731 மற்றும் பெண்கள் 19,830 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5288 (13.04%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 957 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.10% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 94.59%, முஸ்லீம்கள் 3.52%, கிறித்தவர்கள் 1.45% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.[1]

இரயில் போக்குவரத்து[தொகு]

ஜாஞ்சுகீர் நைலா தொடருந்து நிலையம், ஜாஞ்சுகீர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது. ஹவுரா-நாக்பூர்-மும்பை இருப்புப் பாதை பிரிவில் உள்ள ஜாஞ்சுகீர் நைலா தொடருந்து நிலையம், மும்பை, கொல்கத்தா, புனே, நாக்பூர், புரி, விசாகப்பட்டினம், டாடாநகர், ராய்ப்பூர், பிலாஸ்பூர் மற்றும் அகமதாபாத் நகரங்களுடன் இணைக்கிறது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாஞ்சுகீர்&oldid=2972879" இலிருந்து மீள்விக்கப்பட்டது