சீ சீ கௌதாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீ சீ கௌதாரி
See-see partridge
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பெசினிடே
பேரினம்:
அம்மோபெர்டிக்சு
இனம்:
அ. கிரிசோகுலரிசு
இருசொற் பெயரீடு
அம்மோபெர்டிக்சு கிரிசோகுலரிசு
(பிராண்ட்டிட், 1843)

சீ சீ கௌதாரி (See-see partridge)(அம்மோபெர்டிக்சு கிரிசோகுலரிசு) என்பது வரிசை கல்லிபார்மிசைசார்ந்த பெசண்ட் குடும்பமான பாசியானிடேயில் உள்ள ஒரு விளையாட்டுப் பறவையாகும் .

தென்கிழக்கு துருக்கியிலிருந்து சிரியா மற்றும் ஈராக் கிழக்கே ஈரான் மற்றும் பாக்கித்தான் வரை இந்த கௌதாரி பூர்வீக வரம்பைக் கொண்டுள்ளது. இதனுடன் நெருங்கிய தொடர்புடையது எகிப்து மற்றும் அரேபியாவில் உள்ள இதன் இணையான, மணல் கௌதாரி, அம்மோபெர்டிக்சு கோயி ஆகும்.

இந்த கௌதாரி 22-25 செ.மீ. நீளமுடைய பறவை வறண்ட, திறந்த மற்றும் பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதியில் வசித்து இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடையது ஆகும். இது 8 முதல் 16 முட்டைகள் வரை இடும். சிறிய வரிசையான தரையில் புற்களில் கூடு கட்டுகிறது. சீ சீ கௌதாரி பலவிதமான விதைகள் மற்றும் சில பூச்சி உணவுகளை எடுத்துக்கொள்கிறது.

சீ சீ கௌதாரி ஒரு வட்டவடிவான பறவை ஆகும். மணல்-பழுப்பு நிறத்தில் அலை அலையான வெள்ளை மற்றும் பழுப்பு நிற கோடுகளுடன் காணப்படும். ஆண் சாம்பல் நிறத் தலை மற்றும் கண் வழியாகக் கருப்பு பட்டை மற்றும் ஒரு வெள்ளை நிறத்தில் கன்ன இணைப்புடன் காணப்படும். கழுத்து பக்கங்களிலும் வெள்ளை புள்ளிகள் உள்ளன.


பொதுவாக இது இணையாகவோ அல்லது அதிகபட்சமாக இரண்டு முதல் நான்கு பறவைகளுடன் கூட்டமாகவோ காணப்படும். ஆனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட பறவைகளின் கூட்டங்களும் காணப்பட்டுள்ளன.[2]

தொந்தரவு ஏற்பட்டால், சீ சீ கௌதாரி பறப்பதை விட ஓட விரும்புகிறது. ஆனால் தேவைப்பட்டால் இது சிறிது தூரம் பறக்கிறது. இதன் ஒலி விசில் ஹ்விட்-ஹ்விட்-ஹ்விட் .

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீ_சீ_கௌதாரி&oldid=3763239" இலிருந்து மீள்விக்கப்பட்டது