சுகுமாரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகுமாரி 1940-ல் நாகர்கோவிலில் பிறந்தார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்துள்ளார். தன்னுடைய 10-வது வயதில் இருந்தே நடிகத் தொடங்கிய இவர், பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த மொத்தப் படங்களின் எண்ணிக்கை 2000 அல்லது அதற்கும் மேல் என்று கணிக்கப்படுகிறது. இவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர். 2010ம் ஆண்டு நம்ம கிராமம் என்ற படத்தில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார்.