சாம்பியன்சு இலீகு இருபது20
| சாம்பியன்சு இலீகு இருபது20 | |
| நிர்வாகி(கள்) | இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியம், தென் ஆபிரிக்கத் துடுப்பாட்ட வாரியம் |
| துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
| முதலாவது போட்டி | 2009 |
| தற்போதைய வெற்றியாளர் | |
| அதிக தடவை வெற்றி பெற்றவர் | |
| அதிகூடிய ஓட்டங்கள் | |
| அதிகூடிய விக்கெட்டுகள் | |
| வலைத்தளம் | http://clt20.com |
சாம்பியன்சு இலீகு இருபது20 (Champions League Twenty20) என்பது இந்தியா, ஆத்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளின் உள்ளூர் அணிகளுக்கிடையிலான ஒரு சர்வதேச இருபது20 துடுப்பாட்டத் தொடர் ஆகும்.[1] என். சிறீநிவாசன் என்பவரால் இத்தொடர் நடத்தப்படுகின்றது.[2]
தேசிய உள்ளூர் இருபது20 போட்டித் தொடர்களின் வெற்றி காரணமாக, முக்கியமாக இந்தியப் பிரீமியர் லீகின் வெற்றி காரணமாக 2008இல் இப்போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டது.[3] முதலாவது போட்டித் தொடர் செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து 2008 அக்டோபர் முற்பகுதி வரை நடத்தப்படுவதாக இருந்தது.[4] ஆயினும் அது பிற்போடப்பட்டது. பின்னர், போட்டித் தொடர் திசம்பர் 3இலிருந்து திசம்பர் 10, 2008 வரை நடைபெறுவதாக இருந்தது.[5] பின்னர், நவம்பர் 2008இல் நடைபெற்ற மும்பைத் தாக்குதல்கள் காரணமாகப் போட்டித் தொடர் பிற்போடப்பட்டது.[6]
முதலாவது போட்டித் தொடர் அக்டோபர் 2009இல் நடைபெற்றது.
170 கோடிக்கு (38.4 மில்லியன் அமெரிக்க இடாலர்) அநுசரணை வழங்குவதற்கான உரிமையை இந்தியாவின் தொலைத்தொடர்புச் சேவை நிறுவனமான பார்த்தி ஏர்டெல் வாங்கியது.[7] 2011 போட்டித் தொடர் இந்தியாவில் செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை நடைபெற்றது.[8] ஆகத்து 2011இல் நோக்கியா நிறுவனம் நான்கு வருடங்கள் அநுசரணை வழங்குவதாக ஒப்புக் கொண்டது.[9]
பொருளடக்கம் |
போட்டி முடிவுகள் [தொகு]
| ஆண்டு | நடைபெற்ற நாடு | இறுதிப் போட்டி நடைபெற்ற இடம் | இறுதிப் போட்டி | அணிகள் | ||
|---|---|---|---|---|---|---|
| வெற்றி பெற்ற அணி | முடிவு | இரண்டாம் இடம் பெற்ற அணி | ||||
| 2008 | நவம்பர் 26 மும்பைத் தாக்குதல்கள் காரணமாகக் கைவிடப்பட்டது. | 8 | ||||
| 2009 | 159/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
41 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டி விபரங்கள் | 118 (15.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
12 | ||
| 2010 | 132/2 (19 பந்துப் பரிமாற்றங்கள்) |
8 இலக்குகளால் வெற்றி பெற்றது. போட்டி விபரங்கள் | 128/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
10 | ||
| 2011 | 139 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
31 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டி விபரங்கள் | 108 (19.2 பந்துப் பரிமாற்றங்கள்) |
10 | ||
இதையும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ சாம்பியன்சு இலீகு இருபது20 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (ஆங்கிலத்தில்)
- ↑ சாம்பியன்சு இலீகு இருபது20 2011இன் நடப்பிக்கைக் குழு உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)
- ↑ சாம்பியன்சு இலீகு துடுப்பாட்டம் தொடங்கப்பட்டது (ஆங்கிலத்தில்)
- ↑ சாம்பியன்சு இலீகில் மிடில்செக்சு (ஆங்கிலத்தில்)
- ↑ சாம்பியன்சு இலீகு இருபது20 திசம்பருக்கு மாற்றப்பட்டது (ஆங்கிலத்தில்)
- ↑ சாம்பியன்சு இலீகுக்கு அக்டோபர்த் திகதி (ஆங்கிலத்தில்)
- ↑ சாம்பியன்சு இலீகு இருபது20இற்கு பார்த்தி தலைப்பு ஆதரவு வழங்கும் (ஆங்கிலத்தில்)
- ↑ சாம்பியன்சு இலீகு இருபது20 2011 நிகழ்ச்சி நிரல்-சாம்பியன்சு இலீகு இருபது20 பந்தய ஏற்பாடுகளும் போட்டித் திகதிகளும் (ஆங்கிலத்தில்)
- ↑ சாம்பியன்சு இலீகிற்கு ஆதரவுகள் (ஆங்கிலத்தில்)
- ↑ பந்தய ஏற்பாடுகள் (ஆங்கிலத்தில்)
- ↑ நியூ சவுத்து வேல்சு எதிர் திரினிடாடு & தொபாகோ (ஆங்கிலத்தில்)
- ↑ வாரியர்சு எதிர் சென்னை சூப்பர் கிங்சு (ஆங்கிலத்தில்)
- ↑ இராயல் சேலஞ்சர்சு பெங்களூரு எதிர் மும்பை இந்தியன்சு (ஆங்கிலத்தில்)
வெளி இணைப்புகள் [தொகு]
- சாம்பியன்ஸ் லீக் இருபது20, உத்தியோகபூர்வ இணையத்தளம்